ஞாயிறு, 15 மே, 2011

Sonia invites jaya for tea party: தேநீர் விருந்து: ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட அழைப்பு. எங்கே  இவர் தலைமையில் காங்.எதிர்ப்பு அணி மத்தியில் வலுப்பெறுமோ என்ற அச்சமும் காரணம். ஆனால், அணி மாறினால்  தமிழக நலனுக்கும் தமிழர் நலனுக்கும்  அ.தி..மு.க. கட்சிக்கும் நல்லதல்ல. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தேநீர் விருந்து: ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு

First Published : 15 May 2011 10:51:46 AM IST


புதுதில்லி, மே.15: தமிழக முதல்வராக நாளை பதவியேற்க உள்ள அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்காக தில்லி வருமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.இது திமுகவிடம் இருந்து விலகிச் செல்வதற்கான காங்கிரஸின் புதிய வியூகமாகக் கருதப்படுகிறது.வெற்றிபெற்ற தலைவர்களை சோனியா இதுபோன்று தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுப்பதில்லை என்பதால் இந்த அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக