திங்கள், 16 மே, 2011

T.N.Ministers with portfolios: தமிழக அமைச்சர்கள் விவரம்

அனைவருக்கும் வாழ்த்துகள். செந்தமிழன் முதல் எழுத்துக்கூடத் தமிழில் இல்லை. அனைவரின் பெயரகளும் தமிழ் முதலெழுத்திலேயே குறிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் முதன்மை கிடைக்கும் வண்ணம் செயல்பட வேண்டும். மத்திய அரசின் போக்கை மாற்றித்தமிழ் ஈழம் மலரப் பாடுபட வேண்டும். உலகத்தமிழர்கள் உரிமையுடன் வாழ வகை செய்ய வேண்டும். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மை பெறஉண்மையாயும் நேர்மையாயும் உழைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழக அமைச்சர்கள் விவரம்

First Published : 15 May 2011 08:22:35 PM IST

Last Updated : 15 May 2011 08:23:51 PM IST

ஜெ. ஜெயலலிதா - முதல்வர்ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்
கருத்துகள்

முன்னால இருந்தவரு ஆற்காடு வீராசாமி ..இப்ப நத்தம் விசுவநாதன் பெயருக்கு பின்னால ஊரு இருந்தாலே ஷாக் அடிச்சா மாதிரி இருக்குப்பா..விசுவநாதன் கமான் கரண்ட் வேணும்னு பாட மட்டும் வட்சிறாதிக.. குட் லக் விசு!
By A. MURUGESAN
5/15/2011 10:44:00 PM
ONE THING TO KINDLY BE NOTED.. THIS IS SUBJECT TO CHANGE FORTNIGHTLY. அது சரி ராயபுரம் ஜெயக்குமார் என்ன ஆனார்..? சபாநாயகரா?
By A. MURUGESAN
5/15/2011 10:37:00 PM
புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளது.. நல்ல விஷயம்
By தனபால்
5/15/2011 10:30:00 PM
ஜெயலலிதா மேடம் அவர்களுக்கும் அவரது தலைமையில் பதவியேற்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் காலம் தங்களுடைய காலத்தில் எல்லா வளர்ச்சியும் பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாக விளங்கவேண்டும். அதன் மூலம் கருணாதியை மறந்து அடுத்த முறையும் தாங்களே முதல்வர் ஆக வரவேண்டும் என்று மக்கள் நினைக்க வேண்டும். மொத்தத்தில் தங்களின் ஆட்சி தங்களுடைய இரண்டாவது டெர்ம் போல் இருக்கவேண்டும். தங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளை தர நாங்கள் வேண்டுகிறோம்.
By lakshmi
5/15/2011 10:21:00 PM
புதிய அமைச்சர் குழுவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இலங்கை வாழ் தமிழர் பக்கமும் தமிழக அரசு கருணை காட்ட வேண்டும். -ஈழத்தமிழன்
By -ஈழத்தமிழன்
5/15/2011 10:13:00 PM
Before sworn-in as Ministers, let them declare what is their assets - movable/immovable properties including in binami names. AIADMK is no less or inferior to DMK or Congress. In DMK government, each and every minister has one college/school/industries but poor the then telecom minister healing cool in Tihar. Though Ministers of DMK lost or defeated but properties amassed will come for generation. More or less, his political career is totally collapsed. Time will speak. Hence, let AIADMK should give answer what made them to abandon new Secretariat which was constructed at public money and not by the then CM from his own money. May be wrong or right, it is the duty of successor should act on new Secretariat.
By V Gopalan
5/15/2011 10:10:00 PM
எப்படி ஒரு இஸ்லாமியரும் இல்லாது போனார்கள். பனிரண்டு விழுக்காடு முஸ்லிம்கள் வாழும் நாடில்.
By thiru
5/15/2011 9:57:00 PM
ஜெயலலிதாவிற்கும் அதன் அமைச்சரவைக்கும் நல்வாழ்த்துக்கள். முதல் கையெழுத்து தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றவேண்டும். இது நல்ல சகுனமாக இருக்கும்.
By மு.நாட்ராயன்
5/15/2011 9:41:00 PM
பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயகுமார்,பழ Karuppiah Ivargal kettikarargal
By Mahalingam
5/15/2011 9:37:00 PM
நாளைக்கும் இந்த லிஸ்டே இருக்குமா ?
By கீரை விமரிசகன்
5/15/2011 9:37:00 PM
புதுமுக்கங்கள் நிறைந்த பட்டியல் வாழ்த்துக்கள்,
By chellapandi
5/15/2011 9:23:00 PM
congratulation
By selva
5/15/2011 9:19:00 PM
ஆல் தி பெஸ்ட்
By RAJ
5/15/2011 8:53:00 PM
அமைச்சர் பட்டியல் அதிகமாக உள்ளது. பல புதுமுகங்கள் இருக்கிறார்கள். நன்றாக செயல்பட வேண்டும். மக்களை மதிக்கவில்லை என்றால் என்ன ஆகும் எனபதை 19 தி.மு.க அமைச்சர்களின் தோல்வி உணர்த்தும். பணத்தைக் கொடுத்து எதையும் இனி சாதிக்க முடியாது. மக்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்பட வாழ்த்துக்கள்.
By தமிழன்
5/15/2011 8:38:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

1 கருத்து:

  1. congrulations to all newly appointed taminadu ministers best wishes to and your duties sincerely and dedicated mind this party change the tamilnadu politics history see in 5 years duty in our tamilndau
    i am proud to real tamilan
    valga tamil peoples

    பதிலளிநீக்கு