புதன், 2 மே, 2012

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

                                                     கார் ஓட்ட தைரியம் வேணும்!                                           


பெண்களுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் சரஸ்வதி: கணவரை வேலைக்கும், பிள்ளைகளைப் பள்ளிக்கும் அனுப்பி விட்டு, வீட்டிலிருக்கும் நேரத்தில், பெண்களுக்கு கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கிறேன். எனக்கு சிறு வயதிலேயே கார் ஓட்டுவதில் ஆர்வம் இருந்தது. என் அப்பாவும், எங்க டிரைவரும் கார் ஓட்டுவதைப் பார்த்து, 14 வயதில் நானே டிரைவ் பண்ணக் கற்றுக் கொண்டேன்.எனக்குப் பிடித்த இந்த கார் டிரைவிங்கை, கடந்த, 20 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். முதலில் நான் கார்களை வாங்கிப் போட்டு, ஆட்களை வைத்து டிரைவிங் பள்ளி நடத்தினேன். அதில் நான் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால், அதிலிருந்து வெளியே வந்து விட்டேன்.கார் ஓட்ட விருப்பமுள்ளவர்கள், அவர்களின் சொந்த வாகனத்துடன் என்னிடம் வந்தால் போதும்... பொறுப்பாக சொல்லிக் கொடுத்து, ஒரு வாரத்தில் அவர்களைத் தனியாக கார் ஓட்ட வைத்து விடுவேன்.வேறு ஒரு வண்டியில் கற்றுக் கொள்வதை விட, தங்களிடம் என்ன வண்டி உள்ளதோ, அதில் கற்றுக் கொள்வது தான் சுலபம். டிரைவிங் பள்ளியில் ஒரு வண்டியில் கற்று, பின், நம் சொந்தக் காரை ஓட்டும்போது, நிறையப் பேருக்கு செட் ஆகாமல் போய்விடும். அதனால், அவரவர்களின் சொந்த வண்டியில் கற்றுக் கொள்வதே சிறப்பு.ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம், மொத்தம் ஏழு நாள் டிரைவிங் கற்றுக் கொடுத்தாலும், முதல் இரண்டு நாள் தான் மிகவும் முக்கியமானது. மற்ற ஐந்து நாள் டிரைவிங் கிளாஸ் எல்லாம் பயமில்லாமல் ஓட்டுவதற்காகத்தான்.நான் கற்றுக் கொடுக்கும் போதே, மூன்றாவது நாளிலிருந்து வாகன நெரிசல் உள்ள இடத்திற்கு அழைத்துப் போய் தயக்கத்தைப் போக்குவேன்.ஆணோ, பெண்ணோ, கார் ஓட்டுவதற்கு முதலில் தைரியம் வேண்டும்; பதற்றப்படாமல் இருப்பது மிகவும் அவசியம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக