வியாழன், 23 ஜூலை, 2009

இலங்கை வெளியுறவு அமைச்சருடன் எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை



தாய்லாந்தில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக புதன்கிழமை நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.எம்.கிருஷ்
புக்கட் (தாய்லாந்து), ஜூலை 22: இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமவை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா புதன்கிழமை சந்தித்துப் பேசினார். தாய்லாந்தின் புக்கட் நகரில் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள எஸ்.எம். கிருஷ்ணா, பொகலகாமவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் இல்லை. ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுப் பணி குறித்துதான் இரு தலைவர்களும் ஆலோசித்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இந்தியா உதவும்: பொகலகாமவை சந்தித்துப் பேசுவதற்கு முன்னதாக எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கையில் முகாமில் அவதிப்பட்டு வரும் 3 லட்சம் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணியை செய்து முடிப்பதற்கு அந்நாட்டு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். இலங்கை அரசு மறுவாழ்வுப் பணியில் விரைந்து ஈடுபடும் பட்சத்தில் அதற்கு இந்தியா தனது உதவியை அளிக்க ஆயத்தமாக உள்ளது என்றும் அவர் கூறினார். ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணியை விரைந்து முடிப்பதாக இலங்கை அரசு தங்களுக்கு ஏற்கெனவே உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்த எஸ்.எம். கிருஷ்ணா, இந்த விஷயத்தில் இலங்கையுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த மே மாதம் வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு சென்று மறுவாழ்வுப் பணி குறித்து அந்நாட்டு மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதையும் நினைவு கூர்ந்தார். சீன வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை: தாய்லாந்தில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜெஜியையும் சந்தித்து எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இரு நாடுகளுக்கு இடையே தற்போது நிலவும் சுமுகமான உறவு குறித்தும் அவர்கள் திருப்தியை வெளிப்படுத்தினர். சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தங்களது சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்ததாகக் கூறினர். இந்தியா-சீனாவுக்கு இடையே நீடித்துவரும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஆகஸ்ட் 7, 8 ஆகிய தேதிகளில் தில்லியில் 13-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கு முன்னதாக இரு தலைவர்களும் தாய்லாந்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

''நாங்கள் நினைத்ததைவிட விரைவாக ஆனால் திட்ட மிட்டவாறு பேரினப் படுகொலைகளைச் செய்து விட்டீர்களே! பாராட்டுகள்'' - இவர். '' எல்லாம் உங்கள் ஒத்துழைப்பால்தான். காங்.அரசு ஒத்துழைக்காவிட்டால் எங்களுக்குப் பெரிய நெருக்கடிதானே!''- அவர். ''எல்லாம் சரிதான். எங்களுக்காகத்தான் இனப்படுகொலைதகளைச் செய்த உண்மையைப் போட்டு உடைக்கலாமா?'' – இவர். '' என்ன இருந்தாலும் நன்றி மறக்கலாமா?உங்களுக்காக நாங்கள் உதவிய உண்மை பதிவாகவேண்டுமல்லவா?''- அவர். ''இன்னும் சிலர் வாலாட்டுவது போல் தெரிகிறது. எனவே தயங்காமல்உதவிகளைக் கேளுங்கள். தருகிறோம்.'' -. இவர். ''உங்களைப் பற்றித் தெரியாதா? 500 வீரர்களை அனுப்பச் சொன்தற்கே 5000 வீரர்களையும் உளவுப்படையினருடன் சேரர்த்து அனுப்பியுள்ள பெருந்தகையாளர்கள்தானே நீங்கள்.'' - அவர் '' இந்து இராமுக்கு மட்டும்தானா எலும்புத்துண்டுகள்' –இவர். ''சே! சே! எத்தனைப் பத்திரிகையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தந்துள்ளோம் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்களை யெல்லாம் வேறு வகையில் குளிப்பாட்டுவோம். கவலைப்படாதீர்கள். '' - அவர்.

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 4:56:00 AM

''சரி!சரி! நாம் என்ன பேசினோம் எனத் தெரிவிக்கக் கற்பனை அறிக்கை ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன். நாம் இருவரும் கையெழுத்திட்டு வழங்குவோம்.'- இவர்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 4:55:00 AM

Krishna under the influence of Manmohan, and Sonia, and Karunanidhi is also lying about the so called help to Tamils. He is trying to help Menons, and Narayanan for their unconditional help to Sinhalese, and aginst the interest of Tamils. He again plans to give more money to SL. Now, he has to save his face by appeasing Chinese as they have won the full support of GoSL, and Pakistan. What is his plan to save India from the chinese invasion (as predicted by India's defence expert)? He encouraged war against Tamils. Is he going to follow the same technique of war against China? Time alone will reveal the plan of Shiv Sankar, and Nirupama Menons, and Narayanan to deal with China. Will the failure of Jawahar's NAM & Panch Sheel repeat?

By ganesh
7/23/2009 4:00:00 AM

dont worry chinese will enter from sri lanka through jaffna and mannar with the full support of sri lankan tamils.hats off for menon,narayanan,nair,etc., to their best advice on sri lanka affaires.some one or many even a country has to pay dearly for their revenge just for one joker.

By koopu
7/23/2009 1:08:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக