வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஆந்திரத்தில் பயங்கர கலவரம்: எம்.பி.க்கள்,​​ எம்.எல்.ஏ.க்கள்,​​ அமைச்சர் ராஜிநாமா



ஹைதராபாத், ​​ டிச.​ 24: தெலங்கானா தனி மாநில விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதால் ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா பகுதி முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ​ 48 மணி நேர பந்த் போராட்டத்துக்கு தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்பட அனைத்துக் கட்சிகளும் புதன்கிழமை இரவு அழைப்புவிடுத்திருந்தன.​ இதனால் தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சி பேதமின்றி தெலங்கானா பகுதியைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள்,​​ 82 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.​ மாநில அமைச்சர் வெங்கட ரெட்டி ராஜிநாமா செய்துள்ளார்.பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயக்கவில்லை.​ கடைகள்,​​ வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.வன்முறையாளர்கள் கண்ணில் பட்ட வாகனங்களை தீவைத்து கொளுத்தினர்.​ இதனால் ஆங்காங்கே வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.​ வன்முறையை அடக்க கூடுதல் படை வரவழைக்கப்பட்டுள்ளது.​ தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை முதலில் ஏற்றுக்கொண்ட மத்திய அரசு ஆந்திரத்தின் பிற பகுதிகளில் போராட்டம் வெடித்ததால் தனது நிலையிலிருந்து பின்வாங்கியது.​ "தெலங்கானா இப்போது இல்லை,​​ அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்தார்.சிதம்பரத்தின் அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தெலங்கானா பகுதியில் கலவரம் வெடித்தது.​ அவசர,​​ அவசரமாக கடைகள்,​​ வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.​ போராட்டக்காரர்கள் பஸ்கள் மீது கல் வீசித் தாக்கினர்.​ இதையடுத்து அரசு பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது.பெட்ரோல் நிலையங்கள்:​ பந்த் போராட்ட அறிவிப்பு வெளியான உடனே ஹைதராபாத் நகரில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன.​ இதனால் வாகன ஓட்டிகள் ​ சிரமப்பட்டனர்.​ பஸ் சேவையும் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.தெலங்கானா பகுதியில் பெரும்பாலான இடங்களில் பஸ்கள் இயங்கவில்லை.​ கடைகள்,​​ வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.​ ​​ மத்திய அரசின் நிலையில் மாற்றம் என்ற செய்தி வெளியான உடனே உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.​ மாணவர்கள் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர்.​ கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது.​ போராட்டக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.​ அப்பகுதியில் போலீஸôர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.தாக்குதலில் எம்.எல்.ஏ.​ மயக்கம்:​ மாணவர்கள் சாலையில் செல்லும் வாகனங்களை எல்லாம் அடித்து நொறுக்கினர்.​ அதில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் ​ நகம் ஜனார்த்தன ரெட்டி,​​ தயாகர் ராவ் ஆகியோர் சென்ற காரும் அடித்து நொறுக்கப்பட்டது.​ தாங்களும் தெலங்கானாவுக்கு ஆதரவு என்று கூறியும் மாணவர்கள் கேட்கவில்லை.​ ஜனார்த்தன ரெட்டியை கடுமையாக தாக்கினர்.​ இதில் அவர் மயங்கி விழுந்தார்.​ மோட்டார் சைக்களில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.கடைகள்,​​ வங்கிகள்,​​ தனியார் நிறுவனங்களை மூடுமாறு வன்முறையாளர்கள் நிர்பந்தப்படுத்தினர்.​ திறந்திருக்கும் கடைகளை ​ வீசி தாக்கினர்.​ கலவரத்தை ஒடுக்க கூடுதலாக 1150 மத்திய படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.​ தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களிலிருந்தும் கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன என்று மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அனுராதா கூறினார்.​ வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.சோனியாவிடம் ராஜிநாமாதெலங்கானா பகுதியைச் சேர்ந்த 11 காங்கிரஸ் எம்.பி.க்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் ​ ராஜிநாமா கடிதங்களை அளித்தனர்.​ சோனியா காந்தியின் அரசியல் விவகார செயலர் அகமது படேலைச் சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.​ தில்லியில் உள்ள ஆந்திர பவனில் கூடிய எம்.பி.க்கள் முதலில் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியைச் சந்திக்க இருப்பதாக கூறினர்.​ எங்களுடன் அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும் இணைந்து போராடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.​ அவரும் ராஜிநாமா செய்வார் என்று காங்கிரஸ் எம்.பி.​ மது யாஸ்கி கூறினார்.அமைச்சர் ராஜிநாமாஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கோமட்டி ரெட்டி வெங்கட ரெட்டி மத்திய அரசின் நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜிநாமா செய்தார்.​ அவர் தனது எம்.எல்.ஏ.​ பதவியையும் துறந்தார்.​ தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை தீவிரமாக ஆதரிப்பவர் இவர்.​ உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அறிவிப்பு தெலங்கானா தனி மாநில நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் முயற்சி என்று அவர் கூறினார்.​ தன்னைத் தொடர்ந்து தெலங்கானா பகுதியைச் சேர்ந்த மேலும் பல அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் என்று அவர் கூறினார்.கட்சி பேதமின்றி தெலங்கானா பகுதியைச் சேர்ந்த 82 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.​ 2 தெலுங்கு தேச எம்.பி.க்களும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.மாநில மறுவரையறை குழுஇதற்கிடையே தெலங்கானா போராட்டத்தை தணிக்கும் வகையில் 2-வது மாநில மறுவரையறை குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா உள்பட தனி மாநில கோரிக்கைகளை ​ இக் குழு பரிசீலிக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.​ ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்பை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துவிட்டார்.​ மத்திய அரசின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது.​ இவ்வாறு செய்வது எங்களை அவமதிப்பதாகும் என்று அவர் கூறினார்.
கருத்துக்கள்

மத்திய அரசின் கையாலாகாதத்தனத்தைக் காட்டும் இந்நிகழ்வுகள் நாட்டுப் பற்றற்ற தமிழக அரசியல் வாதிகளுக்குப் பாடம் புகட்டுவதாகவும் உள்ளது. தம் மொழி நலம், இன நலம் என்று வரும்பொழுது காங். தலைமைக்கு எதிராகவும் குரல் கொடுக்கத் தயங்காத தெலுங்கானா காங்கிரசினர் வாழ்க. மத்திய காங்கிரசிற்குக் காலம் காலமாக அடிமையாக இருந்து தமிழக நலன்களைத் தாரை வார்க்கும் தமிழ் நாடு காங்கிரசாரும் பதவி நலன்களுக்காக அடிவருடும் பிற கட்சியினரும் இனியேனும் திருந்துவார்களா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/25/2009 2:44:00 AM

SRILNKA SENDS WEAPONS VIA THAILAND TO ALHAIDA AND OTHER TERRORIST ORGANISATIONS TO MAKE IN THE INDIA MESS.IDIAN OPEN THEIR MOUTH AND STAY SOMEWHRE. WHEN TAMILS ASK FOR FREEDOM, INDIA OPPOSES for the freedom for Tamils in Srilanka. NOW " BBC London,'weapons were for Sri Lanka' says crew A crew charged in Thailand with illegal arms possession say their plane was headed for Sri Lanka and not Iran. arrested crew when it was seized in the Thai capital with a cache of North Korean weapons, media reports from Thailand reported today. Defense lawyer Somsak Saithong had told the media on wednesday that the four Kazakhstan citizens and one from Belarus, as saying that their flight plan called for a refueling stop in Bangkok before flying to Sri Lanka.

By Sivaram- Trichi
12/25/2009 2:25:00 AM

Well! where is " The Hindu" Tamilnadu popular English news paper?The colomist, Mr. Reddy , writes agaist Tamils in Hindu news paper, Now, Mr .Reddy is hiding from new media. The Hindu news paper has no comments about Thelanakana issue. However, Anthra reddys gave a party to Srilanka sub- embassy in Chennai when mass mudered tamils in Srilanka. So happy about tamils were wipe out from map of Srilanka. Now, they pay back the crime which they did for innocent Tamils. God is great, GOG knows every things . God will look after good and evil people for sure.

By Sivaram- Trichi
12/25/2009 2:17:00 AM

Andhra MP's, MLA's and Ministers resigning for Telungana state. In tamilnadu politicians not resigned the post when Tamils were killed in Eelam, Tamilnadu politician do anything for power, they don't care about people.

By yoga
12/25/2009 1:51:00 AM

dear friends I dont understand about indian politics.what about sinhalese?

By wicki
12/25/2009 12:45:00 AM

Dear Soniya Gandhi: When Sri Lanka Tamils wanted a independent state, you insisted that is against law. Now you did not care to separate Andra into two. India has identified your care and affection for India. For your sake, it is good you take care of your self by leaving the country when you are in power. I am sure you cannot do much to this country. It is a complex nation. People of Indian born cannot manage this. You have to come all the way from Italy. Indian way of life way of thinking are different and not suitable for you. Chidambaram part of politics life is over. Manmohan signh could go to USA and settle sown near white house. This is the starting of all to end in India. Politicians who played all these time now go back to home and hide. It is not too long India could blast with agitations. Bad time to Indian politician.

By Meena
12/25/2009 12:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதிய அறிவிப்புக்கு எதிர்ப்பு

First Published : 25 Dec 2009 10:02:00 PM IST


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக