ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு நிலையில் இரு்நது திசை மாறி, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்த கட்சியுடன் உறவு கொண்டதாலேயே மக்கள நம்பிக்கையை இழந்து இவர்கள் தோல்வியுற்றனர். இருப்பினும் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டால் மீண்டும் வெற்றி வாகை சூடுவர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
பா.ம.க., வி. சி. க. தோற்றது ஏன்?
First Published : 16 May 2011 01:57:20 AM IST
சிதம்பரம், மே 15: சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் ஆகிய மூன்றும் இணைந்து தொண்டர்களின் கருத்துகளுக்கு எதிராக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் படுதோல்வியை தழுவியதாக தெரியவந்துள்ளது.
÷ இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் பிரசாரக் கூட்டங்களில் ஒரே மேடையில் பேசினர். அப்போது "நாம் இதுநாள் வரை சண்டை போட்டது போதும். இது சமூக நல்லிணக்க கூட்டணி. ஆதலால் அனைவரும் பகைமையை மறந்து ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி மிகப்பெரிய கூட்ட ணி. இக் கூட்டணி வெற்றிபெறவில்லை என்றால் பாமகவுக்கும், வி.சி.க.வுக்கும் எதிர்காலம் போய்விடும்' என்றும் முழங்கினர். ஆனால் இத் தேர்தலில் தலைவர்களின் கூட்டணியை அக்கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
தேர்தலுக்கு முன்பு விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், ஆளும் அமைச்சர்களின் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய காரணங்களால் திமுகவுக்கு மக்கள் எதிராக உள்ளனர் என அறிந்த விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அதிமுகவுடனான கூட்டணியைத்தான் விரும்பினர்.
÷பெரும்பான்மையான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களுமே அதிமுகவுடனான கூட்டணியையே விரும்பினர். ஆனால் திமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் படுதோல்வியை தழுவியது என்பதை அக்கட்சி தலைவர்களுக்கு இத்தேர்தலில் தொண்டர்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர்.
÷திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணி ஏற்படுத்தியதற்கு துரை.ரவிக்குமார்தான் காரணம் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், தனது தலைவர் திருமாவளவனையும் திமுகவிடம் அடமானம் வைத்து விட்டார் ரவிக்குமார் என அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர்.
40 தொகுதிகள்: வட மாவட்டங்களில் பா.ம.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். இதனாலேயே இக் கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் 30, 10 என 40 தொகுதிகள் இந்த மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டன.
இதில், பா.ம.க. மட்டும் ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பா.ம.க. 18 இடங்களில் வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 2 இடங்களை பெற்றிருந்தது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக