சென்னை, செப். 7: தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு கல்லூரிகளில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்று கருணாநிதி தெரிவித்திருந்தார். இந் நிலையில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். இதன்படி தமிழக அரசின் நேரடி பணி நியமனங்களில் 20 சதவீத இடங்கள் தமிழில் படித்தவர்கள் மூலம் நிரப்பப்படும்.
கருத்துக்கள்
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/8/2010 4:14:00 AM
9/8/2010 4:14:00 AM
அவசர சட்டம் பிறப்பிப்பு
http://www.maalaimalar.com/2010/09/08050103/tamil-nadu-government-emergenc.html
மாலை முரசு : அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசு அவசர சட்டம்
http://www.maalaimalar.com/2010/09/08050103/tamil-nadu-government-emergenc.html
மாலை முரசு : அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசு அவசர சட்டம்