சனி, 26 டிசம்பர், 2009

பென்னாகரம் இடைத்தேர்தலை ​ஒத்திவைக்க வேண்டும்: ம.தி.மு.க கோரிக்கை



சென்னை, ​​ டிச.25: ​ பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என ம.தி.மு.க.​ கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தேர்தல் ஆணையருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனவரி 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.​ ஆனால்,​​ தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் ஜனவரி 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.​ மக்களின் கவனம் முழுவதும் பொங்கல் பண்டிகையில்தான் இருக்குமே தவிர,​​ அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.எனவே,​​ உச்சகட்ட பிரசாரம் நடைபெற வேண்டிய நாட்களில்,​​ 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை பிரசாரம் பாதிக்கப்படும்.​ இதனால் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் எடுத்து வைக்கும் பிரச்னைகள்,​​ வாதங்கள் மக்களை சென்றடையாது.ஆகவே,​​ பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்.இந்த கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உரிய பரிசீலனை செய்ய வேண்டும்.​ மேலும் தேர்தல் நேர்மையாகவும்,​​ நியாயமாகவும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்' என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

தோற்றாலும் பரவாயில்லை என்று கட்சித் தொண்டர்கள் உற்சாகத்திற்காகவாவது இத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக விடம் கேட்டு வாங்குங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/26/2009 3:14:00 AM

DMK will also win in this election.

By Jayalalitha
12/26/2009 12:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக