திருவண்ணாமலையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கடந்த 4 மாதங்களாக தொல்லியல் துறையினர் கல்வெட்டுகளை கண்டெடுத்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் பிரகாரத்தில் ஸ்தல விருட்சம் அருகே தரையில் கல்வெட்டு ஒன்று புதைந்திருந்ததை, தோண்டி எடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வுசெய்தனர்.அந்த கல்வெட்டு, முதலாம் ராஜேந்திர சோழனால், கி.பி., 1012-1044ல் உருவாக்கப்பட்டது என்றும், ராஜேந்திர சோழன் வெற்றிகள் அதில் குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்தது. ராஜேந்திர சோழன், ஈழ அரசனை வென்று, அவனது மணி மகுடத்தையும், ஈழ மன்னனின் தேவியரின் மணி மகுடத்தையும் பறித்து வந்ததுடன், முதல் பராந்தக சோழன், பாண்டியர் மீது படையெடுத்து வெற்றி கண்ட போது, சுந்தரபாண்டியனால் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் மணிமகுடத்தை மீட்டு வந்த செய்தியையும், சிங்கள அரசனையும், இரட்டபாடி மன்னனையும், கோசல நாட்øயும், மலை நாடு(கேரளம்) மற்றும் கலிங்க நாட்டையும் வெற்றி பெற்ற செய்திகளும் இக்கல்வெட்டில் காணப்படுகிறது, என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக