பாம்பின் கால் பாம்பு அறியும்.
இங்ஙனம்
இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
சென்னை, மார்ச் 10: காங்கிரஸ்- திமுக கூட்டணி தர்மசங்கடக் கூட்டணி என்றும், அவர்கள் நடத்திய நாடகம் தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க. - காங்கிரசுக்கு இடையே கடந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள் ஊடகங்களுக்கும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வியப்பை அளித்து இருக்கலாம். தொகுதி எண்ணிக்கை தொடர்பான காங்கிரஸ் கோரிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அதிருப்தியை தெரிவித்தார். பின்னர், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தனது கட்சி அமைச்சர்கள் விலகிக் கொள்வதாக மிரட்டினார். ராஜினாமா கடிதங்களை கொடுக்கப் போகிறோம் என்ற பாசாங்கு நாடகத்தினை முன்னிறுத்தி, தி.மு.க. மத்திய அமைச்சர்கள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். ஆனால், ராஜினாமாக் கடிதங்கள் அவர்களுடைய சட்டைப் பைகளிலிருந்து வெளி வரவில்லை. இதற்குப் பதிலாக மீண்டும் இணைந்து செயல்படுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. ... ஊடகங்களும், மக்களும் ஒரு முழு வாரத்திற்கு ஸ்பெக்ட்ரம் புலன் விசாரணையை மறக்கும் நிலைக்கு இந்த நடவடிக்கை தள்ளுவதாக அமைந்துவிட்டது. இது மட்டுமல்லாமல், விலைவாசி மற்றும் எண்ணிலடங்கா இதர பிரச்சினைகளை மறக்கும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். அது தான் கருணாநிதியின் தந்திரம்! இந்த கபட நாடகம் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. மத்திய அமைச்சரவை 2009-ல் அமைக்கப்படும் போதே இது போன்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்பட்டதை நாம் பார்த்து இருக்கிறோம். கருணாநிதி டெல்லிக்கு பறந்தார். தன்னுடைய கோரிக்கைகளை வைத்தார். கருணாநிதியின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைமை எதிர்ப்பு தெரிவித்தவுடன், கடுங்கோபம் கொள்வது போல் பாசாங்கு நடவடிக்கையில் ஈடுபட்டார். தனக்குள்ள மனக்கசப்பை வெளிப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு, தனது கட்சியைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்களுடன் சென்னைக்குத் திரும்பினார் கருணாநிதி. கருணாநிதியின் நாடகம் அவருக்கு பலனைத் தந்தது. தனது மகன் அழகிரி, பேரன் தயாநிதி மாறன், ஆ. ராசா ஆகியோருக்கு வளமான இலாக்காக்கள் கிடைத்தன! இது போன்ற அச்சுறுத்தல் சம்பவம் அனைத்தும் வெறும் நாடகமே. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கினை கர்நாடகா தர மறுத்த போதும், முல்லைப் பெரியாறில் உச்ச நீதிமன்ற ஆணையை செயல்படுத்த கேரளா மறுத்த போதும், அனைத்துப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கு வழிவகுக்கின்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு திரும்பத் திரும்ப உயர்த்திய போதும், தமிழக மீனவர்கள் நடுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட போதும், வறுமையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட போதும், மத்திய அரசிலிருந்து விலகப் போகிறோம் என்று மத்திய அரசை கருணாநிதி மிரட்டவில்லை. வழக்கம் போல, பாரதப் பிரதமருக்கு கடிதங்களை அனுப்பினார். தனது மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்களுக்கு வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற வேண்டும் என்று விரும்பினாலோ, தேசத்தின் சொத்தை சுரண்டிய தனக்கு பிரியமானவர்களும், நெருக்கமானவர்களும் மத்திய புலனாய்வுத் துறையினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட போகிறார்கள் என்றாலோ, வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லி வீராப்புடன் மத்திய அரசை மிரட்டுவார். காங்கிரஸ் தலைமையும் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களை ஏமாற்றும் வகையில் தி.மு.க.வின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பது போன்று நாடகமாடும். பின்னர் இரண்டு - மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்காகத் தான் ஒரு வார கால போராட்டம் நடைபெற்றது என்ற தோற்றத்தை உருவாக்கி சரணடைந்து விடும்! காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பது காங்கிரசுக்கு மிகப் பெரிய சங்கடம் ஆகும். உலகத்தின் மிகப் பெரிய ஊழலான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலை தலைமையேற்று நடத்தியவர் ஆ. ராசா. இந்த ஊழல் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் சென்றடைந்த இடத்தை ஆராய்ந்தால், தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் வீட்டுக் கதவுகளை சென்று அடைகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது மாபெரும் முழக்கத்துடன் துவக்கப்பட்ட 2400 கோடி ரூபாய் மதிப்பிலான சேதுசமுத்திரத் திட்டம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. இந்தப் பணம் எல்லாம் தி.மு.க. தலைமைக்கு சென்று, மதுபானத் தொழிற்சாலைகள், வரியில்லாத கடைகள், விடுதிகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இன்று முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றது. தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது தனது செல்வாக்கினை பயன்படுத்தி, தன்னுடைய மூத்த சகோதரனின் வணிக சாம்ராஜ்யத்தில் அபரிமிதமான முதலீடுகள் சென்றடைவதை உறுதி செய்யக் காரணமாக இருந்தார். இந்த நிறுவனம், தொலைக்காட்சியை தாண்டி திரைப்படத் துறை, விமானத் துறை போன்றவற்றிலும் தற்போது விரிவடைந்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இருந்து கண்டனங்கள் வரக் காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மத்திய கண்காணிப்புத் துறை ஆணையர் திரு. பி.ஜெ. தாமஸ் நியமனமும் தி.மு.க. தலைமையின் வேண்டுகோளின்படி நடைபெற்று இருக்கிறது. இந்த அளவுக்கு காங்கிரசுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டியவர்கள் இந்த மாநிலத்தில் உள்ள பாவப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களே... - இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
POR ENDRAL POTHU MAKKAL KOLLAPADUVATHU SAGAJAM THAN ENDRU JAYA SOLLU VATHU UNMAI.ATHE NERTHIL PORAI NANTHAN NIRUTHINEN ENDRU KARUNANITHI POLA NADAKAM PODA VILLAI EN PATHAI KAVANATHIL KOLLA VENDUM
By karthik
3/10/2011 2:04:00 PM
3/10/2011 2:04:00 PM
needed statement from madam
By Elango
3/10/2011 2:03:00 PM
3/10/2011 2:03:00 PM
பேரறிஞர் அண்ணா தமிழனை அடிமைப்படுத்த இருந்த இந்தி மொழியை தமிழகத்திலிருந்து விரட்டினார் ! தமிழ் மொழியின் விரோதி பாவி கருணாநிதி இந்தி மொழியை சட்டசபைக்கு அழைத்து வந்து மகுடம் சூட்டினார் ! பேரறிஞர் அண்ணா காங்கிரசை ஆட்சிக் கட்டிலிலிருந்து விரட்டினார் ! இன்றைக்கு தமிழ் இனத்தின் துரோகி படு பாவி கருணாநிதி காங்கிரசை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த கழகத்தின் உடன் பிறப்புக்களை அடிமைப் படுத்தி திராவிட முன்னேற்ற கழகத்தை சுயலாபத்திற்க்காக விற்றுவிட்டார் ! இந்த அநீதியை திராவிட பாரம்பரியத்தில் வந்த ஒவ்வொருவரும் உணர்ந்து தெளிந்து காங்கிரஸ் தி மு க கூட்டணிகளை நிராகப்பது மிக அவசியமானதாகும் ! திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசான புரட்சித் தலைவியின் தலைமையில் உள்ள அ தி மு க விற்கு உடன் பிறப்புக்கள் அனைவரும் கட்சி பேதம் இன்றி ஆதரவு நல்கி தந்தை பெரியாரின் சேவைகள் பேரறிஞர் அண்ணாவின் தியாகங்கள் வீண் போகாத படி அவர்களின் புகழினை நிலைத்திருக்கச் செய்வது கடமையாகும் ! இந்த முறை உடன்பிறப்புக்கள் புரட்சித் தலைவிக்கு வாக்களிப்பது தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் வாக்களிப்பது போல ! கருணாநிதி உன்னை அடகு
By rajasji
3/10/2011 1:50:00 PM
3/10/2011 1:50:00 PM
இழவு காத்த கிளிபோல காங்கிரஸ் வரும் வரும் என்று காத்திருந்து அம்மாவுக்கு கண் பூத்துவிட்டது....பாவம் புலம்புகிறார்...அடுத்த கட்ச்சியை வசைபாடுவதை விட்டுட்டு மக்களாட்ச்சிக்கு சிறந்த அரசு நிர்வாகம் இதற்க்கு உங்கள் திட்டம் என்று மக்களுக்கு கூறுங்கள். அடுத்தவர்களை வசைபாடியே பொழப்பு நடத்தலாம் என்றால் மக்கள் ஏமாறமாட்டார்கள். அவர்களிடமிருந்து நீங்கள் எந்தளவுக்கு சிறந்தவர் (?!) என்பதை மக்களுக்கு சொல்லுங்கள். மக்கள் ஒட்டு போட யோசிப்பார்கள்..
By கோவிந்த்
3/10/2011 1:49:00 PM
3/10/2011 1:49:00 PM
காக்கையிடம் இருந்து எப்படா வடை கீழே விழும் என்று காத்திருந்து ஏமாந்ததனால், வந்த அறிக்கை இது. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இல்லையென்றதும், மதிமுகவையும் கம்யூனிஸ்டுகளையும் காக்க வைத்தது ஏனோ?. நம்பிக்கை துரோகம் பண்ணுவதில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர் அல்ல. தமிழ்நாடு உங்கள் இருவரிடமும் மாறி மாறி படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.
By மதுரைக்காரன்
3/10/2011 1:44:00 PM
3/10/2011 1:44:00 PM
கொடுங்கோல் ஆட்சியாம் தி. மு. க. வின் ஆட்சியை அகற்ற வேண்டுமென்று செல்வி ஜெயலலிதா அவர்கள் நினைத்தது தப்பு ஒன்றுமில்லை. அதற்காக அவர் எந்த உக்தியையும் கையாள வேண்டும், காங்கிரஸ் கூட்டணி உட்பட. நாட்டின் நலனை கருதுவோர்கள் அனைவருக்கும் ஏற்ற நடவடிக்கை இது. எனவே, செல்வி ஜெயலலிதா அவர்கள் காங்கிரஸ் கூட்டணிக்காக முயற்சி செய்ததில் தவறு ஒன்றுமில்லை.
By நாதன், Bangalore
3/10/2011 1:38:00 PM
3/10/2011 1:38:00 PM
நீங்கள் சொல்வது சரி நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்லாட்சி கொடுத்தால் நீங்கள் தான் நிரந்தர முதல் அமைச்சர். இந்த TMMK போன்ற கட்சிகளை விரட்டி விடுங்கள். அது உங்களுக்கு தான் நல்லது. முஹமது உஸ்மான் சவுதி அரேபியா
By முஹமது USMAN
3/10/2011 1:35:00 PM
3/10/2011 1:35:00 PM
அம்மான்னா அம்மாதாண்டா !. சீக்கிரம் மத்த கட்சிக்கு எல்லாம் தொகுதியை ஒதுக்கிட்டு பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க..
By சன்னியாசி
3/10/2011 1:18:00 PM
3/10/2011 1:18:00 PM
அம்மான்னா அம்மாதாண்டா !. சீக்கிரம் மத்த கட்சிக்கு எல்லாம் தொகுதியை ஒதுக்கிட்டு பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணுங்க..
By சன்னியாசி
3/10/2011 1:16:00 PM
3/10/2011 1:16:00 PM
THE FACT IS THAT JAYA TRYED HER LEVEL BEST TO HAVE ALLIENCE WITH CONGRESS! BUT THAT WAS NOT HAPPENED !THAT IS WHY SHE HAS NOT DISCUSSED THE ALLIENCE WITH COMMUNISTS AND MDMK SO FAR!
By RAGHURAMMOHAN
3/10/2011 1:13:00 PM
3/10/2011 1:13:00 PM
"போர் என்று வந்தால் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம்தானே"? இதை வேறு யாரும் சொல்லவில்லை அம்மா. உங்கள் திரு வாய் திறந்து உதிர்த்த பொன்மொழிகள். பரவாயில்லையே? ஈழத் தமிழர்கள் பற்றி உங்களுக்கு நினைவு இருக்கத்தான் செய்கிறது. (அதை உங்கள் வசதிக்கு ஏற்றார்போல புத்திசாலித்தனமாக இலங்கை தமிழர்கள் என்று கூறுகிறீர்கள் - பரவாயில்லை) அதை தேர்தல் சமயம் பார்த்து உபயோகிக்கிறீர்களே! ரொம்ப பாசக்கார பொம்பளை அம்மா நீ!!
By Abdul Rahman - Dubai
3/10/2011 1:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/10/2011 1:10:00 PM