மீண்டும் மீண்டும் இந்தத் தமிழ்க் கொலைவெறி ஏன்?????
http://kavise.blogspot.com/
=============================
http://kavise.blogspot.com/
ஒருங்குறி நிறுவனம் சார்ந்த தமிழரிடமும் ஒற்றுமையின்மை தலை விரித்தாடுகிறது.
மே மாதம் 2012ல் அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஒருங்குறி நிறுவனத்தின் காலாண்டுக் கூட்டத்தில் மீண்டும் ஒரு சில தமிழ் எழுத்துக்களை கிந்தத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை திரு எவர்சன் அவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. (L2/12-039).
2010-2011ல் இந்த முயற்சியை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தனிக் கவனத்திற்குக் கொண்டு சென்று அவர் வழிகாட்டுதல்களுடன் தமிழ் அறிஞர்கள் ஒப்புதலுடன், இந்திய அரசின் வழி ஒருங்குறி நிறுவனத்திற்கும் வரைவும் அனுப்பப் பட்டுள்ளது.
பல மொழிகளின் எழுத்துருவங்களை இணையத்திலும் ஒன்றாக இணைத்துப் பயன்படுத்த இன்றைய கணினி நுட்பத்தில் தடைஇல்லை.
அமெரிக்காவில் பல மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஒரு கல்வி நிறுவனத்திற்காக உருவாக்கப் பட்ட இணையதளம் இங்கே.
http://www.sethuinc.com/bht1/
இவ்வாறிருக்க தமிழ் எழுத்துக்களையும் கிரந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது சிலரின் வீம்புப் போக்கு மட்டுமே.
கணினி நுட்பத் தடை இருப்பின் அதைக் களைய முயல வேண்டுமேயின்றி ஒரு மொழியின் எழுத்துருக்களை மற்ற அட்டவணைக்கும் இணைத்து, அந்த அட்டவணையை தமிழ் உள்ளடக்கிய அட்டவணையாக மாற்றும் முயற்சி கண்டிக்கத் தக்கது.
தமிழிற்கென்று ஒரு தனி அட்டவணை தேவையில்லை, கிரந்த அட்டவணையில் உள்ளடக்கி விட்டோம் என்ற நிலை பின்னாளில் ஏற்படும்.
இந்த நிலையை கண்காணித்து விழிப்பாகச் செயல் பட வேண்டிய தமிழ்க் கணிமையின் நிறுவனங்கள் அமைதி காத்து வருகின்றன. செயல்பட வேண்டிய நிறுவனங்கள் செயலிழந்து இருப்பதும், எழுப்ப முயன்ற ஒரு சிலரும் நிந்திக்கப் படும் சூழல் இந்த நிறுவனங்களில் உருவாக்கப் பட்டுள்ளது, வருத்தமளிக்கும் செயல்.
தமிழை அழிக்க நினைக்கும், ஒரு சிலரின் இந்தத் தமிழ்க் கொலைவெறி என்று முடியும்? தமிழனே விழித்தெழு!!!
அன்புடன்
.கவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக