வியாழன், 10 மார்ச், 2011

end of the kalaignar drama: கலைஞரின் பதவி விலகல் நாடகமும், அழகிரியின் மனச்சான்றும்

 
கடந்த இரண்டு நாட்களாக நடந்த ராஜினாமா நாடகத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளார் கலைஞர். அதை தொடர்ந்து இவர்களின் மன சாட்சி என்ன நினைக்கும் ஒரு கற்பனை 



அழகிரி:நான் மந்திரியா இருக்கப்போயித்தானே இந்த எதிர்கட்சிகாரனுங்க ஹிந்திலேயும்,இங்க்லீஷ்லேயும் கேள்வியா கேட்டு கொல்லுறாங்க... எப்படியாவது மந்திரி பதவியை ராஜினாமா செஞ்சு எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பார்த்தா விடமாட்டாரு போல தலைவரு

ஸ்டாலின்; அப்பாடி.....ராஜினாமாவ வாபஸ் வாங்கி என் வயித்துல பால வார்த்துட்டாறு...இல்லாட்டி அழகிரி தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்து நமக்கு போட்டியா உட்கார்ந்துடுவாறு.....

கனிமொழி: அம்மாடியோ....தப்பிச்சேன்....காங்கிரஸ்காரங்கள பகைச்சா நமக்கும் திகார்ல ஒரு செல்ல ரெடிபண்ணிருப்பாங்க


ராசாத்தியம்மாள்: நல்லவேளை நானும் தப்பிச்சேன்....வயசான காலத்துல இந்த சி.பி.ஐ., விசாரணை, ரைடுன்னு அலைய  முடியுமா?


ராசா: எங்கே காங்கிரஸ் காரங்க உறவை  வெட்டிவிட்டு...நம்மள திகார்லையே நிரந்தரமா இருக்க விட்டுருவாரோன்னு ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன் . அப்படி ஏதும் நடக்கல சீக்கிரம் வெளியே வந்துடலாம். 


T.R.பாலு: நான் கட்சியில சீனியரு. நான் எம்.பி.யாவே இருக்கேன். நேற்று வந்தவுங்க மந்திரியாகிட்டாங்க...எல்லோரும் ராஜினாமான்னதும் எனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் இல்லேன்னு சந்தோஷ பட்டேன்.இப்படி வாபஸ் வாங்கி என் நினைப்பில மண்ணை போட்டுட்டாரே.......


திருமா: கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டோமோ....


வீரமணி: இவரு நாடகத்தை உண்மைன்னு நம்பி தன்மானம் அது இதுன்னு பேசிட்டேன்.இப்ப இவரு ராஜினாமாவ வாபஸ்  வாங்கி  என் மூஞ்சில கரிய பூசிட்டாரே....


E.V.K.S.இளங்கோவன்: அடடா....தி.மு.க.ட்டேர்ந்து காங்கிரஸ்காரங்களுக்கு விடுதலை கிடைச்சுருச்சுன்னு நினைச்சேன்.வாபஸ் வாங்கிட்டாரே...மறுபடியும் நம்ம அடிமைதானா?

ராமதாஸ்: கலைஞரு கோவணத்த உருவுவதுல  கெட்டிக்காரு....நல்லவேளை நமக்கு ஒரு தொகுதியோட போச்சு....


ஜெயலலிதா: காங்கிரஸ்காரங்க வருவாங்கன்னு வைகோ...கம்யூனிஸ்ட்களுக்கு  இடம் ஒதுக்காம காத்திருந்தேன்.
இப்படி கவுத்துட்டாங்களே....நல்லவேளை வைகோ...கம்யூனிஸ்ட்லாம் இதை அவமானமா நினைக்கலே....

வைகோ: நல்லவேளை காங்கிரசோடு இந்தம்மா கூட்டணி வச்சுக்கு நம்மள அம்போன்னு விட்டுடோம்ன்னு பயந்துட்டேன். அது நடக்கல...

பி.ஜே.பி: சே...காங்கிரஸ் காரங்க எல்லா தொகுதியிலும்  தனியா நின்னு டெபாசிட் இழந்து, நமக்கு துணையா இருப்பாங்கன்னு பார்த்தேன்...வடை போச்சே....
இதுவும் நீங்கள் படிக்கத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக