editor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
editor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஜூலை, 2012

நாள்தோறும் வியக்க வைக்கிறது திருக்குறள்: "தினமணி' ஆசிரியர்

நாள்தோறும்  வியக்க வைக்கிறது திருக்குறள்: "தினமணி' ஆசிரியர்

First Published : 09 Jul 2012 02:28:36 AM IST


திருக்குறள் வாழ்வியல் மன்றம் சார்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் மன்றச் செயலாளர் மா. வள்ளிமுத்துவுக்கு (இடமிருந்து 4-வது) பொன்னாடை ப
சென்னை, ஜூலை 8: ""ஒவ்வொரு நாளும் தலையங்கத்துக்கு ஏற்ற குறளைத் தேர்ந்தெடுக்கும்போது பிரமிப்பு மேலிடுகிறது'' என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.  சென்னை போரூர் புனித யோவான் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் வாழ்வியல் மன்றம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் திறனாய்வுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளித்து பாராட்டும் விழாவில் ஞாயிற்றுக்கிழமை அவர் பேசியது:  உலகிலேயே மலைப்பான விஷயம் என்னவென்று என்னை யாரேனும் கேட்டால், நான் சற்றும் தயங்காமல் திருக்குறள் என்று பெருமிதத்தோடு சொல்வேன். என்னை தினந்தோறும் பிரமிக்க வைக்கும் விஷயம் திருக்குறள்தான்.  "தினமணி'யில் தினமும் தலையங்கம் எழுதி முடித்தவுடன், அந்தத் தலையங்கத்துக்கு ஏற்ற குறளைத் தேர்ந்தெடுப்போம். சர்வதேச அரசியல், பொருளாதாரம், அன்றாட நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள், விளையாட்டு என்று எதைப் பற்றிய தலையங்கமாக இருந்தாலும் சரி, அதற்கு ஏற்ற குறள் ஒன்று தினந்தோறும் கிடைக்கிறது என்றால் வள்ளுவப் பேராசானின் ஆற்றல் எத்தகையது என்று பார்த்துக் கொள்ளுங்கள்.  பாரதி, யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் என்று குறிப்பிடுவார். வள்ளுவரை மட்டும் "ர்' விகுதியிட்டு மரியாதையாக அழைப்பார். வள்ளுவப் பெருந்தகையின் தனிச்சிறப்புக்கு அது ஒன்றே போதும் எடுத்துக்காட்டு.  பல மெட்ரிக் பள்ளிகள் தங்கள் கல்விச் சாலையில் படிக்கும் குழந்தைகளை வீட்டில்கூட ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. ஆங்கில வழிக் கல்வியை முற்றிலுமாக நான் எதிர்க்கவில்லை. நம்முடைய குழந்தைகள் ஆங்கிலம் படித்துத் தரணியை ஆள வேண்டும், எங்கெல்லாம் அவர்கள் குடியேறுகிறார்களோ அங்கெல்லாம் தமிழையும், தமிழர் தம் நாகரிகத்தையும் கொண்டு செல்ல வேண்டும் என்று விழைபவன் நான்.  குழந்தைகள் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படித்தாலும் வீட்டில் தமிழில் மட்டுமே பேசச் சொல்லுங்கள். தினமும் ஒரு குறள் படிக்கச் சொல்லுங்கள். தமிழ் மொழி உலகமெலாம் பரவும் வகை செய்ய வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி, குழந்தைகளுக்குக் குறளைக் கற்றுக் கொடுப்பதுதான்.  வள்ளுவனும், ஒளவைப் பிராட்டியும் தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த வரம். நாளைய சந்ததியினருக்குக் குறளையும் ஆத்திசூடியையும் விடச் சிறந்த வழிகாட்டி எதுவும் கிடையாது.  இனத்தின் அடையாளம், ஜாதியோ, மதமோ, நிறமோ அல்ல. மொழிதான் இனத்தின் அடையாளம். அதனால்தான், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வீட்டில் தினம் ஒரு திருக்குறளைக் கற்றுக்கொடுத்தால் தமிழ் வாழும், தமிழினமும் வாழும்.  ஆட்டோ ஓட்டுநரான வள்ளிமுத்துவும் அவரது நண்பர்களும் திருக்குறள் வாழ்வியல் மன்றம் என்கிற அமைப்பை ஏற்படுத்திப் பள்ளிக் குழந்தைகளுக்குத் திருக்குறள் போட்டிகளை நடத்தி, ஆண்டுதோறும் பரிசளித்து உற்காசப்படுத்துகிறார்கள். நாங்கள் எழுதியும், பேசியும் செய்துவிட முடியாத செயற்கரிய சேவையைச் செய்து காட்டி வருகிறார் வள்ளிமுத்து.  ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இப்படி ஒரு சேவையில் ஈடுபட்டிருப்பதாக நான் தொலைபேசியில் தெரிவித்தவுடன், நர்மதா பதிப்பக அதிபர் ராமலிங்கம், இந்தக் குழந்தைகளுக்குப் பரிசளிப்பதற்காக அவர்கள் வெளிட்ட "நீதிநெறிக் கருவூலம்' புத்தகத்தைப் பாதி இலவசமாகவும், மீதியைப் பாதி விலையிலும் கொடுத்து உதவ முன் வந்தார். அவருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.  திருக்குறள் வாழ்வியல் மன்றச் செயலர் மா. வள்ளிமுத்துவை மன்றத்தின் தலைவர் இலக்குமி சம்பந்தன், பொன்னாடை அணிவித்து கெüரவித்தார். நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை தலைவர் தெ.பொ. இளங்கோவன், திருக்குறள் வாழ்வியல் மன்றத் துணைத் தலைவர் தனுக்கோடி, மன்றத்தின் இணைச் செயலர் ஏ.காசி, சென்னைப் பல்கலைக்கழகம் சட்டத்துறை பேராசிரியர் ஏ.டேவிட் அம்ரோஸ், புனித யோவான் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜே.பிரவின் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் சிறப்பித்தனர். 

புதன், 23 நவம்பர், 2011

Social activist A C Nadarajah passes away in Jaffna


Social activist A C Nadarajah 

passes away in Jaffna

[TamilNet, Tuesday, 22 November 2011, 05:42 GMT]
Former principal of Vasaavi'laan Central College and former General Manager of Jaffna edition of the Tamil daily Thinakkural passed away in Jaffna on Monday night at the age of 70. He was ailing from cancer and was anticipating death at any time. Yet, even in his last days he was engaged in social work in full swing, especially in reviving educational, social and cultural institutions of his native village Kurumpasiddi, where people are permitted to resettle in parts of the village. But, his more impactful and extensive contributions were in doing charity in Vanni after the war.

A C Nadarajah
A C Nadarajah
After the Vanni War, Mr. Nadarajah was writing a series of over 80 columns titled Karu'naip-paalam (the bridge of compassion) in Thinakkural, through which he was able to raise funds of over 10 million rupees for charity work in Vanni to help the war victims. The charity he instituted was designed in such a way to run independently.

When it became known that he would survive only for a few months, Nadarajah concentrated on a number of activities related to the revival of his village, a part of which was then just permitted for resettlement.

Uprooted from Kurumpasiddi by the occupying SL military 20 years ago, Mr. Nadarajah was spearheading the movement of uprooted people in Jaffna. He led one of the welfare organisations for the uprooted people of Valikaamam North and was voicing for their rights. The tragedy was that, to the end of his life, he could not see his own land and house. That part of Kurumpasiddi is still under SL military occupation.
A C Nadarajah
Mr. Nadarajah was steering Vasavi'laan Central College at a crucial time when the school itself was uprooted, was shifting from place to place and was later functioning for years in temporary sheds built at Urumpiraay Hindu College. Even under those conditions, he was able to maintain quality of education of the institution to the extent the students of his school were excelling in education, producing impressive results in the public examinations.

As a committed educationalist, even after retirement he was involved in a number of educational development activities in the peninsula and was always looked upon with respect in getting advice on educational matters. The educationalist in him reflected in every writings of him in Thinakkural as he touched on a variety of topics ranging from heritage to development. He was writing under the pen names, Yaazh Arasan, Uruththiran, Aasinan and Pulikeasi.

He started his social life as a Leftist, and in his later years turned to society oriented spiritualism.

He was also a theaterist and a sportsman in his younger days.

He was managing Jaffna Thinakkural for 8 years, from 2002 to 2010.

Mr. Nadarajah's life was an illustrated example of his generation that has never lost its spirit and was committed to the society to the very end, despite going through decades of tragedies overshadowing major part of the lifetime.

He leaves behind his wife and two daughters.

A video feature in Tamil, which he gave to TamilNet in 2005 on the story of his village, will be produced herewith in the 2nd lead.

Related Articles:
19.01.11   Rajapaksa skips 're-reopening' of Vasaavi'laan Central Colle..
15.05.10   Resettlement of uprooted civilians remains rejected in Jaffn..

வியாழன், 16 டிசம்பர், 2010

Dinamani editor about Bharathiyar articles : பாரதி பற்றி "தினமணி' ஆசிரியர்

திரு சீனிவிசுவநாதன் அவர்கள் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. பாரதியார் வரலாற்றுப் பிழையாக ஆரிய நாடு என நம் நாட்டைக் குறிப்பிட்டது தவறு எனப் பாரதியாரே ஒப்புக் கொண்டுள்ளார். இது போன்ற சில தவறுகள் பாரதியார் பாடல்களில் உள்ளன. அவரது சில உரைநடைப்  படைப்புகள் அவருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பதால் மறைக்கப்பட்டுள்ளன என்பதைத் தினமணியே அறியும். எனவே சொத்தை அற்ற  சொத்து என அவரது படைப்புகளைக் கூற முடியாது. இருப்பினும் பாரதியார்  படைப்புகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவையே. அவற்றைத் திரட்டுவோருக்கும் வெளியிடுவோருக்கும் தமிழுலகு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஒற்றை எழுத்துக்கூட சொத்தை கிடையாது! - பாரதி பற்றி "தினமணி' ஆசிரியர்

First Published : 15 Dec 2010 02:16:55 AM IST


"தினமணி'ஆசிரியர் கே.வைத்தியநாதன்: சீனி.விசுவநாதன் இதுவரை பாரதியாரின் படைப்புகளை 12 தொகுதிகளாகக் காலவரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கிறார். அதில் 5 தொகுதிகளின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளதை பிறவிப் பயனாகக் கருதுகிறேன்.இரண்டு ரூபாய்க்கு கடலை வாங்கினால் கூட அதில் சொத்தைக் கடலைகள் ஒன்றிரண்டு இருக்கும். ஆனால், பாரதியின் எழுத்தில் சொத்தை எழுத்து என்று எடுத்துப்போட ஒற்றை எழுத்துக்கூட கிடையாது என்பதுதான் சிறப்பு.பாரதியைப் பற்றி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. பாரதியின் கவிதை எளிமையான நல்ல தமிழில் இருந்தாலும், உரைநடையில் வடமொழிக் கலப்பிருக்கிறது என்பதே அது.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்குத்தான் தெரியும். பத்திரிகையில் கட்டுரை எழுதுவது பாமரர்களும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. அதனால், அன்றைய காலக்கட்டத்தில் பேச்சுவழக்கு எப்படி இருக்கிறதோ, எப்படி எழுதினால் எல்லோருக்கும் புரியுமோ அப்படி எழுதியாக வேண்டும்.பாரதி வாழ்ந்த காலத்தில் நமஸ்காரம், விசேஷம், பொதுஜனங்கள், பிரிட்டிஷ் ராஜாங்கம் போன்ற வார்த்தைகளை சாமானியர்களும் பேசினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.அன்றைய வாசகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, அப்போது வழக்கில் இருந்த சொற்களையே பத்திரிகைகளில் பாரதி பயன்படுத்தினார். பத்திரிகையாளனாக அவர் செய்தது மிகச்சரியானதே! பாரதிக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களின் உரைநடையிலேயே பல வடமொழிச் சொற்கள் இருக்கும்போது, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பாரதியின் உரைநடையில் வடமொழிக் கலப்பு இருந்ததில் என்ன வியப்பு?தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி: எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்ற மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை பிரம்ம கான சபையின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.சீனி.விசுவநாதன் 15 வயதில் இருந்தே கடந்த 50 ஆண்டுகளாக  பாரதியார் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்து வருகிறார். இவற்றை புத்தகங்களாகக் கொண்டுவருவது குறித்து பேசினோம்.இது பல பக்கங்கள் வரும் என்றார். நீங்கள் புத்தகமாக பதிப்பிக்க வேண்டும். எங்களைப் போன்ற பாரதி நேசர்கள் உள்ளனர். அதற்கான செலவை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தேன்."இது 800 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகள் வரும்' என்றார். கிடைப்பதை எல்லாம் தேடிப்பிடித்துத் தொகுத்துப் புத்தகமாக்குங்கள். அதற்கு எவ்வளவு செலவானாலும் நானும், பாரதி நேசர்களும் உங்களுக்குக் கொடுத்து உதவத் தயாராக இருக்கிறோம் என்றேன்.பாரதி எந்த வருஷம், மாதம், எந்தச் சூழ்நிலையில் இதை எழுதினார் என்ற குறிப்போடு சீனி.விசுவநாதன் எழுதியுள்ளார். இதற்காகவே நிறைய நேரம் செலவானது.50 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதியின் எழுத்துகளைத் தொகுத்திருந்தால் மிகவும் எளிதாக இருந்திருக்கும்.  சுதேசமித்திரனில் இருந்து இதை எடுத்துத் தொகுத்திருக்கலாம்.சுதேசமித்திரன் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த இடம் மழையில் நனைந்து அவை வீணாகி விட்டன.எனவே, தில்லியில் உள்ள நேரு மியூசியத்தில் சுதேசமித்திரன் பிரதிகள் மைக்ரோ பிலிம் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து பாரதி எழுத்துகளை எடுத்து இதில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. இவரிடம் இருந்த நிறைய ஆவணங்களை புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு அளித்துள்ளார்.அவரது அயராத உழைப்பால்தான் இந்தத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன்: இந்த நூல்களைப் பதிப்பிக்க எனக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், அந்தத் தகவல்களைச் சேகரிக்க 50 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்காக நான் ஏறாத படிகள் இல்லை. ஏராளமான பழையப் புத்தகங்களையும் புரட்டிப்  பார்க்க வேண்டியிருந்தது. இந்த 12 தொகுதிகளும் வெளிவரும் வரை எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த நல்லி குப்புசாமிக்கு நன்றி.
கருத்துகள்

தமிழர்கள் அனைவரும் திரு சீனி விசுவநாதன் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறது .
By ச. ஹேமச்சந்திரன்
12/15/2010 2:07:00 PM
சீனியார் தமிழுக்கு கிடைத்த சீனி!
By DhanaGunasekaran
12/15/2010 12:05:00 PM
அய்யா உங்களை போன்றவர்கள் பாரதியின் உண்மையான தொண்டர்கள்,பாரதியின் நினைவை போற்ற எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் என்னை போன்றோருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படும் அளவிற்கு உள்ளது உங்கள் தமிழ் தொண்டு,வாழ்க!
By வல்லம் தமிழ்
12/15/2010 7:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 16 அக்டோபர், 2010

இனத்தின் அடையாளம் மொழிதான்: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்


விழாவில் பேசுகிறார் லட்சுமியம்மாள் கல்வியியல் கல்லூரித் தலைவர் எம்.வருவான் வடிவேலன். உடன் (இடமிருந்து) தருமபுரி தமிழ்ச் சங்கச் பொருளாளர் பொ.சச்சிதானந
தருமபுரி, அக். 15: ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார்.  தருமபுரி தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அவர் பேசியது:  தமிழ்ச் சங்கங்கள் ஊருக்கு ஊர் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான். என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்கிலேயர் போல் உடையணிந்து கொண்டாலும், வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையே பெற்றிருந்தாலும், அவர்கள் சார்ந்த இனத்தின் பெயரால்தான் ஒருவர் அடையாளம் காணப்படுவார்.  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் ஆப்ரோ அமெரிக்கர் என்றுதான் அழைக்கின்றனர். அதுபோலதான் தெலுங்கு பேசுபவர்களை தெலுங்கர்கள் என்றும், மலையாளம் பேசும் மக்களை மலையாளிகள் என்றும், தமிழ் பேசுபவர்களைத் தமிழர்கள் என்றும் அந்தந்த மொழியின் அடையாளத்தில்தான் இனம் காண்கின்றனர். எனவே நாம் நமது மொழியின் அடையாளம் அழிந்துபோகாமல் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  நமது நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் படித்து பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். அதற்கேற்ப ஏராளமான மேலாண்மைக் கல்வியியல், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.  ஆனால் அந்தக் கல்லூரிகளில் தரமான மாணவர்கள் எத்தனை பேர் உருவாக்கப்படுகின்றனர் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. அடிப்படைக் கல்வி தரமாகப் போதிக்கப்பட்டு, அதன் பிறகு மேற்படிப்புகள் சிறப்பாக இருந்தால் மட்டுமே நல்ல மனிதர்களை நாம் உருவாக்க முடியும். தரமான மாணவர்கள் உருவாக்கப்பட அவர்களுக்கான அடிப்படைக் கல்வியில் கவனம் செலுத்தும் வகையிலான போதிய ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை.  மாணவர்களின் அடிப்படை பலமாக அமையாவிட்டால் நாளைய இந்தியா இன்று உள்ள பெருமைகள் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவே அவர்களை அடிப்படையில் தரமானவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு உள்ளது.  அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆசிரியர் படிப்பு என்றால் மதிப்பு மிக்கதாகவும், ஆசிரியர் பணி என்றால் கெüரவமானது என்றும் கருதப்பட்டது, போற்றப்பட்டது. அப்போது அவர்களுக்குப் போதுமான ஊதியம் இல்லை. ஆனால் இப்போதோ அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறது. இருப்பினும் இப்போது அவர்களுக்கு உரிய மரியாதையோ, கெüரவமோ வழங்கப்படுவதில்லை.  ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் மதிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் ஆசிரியர்களாக வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட வேண்டும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று விழைய வேண்டும். ஆனால் இந்த மூன்று பிரிவினரும் இன்றைய சமுதாயத்தில் இழிவாகவே நடத்தப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாளைய தலைமுறை வளமையாகவும், பலமானதாகவும் இருக்கும்.  ஆசிரியர் பணி என்பது பாடப்புத்தகத்தை போதிக்கும் பணி மட்டுமல்ல, மாணவர்களை மொழி, இன, நாட்டுப் பற்று உள்ளவர்களாக, மனித நேயமுள்ளவர்களாக மாற்றுவதேயாகும்.  நாளைய இந்தியா வளமானதாகவும், பலமானதாகவும் இருக்க நாம் அடிப்படைக் கல்வியிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். அஸ்திவாரம் சரியாக அமைந்து விட்டால் மட்டுமே கட்டடம் பலமாக இருக்கும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களாகிய நீங்கள் ஆற்ற வேண்டிய தேசிய கடமை அதுதான்' என்றார் வைத்தியநாதன்.  சங்கத் தலைவர் வழக்கறிஞர் ந.ராசேந்திரன் வரவேற்றார். செயலர் மருத்துவர் கி.கூத்தரசன், கல்வி நிறுவனத் தலைவர்கள் எம்.வருவான் வடிவேலன்,பி.ராஜமாணிக்கம், சா.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ÷நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.  
கருத்துக்கள்

இனத்தின் அடையாளம் மொழிதான் என்பதன் மூலம் தமிழினத்தின் அடையாளம் தமிழ் மொழி ; அதனைக் காக்க வேண்டும் என்ற உண்மையை உரைத்த ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்களை எவ்வளுளவு பாராட்டினாலும் தகும். சாலமன் போன்றோர் அறியாமையால் ஏதோ எண்ணுகின்றனர்; எனவே தவறாக எழுதுகின்றனர். தமிழர்களின் தேசிய மொழி தமிழே எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே உணர்த்தியதையும் நாம் தமிழர் என்ற உணர்வைத் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விதைத்ததையும் நினைவு கூர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 2:43:00 PM
Aasiriyar, Intha soll vilakkam ithuva? Aa_Seer_Iyam_ar Aa=In depth Seer=Clearing Iyam=Doubts Engo padithullen, ithu sariyaa?
By Muthapan
10/16/2010 2:40:00 PM
ஆப்பிரிக்கர் கருப்பாக இருப்பதால் பார்த்தவுடனே தெரிந்து விடுகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் பேசுபவனை எப்படி வித்தியாசம் காண முடியும். எல்லோரும் இந்தியன். மொழி என்பது முக்கியம்தான். அதற்காக நம்மை மற்றவர்களிடமிருந்து அன்னியப்படுத்திக்கொள்ளக்கூடாது! ஏனென்றால் நம் மொழிப்பற்றை பயன்படுத்தி கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளின் குடும்பம் கொழுத்ததுதான் மிச்சம். மற்றபடி தமிழுக்கு எதிர்ப்பாக சொல்லவில்லை.
By Solomon
10/16/2010 1:41:00 PM
ஏனென்றால் நம் மொழிப்பற்றை பயன்படுத்தி நம்மை கருணாநிதி போன்ற அரசியல்வாத்களின் குடும்பம் கொழுத்ததுதான் மிச்சம்.மற்றபடி தமிழுக்கு எதிர்ப்பாக சொல்லவில்லை.
By Solomon
10/16/2010 1:37:00 PM
ஆப்பிரிக்கர் கருப்பாக இருப்பதால் பார்த்தவுடனே தெரிந்து விடுகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் பேசுபவனை எப்படி வித்தியாசம் காண முடியும். எல்லோரும் இந்தியன். மொழி என்பது முக்கியம்தான். அதற்காக நம்மை மற்றவர்களிடமிருந்து அன்னியப்படுத்திக்கொள்ளக்கூடாது!
By Solomon
10/16/2010 1:35:00 PM
// இளைஞர்கள் ஆசிரியர்களாக வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட வேண்டும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று விழைய வேண்டும். // மிக மிக நல்ல கருத்து ஆசிரியர் அவர்களே! நாளைய சமுதாயத்தை நலமுள்ளதாக்க எல்லா பணிகளையும் விட ஆசிரியர் பணி தான் மிகச் சிறந்த பணி/சேவை. ஆதலால் இளைஞர்கள் புதியதோர் உலகைப் படைக்க ஆசிரியர் பணிக்கு முன்வர வேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை அறியாமல் பேசுகிறீரே என்று வேதனையாக உள்ளது. விவசாயிகளின் இன்றைய நிலை தெரியாமல் இளைஞர்களை அந்த தொழிலுக்கு வந்து கஷ்டப்படச் சொல்கிறீரே. கண்ணையும் காதையும் கட்டிக்கொண்டு வாழ்கிறீரா? ராணுவத்துக்கு இளைஞர்களை வரச்சொல்கிறீர். நல்ல எண்ணம்தான். அப்படியென்றால் இப்பொழுது ராணுவத்தில் பல் போன கிழடுகள்தான் சேர்கிறார்கள் என்கிறீர்களா? எத்தனை இளைஞர்கள் கையில் கட்டு கட்டாக பணத்தை வைத்துக்கொண்டு Military recruitment office முன்னால் தவம் கிடக்கிறார்கள் என்று தெரியாதா உமக்கு? இதுகூட தெரியாமல் எப்படி பத்திரிகை ஆசிரியராக இருக்கிறீர் நீங்கள்?
By வெங்கட்
10/16/2010 1:28:00 PM
தமிழ்நாட்டில் கருத்து பகுதி தணிக்கை இல்லாமல் உடனடியாக பிரசுரம் செய்தது தினமணி மட்டுமே. இப்போது மற்றவர்களும் இதே வழியை பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். தினமணி எதற்கும், எல்லாவற்றிக்கும் முன்னோடி. எதிர்காலத்தை அறியும் இன்றைய தொலைநோக்கி. தமிழ் வளர்க்கும் தினமணிக்கும் ஆசிரியருக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். கருத்து எழுதுபவர்கள் அதிகம் வரக்காரணம் தினமணி. தமிழ் வளருகிறது. தமிழன் வளருகிறான். இனி தமிழ் அழியாது.
By Dillu Durai
10/16/2010 11:29:00 AM
தமிழ் வளர்க்கும் தின மணிக்கும் ஆசிரியருக்கும் நல் வாழ்த்துக்கள். ஆசிரியர் உரை கேட்டதும் அந்த நாட்களில் [1950 களில்]குமரித் தமிழர் பட்ட பாடுகளும், 'கண்டால் அறியும்' என்று கூறி, தமிழரை அடையாளம் கண்டு அழிக்க முயன்ற திரு. பட்டம் தாணு பிள்ளை அரசின் கொடுமைகளும், அவற்றை மேற்கொண்டு முன்னேறிய தமிழரின் துணிவும் உழைப்பும் நினைவுக்கு வந்தன. ஆனால் இன்று, தமிழரே தமிழ் பண்பாட்டை அழிக்கிறோமா எனும் எண்ணமும் எழத்தான் செய்கிறது!
By GERSHOM CHELLIAH
10/16/2010 8:59:00 AM
அப்படியா னால் திராவிடம் என்பது ஏமாற்று வேலை என்பது நிறுபிக்கப்படுகிறது.
By Unmai
10/16/2010 8:25:00 AM
Let me add a little more. In those days, it was the care of mother & then that of father in a family + grand-parents that helped all round development in an individual. If a mother feeds her child telling great moral stories, fables, songs, folk-lore, talk in own native tongue, help gently to understand right vs wrongs, good conduct etc., then all will be well!
By ASHWIN
10/16/2010 8:24:00 AM
தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச்செய்யும் தினமணி ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
By மு.இளங்கோவன்,புதுச்சேரி
10/16/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே: தினமணி ஆசிரியர்


ராஜபாளையம், ஆக. 30: குழந்தைகளை ஆசிரியர்களாக்க பெற்றோர் தயாராக இல்லையே என தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் குறிப்பிட்டார்.ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதி மாணவர் இலக்கிய மன்ற விழாவில் தலைமை வகித்து மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது:இப்போது நாம் படிப்பது அதிக மதிப்பெண் எடுத்து, அதன் மூலம் மேற்படிப்பு படித்து வேலைக்குப் போகவேண்டும், அதன் மூலம் நிறையப் பணம் சம்பாதித்து பெரும் தனவந்தராக மாறவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதுவே சந்தோஷமான வாழ்க்கை என்றும் நினைக்கிறோம்.பணம் மட்டுமே சம்பாதித்து விட்டால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்பட்டுவிடாது. மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை. பகிர்ந்து கொள்ளும் உணர்வில்தான் இருக்கிறது. மற்றவர்களை நேசிப்பதில் இருக்கிறது. இயற்கையை ரசிப்பதில் இருக்கிறது. இதைக் குழந்தைகள் உணரவேண்டும். இதைப் பெற்றோரும் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும்.சென்னை போன்ற பெரிய நகரங்களில் படிப்பதும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதும்தான் பெருமை என்ற உணர்வு பெற்றோரிடம் உள்ளது. ஆனால், வெற்றி பெற்ற மனிதர்கள் படித்தது எல்லாம் பெரிய பட்டணத்தில் அல்ல. அண்ணல் காந்தியடிகள், ராஜாஜி, அண்ணா, அப்துல் கலாம் உள்ளிட்ட அனைவருமே சிறிய கிராமங்களில் படித்தவர்கள்தான்.ராஜபாளையம் நகருக்கு பெருமைத் தேடித்தந்த சென்னை ராஜதானியின் முன்னாள் முதல்வர் குமாரசாமிராஜா பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவரா? இல்லை, காமராஜர்தான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தாரா?ஆனால், தாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்களைத் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் படித்து சாதனை படைத்துள்ளனர். உலக வரைபடத்தில் உங்களால் ராஜபாளையம் இடம்பெற வேண்டும். அதுவே நீங்கள் பிறந்த மண்ணுக்குச் செய்யும் கடமை. எல்லா பெற்றோருக்கும் தத்தமது குழந்தைகளுக்கு நல்லாசிரியர்கள் கல்வி கற்பிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருக்கிறது. ஆனால், தங்களது குழந்தைகளை ஆசிரியராக்க மட்டும் யாரும் தயாராக இல்லை.  ஏதாவது ஒரு பெற்றோர் எனது மகனை ஓர் ஆசிரியராக்கப் போகிறேன் என்று சொல்லக் கேட்டிருக்கிறோமா? அப்படி நினைத்தால் எப்படி எதிர்காலத்தில் நல்லாசிரியர்கள் உருவாக முடியும்? உங்களில் பலர் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.முடிந்தால் நீங்கள் சரித்திரம் படைத்து பிறந்த பொன்னாட்டுக்கும் பெருமைத் தேடிக் கொடுங்கள். இல்லாவிட்டால் ஆசிரியர்களாக மாறி சாதனையாளர்களை உருவாக்கிப் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேருங்கள் என்றார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்.நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் கவிஞர் ரா.ஆனந்தி, தலைமை ஆசிரியை ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.மாணவியர் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மரங்கள் உள்ளிட்ட இயற்கை குறித்து மாணவ, மாணவியர் பேசினர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் எம்.ஏ.வெங்கடப்பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கருத்துக்கள்

ஆசிரியரின் கருத்து சரிதான். இதற்குக் காரணம், வருவாயும் வசதியும் அதிகாரமும் மிகுதியாக உள்ள பணியே சிறந்த பணி என மக்கள் மனத்தில் விதைக்கப்பட்டதுதான். இதனைப் போக்க தினமணி முன் வரவேண்டும். கல்லூரி ஆசிரியர்களின் ஊதியங்கள் உயர்ந்துள்ள இந்நிலையில் கல்லூரி ஆசிரியர் பணிகளின்பால் கவனம் திரும்பி வருகின்றது. எனினும் பள்ளி ஆசிரியர் பணி உயர்வானது என்ற எண்ணம் விதைக்க அவர்களின நிலையும் மன்பதையில் உயர வேணடும். தலைமுறைகளை உருவாக்கும் ஆசிரியப்பணி இறைப்பணிக்கு இணையானது என்பதை அனவைரும் உணரவேண்டும். ஆசிரியப் பணிவாய்ப்பு கிடைத்தோர் இப்பணியை உயர்வாக உலகோர் கருதும் வண்ணம் தொண் நோக்கில் பணியாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 3:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

 
கட்டுரைகள்
முள்வேலி இல்லாத அகதி முகாம்கள்!


அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, சென்னைக்கு வெளியே உள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு வளாகங்களில் உள்ள வீடுகளின் பரப்பளவு மிகக்குறைவு என்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அங்குள்ள மக்கும் குப்பைகளின் (ஆம், ஏழைகள்தான்) பிரச்னைகளை அரசியல்படுத்தியமைக்கு, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், அவரது ஆட்சியில் தான், குடிசை மாற்று வாரியம், 10-வது மற்றும் 11-வது நிதிக் கமிஷனிடம் இருந்து நிதி பெற்று, சென்னைக்கு வெளியே ஏழைகள் வசிப்பதற்காக 115 சதுர அடியில் உலகிலேயே மிகச்சிறிய, மட்டமான வீடுகளைக் கட்டத் தொடங்கியது. அவர் தொடங்கிய மோசமான திட்டத்தை விரிவுபடுத்தி, சென்னையின் பல குடிசைப்பகுதிகளைக் காலிசெய்து, அந்த மக்களை சென்னைக்கு வெளியே குடியேற்ற அவசரப்படுகிறது இன்றைய அரசு. பறக்கும் ரயில் திட்டம், கூவம் சீரமைப்பு, உயர்நிலை மேம்பாலங்கள், பூங்காக்கள் அடங்கிய இன்றைய ஆட்சியாளர்கள் கனவு காணும் சிங்காரச் சென்னையின் கொண்டையில் உள்ள ஈரும், பேனும்தான் நகர்ப்புறச் சேரிகள். சந்தைப் பொருளாதாரத்தின் இரக்கமற்ற பேராசைக்கு ஈடுகொடுக்கும் நுகர்வுத்தன்மையும், சக்தியும் பெற்ற மேல்தட்டு, நடுத்தர மக்கள் மட்டுமே சென்னைக்குள் வாழத் தகுந்தவர்கள் எனும் எழுதப்படாத கொள்கையை ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பெரு நிறுவனங்களும் இணைந்து, வர்க்கப்போர் போன்று தொடங்கி விட்டதைப் பார்க்கிறோம்.  வளர்ச்சித் திட்டங்களில் புரளும் ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவழிப்பதற்குத்  தடையாக இருப்பவை இந்த குடிசைப் பகுதிகள் என்றே கருதப்படுகிறது. குடிசைகளையெல்லாம் ஆக்கிரமிப்புகள் என்றும், அதனால் அவர்களைக் காலி செய்ய வைப்பது சரி என்றும் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், இந்த வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்துள்ள வளாகங்களை, அதிகார வர்க்கத்துடன் ஒன்றாகக் கலந்தவர்களை நெருங்கி விடாது. ஏனென்றால், இவர்கள்தான் இந்த வளர்ச்சியின் பங்குதாரர்கள். நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மலிவான பட்ஜெட்டில் அதிகமான ஏழைக் குடும்பங்களை குடியமர்த்திய முன்மாதிரித் திட்டம் என்று கண்ணகி நகர் வளாகத்துக்காக இந்திய அளவில் பரிசுகூட வாங்கியிருக்கிறது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். ஆனால், இந்த வளாகங்களும், அங்குள்ள பராமரிப்பற்ற சூழலும், மனித உயிர்கள் வாழத்தகுதி இல்லாதவை என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?  தமிழ், தமிழர்கள், திராவிடம், சினிமா என்று கச்சேரி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். மக்களின் உண்மையான பிரச்னைகளை ஆட்சியில் உள்ளவர்களிடம் விவாதிக்காமல், ஆமாம் போடுவதையே கடமையாகக் கொண்டவர்கள்தான் பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருப்பது இன்றைய துரதிருஷ்ட நிலை. இரண்டு நாள்கள் இந்த வளாகங்களில் தங்கினால் மட்டுமே, தாங்கள் உருவாக்கியவை பூலோக நரகங்கள் என்பதை இவர்கள் உணர முடியும்.  இதுவரை, இவ்விரு வளாகங்களிலும் 155 முதல் 165 சதுர அடி கொண்ட (குளியலறை, கழிப்பிடம் சேர்த்து)  22,400 கான்கிரீட் பொந்துகளைக் கட்டி, 1,04,000 நகர்ப்புற ஏழைகளை மறுகுடியமர்வு செய்துள்ளது அரசு. மேலும், 8,048 பொந்துகளைக் கட்டுவதை எதிர்த்த பொதுநல வழக்கும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செம்மஞ்சேரிக்கு அருகில் பெரும்பாக்கத்தில் | 950 கோடி செலவில் ஏழு அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி வருகிறது அரசு. வரும் காலத்தில், சென்னையில் உள்ள 36,500 குடும்பங்கள், கிட்டத்தட்ட 2 லட்சம் குடிசைவாசிகள் சென்னைக்கு வெளியே புதிய அகதிகள் முகாம்களுக்குத் துரத்தப்படும் அபாயமும் உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தாத அரசின் குற்றத்தால், கிராமங்களின் ஏழை மக்கள் பிழைக்க வழி தேடி சென்னைக்குப் படையெடுக்கிறார்கள். மேலும் பலர், சென்னையிலேயே பல தலைமுறைகளாகப் பிறந்து வளர்ந்தவர்கள். சென்னையின் சேரிகளில், இவர்களது வாழ்க்கைத்தரம் மிக மோசமாக இருந்தாலும், இவர்களது குழந்தைகள் பொது சமூகத்துடன் பழக வாய்ப்பிருந்தது. பள்ளிக்கல்வி, மருத்துவம் போன்றவை அருகில் கிடைத்தன. அவர்களின் ஒரே குற்றம் விளிம்பு மக்களாக இருப்பதுதான்.  ஆனால், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரியில் இருக்கும் சூழலைப் பொறுத்தவரை விசித்திரமும் இல்லை, வேடிக்கையும் இல்லை. அது உச்சகட்ட அவல வாழ்க்கை. ஒற்றைச் ஜன்னலும், ஒரே ஒரு தகரக்கதவும் கொண்ட வீடுகள், பாதாளச் சாக்கடைக் குழாய்கள், மழைநீர் வடிகால் கால்வாய்கள், ஜங்ஷன் பாக்ஸ்கள், குடிநீர் பைப்புகள் என்று ஒவ்வொன்றும் நாலாம் தரம். ஊழல், கஞ்சத்தனம், அலட்சியம், பொறுப்பற்ற ஆளுமை, கேவலமான நிர்வாகம் எல்லாம் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. மழைக்கு ஒதுங்குவதற்கும், தட்டுமுட்டுச்  சாமான்களை வைப்பதற்கும் தவிர, தங்களது வாழ்வை மக்கள் இங்கே திறந்தவெளியில்தான் கழிக்கிறார்கள். நிரந்தரக் குடிநீர் வசதி இல்லை. கிடைப்பதும் மிகக் குறைவு. கிடைத்தாலும் ஒரே நாளில் புழுத்து நெளிகிறது. பல வீடுகளில் குடிநீருக்காக அலைவதற்கும், அடிபம்புகளை அடித்து ஓய்வதற்கும் ஒத்தாசையாக சிறார்கள் பள்ளிக்குச் செல்லாமல் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். வீடுகளின் கழிப்பிடங்கள் மன அழுத்தத்தை வரவழைக்கும் விதத்தில் உள்ளதோடு, நீரும் பற்றாக்குறை. அதனால், பலர் திறந்தவெளிக் கழிப்பிடங்களையே பயன்படுத்துகின்றனர்.  22 ரேஷன் கடைகளாவது அவசியமான மக்கள்தொகைக்கு, ஒதுக்கப்பட்டவையோ வெறும் 7 ரேஷன்கடைகள்தான். அதனால், ரேஷன் வாங்குவது பெரிய போராட்டம். ஜங்ஷன் பாக்ஸ்கள் இருந்தாலும், பெரும்பாலான வீடுகளுக்கு மின்வசதி செய்து தரப்படவில்லை. அரசியல் கட்சி குண்டர்களும், மின்சாரத்துறை ஊழியர்களும் இணைந்து வீடுகளுக்கு ஆபத்தான திருட்டு கொக்கி மின் இணைப்புக் கொடுத்து, மாதாமாதம் பல லட்சங்கள்  ஈட்டுகிறார்கள். குழந்தைகளுக்கான அங்கன்வாடிகள் மிகமிகக் குறைவு. போனால் போகிறது என்று இயங்கும் இவற்றின் பராமரிப்பும் மிக மோசம்.  பெரும்பாலானவை அரசுசாரா நிறுவனங்களால் நடத்தப்படுபவை. குடிநீரும், கழிப்பிடங்களும் இல்லாமல் இவை உண்மையில் தொற்று நோய் மையங்கள். இவ்வளாகங்களில் உள்ள 6 சிறிய பள்ளிகளை, பள்ளிகள் என்ற பெயரில் அரசின் மிகப் பெரிய மோசடி என்று தான் கூற முடியும். மறுகுடியமர்வின் காரணமாக மட்டுமே, 10,000-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கல்வி இல்லாமல் எதிர்காலத்தைத் தொலைத்து வருகிறார்கள்.  ஆரம்ப சுகாதார மையங்களோ, மருத்துவமனையோகூட அரசு அமைக்காத நிலையில், மக்கள் நிவாரணம் இன்றி ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர். பிரசவங்கள், வீட்டு வாசல்களிலும், ஆட்டோவிலும் நடந்துள்ளன.  சென்னைக்குத் தினமும் வந்து வேலை செய்து மீண்டும் வளாகங்களுக்குத் திரும்புவதும் மிகப்பெரிய போராட்டம். ஆகப்பெரும்பாலோர் வேலையை இழந்து, கல்வியை இழந்து, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி, ரேஷன் என்று போராடி, பண விரயம் செய்து, வாழும் வழி தெரியாமல், மன அழுத்தத்தோடும், நோய் நொடிகளோடும் உழல்கிறார்கள். அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள் இம்மக்களை அமைதியைக் கெடுக்க வந்தவர்களாகவும் குற்றப் பரம்பரை போன்றும் தவறாகப் பார்ப்பதுதான் நிதர்சனம். இங்குள்ள இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை கொடுக்க பெரும்பாலான நிறுவனங்கள் முன்வருவது இல்லை.  மிக ஆரோக்கியமற்ற சூழலால், இங்கு தற்கொலைச் சாவுகள் மிக அதிகம். தற்கொலை செய்து கொள்ளும் பெரும்பாலானோர் இளம் பெண்கள். செத்தவர்களுக்கும்கூட அமைதியில்லை. புதைப்பதற்கு இருப்பதோ அரைகுறையாக உள்ள பராமரிப்பற்ற மிகச் சிறிய சுடுகாடு. புதைத்த இடத்திலேயே மீண்டும் தோண்டி, புதிய சடலங்களைப் புதைக்கும் அவலம். எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளது குடிசை மாற்று வாரியம். ஆனால், மார்ச் மாதம் தலைமைச் செயலகக் கூட்டத்தில், பல துறைச்செயலர்களும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும் இந்த வளாகங்களின் இழிநிலையையும், ஏழைகளின் வாழ்வாதார இழப்பையும் பற்றி குற்றஉணர்வுடன் பேசியுள்ளனரே, ஏன்? 5,000 ஏழைக் குடும்பங்களை பொது சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த கொள்கை வகுக்க நினைப்பதே ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஆரோக்கியமற்ற சிந்தனை. கொள்கைகூட வகுக்காமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று 22,000 குடும்பங்களை முகாம்கள் போன்ற வளாகங்களில் முடக்கியதற்கு பிராயச்சித்தம் தான் என்ன? வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள். உண்மை கண்டறியும் குழுவின் உறுப்பினராக இந்த வளாகங்களுக்கு மூன்று நாள்கள் சென்று ஒவ்வொரு விஷயத்தையும் பேசி, பார்த்து, விசாரித்து, அனுபவித்து வந்த பின்னர், சில நாள்களுக்கு தூக்கமும் வர மறுத்தது, தொண்டைக்குழிக்குள் சோறும் இறங்க மறுத்தது என்பதுதான் உண்மை.  நகர வளர்ச்சியில் இருந்து ஒதுக்கப்பட்டு, எல்லா சமூகங்களோடும் இணக்கமாக வாழும் உரிமை இழந்து நலிந்து போவோரில் ஆகப் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர். ஆனால், தலித் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவை இவ் விஷயத்தில் மயான அமைதி காத்து வருகின்றன. நவீன தீண்டாமையை உருவாக்கும் இதே அரசு, ஏழ்மை ஒழிப்புக்காகப் பல திட்டங்களை முழுப்பக்க விளம்பரங்களாக வெளியிடுவதுதான் விசித்திரமான வேடிக்கை.
கருத்துக்கள்

வான்வழித் தாக்குதல்கள் இல்லாமல், மாநகராட்சி குப்பை வண்டிகளைக் கொண்டு அமைதியாகக் கட்டமைக்கப்பட்டவை இந்த முகாம்கள்.- ஏதோ விடுபாடு உள்ளது. சுருக்கும் பொழுது பொருளை உணராமல் சுருக்கப்பட்டிருக்கலாம். அல்லது கட்டழிக்கப்பட்டவை என இருக்க வேண்டும். கட்டரையாளர் நல்ல தமிழ் நடையிலேயே எழுதலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/10/2010 4:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 5 ஏப்ரல், 2010

.ஆர். ரஹ்மான் இசையில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்': 'தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கோரிக்கை



சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பயணத்தைப் பாராட்டும் விதத்தில் நடந்த மெல்லிசை நிகழ்ச்சியில் "அருவி' தொண்டு நிறுவனம் மற்றும் ஆதரவற்றோ

சென்னை, ஏப். 4: கணியன் பூங்குன்றனார் இயற்றிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற புறநானூற்றுப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தமிழின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கோரிக்கை விடுத்தார்.
÷"ஆஸ்கர்' விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பயணத்தைப் பாராட்டி அவரது சகோதரி ரெஹானா தொகுத்து வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: சென்ற மார்ச் 31-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் பத்மபூஷண் விருது பெற்றார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தில்லியில் "தினமணி' சார்பில் நடைபெற்ற பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் எந்த வித தயக்கமும் இல்லாமல் பங்கேற்றார்.
÷இந்த விழாவில் "ஆஸ்கர்' விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானையும், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனையும் அருகருகே அமரவைத்த பெருமையை "தினமணி' பெற்றது.
÷விழாவில் முதலில் வந்து அமர்ந்த "நோபல்' பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், "நான் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன். எனவே, அவருடன் இணைந்து எடுக்கப்படும் படத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.
÷சிறிது நேரத்தில் வந்த ஏ.ஆர்.ரஹ்மானும், "நானும், அவரும் (வெங்கட்ராமன்) இப்படி அருகருகே அமர்ந்திருக்க இனியும் ஒரு வாய்ப்பு அமையுமா என்பது சந்தேகம்தான். எனவே கிடைத்தற்கரிய இந்தப் படத்தை எனக்கு அனுப்புங்கள்' என்று என்னிடம் கேட்டார்.
÷சிறிதாவது கர்வமோ, நான் பெரியவன் என்கிற அகம்பாவமோ, உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற அவர்கள் இருவரிடமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.
÷"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற தமிழ் முழக்கத்தை உலகத்துக்கு அளித்தவர் கணியன் பூங்குன்றனார் என்ற சங்க காலத்துப் புறநானூற்றுப் புலவர்.
÷எல்லாமே எனது நாடுதான். எல்லோரும் என் உறவினர்களே என்கிற அந்த அற்புதமான சங்க இலக்கியப் பாடலை வாழ்ந்து காட்டிய பெருமைக்கு உரியவர் ஏ.ஆர். ரஹ்மான்.
÷தில்லியில் நடைபெற்ற தினமணியின் பாராட்டு விழாவில் பேசும்போது, "ஜெய்ஹோ' போன்று ஒரு தமிழ்ப் பாடலை, தான் இசை அமைத்து ஆஸ்கர் விருது வாங்க விரும்புவதாக கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
÷நான் அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். "வந்தே மாதரம்' பாடலுக்கு இசையமைத்தது போல, கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற புறநானூற்றுப் பாடலுக்கும் இசையமைத்து தம் இனிய இசையால், தமிழகத்தின் இசைத் தூதுவர் ஏ.ஆர்.ரஹ்மான் பண்டைத் தமிழனின் தொலைநோக்குச் சிந்தனையை உலகறியச் செய்ய வேண்டும்.
÷இந்த மெல்லிசை நிகழ்ச்சி மூலம் நான் தினமணியின் சார்பிலும், உங்கள் சார்பிலும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது என்றார் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
÷இந்த மெல்லிசை நிகழ்ச்சியில் இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் ரவிசங்கர், "டைம்ஸ் ஆப் இந்தியா' நிர்வாகி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரெஹானா மற்றும் நடிகர் விஜய் ஆதிராஜ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
÷முன்னதாக "அருவி' தொண்டு நிறுவனம் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்துக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஒருங்கிணைப்பாளர் சைமனிடம் நன்கொடையை தொழிலதிபர் ரவிசங்கர் வழங்கினார்.


கருத்துக்கள்

அருமையான வேண்டுகோளை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இவ் வேண்டுகோளை நிறைவேற்றுவதால் இரகுமான் பெருமை பெறுவார். தமிழர் மகிழ்ச்சி கொள்வார். ஒரு பாடலுடன் நிறுத்திக் கொள்ளாமல் சங்கப் பாடல்கள் பலவற்றையும் பாட வேண்டும். பாடல் பேழையில் அப்பாடல்களின் பல் வேறு மொழிபெயர்ப்புளும் இடம் பெற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/5/2010 3:13:00 AM

அக் இம்சையைக் காட்டி கிந்தியாவாக்கி இனச்சிதைப்பை செய்தாயிற்று. இனிக் கணியன் பூங்குன்றனாரைக் காட்டிக் கோவணத்தையும் உருவும் திட்டத்தை அரங்கேற்றித் தமிழகத்தை அம்மணமாக்காது ஓயமாட்டார்கள் போலிருக்கிறதே. எல்லாமே எனது நாடுதான். எல்லோரும் என் உறவினர்களே என்றுபோய் கர்நாடகாவில் பாட முடியுமா? மாராட்டியாவில் பாடமுடியுமா? சும்மா மக்களை என் மாயைக்குள் வீழ்தி வைத்திருக்க முயல்கிறீர்கள்.

By அருப்புக்கோட்டைப் பெரியசாமி
4/5/2010 3:12:00 AM

அற்பமான இளைஞர்களைக்கூட என்னிடம் கொடுங்கள். அவர்களை சிற்பம் ஆக்கிக் காட்டுகிறேன் என்று சொன்னார் சுவாமி விவேகானந்தா. சிற்பமாக இருக்கும் பெண்களை என்னிடம் கொடுங்கள். அவர்களை கர்ப்ப மாக்கிக் காட்டுகிறேன்' என்று சொல்வது நம்ப நித்யானந்தா!!!

By Inbaa
4/5/2010 2:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2010

ங்கு வாழ்ந்தாலும் தமிழன் தன் வீட்டில் தமிழ்தான் பேச வேண்டும்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்



விழா மேடையில், ஏ.ஆர். ரஹ்மான், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் உரையாடுகிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.

புதுதில்லி, மார்ச் 31: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வீடுகளில் தமிழில்தான் பேச வேண்டும் என்கிற உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
தினமணி நாளிதழும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து, பத்ம விருதுகள் பெற்ற நோபல் நாயகர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் மற்றும் சித்த மருத்துவ வல்லுநர் டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகிய தமிழர்களைப் பாராட்டி புதன்கிழமை நடத்திய விழாவில் பேசியபோது இதனை அவர் வலியுறுத்தினார்.
மேலும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
பேசியது: திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கித் தந்த அறிஞர்கள் இவர்கள். தமிழ்நாட்டின் பெருமையை இந்தியத் தலைநகரில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பட்டொளிவீசிப் பறக்கச் செய்தவர்கள். இவர்களைப் பாராட்டுவது தமிழர்களாகிய நம்மை நாமே பாராட்டிக் கொள்வதற்குச் சமம்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்பான் பாரதி. இசைமேதை ஏ.ஆர். ரஹமான் பேசும்போது "ஜெய் ஹோ' பாடலைத் தமிழில் இசையமைக்க வேண்டும் என்கிற ஏக்கமும் தாகமும் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார். அவர் வெளிப்படுத்திய அந்தத் தமிழ் உணர்வு நம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். அதற்கு முதலில் நாம் தமிழில் பேச வேண்டும் என்கிற வைராக்கியம் நமக்கு ஏற்பட வேண்டும்.
தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் வாழும் மலையாளிகளைப் பார்க்கிறேன். அவர்கள் வீடுகளில் மலையாளத்தில் பேசிக்கொள்கிறார்கள். குஜாராத்திகள் குஜராத்தி மொழியில் பேசுகிறார்கள். கன்னடத்தவர் கன்னடத்திலும், வங்காளிகள் வங்க மொழியிலும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலேயேகூடத் தமிழன் மட்டுமே, தன் வீட்டில் தமிழ் பேசுவது குறைந்து வருகிறது. தமிழில் பேசுவது கெüரவக் குறைச்சலாகக் கருதுவதும் ஆங்கிலத்தில் பேசுவதுதான் பெருமை என்று நினைப்பதும் வேதனை அளிக்கிறது. இந்த மேடையில் ஜெய் ஹோ பாடலை குழந்தைகள் ஹிந்தியில் பாடியதைக் கேட்ட ரஹ்மான், இப்பாடலை தமிழல் கொண்டுவரப்போவதாகச் சொன்ன அதே தமிழ் உணர்வை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நாமும் வீடுகளில் தமிழில்தான் பேசுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நாம் நமக்குள்ளே பேசும் மொழி நம் இனிய தமிழ் மொழியாக இருக்கட்டும் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன்.
நோபல் நாயகர் வெங்கட் ராமகிருஷ்ணன் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், "நான் இங்கே உள்ள இசை மேதை ரஹ்மான் போல அனைவரும் தெரிந்த நபர் அல்ல, ஆனால் எனக்கு ஒரு நோக்கம் இருந்தது, அதை நான் ஈடுபாட்டுடன் பின் தொடர்ந்தேன். நான் எப்படி பி.எச்டி. படிக்க நேர்ந்தது என்பதெல்லாம் சுவாரஸ்யமான விஷயம். இருப்பினும் என்னைப் போன்றவர்களுக்கு விருது கிடைக்குமபோது அது மிகப்பெரிய நல்லெண்ணத்தைத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்துகிறது என்பதும், உழைப்பவருக்கு பாராட்டு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பதும் என்னை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இது ஒரு பாடம். பணம், நல்ல வேலை என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உங்கள் விருப்பங்களைத் தீர்மானித்து, அதைத் தொடர்ந்து செல்லுங்கள். பாராட்டு வந்து சேரும்' என்றார்.
தமிழில் ஜெய்ஹோ: இசைமேதை ஏ ஆர். ரஹ்மான் பேசுகையில், எல்லாப் புகழும் இறைவனுக்கே, இந்த விழாவில் குழந்தைகள் நான் இசையமைத்த ஹெய் ஹோ பாடலை ஹிந்தியில் பாடியபோது, இதைத் தமிழிலும் அமைக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த ஆண்டு அதைச் செய்வேன், பாராட்டியதற்கு தினமணிக்கு நன்றி என்றார்.
டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் பேசுகையில், விருது பெற்றவுடன் இங்கே வந்து கலந்து கொண்டதற்குக் காரணம் நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான். எனக்கு விருóது கிடைத்திருப்பதாக நண்பர்கள் சொன்னபோது, எனக்குத் தெரியாது, நான் கேட்டதும் இல்லை. இத்தகைய விருதுகள் பெற செல்வாக்கைப் பயன்படுத்தினால்தானே இத்தகைய விருதுகள் கிடைக்கும் என்றேன். தகுதிக்கேற்பவும் தருகிறார்கள் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டுக்கு மறுபடியும் பெருமை கிடைக்கத் தொடங்கியுள்ளது. சில காலமாக தொய்வு இருந்த நிலை மாறி, கடந்த இரு ஆண்டுகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று நிறைய தமிழர்கள் மத்திய அரசுப் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். தமிழன் மறுபடியும் தலைதூக்கி உலகப் புகழைப் பெறத் தொடங்கியுள்ளான். இந்த விருது பெற்ற அனைவருமே, சாதாரண குடும்பங்களில் இருந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்கள் என்றார்.
டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தமிழ் உணர்வு தமிழர்களிடத்தில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இருக்கிறது. சோரியாஸிஸ் தோல் நோய்க்கு நான் உருவாக்கியுள்ள சித்த மருந்துக்காக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சித்த மருத்துவமனை அதிகம் வருவதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.
1946-ல் தொடங்கப்பட்ட தில்லி தமிழச் சங்கத்தின் செயல்பாடுகளை தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். செயலர் சக்தி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் பி. குருமூர்த்தி, ராஜ்குமார் பாலா ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

கருத்துக்கள்

ஆங்கிலேயர் அல்லாத இருவர் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்பது உலகறிந்த உண்மையாக உள்ளது. தமிழர்கள் தங்களுக்கிடையே தமிழ் பேசாமையே மொழி அழிவுக்கும் நில இழப்பிற்கும் இன அழிப்பிற்கும் காரணமாயிற்று. தினமணி ஆசிரியர் தம் வேண்டுகோளைத் தொடர்ந்து வலியுறுத்தி இதழில் வெளியிட்டு வரவேண்டும். பின்னராவது நம்மவர்களுக்கு உணர்வு வரலாம். தமிழில் பேசுங்கள் ! தமிழ் பேசும் பொழுது (பிற மொழிக் கலக்காமல்) தமிழிலேயே பேசுங்கள்!தமிழில் எழுதுங்கள்! தமிழில் எழுதுகையில் தமிழிலேயே எழுதுங்கள்! தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுங்கள்! தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்யுங்கள்! இச் செயல்பாடடுகளே தமிழை என்றென்றும் வாழவைக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

ஞாயிறு, 28 மார்ச், 2010

கம்பன் ஏமாற்றப்படமாட்டார்: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்



காரைக்குடி, மார்ச் 27: கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கும் இடமிருக்கும் என்றும், கம்பன் ஏமாற்றப்படமாட்டார் என்றும் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார். காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெறும் 72வது கம்பன் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், "தினமணி' முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் தமிழக அரசும் முதல்வரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கியதில்லை என்றார். ""பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் காரைக்குடி கம்பன் விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அந்த நாள்களை இன்று கம்பன் கழக மண்டபத்தில் நுழையும் போது நான் நினைவுகூர்ந்தேன். அப்போதெல்லாம் கம்பன் விழாவில் அன்றைய "தினமணி' ஆசிரியர் பெரியவர் ஏ.என். சிவராமனை பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். ஒருநாள் நான் "தினமணி' ஆசிரியராகப் பொறுப்பேற்பேன் என்றோ, காரைக்குடி கம்பன் விழா மேடையில் தொடக்க உரையாற்றுவேன் என்றோ அப்போது கனவிலும் எண்ணிப் பார்த்ததில்லை. "கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை' என்பார் கவியரசர் கண்ணதாசன். கம்பன் ஏன் காந்தம் போல் நம்மை இழுக்கிறான்? அவனது ராம காவியம் வெறும் கவிதை தொகுப்பல்ல. கற்பனைச் சுரங்கம் உவமைகளின் சமுத்திரம். எல்லாவற்றுக்கும் மேலாக கதா பாத்திரங்களை நாடகத் தன்மையுடன் உலவவிடும் கவித்துவம் கம்பனது தனித்துவம்.÷நான் எழுதியதாலோ என்னவோ எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு இடமுண்டா இல்லையா என்று. நான் போகுமிடமெல்லாம் இந்தச் சர்ச்சை எழுப்பப்படுகிறது.÷தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பி மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட சகோதரர்களை அழைத்துச் சென்ற மதுரை வைத்தியநாத அய்யர் சிலை பராமரிப்பில்லாமல் இருக்கிறது என்று "தினமணி' நாளிதழில் செய்தி வெளிவந்தது. காலையில் "தினமணி' வெளிவந்த சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் அந்தச் சிலை அருகில் குவிந்துவிட்டனர். அடுத்த சில மணித் துளிகளில் சிலை புதுப்பொலிவு பெற்றுவிட்டது. காரணம், முதல்வரிடமிருந்து வந்த தொலைபேசி ஆணை.÷போலி காலாவதியான மருந்துகளைப் பற்றிய "தினமணி' தலையங்கம் வந்தவுடன், முதல்வர் அதிகாரிகளைக் கூட்டி நடவடிக்கையை முடுக்கிவிட்டதை நாடறியும்.÷காரைக்குடி மாநகரில் தமிழ்த்தாய் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய, அந்தத் தமிழ்த்தாய் கோயிலைத் திறந்து வைத்த, கம்பன் அடிப்பொடியின் மீது அளப்பரிய மரியாதையுள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழை நேசிக்கும் தமிழக முதல்வர், கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு செம்மொழி மாநாட்டில் இடமளிக்காமல் இருக்கமாட்டார் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவர் சொன்னதைச் செய்வதுபோல சொல்லாமலும் செய்வார் என்பதற்கு செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு அளிக்கப்படும் இடம் எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் கருதுகிறேன். வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகிய மூவரையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பது இயலாது என்பதை அறியாதவர் அல்லர் அவர். கம்பன் ஏமாறவும் மாட்டான். நாம் ஏமாற்றப்படவும் மாட்டோம். ஏனென்றால் கம்பனின் தமிழ் காலத்தையும் வரைமுறைகளையும் கடந்த தேன்பாகு என்பதில் சந்தேகம் என்ன? என்றார் அவர்.
கருத்துக்கள்

தினமணயில் வரும் செய்திகளுக்கு உடனே எதிரொலி கேட்பது உண்மைதான். உரிய பயன் விளைவதும் உண்மைதான். ஆனால், இதே தினமணி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது முழக்கமாக இல்லாமல் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் எல்லா நிலைகளிலும் கல்வி மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்றும் தமிழுக்காகக் குரல் கொடுப்பதற்கான எதிர்விளைவு ஏதும் இல்லையே! இவை தினமணியின் போலிக் குரல்கள் என எண்ணுகிறாரா? அல்லது கேட்பதிலும் பார்ப்பதிலும் பாதி மறைப்பு வந்து இவை அவருக்குத் தெரிவதில்லையா? கம்பரைப் பிற அமர்வுகள் மூலம் காணலாம். ஆனால், மொழிப்பாடமாக, பயிற்று மொழியாக, அலுவல் மொழியாக, நீதி மன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக, அன்னைத் தமிழை அரியணையில் ஏற்ற இதுவே நல்ல வாய்ப்பான காலம். தினமணி அதற்குக் குரல் கொடுக்க வேண்டும். மொழிப்பற்றும் இனப்பற்றும் இலக்கியப் பற்றும் உள்ள ஆசிரியர் அதில் கருத்து செலுத்தி வெற்றி காண வேண்டும்.தமிழ்த்தாய ஏமாற்றப்படாமல் இருந்தால் கம்பன் ஏமாற்றம் அடையாமல் மகிழ்வார்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 4:53:00 AM

I am not sure our CM will encourage hindu relegious Schalers rather he always criticise them. Without Kambar, Elango, Sambandar, Appar, Barathiyar how can on tamil conference can be conducted without them. We cannot think of Tamil without any Bakthi and relegious thougts from great schalers. Thanks to Periyar, he is not tamil schalar otherwise entire conference will be dedicated to Periyar only.

By Chandra
3/28/2010 4:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்