ஞாயிறு, 20 டிசம்பர், 2009

Latest indian and world political news information

சென்னை:""மதுரையில் மு.க.அழகிரி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் கூறும் தீர்ப்பை ஏற்பதற்கு தி.மு.க., தயாராக இருக்கிறது,'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் நகரில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி தரவில்லை என்றும், அதில் திரிபுரா மாநில முதல்வர் கலந்து கொள்வதை சுட்டிக்காட்டி, முதல்வரிடம் பேசி அனுமதி பெற்றுத் தருமாறு வரதராஜன் கேட்டதாக, எனது செயலர் என்னிடம் தெரிவித்தார். உடனே, உரிய அனுமதியை வழங்க உத்தரவிட்டேன்.சற்று நேரத்தில், அக்கட்சியின் கருத்து ஒன்றை அறிய நேரிட்டது. "கடந்த லோக்சபா தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க. அழகிரி வென்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் வேட்பாளர் மோகன், வழக்கு தொடர்ந்திருந்தார்.



மோகன் மறைந்த நிலையில், தேர்தலில் மாற்று வேட்பாளராக மனு செய்த, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் லாசர், வாதியாக சேர்க்கப்பட்டு வழக்கை தொடர்ந்து நடத்துவார்' என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நடக்கட்டும்; நீதிமன்றம் தீர்ப்பு கூறட்டும். அந்த தீர்ப்பை ஏற்க தி.மு.க., தயாராக இருக்கிறது. ஆனால், நாம் எந்த உணர்வுடன் இருக்கிறோம், அக்கட்சித் தலைமையில் உள்ள சிலர் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.




முதல்வரின் கருத்தில் முறையான கூட்டம் ஒன்றிற்கு இசைவு தருவது கூட பேரததின் அடிப்படையில்தான். ஆனால் இதை மார்க்சியப் பொதுவுடைமை வாதியினர் மீறுகிறார்கள் அல்லது புரிந்து கொள்ளவில்லை எனத் தொனி தெரிகிறது. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கிலும் தினகரன் ஊழியர்கள் கொலை, அலுவலக எரிப்பு வழக்குகளிலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றது போல் இதிலும் நீதிமன்றத் தீ்ர்ப்பை ஏற்போம் என்னும் உண்மையை இப்பொழுது கூற வேண்டிய தேவை இல்லையே! மாண்புமிகு கலைஞர் உண்மையை வெளியிட்டு நிலை தடுமாறுவது ஏன் என்று தெரியவில்லை. எபப்டியோ இதுவரை எதிர்க்கட்சிகள் கூட்டங்களுக்கு இசைவு தராததற்குக்காரணம் பேரம் படியவில்லை என்பதைப் புரிநது கொண்டு இனிமேல் கூட்டம் நடத்த இசைவு வேண்டுமென்றால் பேரத்துடனவாருங்கள் என அழைப்பு விடுக்கிறார் என உரியவர்கள் புரிந்து கொண்டால் சரி. வாழ்க மக்களாட்சி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக