புதன், 9 மார்ச், 2011

63 seats for cong. :63 தொகுதிகள்: காங்கிரசார் மகிழ்ச்சி

தமிழினப்படுகொலையாளியான பேராயக்கட்சி- காங். - மண்ணைக் கவ்வும். பிறகு எந்தக்கட்சிக்கும் அதன் தயவு தேவைப்படாது. தேர்தலில் போட்டியிட்டுப் பணம் சம்பாதிப்பதுடன் அவர்கள் பணி முடிந்து விடும். அதன்பின் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என வேறு முகாமிற்குச் செல்ல வேண்டும். அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/  

63 தொகுதிகள்: காங்கிரஸார் மகிழ்ச்சி


சென்னை, மார்ச் 8: தி.மு.க. கூட்டணியில் 63 தொகுதிகள் கிடைத்திருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் கடந்த சில வாரங்களாக இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் 63 தொகுதிகளைக் கேட்டு நிர்பந்தம் செய்வதாகக் கூறி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து தி.மு.க.வுக்கும், காங்கிரஸýக்கும் இடையே தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸýக்கு 63 தொகுதிகள் ஒதுக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.2006 தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸýக்கு இப்போது 63 தொகுதிகள் கிடைத்திருப்பது அக்கட்சியினரை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.தி.மு.க.வுடன் காங்கிரஸ் ஐவர் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்துவதாக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாக அறிவித்தார்.எந்தெந்த தொகுதிகள்? 2006 தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளை மீண்டும் வழங்குவது என்றும் மீதமுள்ள 15 தொகுதிகளை இரு கட்சிகளும் பேசி முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் போன்ற கோரிக்கைகளை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பார்த்துக் கொள்ள இரு கட்சிகளும் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.63 தொகுதிகளில் போட்டியிடுவதால் காங்கிரஸ் தயவில்லாமல் தி.மு.க.வால் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக