கொழும்பு, செப்.6- தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்துவதை விட சென்னையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் கா. சிவத்தம்பி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறவுள்ளது. ஆனால், இதற்கு சிவத்தம்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது."தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்த இது சரியான நேரம் அல்ல. இந்த மாநாட்டுக்கு இலங்கை அரசு அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறது. எனவே, மாநாடு பிரச்னைக்குரிய விவகாரமாக மாறிவிடும்." என்று சிவத்தம்பி கூறியுள்ளதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 6:27:00 PM
9/6/2010 6:27:00 PM
By karunakaran
9/6/2010 4:52:00 PM
9/6/2010 4:52:00 PM
By Paris EJILAN
9/6/2010 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 9/6/2010 4:15:00 PM
கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தமிழறிஞர் சிவதம்பி எதிர்ப்பு; சென்னையில் நடத்த கோரிக்கை
(தமிழ்ப்பகைவர்கள் சிலர் வேண்டுமென்றே தாய்நிலக்காவலர்களை இழிவுபடுத்தி எழுதி வருகின்றனர். போகட்டும்! அறியாப் பாவிகள்!)