வியாழன், 23 ஜூலை, 2009

இலங்கையிலிருந்து
3 லட்சம் தமிழ் அகதிகள் தமிழகத்துக்கு வருகை



புது தில்லி, ஜூலை 22: இலங்கையில் நடைபெற்ற போரால் அங்கிருந்து இதுவரை 3,02,543 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஸ்ரீகோபால் வியாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் இதை தெரிவித்தார். இலங்கையில் இருந்து 24-07-1983 முதல் 02-07-09 வரை நான்கு கட்டங்களாக மொத்தம் 3,02,543 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களுடைய வருகை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் ஒரு லட்சம் தமிழ் அகதிகள் அவர்களுடைய சம்மதத்துடன் இலங்கைக்கு இரண்டு கட்டங்களாக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அஜய் மக்கான் கூறினார்.
........
கருத்துக்கள்

உகாண்டா அகதிகளுக்கும் திபேத்திய அகதிகளுக்கும் செய்து தந்த / செய்து தரும் வாய்ப்பு வசதிகளும் பண உதவிகளும் கல்வி வாய்ப்புகளும் உரிமைகளும் இலங்கைத தமிழர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பட்டிகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு இனப் பற்றாளர்களும் மனித நேய ஆர்வலர்களும் தந்த உதவிகளைக் கூடத் தடுத்து விட்டோம் என்று பெருமை பேசி உண்மையையும் வெளிப்படுத்தியிருந்தால் தேவா இவ்வாறு எழுதியிருக்க மாட்டார். என் செய்வது தமிழர்களின் தலையெழுத்து அறியாமையில் மூழ்கிக்கிடப்பதும் தன்னை நசுக்குபவனையே தஞ்சம் என்று நம்புவதும்தானே! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 4:36:00 AM

என்ன செய்து என்ன பலன், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை அகதிகள் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் மட்டமாகத்தானே பேசுகிறார்கள். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு.

By Deva
7/23/2009 12:43:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக