வியாழன், 10 மார்ச், 2011

Reward to pan kee mun: அரசியல் தந்திரத்தை இந்தியாவில் கற்றேன்: பான் கி மூன்


கண்டிப்பாக இந்தியம் பான்கிமூனுக்கு ஆதரவாக  இருக்கும். இந்தியச் சிங்களக் கூட்டுப் படுகொலைகளுக்கு உடந்தையாக  இருந்தமைக்காகப்  பரிசு வழங்கவேண்டாவா?
பான்கிமூன் கண்டுகொள்ளாமல்  இருந்தமையாலும் நம்பியார் முதலான தன் கீழ்ப் பணியாற்றுவோரைக் கட்டுப்படுத்தாமல்   இருந்ததாலும் வெண்கொடஏந்திய அமைதிப் புறாக்களையகொல்ல முடிந்ததே! ஈழத்தமிழ் மக்களின் பேரழிவுச் செயல்களுக்கு உதவிய நன்றிக்காக இந்தியம் அவருக்கு எப்பொழுதும் துணையாக இருக்கும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /



அரசியல் தந்திரத்தை இந்தியாவில் கற்றேன்: பான் கி மூன்

ஐ.நா.வில் புதன்கிழமை நடந்த இந்திய இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த பொதுச் செயலாளர் பான் கி மூன் (வலமிருந்து 3-வது), வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியம் (வலமிரு
நியூ யார்க், மார்ச் 9: அரசியல் தந்திரத்தை இந்தியாவில்தான் கற்றுக் கொண்டேன் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார்.ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் பணியாற்றியபோது, இந்திய அரசியல் தந்திர முறைகளையும், இந்திய இசையைப் பற்றியும் தெரிந்து கொண்டேன் என அவர் புதனன்று தெரிவித்தார். ஐ.நா. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பிரபல இசைக் கலைஞர் எல்.சுப்பிரமணியத்தின் வயலின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது அவர் இவ்வாறு கூறினார்.பான் கி மூன் தனது கல்வியை முடித்ததும் தென் கொரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். முதலில் இந்தியாவிலுள்ள தென்கொரிய தூதரகத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் பணிபுரியும் காலத்தில் ராஜதந்திரம் என்றால் என்ன என்று படித்தேன். அந்த காலகட்டத்தில்தான் இந்திய இசை குறித்தும் தெரிந்து கொண்டேன் என அவர் தெரிவித்தார்.இசை நிகழ்ச்சியின்போது, ஐ.நா.வில் உள்ள இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி உடனிருந்தார். அப்போது அவர் கூறியது: ""அரசியல் தந்திரத்துக்கு என்று ஒரு விசித்திரமான மொழி உண்டு. ஆனால் இசை என்பது உலக மொழி. இதன் சூட்சுமங்களைத் தனியாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை'' என அவர் குறிப்பிட்டார்.பான் கி மூனின் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக் காலம் இந்த ஆண்டின் இறுதியோடு முடிவடைகிறது. அவர் இரண்டாவது முறையாக பதவி வகிக்க இந்தியா போன்ற நாடுகளின் பின்துணை அவசியம். அவர் மீண்டும் பதவிக்கு வர விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியா அவருக்கு ஆதரவளிக்கும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக