சென்னை, செப். 9: ரம்ஜானை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்: வேறுபாடின்றி அனைவரும் சமத்துவம் பேண வேண்டும் என்பதே ரம்ஜான் பண்டிகையின் உயர்ந்த லட்சியமாகும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது கலாசாரம். அதனை பேணிகாப்பது நமது கடமையாகும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை வல்லரசாக்குவோம்.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: நபிகள் நாயகம் போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: ரம்ஜான் நோன்பு என்பது பாவங்களை சுட்டெரித்தல் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக பாவங்களை சுட்டெரிக்கும் வேள்வியில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: நோன்புப் பெருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டுத் திருநாளாம் இந்நாளில் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை தழைக்க சூளுரை ஏற்போம்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இல்லாதவர்கள் அனுபவிக்கும் துயரங்களை அனைவரும் உணரச் செய்யவே நோன்பு இருப்பதை நபிகள் நாயகம் ஒரு கடமையாக இஸ்லாமியர்களுக்கு எடுத்துரைத்தார். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஈதல் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்பது தேமுதிகவின் கொள்கை.ஒரு வகையில் எங்களது கொள்கையும், இஸ்லாமிய மார்க்கம் எடுத்துச் சொல்லும் கடமைகளும் ஒன்றிணைந்து இருப்பது பெருமைக்குரியதாகும்.விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்: தமிழகத்தில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும். 2016-ல் தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர். சரத்குமார்: உழைப்பவர்களின் வியர்வை உலர்வதற்குமுன் அவர்களது கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்னும் நபிகள் நாயகம் நல்வாக்குப்படி, உலகெங்கும் உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும் என்பதை இந்த புனிதத் திருநாளில் உறுதி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னாள் மத்திய இணை அமைச்சர் சு. திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பச்சமுத்து, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், ஐக்கிய ஜனதா தளம் மாநிலத் தலைவர் டி. ராஜகோபால், வசந்தகுமார் எம்.எல்.ஏ., வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என். ராமமூர்த்தி, அகில இந்திய மூவேந்தர் முன்னனிக் கழக நிறுனவத் தலைவர் ந. சேதுராமன், தமிழ்நாடு ஜனதா தள பொதுச் செயலாளர் க. ஜான்மோசஸ், அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் வி. ரங்கநாதன், சுன்னத் ஜமா-அத் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர் உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருத்துக்கள்
ஆரிய வேதங்களில் ஆரிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான தசுயூக்களை / தமிழர்களை / ஒழிப்பதற்காக என்றே யாகங்கள் நடத்தப்படுவதாகக் குறிக்கப் பெற்றுள்ளது. இசுலாமில் பொதுவாக எதிரிகளை ஒழிப்பதற்கென்று வழிபாடு செய்வதாகக் குறிப்பு உள்ளது. பொதுவான எதிரி என்னும் பொழுது நம் உள்ளத்தில் உள்ள அழுக்காறு. வெறுப்பு முதலான பகை உணர்வுகைளயும் கருத்தில் கொள்ளலாம். ஆய்ந்து பார்த்துக் குறிப்பு எழுதுக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:38:00 AM
9/11/2010 5:38:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
9/11/2010 5:32:00 AM
9/11/2010 5:32:00 AM
By Dillu Durai
9/11/2010 3:12:00 AM
9/11/2010 3:12:00 AM
By aurangazeb
9/11/2010 3:12:00 AM
9/11/2010 3:12:00 AM
By Dillu Durai
9/11/2010 2:56:00 AM
9/11/2010 2:56:00 AM
By Mohamed
9/11/2010 1:46:00 AM
9/11/2010 1:46:00 AM
By Mohamed
9/11/2010 1:41:00 AM
9/11/2010 1:41:00 AM
By Ram
9/11/2010 1:40:00 AM
9/11/2010 1:40:00 AM
By Indian
9/11/2010 1:38:00 AM
9/11/2010 1:38:00 AM
By Dillu Durai
9/11/2010 1:23:00 AM
9/11/2010 1:23:00 AM
By Dillu Durai
9/11/2010 12:51:00 AM
9/11/2010 12:51:00 AM
By Dillu Durai
9/11/2010 12:22:00 AM
9/11/2010 12:22:00 AM
By soothiran
9/10/2010 11:48:00 PM
9/10/2010 11:48:00 PM
By sinthikkavum
9/10/2010 11:46:00 PM
9/10/2010 11:46:00 PM
By sinthikkavum
9/10/2010 11:44:00 PM
9/10/2010 11:44:00 PM
By THENS
9/10/2010 9:45:00 PM
9/10/2010 9:45:00 PM
By இந்திய நேசன்
9/10/2010 8:48:00 PM
9/10/2010 8:48:00 PM
By இந்திய நேசன்
9/10/2010 8:42:00 PM
9/10/2010 8:42:00 PM
By Dillu Durai
9/10/2010 3:34:00 PM
9/10/2010 3:34:00 PM
By Dillu Durai
9/10/2010 11:29:00 AM
9/10/2010 11:29:00 AM
By Vedaprakash
9/10/2010 7:02:00 AM
9/10/2010 7:02:00 AM
By Vedaprakash
9/10/2010 6:58:00 AM
9/10/2010 6:58:00 AM
By Vedaprakash
9/10/2010 6:56:00 AM
9/10/2010 6:56:00 AM
By Vedaprakash
9/10/2010 6:54:00 AM
9/10/2010 6:54:00 AM
By indian
9/10/2010 6:34:00 AM
9/10/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *