புதன், 9 மார்ச், 2011

election seat arrangements: திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை அறிவிப்பு

தி.மு.க.விற்குத்  தோல்வியாக  இருக்கலாம். ஆனால், கலைஞருக்கு வெற்றிதான். பிளவிற்குக் காரணம் தொகுதி எண்ணிக்கையும்தான் என்று சொன்னாரே தவிர அதுதான் முழுமுதல் காரணம் என்று சொல்லவில்லை. அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று தெரிந்திருந்தாலும் ஓர்
இடம்கூடக் குறைக்காமல் ௬௩ என்று ஒத்துக் கொண்டார் என்றால்  அவரது கோரிக்கை நிறைவேறி உள்ளது என்றுதான் பொருள்.
காய் முற்றும்பொழுது கடைத்தெருவிற்கு வந்துதான் ஆகும். அப்பொழுது புரியும். அவரது வெற்றியை. ஆனால் என்ன?  இந்தச்
சாணக்கியத்தனத்தைத் தமிழினப் பாதுகாப்பிற்குக் காட்ட மாட்டேன் என்கிறாரே
என்பதுதான் வருத்தம். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி!/


திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை அறிவிப்பு

First Published : 08 Mar 2011 08:03:26 PM IST

Last Updated : 08 Mar 2011 08:04:49 PM IST

சென்னை, மார்ச் 8- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை முதல்வர் கருணாநிதி இன்று மாலை அறிவித்தார்.கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:திமுக - 121 காங்கிரஸ் - 63 பாமக - 30 விடுதலைச் சிறுத்தைகள் - 10கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - 7இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1
கருத்துகள்

'சித்ரவதை, தூக்கு மேடை, கால் வேறு கை வேறாக வெட்டிக் கடலில் எறிவது போன்ற எந்தக் கொடுமையையும், கொண்ட கொள்கைகளுக்காகத் தாங்கத் தயார்! இது அண்ணாவின் மீது ஆணையாக எடுத்துக்கொண்டுள்ள சூளுரை’ என்று சொன்ன கலைஞரே... உங்களால் ஈழத் தமிழருக்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் உண்ணாவிரதம்கூட இருக்க இயலவில்லையே? எதையுமே நீங்கள் அழகாக எழுதுகிறீர்கள். உணர்வு ததும்பப் பேசுகிறீர்கள்... ஆனால், எழுத்துக்கும் பேச்சுக்கும் எதிராகவே நடக்கிறீர்கள். அது ஏன்? தமிழருவி மணியன் -
By மூர்த்தி
3/8/2011 10:05:00 PM
ஆஹா என்ன அருமையாக முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று சொல்லி ஏற்கனவே மிக சொற்பமாக மிகவும் கேவலமாக 3 தொகுதியை ஒதுக்கிய கருணாநிதி எவ்வளவு பெரிய துரோகமாக ஒன்றை குறைத்து நாடகமாடி உள்ளார் கண்டிப்பாக இந்த துரகதிற்கு கண்டிப்பாக தேர்தல் களத்தில் முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்,வாகு சீட்டு மூலம் மரண அடியை குடுப்போம் தி.மு.க விற்கு
By maraicar
3/8/2011 9:53:00 PM
நடந்த நாடகம் முடிவுக்கு வந்தது
By ரியல் tamilan
3/8/2011 9:52:00 PM
நடந்த நாடகம் முடிவுக்கு வந்தது
By ரியல் tamilan
3/8/2011 9:50:00 PM
வியாபாரம் னா ஆயிரம் இருக்கும் ..பேரம் படியும் போதுதானே டீல் முடியும்? இதிலே நிறைய பேர் மானம் மருவாதி அது இது ன்னு என்ன கூச்சல்.? போய் வேலைய பாருங்கப்பா.. எல்லா கட்சி மற்றும் கூட்டணி க்கும் கொள்கை ஒண்ணுதான்.. அதான் மக்களை மக்களின் மடமையை உபயோக படுத்தி 5 வருஷம் காசு அள்ளுவது..மட்டுமே!!!
By siva
3/8/2011 9:47:00 PM
அரசியல் வாதிகள் அனைவரும் சாக்கடைகளில் குளிக்கும் சுயநலவாதிகள்
By parandhaman
3/8/2011 9:40:00 PM
121 தொகுதிகளில் நின்று எப்படி 118 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைப்பது
By perin
3/8/2011 9:36:00 PM
திராவிட இயக்கங்களின் வீழ்ச்சி கருணாநிதி காலத்திலேயே நிகழ்ந்தது என்று வரலாறு பழிக்கும், காங்கிரஸ் தேர்தலுக்கு பிறகு,தி..மு.க ஆதரவில் வெற்றி பெற்று,அவர்கள் ஆ.தி.மு.காவை ஆதரிக்க போகிறார்கள், சோனியாவிடம் ,மண்டியிட்ட கருணாநிதி தமிழன் இனத்தை அடகு வைத்து விட்டார்,அவருக்கு வேட்டியை விட தோளில் இருக்கும் துண்டு தான் முக்கியம் என்று தெளிவு படுத்திவிட்டார், இருப்பினும்,பொதுமக்களும்,தி.மு.க தொண்டனும்,தலைமை கூட்டணி வைத்தால் என்ன,காங்கிரஸ் நிற்கும் அனைத்து தொகுதிகளிலும் ஆ,தி.மு.காவுக்கு வாக்களித்து காங்கிரஸை தோற்கடியுங்கள்,தமிழன் மானத்தை காப்பாற்றுங்கள்,இல்லை என்றால் வரலாறு தமிழ் இனத்தை பழிக்கும்,வீரத்திற்கு தமிழனை உதாரணம் சொல்வது போய்,துரோகத்திற்கு தமிழன் பெயர் சொல்லும் நிலை உருவாகிவிடும்,
By வெங்கடேஷ்
3/8/2011 9:28:00 PM
திமுக இருபது தொகுதியில் வெற்றிபெறும் ,காங்கிரஸ் இருபத்தி ஐந்து தொகுதியில் வெற்றி பெரும் ,அடுத்த தேர்தலில் காங்கிரஸ் திமுக விற்கு தொகுதி ஒதுக்கும்
By ராம்குமார்
3/8/2011 9:13:00 PM
நேற்று ஈழ விடுதலைப்போரின் இறுதிகட்டத்தில் தனது பதவி சுகத்திற்காக உலக தமிழினத்தை காட்டிகொடுத்து துரோகம் செய்தார்.இன்று தனது குடும்பத்தை காப்பற்றுவதற்காக அண்ணா கண்ட திமுகவை சோனியாவிடம் அடகு வைத்து திராவிடத்தை காடிகொடுதுவிட்டார் கருணாநிதி. இவர் வீழ்ந்தால் மட்டுமே தமிழினம் வளரும்.
By தமிழன்.K
3/8/2011 9:05:00 PM
eppadium thokka poringa..........
By dheenadhayalan
3/8/2011 8:59:00 PM
பச்சோந்தி அரசியல் , ஊழல் அரசியல் .நம் தலை எழுத்து.
By bala
3/8/2011 8:58:00 PM
இது திமுகவின் total and complete தோல்வி! இதற்கா, இவ்வளவு டிராமா? hype? வேஸ்ட்! சுத்த வேஸ்ட்!! இனி யுவராஜ், EVKS போன்ற மூன்றாம்தர பேர்வழிகள் எல்லாம் இனி துள்ள ஆரம்பித்துவிடுவார்கள். இப்படியாவது ஒரு alliance தேவையா? இவ்வளவும் நடந்த பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் (அப்படி யாராவது இருந்தால்...) திமுகவிற்கும், திமுக தொண்டர்கள் காங்கிரஸ்-ற்கும் வேலை பார்ப்பார்களா? குழிதான் பறிப்பார்கள் ஒருவருக்கொருவர். காங்கிரஸ் கட்சிக்கு அதன் உண்மை பலம் (rather, பலவீனம்) உணர்த்த ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதை இப்போது கெடுத்துவிட்டார்கள். இப்போது நம்மாலானதெல்லாம், காங்கிரஸ்-ஐ எல்லா தொகுதிகளிலும் deposit இழக்க செய்வோம். தமிழர் பீகாரிகளுக்கு ஒரு விதத்திலும் சளைத்தவரில்லை தக்க பாடம் புகட்டுவதில் என உணர்த்துவோம்
By சந்துரு
3/8/2011 8:57:00 PM
pmk : put salt and eat
By srinivasan
3/8/2011 8:55:00 PM
P.M.K. 31 SEETTU tavaruthaga news velliyagi ullathu...thiruthavum
By bakrutheen
3/8/2011 8:45:00 PM
never thought that DMK is a shameless party... may be something is wrong on the DMK side to accept anything that the congress seeks... why to play such a big drama...could have said this "yes" long back..
By jerry
3/8/2011 8:25:00 PM
மம்தா துணிச்சல் கருணாநிதிக்கு இல்லை . வெக்க கேடு .
By Ravichandran
3/8/2011 8:23:00 PM
எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவு தருவோம் என்று சொன்ன பா. ம. க இப்போது ஒரு இடத்தை விட்டுத் தருமா அல்லது முரண்டு பிடிக்குமா ? அன்புமணிக்கும் ராஜ்ய சபா சீட்டுக்கும் தான் வெளிச்சம்.
By ஜோவலன் வாஸ்
3/8/2011 8:15:00 PM
DMK will win easily this time. Wish DMK all the best.
By selvin selvaa
3/8/2011 8:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
 

சென்னை: "மத்திய அமைச்சரவையிலிருந்து விலகல்' என்ற முடிவை தி.மு.க., எடுத்ததற்கு கோபமடைந்த சோனியா, காங்கிரசுக்கு 63 சீட்கள் வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். வீராப்பு பேசிய தி.மு.க., வேறு வழியின்றி 63 சீட்களை ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது. தி.மு.க., 61 தொகுதிகளையும், கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து இரண்டு தொகுதிகளையும் காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

"காங்கிரசின் அணுகுமுறை, கூட்டணியில் நாம் இருப்பதை விரும்பவில்லை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகும். பிரச்னை அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்' என்று, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என மிரட்டினால், காங்., இறங்கி வரும் என எதிர்பார்த்தது தி.மு.க., ஆனால், மவுனம் காத்தது காங்., தி.மு.க.,வின் தீர்மானத்தைத் தொடர்ந்து, அக்கட்சியின் மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், காந்திசெல்வன் உள்ளிட்டோர் ராஜினாமா கடிதத்தோடு டில்லி சென்றனர். நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை தராமல் காலம் தாழ்த்தினர். மத்திய காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், பிரணாப் முகர்ஜி என ஒவ்வொருவரிடமும் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஏன் நெருக்கடி தருகிறீர்கள்: இவர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, " பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிக்கும் இந்த நேரத்தில், அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து நெருக்கடியை ஏன் தருகிறீர்கள்' என்று கேட்டார். மேலும், "இரண்டு கேபினட் அமைச்சர்கள் விலகினால், அதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி, அதற்கு, எதிர்க்கட்சிகள் பிரதமரின் பதிலை பார்லிமென்டில் தாக்கல் செய்யக் கேட்பார்கள். இதனால், தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும்' என்றும் தி.மு.க., அமைச்சர்களிடம், பிரணாப் முகர்ஜி கூறினார்.

சோனியா கோபம்: முகர்ஜியின் கேள்விக்கு தி.மு.க., அமைச்சர்கள் பதில் ஏதும் கூற முடியாமல் திணறினர். காங்., தலைவர் சோனியாவை நேற்று முன்தினம் இரவு தி.மு.க., அமைச்சர்கள் சந்தித்தனர். அப்போது, "என்னிடம் கூறாமல் அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை ஏன் எடுத்தீர்கள். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஏழு ஆண்டுகளாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில், தி.மு.க., - காங்கிரஸ் உறவு நன்றாகவே இருந்துள்ளது. தி.மு.க., உடன் மனக்கசப்பு இருந்தால் கூட காங்கிரஸ் வெளிப்படையாகக் கூறவில்லை. தற்போது நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்துக் கூட காங்கிரஸ் வெளியில் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்கும் போது, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் வருத்தம் ஏற்பட்டதாகவும், அதனால், அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாகவும் தி.மு.க., வெளிப்படையாகக் கூறியது தவறு' என்று சோனியா கோபப்பட்டார். அதற்கு பதிலளிக்காத தி.மு.க., அமைச்சர்கள், 60 சீட்கள் தருவதில் உறுதியாக இருந்தனர். ஆனால், 63 தொகுதிகள் என்பதில் சோனியா உறுதியாக இருந்தார். கடைசியாக, முதல்வருடன் மத்திய அமைச்சர் அழகிரி பேசி, 61 தொகுதிகள் தருவதற்கு முன்வந்தார்.காங்கிரஸ் தரப்பு தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தது. இதையடுத்து, கூட்டணி கட்சியினருடன் தி.மு.க., தரப்பில் பேசப்பட்டது.

தி.மு.க., சார்பாக, 61 தொகுதிகள் தரவும், ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பா.ம.க., - கொங்கு, முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றில் இரண்டு கட்சிகள், தலா ஒரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் முடிவில், 63 தொகுதிகளை தர தி.மு.க., சம்மதித்தது. ஆனாலும், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, மீதமுள்ள 15 தொகுதிகளை தாங்களே தேர்வு செய்வோம் என்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது. இதன் காரணமாக, நேற்று இரு தரப்பிலும் அவசர ஆலோசனைகள் நடந்தன. அதில், காங்கிரஸ் எட்டு தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளவும், மீதமுள்ள ஏழு தொகுதிகளை பொறுத்தவரை, தி.மு.க., ஒதுக்கும் தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த உடன்பாட்டுக்கு காங்கிரஸ் சம்மதித்தது. இதையடுத்து, நேற்று மாலை உடன்பாடு ஏற்பட்டதாக குலாம்நபி ஆசாத் அறிவித்தார். காங்கிரஸ் விரும்பியபடி 63 தொகுதிகளை கடைசியாக பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது.

கொள்கை, சுயமரியாதை முக்கியமாம்: காங்கிரஸ் உறவு முறிவு குறித்து தி.மு.க., ஆதரவு தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்

தி.க., தலைவர் கி.வீரமணி அறிக்கை: குட்டக்குட்ட தி.மு.க., குனியக்கூடாது. காங்., இல்லாமல் போட்டியிட தி.மு.க., தயாராக வேண்டும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை காப்பதுதான் தி.மு.க.,வின் அடிப்படை லட்சியம். பதவிகளை விட கொள்கைகளும் அவற்றைபரப்பும் இயக்கமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுநடந்தால் அனைவருக்கும்நல்லது. கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.,வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேட்டி: தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் முடிவு, கூட்டணியை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. இந்த முடிவால் கூட்டணி பலவீனமாகாது. தி.மு.க., அரசு தனிப் பெரும்பான்மையோடும், வலுவோடும், தமிழகத்தில் அமையும். தி.மு.க.,வின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் அறிக்கை: மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்னைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதும் என்றும், தி.மு.க.,வின் உயர் மட்ட செயற்குழு முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், தி.மு.க., சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக