கூகுளின் மொழி பெயர்ப்பு மிக மிக மோசமாக உள்ளது. எடுத்துக்காட்டு ல் The five birds, viz., vallūṟu, āntai, kākam, kōḻi, mayil என்பதற்கான மொழி பெயர்ப்பு > ஐந்து பறவைகள், அதாவது., Vallūṟu, துறவியான ஒருவர், kākam, தி கோலன்ஸ், மயிலஎன உள்ளது. எனவே, தமிழ் மொழி பெயர்ப்பைச் செம்மை செய்து விட்டு அதன் பின்னர் மின்னஞ்சல் மொழி மாற்று வசதியை அளிப்பதே சிறந்தது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
First Published : 03 May 2012 01:04:06 AM IST
ஹைதராபாத், மே 2: இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்குத்
தெரிந்த மொழிக்கு மாற்றிக் கொள்ள முடியும். இந்தவசதியை கூகுள் நிறுவனத்தின் சேவையான
ஜிமெயில் வழங்க இருக்கிறது.
ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச்
சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் "டிரான்ஸலேட்' என்கிற
பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று
கூகுள் "டிரான்ஸலேட்' சேவையின் மேலாளர் ஜெஃப் சின் தெரிவித்தார்.
இந்தத் தகவல் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பூவில்
வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னதாக கூகுளின் பரிசோதனை முயற்சிகள் இடம்பெறும் "லேப்ஸ்' பகுதியில்
வழங்கப்பட்டிருந்த தானியங்கி செய்தி மொழிமாற்ற சேவைக்கு ஜிமெயில் பயனர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பு இருந்ததால், ஜிமெயிலிலும் இதைப் பயன்படுத்தும் யோசனை
முன்வைக்கப்பட்டது.
கூகு ள் தரும் மொழி பெயர்ப்பில் உள்ள உண்மையான குறைபாட்டைச் சுட்டடிக்காட்டினேன். இது குறிததுக் கட்டுரைகூட அளிக்கத்தயார். பிறர்அறிய வேண்டிய செய்தியை வெளியிடத் தினமணிக்கு ஏன் மனம் வரவில்லை? அதனை வெளியிடுக. கண்டனத்துடனும் வருத்தத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
பதிலளிநீக்கு