திங்கள், 16 மே, 2011

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்குப் பணிய மாட்டோம்: பசில் இராசபட்ச

எங்கள் கூட்டாளி இந்தியா இருக்கும் வரை நாங்கள் எதற்குப் பயப்பட வேண்டும் என்கிறார் பக்சே. போர்க்குற்றம் அல்லது மனித உரிமை மீறல் என்று சொல்லாமல் இனப்படுகொலை என்றே குறிப்பிட வேண்டும். படுகொலை புரிந்த, துணை  புரிந்த அனைத்து நாட்டுத்தலைவர்களுக்கும் தண்டனை கொடுத்தால்தான்  இனி உலகில் எங்கும் இனப்படுகொலை நிகழாது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம்: பசில் ராஜபட்ச

First Published : 16 May 2011 03:18:36 PM IST


கொழும்பு, மே 16- இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபட்ச கூறியுள்ளார்.பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது."இலங்கையின் உறுதி நிலையை சீர்குலைக்க மேற்கத்திய நாடுகள் சதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே, நார்வே நீதிமன்றத்தில் அதிபர் ராஜபட்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகளின் எத்தகைய நெருக்கடிக்கும் அதிபர் ராஜபட்ச பணிய மாட்டார்." என்று அவரது சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபட்ச கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள்

கொலைகாரன் ராஜபட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரனைக்கு உட்படத்த வேண்டும் .
By suresh
5/16/2011 4:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக