வியாழன், 9 செப்டம்பர், 2010

தலையங்கம்: தமிழ் இனி தலைநிமிரும்!


ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தையும், இதனால் தமிழுக்கு ஏற்படவிருக்கும் வளர்ச்சியையும் உணராமல் இருக்கிறோம். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு என்பது என்ன சாதாரண விஷயமா?முன் எப்போதும் இல்லாத பேரழிவைத் தமிழ்மொழி சமீபகாலமாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. வேறு எந்த மொழியினரும் காட்டாத பிறமொழி மோகத்தைத் தமிழன் ஆங்கிலத்திடம் காட்ட முற்பட்டிருக்கும் காலகட்டம் இது. தமிழில் படிப்பது இருக்கட்டும், தமிழில் பேசுவதேகூட கௌரவத்துக்கு இழுக்கு என்று இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தவறான கருத்து வேரூன்றிவிட்டிருக்கும் அவலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வீட்டிலும்கூட ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று கருதிப் புளகாங்கிதப்படும் நிலைமை. இப்படி ஒரு சூழலில், தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டம், இருட்டுக் குகையில் வெளியில் செல்ல வழி தெரியாமல் திணறுபவனுக்கு எங்கோ ஒரு ஒளிக்கீற்று திடீரெனத் தெரியவந்தாற்போன்ற பேருவகையை, நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்தவரும் மொழியினரும், ஆங்கிலம், இந்தி என்று எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், தங்களுக்குள் தங்கள் வீட்டில், நண்பர்களுடன் பேசும்போது தாய்மொழியில் மட்டுமே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழன் மட்டும்தான் தமிழ் தெரியாது என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் ஒரு இனத்தவனாகக் காணப்படுகிறான். பலர் தங்கள் குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்வது தவறில்லை என்று கூடக் கருதுகிறார்கள்.இதற்கு முன்பே தலையங்கத்தில் நாம் குறிப்பிட்டிருக்கும் விஷயம்தான் என்றாலும் அதை மீண்டும் கூறுவதில் தவறில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தங்கள் குழந்தைகளுக்கு, அதுவரை தங்கள் தாய் தகப்பன் பெயரைச் சூட்டி மகிழ்ந்தது போய், நல்ல தமிழில் பெயர்களைச் சூட்டவேண்டும் என்கிற தமிழ் உணர்வு மேலெழுந்தது. தமிழ்ச்செல்வன், கயல்விழி, தென்னவன், நெடுஞ்செழியன் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் படித்து வளர்ந்து திருமணம் செய்து கொண்டபோது, எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தங்களது குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள், எந்தவித அர்த்தமும் இல்லாத சினிமா நடிக, நடிகைகளின் பெயரும், ரமேஷ், சுரேஷ், ராஜேஷ் போன்ற வடமொழிப் பெயர்களும்.  இப்போது அதுவும்போய் சன்னி, புன்னி என்று அர்த்தமில்லாமல் பெயர் சூட்டும் அவலநிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.தமிழகத்தில் மட்டும்தான், தாய்மொழியில் படிக்காமல் தமிழே தெரியாமல் ஒரு குழந்தை படித்து முனைவர் பட்டம் வரை பெற முடியும் என்கிற நிலைமை தொடர்கிறது. தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்த ஒரு மகத்தான முடிவு, தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்தது. அத்துடன் நின்றுவிடாமல் இப்போது அரசு வேலைவாய்ப்பிலும் தமிழ்ப் பாடமொழியில் படித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது என்று பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம், தமிழன்னைக்குச் செய்திருக்கும் அளப்பரிய திருத்தொண்டு.நமக்குத் தெரிந்து தொல்காப்பியர் காலத்திலிருந்தோ, அதற்கு முன்போ கூட வடமொழி இருந்திருக்கிறது. வடமொழியால் சங்க இலக்கியங்கள் தடைபடவில்லை. தமிழின் வளர்ச்சியை வடமொழி தடுக்கவில்லை. சொல்லப் போனால், தமிழ்தான் சம்ஸ்கிருதத்துக்கே தந்தை மொழியாக இருந்திருக்கக்கூடும் என்பதற்குப் பல சான்றுகளை முன்வைக்க முடியும். வடமொழிக்குப் பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் படையெடுப்பைத் தொடர்ந்து உருது தமிழகத்துக்கு வந்தது. உருது தமிழுக்கு வளம் சேர்த்ததே அன்றி, தமிழ் வளர்ச்சியைத் தடை செய்துவிடவில்லை. அதேபோல, விஜயநகர சாம்ராஜ்யப் படையெடுப்பால் வந்த தெலுங்கும், மராட்டியப் படையெடுப்பால் வந்த மராட்டியும் தமிழின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவில்லை. இந்த மொழிகளால் எல்லாம் தமிழை வழக்கொழிந்து போக வைக்க முடியவில்லை.ஆனால் ஆங்கிலேயர்கள் நுழைந்து வெறும் நானூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாம் தமிழைத் தமிழனிடம் தேடவேண்டிய அவலநிலை அரங்கேறி விட்டிருக்கிறது. இதற்குக் காரணம், வடமொழியோ, உருதோ, தெலுங்கோ, மராட்டியோ ஆட்சி மொழிகளாக இங்கே கோலோச்சவில்லை. ஆங்கிலேயர்கள் வந்தவுடன், ஆங்கிலம் படித்தவர்களுக்குத்தான் அரசு வேலைவாய்ப்பு என்று ஆகிவிட்டபோது, தமிழ் தமிழனின் மனதிலிருந்து தடம்புரளத் தொடங்கிவிட்டது. மொழிப்பற்றை அவனது வயிற்றுப் பசி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், அமைந்த மாநிலங்களில் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட்டிருக்கவேண்டும். ஆங்கிலமும், இந்தியும் தொடர்பு மொழிகளாக உயர்மட்ட அளவிலும், மாநில மொழிகள் அன்றாட அலுவல் மொழியாகவும், மாநில மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்றும் அரசு முடிவெடுத்திருந்தால், இந்த அளவுக்கு ஆங்கில மோகம் வளர்ந்திருக்காது. தமிழும் இத்தகைய பின்னடைவைச் சந்தித்திருக்காது.தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி, இப்போது முதல்வர் கருணாநிதி சொன்னதைச் செய்து காட்டிவிட்டார். ஏன் 20 விழுக்காடு மட்டும் ஒதுக்கீடு? தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்று சட்டம் இயற்றக்கூடாதா என்று சிலர் விதண்டாவாதம் பேசக்கூடும். அப்படிச் செய்திருந்தால், ஆந்திரத்தில் ஏற்பட்டதுபோல, பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டம் ரத்தாகி இருக்கும். "முதலில் 20 விழுக்காடு ஒதுக்கீடு சட்டமாகட்டும், பிறகு படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம்' என்கிற முதல்வரின் சாதுர்யமான முடிவு அவரது நீண்ட அரசியல் அனுபவத்தையும், நிர்வாகத் திறமையையும் வெளிச்சம் போடுகிறது.ராஜாஜியின் சாதனை என்று நினைவுகூற மதுவிலக்கு; காமராஜின் சாதனை என்று சரித்திரம் பதிவு செய்வது இலவசக் கல்வித் திட்டம்; அண்ணாவின் பங்களிப்பு என்பது தமிழ்நாடு என்கிற பெயர்மாற்றம்; எம்.ஜி.ஆரை நினைவில் நிறுத்துவது சத்துணவு. முதல்வர் கருணாநிதியைப் பற்றி வருங்காலம் பதிவு செய்யப் போவது, தமிழ் வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தவர் என்பதாகத்தான் இருக்கும்.அதற்காக, தமிழகம் இந்தச் சட்டத்தைக் கரவொலி எழுப்பி வரவேற்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைப் பிறப்பித்து தமிழுக்கு மறுவாழ்வளித்த தமிழக முதல்வருக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்கி நன்றி செலுத்தவேண்டும்!இந்த ஒரு சட்டத்தின் விளைவாகத் தமிழ் மீண்டும் தலைநிமிரும்!
கருத்துக்கள்

தமிழ் தொடர்பான எந்தச் சட்டமாக இருந்தாலும் அரைகுறையாகத்தான் இருக்கும். அதன் செயலாக்கமும் மோசமாகத்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக அரைவேக்காடாக உள்ள தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தையும் 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் முழுமையாய் நிறைவேற்ற இயலாத அதன் போக்கையும் குறிப்பிடலாம். தமிழை வழிபாட்டு மொழியாக்கும் சட்டம் எந்த நிலையில் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.சாதனைப் புள்ளிவிவரத்திற்கும் கட்சிக் கொத்தடிமைகள் புகழ்வதற்கும்தான் அது உதவுகிறதே தவிர வேறு என்ன பயனைக் கண்டோம்? தினமணியும் நடுநிலையுடன் ஆய்ந்து தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் கருத்தைத் தெரிவிக்காமல் பின்பாட்டுப்பாடவோ ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக மாறவோதான் விரும்புகிறதா? தமிழ்ப்பயன்பாட்டிற்குத் திருப்பு முனையாக அமையும் அவசரச்சட்ட அறிமுகத்தைப் பாராட்டுங்கள். அதே நேரம் அரசிற்குச் சுட்டிக்காட்ட வேண்டிய மறு பக்கத்தையும் சுட்டிக் காட்டுங்கள். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொள்க. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/9/2010 5:09:00 AM
நடைமுறையில் பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பணித் தேர்வுகள்தான் மிகுதியான எண்ணிக்கையிலான பணி வாய்ப்பை நல்குகின்றன. ஆனால் கல்லூரி அடிப்படையில் 20 % என்பது 75 % இற்கும் மேலாகத் தமிழ்வழியாக உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உரிய சமூக நீதியை அளிப்பதாக ஆகாது. எனவே, குறைந்தது 50 % ஒதுக்கீடாவது தமிழ் வழியாகப் பயின்றவர்களுக்கு ஒதுக்கினால்தான் சமூக நீதி வழங்கியதாக அமையும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் மட்டுமின்றி, பிற அரசு அலுவலகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய அரசு நிறுவனங்கள்,தனியார் அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பு அலுவலகங்களிலும் அலுவலக மொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்தினால்தான் உண்மையிலேயே தமிழ் அரியணை ஏறியதாக அமையும். இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக; தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து என்னும் தெய்வப்புலவரின் திருக்குறளைத் தினமணி நினைவில் கொள்வது நல்லது. எனவே, அவசரச் சட்டத்திற்குப் பாராட்டுகள். அதே நேரம் தமிழ் வழிப் பயில்கின்றவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஒதுக்கீடு தேவை! தேவை!தேவை! 
பாராட்டுடன் இலக்குவனார் திருவள்ளுவன
By Ilakkuvanar Thiruvalluvan
9/9/2010 4:58:00 AM
சொன்னதைச் செய்வோம் என்னும் முதல்வருக்கு மாநாட்டின் பொழுது இல்லாவிட்டாலும் அறிவித்த உடன் ஆணை பிறப்பிக்க இயலாமல் காலத்தாழ்வாக அவசரச்சட்டம் வருவதில் இருந்தே கொள்கை முடிவை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் தரப்பிலிருந்து இடையூறுகள் வந்திருக்க வேண்டும் என அறியலாம். இதற்குத் தடை வாங்க எத்தனைத் தமிழ்ப்பகைவர்கள் காத்திருக்கின்றார்களோ தெரியவில்லை. எனினும் பாராட்ட வேண்டிய இவ்வவசரச் சட்டத்தின் மறு பக்கததைக்கூட எடுத்து இயம்ப மாட்டேன் எனப் பிடிவாதமாகப் புகழ்மாலை மட்டுமே சூட்டுவேன் என்பது எந்த எதிர்பார்ப்பில் என்று தெரியவில்லை. நடைமுறையில் பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பணித் தேர்வுகள்தான் மிகுதியான எண்ணிக்கையிலான பணி வாய்ப்பை நல்குகின்றன. ஆனால் கல்லூரி அடிப்படையில் 20 % என்பது 75 % இற்கும் மேலாகத் தமிழ்வழியாக உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உரிய சமூக நீதியை அளிப்பதாக ஆகாது. எனவே, குறைந்தது 50 % ஒதுக்கீடாவது தமிழ் வழியாகப் பயின்றவர்களுக்கு ஒதுக்கினால்தான் சமூக நீதி வழங்கியதாக அமையும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் மட்டுமின்றி, பிற அரசு அலுவலகங்கள், மத
By Ilakkuvanar Thiruvalluvan
9/9/2010 4:55:00 AM
Unbiased appraisal by the editor of Dinamani. Hats off
By Prof. T.Rajendran
9/9/2010 3:46:00 AM
முதலில் பொருளாதார முன்னேற்றம் அப்புறம் தான் மொழி.இன்று இந்திய நிறுவனங்களின் வளார்ச்சிக்கு அதன் ஊழியர்களின் ஆங்கில அறிவு பெரிய பலம். தின‌ச‌ரி பேசி ப‌ழ‌கினால் தான் ஆங்கிலத்தில் ச‌ர‌ளம் வ‌ரும் வேலை வாய்ப்புக்கும் பெரிய‌ ப‌ல‌ம்.ந‌டுத்த‌ர‌ குடும்ப‌ங்க‌ள் இன்றைக்கு உய‌ர் ந‌டுத்த‌ர‌ குடும்ப‌மாக‌ பொருளாதார‌ ரீதியில் வ‌ள‌ர்சி அட‌ன்திருக்கார்க‌ள். இந்த‌ வ‌ள‌ர்சி ஏழைக‌ளையும் அடைய‌ கிராம‌ங்க‌ளிலும் ஆங்கில‌ம் ப‌ர‌வ‌ வேண்டும்.
By Kalanithi
9/9/2010 3:19:00 AM
தமிழக முதல்வர் எத்தனையோ தவறுகளை தமிழ் சமுதாயத்திற்கு இழைத்து இருந்தாலும், இந்த சட்டத்தின் மூலம் எடுத்துள்ள முயற்சி பாராட்டப்பட வேண்டியது. வாழ்த்துக்கள். ஆனால் இது தமிழ் வழி படிப்பவர்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்துமே தவிர தமிழ் வளர்ச்சிக்கு உதவப்போவது இல்லை. தமிழ் மொழியில் பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும், கணினியில் தமிழை பயன்படுத்துவதற்கான மென் பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுப்பது தான் மொழி வளர உதவும். தவிர மாணவர்கள் பள்ளிகளில் தமிழை ஆர்வத்துடன் கற்கும் வகையில் இலக்கணப் பகுதிகளை வெகுவாக குறைத்து, அவர்கள் ஆர்வத்துடன் மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும். தமிழ் மொழியை ஆர்வத்துடன் மாணவர்கள் கற்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைய வேண்டுமே தவிர தமிழ் பாடத்திட்டம் என்றாலே கசப்பான இலக்கணம் தான் என்று வுக்கும் வகையில் பாடத்திட்டம் இருக்க வேண்டும்.
By akkinik kunju dindigul
9/9/2010 3:15:00 AM
my own experience in chennai, when my sons were studying in chennai leading school.Even though they were studying in english medium i wanted them to study thamil as lanuage but everybody discouraged us saying even though student writes best in thamil exam they will never get high marks which will affect total marks in final exam.so my sons end up in doing french and got 90% in french.thamil teachers must change their attitude.they cant expect every students to have same knowledge of teachers. this situation must change.i am sure this is happening even today in all city schools. how can u help to eradicate this situation??? even today i feel hurt when i see my sons cant read or write thamil even though we all talk only in thamil at home
By siva
9/9/2010 2:33:00 AM
CRAZY PEOPLE ARE REDAY TO KILL THEIR MOTHER FOR MONEY.
By Paris EJILAN
9/9/2010 1:33:00 AM
ARUMAIYANA INTHA MUDIVUKKU ILLAI ILLAI ARMPATHIRKKU KARAVOLI ELUPUNKAL
By RAJA
9/9/2010 12:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
THIS IS NOT GOOD IN LONG RUN. THOUGH THERE ARE RESEVERSTAION FOR SC/ST/BC/MBC PEOPLE WHO ARE IN POWER OR IN ADMINISTRATION IN GOVERNMENT DEAPRTMNET GET JOBS FOR THEIR SONS. THE POOR REAMINS POOR. PLEASE UNDERSTAND THAT HARDLY 1000 VACANIES (IT MAY NOT EVEN THERE SOMETIMES) WIL EXIST IN TAMIL NADU PER YEAR. FOR GETTING THIS 200 VACINES IF WE TAKE TAMIL AS MEDIUM IS FOOLISH. EVEN THIS 200 SEATS WILL BE FILLED BY RECOMENDATIONS, OR BRIBE ONLY. THOUGH THIS IS POLITICALY MOTIVATED THIS WILL NOT MAKE PEPOLE TO GO TO TAMIL MEDIUM SCHOOL. YOU CAN SEE THIS IN FUTURE. murali
By murali
9/9/2010 3:07:00 PM
சத்தான கருத்துக்கள் தந்த இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு நன்றி - என்றுன் உங்கள கருத்துக்களை ஆவலுடன் படிப்பவன் - தலையங்க ஆசிரியரை சரியாக குறிப்பால் உணர்த்தி உள்ளீர்கள் .. தொடரட்டும் உங்கள் பணி - தினமணி - எப்போதும் புகழ் மாலை சுடுவதை விட , எதிர்மறைகளை சரியாய் எடை போடவும்..
By Manikandan V
9/9/2010 3:00:00 PM




திரு மணிகண்டன் அவர்களுக்கு நன்றி. இச்சட்டத்தின் மறுபுறத் தீமையை யாரும் புரிந்து கொள்ளவில்லை. தமிழ் படித்தவர்களுக்கும் தமிழ் வழி படித்தவர்களுக்கும் முன்னுரிமை என்றால் இவர்களுக்குப் பணியமர்த்தம் வழங்கிய பின் எஞ்சிய பணியிடங்கள் பிற மொழி வழியாகப் பயின்றவர்களுக்கு வழங்கப்படும் எனக் கருதினோம். இப்போதைய சட்டத்தின் மூலம் 80%பிற மொழியாளர்களுக்கான பணி வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. 80%வேலைவாய்ப்பு தரும் பிற மொழி வாயிலாக ஒருவர் படிக்க முன்வருவாரா? அல்லது 20% மட்டுமே பணி வாய்ப்பு உள்ள தமிழ் வழியாகப் படிப்பாரா?ஏதோ புகழ வேண்டும் என்ற கட்டாயத்திற்காக எழுதப்பட்ட ஆசிரிய உரையே இது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/9/2010 3:48:00 PM
I have no choice, have to appreciate only in English, I don't have Tamil keyboard, Really appreciably topic. We salute Chief minister for this particular amendment. Also one more thing, i had been to Singapore and Malaysia for 4-5 years they love talking in Tamil, Only in Tamilnadu, Particularly in Chennai People don't respect the value of Tamil.
By Sridharan
9/9/2010 3:46:00 PM

்!
கருத்துக்கள்

It is a shame to have Tamil as the medium of instruction. I think we are going backwards. DMK has come to power only with the Tamil banner.English is still the best universal language for all practical purposes. I live in Canada and I feel that it is better to have proper knowledge of English.
By Andy Shiv
9/9/2010 11:57:00 PM
மொழிக் கல்வி என்பதற்கும், மொழிவழிக் கல்வி என்பதற்கும் வேறுபாடு தெறியாது சிலர் தடுமாறுகிறார்கள். ஆங்கிலம் எழுதுவதற்கும், பேசுவதற்கும் ஆங்கில மொழிக் கல்வி போதுமானது. தாய் மொழி வழிக் கல்வியானது,மனிதனின் திறனை(Skill level-வேண்டுமென்றே தமிழ் தெறியாதவர்கள் போல் நடிப்பவர்களுக்கு) உயர்த்த பயன் படும்.தமிழர்களுக்குத் எது வேண்டும் ? இரண்டுமே வேண்டும் என்றால், தமிழ்வழி கல்வியுடன், ஆங்கில மொழிக் கல்வியையு வைத்துக் கொள்ளலாமே.இன்று உலக அரங்கில், தாய் மொழிவழிக் கல்வியை பயன்படுத்தும், ரசியா,சீனா, வியட்னாம், தென் கொரியா, ஜப்பான் இவைகள் உயந்த நிலை அடைந்துள்ளது.அந்த நாட்டின் மனித வழத்திடம் நம் இந்தியர்கள் பிச்சை எடுக்கவேண்டும்.
By அன்பன்
9/9/2010 11:06:00 PM
There s a simple way to protect Tamil. All MLAs, MPs and Ministers, whose porgeny study or studied in Englsh medium sould be divested of their posts. Elemination of hypocrites will cleanse our stinking political stables.
By Mitran
9/9/2010 11:02:00 PM
முதல்வர் ஆற்றிய சமுதாய சீர்திருத்தப் பணிகள் ஏராளம். ஏராளம். தமிழுக்கு அவர் ஆற்றிய இச்சேவை தமிழ் போல் அவரை சிறப்புற வைக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்க முதல்வர் பல்லாண்டு.
By அக்னிப்புத்திரன்
9/9/2010 11:00:00 PM
தமிழகத் தேர்வாணை நடத்தும் அத்துணை(அனைத்து நிலை, அனைத்து துறை) தேர்வுகளும் தமிழில் மட்டும்தான் நடத்தப் படவேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டமியற்றி, அமுல் நடத்தினால், இப்படிப் பட்ட இட ஒதுக்கீட்டுச் சட்டங்கள் தேவை இல்லை. தமிழ்நாடு அரசில் அனைத்துத் துறையிலும், ஆங்கில பயன்பாட்டை நீக்கிவிட்டால், நிலைமை சரியாகி விடும்.இதைக் கருணாநிதி ஒத்து கொள்வது மட்டு இன்றி, ஜெயலலிதா முதல் மற்ற அரசியல் தலைவர்களும் ஒத்துக் கொள்வார்களா என்பதை, செய்தித் தாள் நிருபர்கள் தேர்தலுக்கு முன்பு, பேட்டிகண்டு மக்களுக்குத் தெறிவிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த அரசியல் தலைவர்கள் தமிழர்களை ஏமாற்ற மாட்டார்கள்.
By அன்பன்
9/9/2010 10:33:00 PM
Excellent editorial since it is prompt and opt action
By R.Gopu
9/9/2010 10:24:00 PM
தமிழ் வழியில் கிராமப்புற,ஏழை மாணவர்கள் தான் படிப்பதல் இந்த ஒதுக்கீடு நிச்சயம் அவ்ர்களுக்கு உதவி தான் ஆனால் இதனாலோ,செம்மொழி மாநாட்டாலோ தமிழ் எப்படி வளரும்?வீட்டில் த‌மிழ் க‌லாச்சார‌ம் (உடை,பேச்சு) வ‌ருவ‌து ம‌க்க‌ள் கையில் தான் இருக்கு இதுக்கு அர‌சாங்க‌ம் ஒன்னும் செய்ய‌முடியாது.முதலில் தமிழன் முன்னேற கிராமப்புற,ஏழை மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி கொடுப்பது தான் சரி.
By kalanithi
9/9/2010 10:04:00 PM
என்ன தினமணி, என்னமோ தமிழ்நாட்டுல கோடிக் கணக்கில அரசுப் பணியிடங்கள் காலியாக இருப்பது போலவும் தமிழ் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த ஒரு தகுதியை வைத்தே இனி வேலைக்கு சேர்ந்து விடுவது போலவும் எழுதி இருக்கிறீர்? ஐயா சாமி, வேலை வாய்ப்பே இல்லை தமிழ் படிச்சவனுக்கு கொடுத்தா என்ன சீன மொழி படிச்சவனுக்கு கொடுத்தா என்ன? யாருமே இல்லாத கடையில கருணாநிதி டீ ஆத்திக்கிட்டு இருக்கார் நீங்களும் தலையங்கம் என்கிற பெயரில் ஜிங் சக். இலவசமும் ஓட்டுக்குப் பணமும் கொடுக்காமல் ஸ்பெக்ட்ரமில் அடித்த கோடிகளில் ஊருக்க்கு ஊர் தொழிற்சாலைகள் தொடங்கி முதலில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்கச் சொல்லுங்கள் இந்த ஓட்டுப் பொறுக்கியை. அககா தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம், புல்லரிக்குது போங்கள். சாகக் கிடக்கிறவனுக்கு சக்கரைப் பொங்கல் கொடுத்தார்களாம், முதல்ல ஆளக் காப்பாத்துங்க சாமி !
By Nitharsanam
9/9/2010 9:52:00 PM
அவசரச் சட்டத்தால் இட ஒதிக்கீட்டை, அமுல் படுத்த முடியாது.நீதி மன்றத்தால் அவசரச் சட்டம் நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு. யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடர்ந்து அவசரச் சட்டத்தைச் செல்லாதது ஆக்கலாம்.பொதுவாக ஒன்றைச் செய்ய மனமில்லாத அரசு,அவசரச் சட்டம்தான் கொண்டுவரும்.ஏனென்றால் கண்டிப்பாக, அச்சட்டம் யாராவது ஒருவரால் நீதிமன்றத்தின் துணைகொண்டு தோற்கடிக்கப் பட்டுவிடும் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெறியும்.இது இப்படி இருக்க, இப்போதே நண்பர்கள் தங்களின் கற்பனையான, சமரைத் தொடங்கிவிட்டனர். சட்டமன்றத் தீர்மான வடிவில் இந்த இட ஒதுக்கீடு வந்தால்தான்,சிறிதளவாவது பயனுள்ளதாக இருக்கும்.
By அன்பன்
9/9/2010 9:45:00 PM
dinamani is trying to give credits to the forces which made average tamilian detest the state and the language. they brought down the standard of education in the state to this dismal levels. how many english medium schools were there in 60 or 70s? and how many are there now? whose making is it? with the help of language they came to power, made money and still making money. if they're real champions of tamil bakthi, they should have done this as soon as they came to power in 1960s. Now also the first enemy to tamil language is sun tv. why nobody responds to the aquisitions against sun tv group for deterioration of tn culture and values.
By Narayanaswamy C
9/9/2010 9:26:00 PM
தினமணிக்கு ஜால்ரா அடித்து பிழைக்க வேண்டிய நிலை வந்து விட்டதா?போபார்ஸ் ஊழலை வெளி கொண்டு வந்து ஒரு அரசாங்கத்தையே வீழ்த்திய பெருமை வாய்ந்த தினமணி குழுமம் இன்று ச்பெக்ட்ரும் ஊழலில் தீவிரம் காட்டாதது ஏன்?பொது மக்களின் பணம் லட்சம் கோடி கொள்ளை என்பது சாதாரண விசயமா?அந்த லட்சம் கோடியில் இளிச்சவாய் தமிழனின் பணமும் உண்டு.
By soranai
9/9/2010 9:05:00 PM
மொழிப்பற்றை தமிழனின் பசி ஏப்பம் விட்டுவிட்டது" தினமணியின் கருத்து தமிழனிடம் ஏறுமா? வாதிரியார்
By vathiriyar
9/9/2010 9:02:00 PM
அசட்டு நம்பிக்கை. அரசின் செயல் அழும் பிள்ளைக்கு காட்டும் கிலுகிலுப்பை.இந்த அரசின்'காரியங்கள்' தெரிந்ததுதானே.
By soranai
9/9/2010 8:55:00 PM
சரியான கருத்தை கூறிய இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு நன்றி.....இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள 20 சதவீத ஒதுக்கீடு தமிழ் வழி பயின்றோற்கு (பள்ளி அளவிலா? கல்லூரி அளவிலா? .......கல்லூரி அளவில் என்பதாக படித்தாற்போல் நினைவு..!..) என்பது சரி, ஆனால் மீதமுள்ள 80 சதவீதம் பிற மொழிகளின் வழியில் பயின்றோருக்கு என்பதாக இருக்காது.... இந்த 80 சதவீதம் யாவருக்குமானது, 20 சதவீத ஒதுக்கீடு தமிழ் வழிக்கானது என்பதாகவே இருக்க முடியும்..... (இட ஒதுக்கீட்டினை போலவே....)... ஆனால், நிச்சயம் 20 சதவீதம் என்பதை படிப்படியாக உயர்த்தி 85 சதவீதமாக்கவோ இல்லை முழுமையானதாக்கவோ வேண்டும் என்பதே வாழும் தமிழ் வளர்வதற்க்கான வழியாக இருக்க முடியும்...... அன்புடன் கு. சண்முக பாரதி.
By கு. சண்முக பாரதி
9/9/2010 8:04:00 PM
Mannikkvum.(english Script payanpaduthuvadharkku) yellowrum padikkavendiya pinpattra vendiya thalaiyangam.yen manamarntha aadharavu.
By Palanivelrajan
9/9/2010 8:02:00 PM
தலையங்கம் அருமை! வாழ்த்துகள். ம.கு.வைகறை
By ம.கு.வைகறை
9/9/2010 8:02:00 PM
it is unfortunate that dinamani has become yet another sycophant to the administration. if tamils are confined to tamilnadu alone and the govt is in a position to secure jobs to all the tamils, this is a move worthy of your appreciation. it neither serves the cause of tamil language nor the interest of the tamils. even english also has not been perfected by us. this will be felt by anyone who visits usa, uk and other european countries. we have to put forth tremendous efforts to acquire the edge in english language and improve our competitiveness with english speaking people in countries like usa, uk, australia and newzealand that is where the job market is. i know many families, even though they have no connection with tamilnadu, strictly sticking to tamil language within their families. our tamil race will disintegrate because of unwanted ingredients like regionalism, nepotism and corruption in high places. to hell with pseudo tamil lovers
By krishnan ks
9/9/2010 7:59:00 PM
THE IMMEDIATE NEED OF THE HOUR IS TO ENACT A LAW TO MAKE STUDY TAMIL AS A COMPULSORY SUBJECT IN TAMIL NADU AT ANY SCHOOL. IN KARNATAKA NO ONE CAN STUDY WITHOUT KANADA WHATEVER THEIR MOTHER TONGUE. BUT IN TAMIL NADU ONE CAN FINISH DEGREE OR PG WITHOUT SUDYING TAMIL. MOREOVER IN TAMIL NADU MORE AND MORE FACTORIES ARE COMMISSIONED BUT WHO ARE THE REAL BENEFICIARIES IS THERE ANY CLAUSE FOR RESERVATION FOR TAMILS IN TAMIL NADU IN SUCH COMPANIES WHICH ENJOY MANY BENEFITS FROM THE GOVERNMENT GOVERNMENT SHOULD STIPULATE A CLAUSE THAT ANY COMPANY IN TAMIL NADU SHOULD APPOINT ATLEAST 50% OF TAMILS IN TAMIL NADU. THEN TAMIL WILL STRIVE AUTOMATICALLY IF TAMILS GET BETTER JOBNS.
By M.Annamalai
9/9/2010 7:46:00 PM
வரவேற்போம்.தமிழ் வாழ்க.
By ஆனந்தன்
9/9/2010 7:20:00 PM
thamizharkalai kondru vittu thamizhai vazha vaippathaga naadagam, aduththu varum therthazhukku
By arivu
9/9/2010 7:16:00 PM
Reserve More Seats for Telugu Caste in Telugu Nadu (new name for Tamil Nadu). Telugu CM Karunanidhi and Telugu MLA PMK Ramadoss should ensure more Telugu speaker getting reserved in Telugu Nadu. For Telugu Ramadoss and Telugu Karunanidhi, Tamil is big waste.
By TELUGU KARUNANIDHI AND TELUGU RAMADOSS
9/9/2010 6:12:00 PM
இந்த செய்தி ஒரு பொய் செய்தி. தமிழ் நாட்டில் சி பி எஸ் இ பள்ளிகளில் இந்தி கட்டாயம் தமிழ் இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி கட்டாயம். கலைஞர் தமிழ்நாட்டில் புதிது புதிதாக சி பி எஸ் இ பள்ளிகளை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டில் தமிழுக்கு டிமிக்கி!!!
By பொய்யான செய்தி
9/9/2010 6:07:00 PM
85% மாணவர்கள் தமிழ்வழியிலும் 15% மாணவர்கள் ஆங்கிலவழியிலும் பயின்றுவரும் சூழலில், தமிழில் படித்தோர்க்கு 20% மட்டுமே ஒதுக்கீடு என்பது நியாயம் அன்று.. அரசினர் இதனை சாதனையாக கொண்டாட முடியாது... இந்த 20% ஒதுக்கீட்டை, நீதிமன்றத் தடை ஏற்படாதவாறு ஐந்தாண்டுகளுக்குள் படிப்படியாக 85% ஆக உயர்த்திட அறிஞர்களும் ஆர்வலர்களும் - அரசினர்க்கு அழுத்தம் கொடுப்பது கடமையாகும்....இந்நிலையில் இ.திருவள்ளுவன் அவர்கள் கூறியபடி இந்த ஆணை வெளியாவதில் தடங்கலாக இருந்திருக்கக் கூடிய ஆங்கிலச் சார்பு அலுவலர்களின் சூழ்ச்சிகளும் அக்கறையின்மையும் கவனத்திற் கொள்ளத்தக்கது.. ஏ. அகமதுகனி. பணிக்குழு உறுப்பினர். தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி. கலைவாணர் நகர். திருப்பூர்-5
By ஏ. அகமது கனி
9/9/2010 5:54:00 PM
Some fools did't understand the article fully and correctly. This 20 % reservation does not give a meaning that in remaining 80 %, these candidates can not compete. Second thing, some fools are opposing all the rules just because they have been introduced by MK. Those fools must understand and get the maturity..
By Duman
9/9/2010 5:46:00 PM
BEST WISHES FOR THE TITLE. LET THE TITLE BE A BLESSINGS FOR DEVELOPMENT OF TAMIL. ALMOST IT TOOK MORE THAN 41 YEARS FOR DMK TO FORM A RULE FOR TAMIL SINCE 1969. ATLEAST TODAY WE HONOURED OUR LANGUAGE. FRIENDS PLEASE MAKE A NOTE THAT, DAM- "KALLANAI" BEING A DISTRIBUTION DAM IS THE FIRST BUILT IN THE WORLD THAT TOO BY TAMILIANS, WHO DID NOT KNOW ENGLISH OR ANY OTHER LANGAUGES.ENGLISHMEN STUDIED & ANALYSED THIS TECHNIQUE OF "DISTRIBUTION DAM" AND DID RESEARCH FURTHER. LIKEWISE, GREAT TEMPLE TOWES - TANJORE, SRIRANGAM,GIGNGEE FORT- SHELL STRUCTURE BY STONE, DEVELOPMENT OF AGRICULTURE ONLY BY NATURAL BIO-PRODUCTS WITHOUT ANY CHEMICALS & OTHER'S TECHNQUE, ETC., ALL ARE BY TAMILIANS - ONLY WITH THE KNOWLEDGE OF TAMIL. THINGS ARE EVER POSSIBLE BY TAMIL
By Kee Yea Raa
9/9/2010 5:21:00 PM
தினமணி ஆசிரியர் தலையங்கம் பார்வைக்கு குளிர்ச்சியான விடையம். அரசமைப்பு என்பது அறிவு சார்ந்த புலமை சார்ந்த அரசியல் கோட்பாடு விழுமியங்களைக் கொண்டிருக்கவேண்டும். மக்களின் இறைமை என்பது பல காத்திரமான அம்சங்களைக் கொண்டது. மொழியும் அதனுள் அடங்கும். தமிழக அரசும் அரச பீடத்தில் வீற்றிருப்பவர்களும் நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுவதனால் நாட்டு மக்களும் நாடும் சுபீட்சமடையமுடியும். தமிழ் சமூதாயத்திற்கு முதல்வர் எடுத்த முயற்சியானது பாராட்டத்தக்கது. பத்திரிகை உண்மை நிலைமையை எடுத்துக்கூறுவது தலையாய கடமையும் கூட அத்தோடு மக்களின் மொழிச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதில் அதற்கும் பங்குண்டு.
By வசந்தகுமார்.
9/9/2010 4:47:00 PM
moli inam naadu mayai... valga valamudan
By durganarayanan
9/9/2010 4:12:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக