வியாழன், 9 செப்டம்பர், 2010

மூளை நினைப்பதை எழுதும் கருவி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

லண்டன், செப். 9-
 
மூளை என்ன நினைக்கிறதோ அதை அப்படியே எழுத்தாக கொண்டு வரும் கருவியை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். லண்டனில் உள்ள பேச்சு ஆய்வு மைய விஞ்ஞானிகள் இந்த கருவியை உருவாக்கி உள்ளனர்.
 
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் அவர்கள் எழுதி காட்டுவதற்கு கையும் செயல்படாது. இப்படிப்பட்டவர்கள் பேச்சை எப்படி புரிந்து கொள்வது என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
 
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூளையில் எலக்ட்ராட்ஸ் கொண்ட மைக்ரோ சிப்பை பொருத்தி அதை கம்ப்யூட்டரில் இணைத்தனர். மூளை வெளியிடும் சிக்னலை அந்த கம்ப்யூட்டர் எழுத்தாக மாற்ற நினைத்தனர்.
 
அது 70ல் இருந்து 90 சத வீதம் துல்லியமாக எழுத்தாக மாற்றியது ஆமாம், சூடாக இருக்கிறது, குளிராக இருக்கிறது, பசிக்கிறது, தாகம் எடுக்கிறது, ஹலோ, குட்டை, அதிகம், குறைவு போன்ற வார்த்தைகளை துல்லியமாக மாற்றியது.
 
இதன் மூலம் மூளை நினைப்பதை அனைத்தையும் எழுத்தாக மாற்றி விட முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதற்காக நவீன கருவியை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் இறங் கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக