article லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
article லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 செப்டம்பர், 2012

Outlook attacks The Hindu’s Sri Lanka deception

Outlook attacks The Hindu’s Sri Lanka deception

[TamilNet, Sunday, 09 September 2012, 00:31 GMT]
The Hindu’s Sri Lanka policy came under severe attack in an article written by S. Anand that appeared both in print and online editions of a mainstream Indian media, Outlook, on Saturday. Viewing what unfolded in Tamil Nadu in the past week as a “vulgar charade of competitive righteousness on the part of all players, including the media,” the role played by The Hindu’s orientation was brought out in the article in the following words: The Hindu’s former editor N. Ram had said within two weeks of the end of the war: “Justice has not been done to Mahinda Rajapaksa’s government for its astonishing feat of rescuing by military means close to 275,000 civilians.” And later, a Sri Lankan minister picked up on the perverse cue and described the war as “one of the greatest humanitarian operations in modern times.”

S. Anand
S. Anand
Outlook is one of India’s four top-selling English Weekly Newsmagazines.

The outlook article by its former journalist and Navayana activist Anand came hard on The Hindu for casting a deception on the situation of Eezham Tamils.

Earlier this August, the establishments of both New Delhi and Colombo got Carnatic musicians T.M. Krishna and Unnikrishnan, and Bharatanatyam dancer Alarmel Valli to perform at a three-day festival held in Jaffna’s Nalloor Kanthasaami temple, marketed as the first such event in 30 years.

“The media’s abetment in this manufacture of normality has been crucial. So The Hindu—ever-eager and Rajapaksa-doting—obliged with a slew of reports that certified this festival as a sure sign that the region was ‘limping back to normalcy’. Neither Krishna, Valli nor The Hindu may have cared to notice the 28 new Buddha statues that have sprung along the A9 Highway that leads to Jaffna, especially near Vavuniya, a Tamil area where hardly any Buddhists live,” the Outlook article pointed out.

Alarmel Valli
The New Delhi initiative: Alarmel Valli performing at Nalloor last month [Photo courtesy: Dailynews]
While sarcastic about the recipe for forgetting the wounds of war being clearly a mixture of tourism, sport, music, dance and literature and occasional military training from a “friendly” neighbour, Anand’s article said that what is “more worrisome is the apathy of India’s writers and intellectuals.”

The article was citing the examples of Githa Hariharan who campaigned to boycott Israel, having no qualms about going to Galle literary festival and to India-Sri Lanka foundation deliberations, and historian Mukul Kesavan having a holiday in Sri Lanka coming out with a ‘tourism’ literature.

According to Anand the current deliberations are a run-up to Sri Lanka hosting the CHOGM in 2013, when 54 heads of nations will gather—an exercise that is expected to condone the well-documented war crimes.

But it is not merely the CHOGM. Before that there will be the UNHRC session. Harping on between the 13th Amendment and the LLRC implementation, the deliberations are orchestrated at various fronts by various actors. The ultimate aim is successfully establishing the model of annihilation of a nation through genocide, yet coming out impeccable from the crime – the most deceptive part of the ‘counterinsurgency’ of Washington and New Delhi, commented Tamil political activists in the island.

 Dr. Tanya Nissani Ilangakkone Ekanayaka
Australian diaspora - UK initiative: Dr. Tanya Nissani Ilangakkone Ekanayaka of Edinburgh College of Art, UK, taking a piano lesson at Chu'ndikkuzhi Girls College in Jaffna on Friday. The workshop, initiated by diaspora's St. John's College alumni (SJC87) based in Australia, was attended by students of Chu'ndikkuzhi Girls College, Uduvil Girlds College, Vempadi Girls College, St. John's College, St. Patricks College and St. Antonys College. No school event with diaspora assitance could take place without permission of the occupying SL military. [Photo courtesy: Daily Mirror]
The Hindu is only part of the script perfected over decades. As it is based in Tamil Nadu, it has been chosen to play the role of the kingpin media actor, to lead the Goebbels campaign of an array of dubious writers and actors, the political activists said.

On the issue Anand was raising, The Hindu’s line was quickly picked up on Friday by D.B.S. Jeyaraj, who titled a feature on a music workshop with pianos for the elite girls’ schools in Jaffna by British-Sri Lankan Dr. Tanya Nissani Ilangakkone Ekanayaka, as “Post-War Jaffna Children Feel the Heeling Touch of Music,” the Tamil political activists cited.

At least there is an awakening in India now over the deliberations of New Delhi. This is mainly because of the powerful grassroot movements. Popular political leaders cannot escape or engineer for long. But the one-million-strong Eezham Tamil diaspora and the dealers and survivalists that come from it detract political uprising and shield the ‘scriptwriters’ in the West, hoping that the establishments would do something for nothing, the Tamil political activists in the island further commented.

Kokku'laay School
A Tamil school in Kokku'laay, a sensitive location of Sinhala colonisation in Mullaiththeevu district, bordering Trincomalee district


Kokku'laay School
Another Tamil school in Kokku'laay, Mullaiththeevu district


Vadduvaakal Buddhist stupa
A Sinhala Buddhist stupa built in 2012 at Vadduvaakal adjacent to Mu'l'ivaaykkaal in the Mullaiththeevu district


Chronology:


Related Articles:
07.09.12   Congress, BJP, religiously sanctify genocide


External Links:
Outlook India: Shock And Awww!

ஞாயிறு, 24 ஜூலை, 2011

சனநாயகக் களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல்

ஜனநாயக களத்தில் நெரிக்கப்படும் தமிழினத்தின் குரல்

தேர்தல் என்பதே ஜனநாயகத்தின் உரைகல் என்பார்கள். மக்களால் மக்களுக்காக மக்களிடமிருந்து உருவாக்கப்படுவது சனநாயகம். அது அவர்களின் உணர்வின் பிரதிபலிப்பாகும். தற்போது சிறிலங்கா அரசு உரைத்து பார்க்க விரும்புவது ஜனநாயகத்தை அல்ல.
மத்தியிலிருக்கும் ஆளும் கட்சியினையே மாகாணத்திலும் உள்ளுராட்சியிலும் தெரிவு செய்வதனால் மட்டுமே தற்போது நடைபெறும் அபிவிருத்தி முயற்சிகள் தடைப்படுதனை தவிர்க்கமுடியும் – பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் இராஜபக்ச
அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆளும்கட்சியின் வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் – வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி.
தமிழ்மக்கள் கனவுகளிலிருந்து விடுபடவேண்டும். இல்லையேல் மீண்டும் அழிவினைக்காணவேண்டிவரும் – மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரும் ஜாதிக கெலஉறுமயவின் தலைவருமான பாடலி சம்மிக ரணவக்க.
உள்ளூராட்சித் தேர்தலில் வடபகுதி மக்கள் அனைத்துலக சமூகத்தின் வாயை அடைக்கும் வகையில் தெளிவான தீர்ப்பை அளிப்பார்கள் -  சிறிலங்கா அரசின் அமைச்சர்களில் ஒருவரான விமல் வீரவன்ச.
இவர்களின் சொற்களின் பின்னே ஒளிந்திருப்பது பெருந்தேசிய பெருமிதம்.
இவர்கள் கூறவிரும்புவது தெளிவானது.  தமிழ் மக்கள் கட்டாயமாக ஆளும்கட்சியுடன் ஒத்துப்போகவேண்டும். வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையேல் தண்டிக்கப்படுவார்கள்.
எதிர்வரும் சனிக்கிழமை அதாவது 23-07-2011 அன்று  64 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடக்கப் போகின்ற போதும், வடக்கில் 20 உள்ளூராட்சி சபைகளுக்கு நடக்கப் போகும் தேர்தல் தான் – நாடாளுமன்றத் தேர்தல் போன்று முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது.
வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள 20 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதில்தான் சிறிலங்கா அரசாங்கம் மிகத் தீவிரமாக இருக்கிறது.
இந்த 20 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற கேள்விக்கும் விமல் வீரவன்ச கூறியுள்ள கருத்துக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதை அவதானிக்கலாம்.
‘உலைமூடியைக் கொண்டு ஊர் வாயை அடைக்க முடியாது’ என்று ஒரு பழமொழி.
ஆனால் ‘வடமாகாண உள்ளூராட்சித் தேர்தலில்  பெறும் வெற்றியினைக்கொண்டு  உலகின் வாயை அடைக்கலாம்’ என்பது சிறிலங்காவின் புதுமொழியாகத் தெரிகிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் தமிழ்மக்களின் அரசியல்உரிமைகள் வலுப்படுத்தப்படும் என்றோ – உள்ளுராட்சி அதிகாரங்கள் உள்ளுர் மக்களிடம் கையளிக்கப்படும் என்றோ -  வடக்கை மிகப்பெரிய அளவில் அபிவிருத்தி செய்வோம் என்றோ – மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்றோ – அல்லது பிரதேச ரீதியான திட்டங்கள் குறித்தோ வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
மாறாக பௌத்த சிங்கள தேசியவாத பேயின் கூக்குரல்:
“உங்கள் உடன்பிறப்பை, தந்தையை, தனையனை, குழந்தைகளை கொல்வோம் – கொடுஞ்சிறையிலிடுவோம்.
உம்  தாயினை, தாரத்தை, தங்கையை, தமக்கையை பாலியல் வன்புணர்வுகொள்வோம்.
உம் நிலத்தினை, வளத்தினை, பண்பாட்டு தளத்தினை, கையகப்படுத்துவோம் கருவறுப்போம்.
நடந்ததை மறந்து இன்று நடப்பதை மறுத்து நாளை இருப்புக்கு பயந்து எம்முடன் இணைவீர் எம் காட்டாட்சிக்கு பணிவீர்.”
என்றே வடக்கின் பட்டி தொட்டியெங்கும் எதிரொலிக்கின்றது.
இந்த எதிரொலியுடன் கூடவேதான் ‘உலகின் வாயை அடைப்போம்’ என்பது சிறிலங்கா அரசின் வாக்குறுதியாக இருக்கிறது.
இப்போது சிறிலங்கா அரசின் ஒரே இலக்கு அனைத்துலகத்தின் வாயை அடைப்பது தான்.
அதற்குத் தான் தமிழர்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன.
இதிலிருந்தே இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
இந்தத் தேர்தலில் நீதியாகவோ நியாயமாகவோ நடைபெற வாய்ப்பில்லை என்ற உண்மையை அனைவராலுமே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தநிலையில் தேர்தலுக்கான நாள் நெருங்க நெருக்க அரசாங்கத் தரப்பு தன்னால் இயன்றளவுக்கு சலுகைகளை நீட்டி வடபகுதி மக்களின் வாக்குகளை அபகரிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்தத் தேர்தலில் ஈபிடிபி நிறுத்திய வேட்பாளர்கள் தான் பெரும்பாலும் போட்டியிடுகின்ற போதும், ஈபிடிபியை விட அதிக பரப்புரையில் ஈடுபடுவது என்னவோ சிறிலங்கா அரசாங்கம் தான்.
வெற்றிலையின் வெற்றி தான் அரசாங்கத்துக்கு இப்போது அதிக தேவையாக உள்ளது.
இதற்குக் காரணம் சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலகப் பொறிகளில் சிக்கியுள்ளதே.
பொறிகளில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உபாயமாக இந்தத் தேர்தலை சிறிலங்கா அரசு பயன்படுத்த எத்தனிக்கிறது.
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் அனைத்தும் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டவையே.
எனவே தமிழ்மக்களின் வாக்குகள் சிறிலங்கா அரசுக்கு கிடைக்குமேயானால், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றே உலகம் ஏற்றுக் கொண்டு விடும் என்று நம்புகிறது சிறிலங்கா அரசாங்கம்.
சனல் -4 காணொலி, ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் அழுத்தங்கள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நெருக்கடிகள், அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளின் அழுதங்கள் எல்லாமே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கழுத்தை ஒன்று மாறி ஒன்றாக நெரித்துக் கொண்டிருக்கின்றன.
இவை அனைத்தில் இருந்தும் தம்மை விடுவிப்பதற்கான ஒரே ஆயுதமாக சிறிலங்கா கருதுவது இந்தத் தேர்தலைத் தான்.
தமிழ் மக்களுக்கு எதிரான போரில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், எவ்வாறு அவர்கள் தம்மோடு இணைந்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்புவதற்குத் தயாராகி வருகிறது சிறிலங்கா அரசு.
அதற்காகவே இந்தத் தேர்தலின் வெற்றியைக் குறிவைக்கிறது.
இந்தநிலையில் தமிழ்மக்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதும் காயமடைந்ததும், சிறைகளுக்குள் தள்ளப்பட்டதும், காணாமற் போனதும் ஒன்றும் பொய்யான நிகழ்வுகள் அல்ல.
இந்தக் காயங்களையெல்லாம் அபிவிருத்தி, சலுகைகள் போன்ற மாயமான்களை காட்டி- மூடி மறைத்து விடலாம் என்று கற்பனை செய்கிறது சிங்கள ஆளும் வர்க்கம்.
போரினால் சீரழிந்து சிதைந்து போயுள்ள தமிழரின் தாயகத்தை அபிவிருத்தி செய்வது முக்கியமானதும் முதன்மையானதுமான கடமையே.
எப்படி கண்களை விற்று சித்திரம் வாங்க முடியாதோ அதேபோல்  அபிவிருத்திக்காக அரசியல் உரிமைகளைப் பறிகொடுத்து விட முடியாது. ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் இரண்டில் எதனையும் தமிழர்களுக்குத் தரப்போவதில்லை என்பதே தமிழ்மக்களின் பட்டறிவாகும்.
அரசாங்கத்துடன் இணைந்து நின்றால் தான் அபிவிருத்தி செய்யலாம் என்ற கோட்பாடு பொய்யானது.
ஏனென்றால் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கும் சக்திகளால், இதுவரை காலத்திலும் தமிழ்மக்களால் எதைப் பெற்றுக் கொடுக்க முடிந்தது?
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று கூறி வந்த டக்ளஸ் தேவானந்தா அதையெல்லாம் கைவிட்டு மகிந்த ராஜபக்ச சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாகியுள்ளது தான் மிச்சம்.
தமது சின்னத்தையும் கொள்கையையும் கூட தக்க வைக்க முடியாதவர்களால் தமிழ்மக்களின் உரிமைகளைத் தட்டிக் கேட்க முடியும் என்று எவ்வாறு நம்ப முடியும்?
யாழ்ப்பாண மாநகரசபையினை வெற்றிலைச்சின்னத்தின் கீழ் வெற்றி கொண்டபின் சிலையாக நின்ற சங்கிலியனும் கூட வாளேந்தும் உரிமையிழந்தான். தமிழர்கள் எப்போதும் ஆட்சியாளருக்கு வால்பிடிக்கவேண்டுமே ஒழிய ஒடுக்குமுறைக்கு எதிராக வாள் பிடிக்ககூடாது என்கிறார் யாழ்ப்பாண மாநகரத்தின் முதல்வர் அம்மணி.
தேர்தல் ஒன்று வந்தபின்னர் தான் யாழ்ப்பாணத்தில் பல பத்தாண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்த வீதிகள்  திறக்கப்படுகின்றன.
மீன்பிடித் தடைகள் நீக்கப்படுகின்றன. மீள்குடியமர்வுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் நடக்கிறது.
இவையெல்லாம் தேர்தல் கால கனவுகள். அவை நிரந்தரமானவையல்ல. இதற்கு முந்திய தேர்தல் காலங்களில் திறக்கப்பட்ட வீதிகள் மூடப்பட்டதும், தளர்த்தப்பட்ட தடைகள் மீள நடைமுறைப்படுத்தப்பட்டதும் தான் வரலாறு.
அப்படியானால்  இம்முறை தேர்தல் சிங்கள ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது ஏன்?
ஐ.நா அறிக்கையும் சனல் 4 காணொலியும் உலகின் முன் சிங்கள பெளத்த தேசியவாதிகளினையும் சிறிலங்காவின் ஆட்சியாளர்களினையும் நண்பர்களினையும் நிர்வாணப்படுத்தியுள்ளது. மனச்சாட்சியுள்ள மனிதர்களின் ஆன்மாவினை உலுப்பிக்கொண்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் வரை பலியாக்கப்பட்ட பதினாயிரம் மக்களின் அப்பாவி உயிர்களுக்கு பதில்சொல்லவேண்டிய வேளைவந்துள்ளது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள இத்தேர்தல் ஊடாக சிங்கள ஆளும்வர்க்கம் முயற்சிக்கின்றது.
இங்கு எதுவுமே நடக்கவில்லை. தமிழ்மக்கள் எங்களது ஆட்சியினையும் அதன் அக்கிரமங்களினையும் மகிழ்ந்து ஏற்றுள்ளனர். எம்மையே ஆதரிக்கின்றனர் என உலகுக்கு பறைசாற்றி தப்பித்துக்கொள்ளவே இத்தேர்தலில் மகிந்த அரசு களமிறங்கியுள்ளது.
எனவே இத் தேர்தல் தமிழ்மக்களுக்கு மிக முக்கியமானது. எமது அக்கறையின்மையினையும் அசமந்தத்தினையும் அச்சப்படும் பலவீனத்தினையும் சாட்டாக கொண்டு மகிந்தவினையும் அவர் கூட்டத்தினரையும்  புனிதராக்க  வாய்ப்பளிக்க கூடாது.
இத்தேர்தல் எமக்கு உரிமைகளினைத்தராது ஆனால் தம்மை அழித்தவர்களுடன் தமிழ்மக்கள் இல்லை என்ற செய்தியினை உலகுக்கு கூறவேண்டியுள்ளது. எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நியாயம் கோரும் போராட்டம் இன்னமும் முற்றுப்பெறவில்லை.
ஆகவே, உள்ளூரில் தெரிந்த முகங்கள், உறவினர் என்பதற்காக புள்ளடி போட வேண்டும் என்று கருதுவது தவறானது. இலவச சேலைக்கும் தற்காலிக வேலைக்கும் வெற்றுக் காசோலைகளுக்கும் வெகுமதிகளுக்கும் எமது மக்கள் சோரம் போகமுடியாது.
வாய்ப்பு என்பது ஒருமுறைதான். மீளவும் வருவதற்கான உத்தரவாதம் எதுவுமில்லை. தமிழரின் கருத்துரிமைச் சுதந்திரத்தினை வாக்களிக்கும் உரிமைகளினூடாக உறுதிப்படுத்தக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை இந்தமுறை தவற விட்டால் இதுபோன்ற வாய்ப்பு பின்னொரு போதும் கிடைக்காது போய்விடலாம்.
எனவே தமிழ்மக்கள் சரியான தெரிவை – முடிவை எடுக்க வேண்டியது அவசியம். கடந்த காலங்களில் தேர்தல்களில் பங்குபற்றாமல் வீட்டிற்குள் முடங்கி கிடந்தது போல் இம்முறை வாழாவிருக்கக்கூடாது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் அறிமுகங்கள் சொந்தபந்தங்கள் என்ற நிலைகளினைக் கடந்து அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப்பலத்தினை அதிகரிக்கவேண்டும்.
தேர்தலில் பங்குபற்றாமல் ஒதுங்கியிருப்பது சிங்களக்கட்சிகளின் வெற்றிக்கு வாய்ப்பளிக்கும் என்பதனை நாம் மறக்ககூடாது.
புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் தேசத்தில் வாழும் தங்கள் உறவுகள் தேர்தலில் பங்குபற்றுவதனையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதனையும் ஊக்குவிக்கவேண்டும். உறுதிசெய்யவேண்டும்.
தமிழரின் கையாலேயே தமிழரின் தலையில் மண் அள்ளிப் போட வைக்கவே சிறிலங்கா அரசு முனைகிறது.
இன்று தமிழருக்கு நியாயம் கிடைக்க உலகின் பல நாடுகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதையெல்லாம் இந்த ஒரே தேர்தலின் மூலம் தட்டிக்கழித்து நிராகரித்து விடக் கூடாது.
உலகத்தை எமது பக்கம் திருப்பும் முயற்சியில் இப்போது தான் ஓரளவு வெற்றி கிடைத்து வருகின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் வெண்ணெய் திரண்டு வருகையில் நாம் தாழியை உடைத்து விடக் கூடாது.
தமது வரலாற்றுக் கடமையை தமிழ் மக்கள் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
- புதினப்பலகை குழுமத்தினர்

சனி, 23 ஏப்ரல், 2011

ka.pa.aravaanan article about thamizh in dinamalar : தமிழ் இனி மெல்ல வளரும்: கா.ப.அறவாணன், முன்னாள் துணைவேந்தர்

 அருமையான கட்டுரை. வரும் அரசு தொடரும் அரசாக இருந்தாலும் புதிய ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்கும் வகையில் கல்வி, ஆட்சி, வழிபாடு முதலான எல்லாவற்றிலும் தமிழே இருக்கச் செய்ய வேண்டும். தமிழ் சார்ந்த குழுக்களில் தமிழார்வமும் தமிழ்ப்புலமையும் உள்ளவர்களையே அமர்த்தல் வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசு, மத்திய அரசு, பிற அரசு,. தனியார் என்ற வேறுபாடின்றி  அனைத்து அலுவலகங்களிலும் தமிழே அலுவலக மொழியாக இருக்க வேண்டும். ஊடகங்களில் தமிழ் கொச்கையாகவும் பிழையாகவும் எழுதவும் பேசவும் படுவன நிறுத்தப்பட வேண்டும். கிரந்தத் திணிப்பையும் பிற அயல்மொழிச் சொற்கலப்பையும் அடியோடு தடுக்க வேண்டும்.ஈழத்தமிழர் நலனும் உலகத்தமிழர் நலனும் பேணப்பட வேண்டும். மத்திய அரசில் தமிழுக்குச் சமஉரிமை கிடைக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /  
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!




மொழி வளர்ச்சி பற்றி சிந்தித்து திட்டமிடும் போது, தமிழ்மொழிக்கு நிகரான பழமையும், செழுமையும் வாய்ந்த உலக மொழிகள் எப்படி வளர்ந்தன என்று ஒப்பிட்டு பார்த்து கொள்ள வேண்டும். அந்த மொழிகளுடைய வளர்ச்சி அனுபவங்கள் நமக்கு வழிகாட்டும்; வழி துணையாக இருக்கும். யூதர்களின் ஹீப்ரூ, சீனர்களின் சீனம், கிரேக்கர்களின் கிரேக்கம், ரோமானியர்களின் லத்தீன் ஆகியவற்றின் வரலாறு நமக்கு தெளிவாக பாடம் புகட்டுகிறது.

தமிழ் மொழியை போல பல்வேறு அன்னிய ஆதிக்கங்களையும், இடையூறுகளை ஹீப்ரூ மொழி சந்தித்தது. உலகம் முழுவதும் நாடற்றவர்களாக பரவிய யூதர்கள், தம் மொழியை செல்லும் இடங்களுக்கெல்லாம் எடுத்து சென்று பொத்தி பொத்தி வளர்த்தனர். 1948ல் தங்களுக்கென இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய போது, அனைத்து மட்டங்களிலும் ஹீப்ரூ மொழியை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். சீனர்களை பொறுத்தவரை, நம்மைவிட பல நூற்றாண்டு பழமையான வரலாறு உடையவர்கள். தங்கள் மொழியை அவர்கள் எந்த கட்டத்திலும் கைவிட்டதே இல்லை. கிரேக்கர்களும், ரோமானியர்களும் அதே வரலாற்றை உடையவர்கள். இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஆங்கிலம், அது பிறந்த இங்கிலாந்து நாட்டிலேயே, கி.பி.14ம் நூற்றாண்டு வரை ஆட்சி பீடத்தை அடையவில்லை. அங்கு, எங்கும், எதிலும் ரோமானியர்களின் லத்தீன் மொழியே தலைமை வகித்தது. அதன்பின் வந்த சாசர் கால அரசர்களால் ஆங்கிலம் அனைத்து மட்டங்களிலும் இடம் பெற்றது. ஆங்கிலேயர்களின் துணிச்சலாலும், அரசியல் சாதுர்யத்தாலும், வாணிக நோக்கினாலும், உலகெங்கும் ஆங்கிலேய காலனி நாடுகள் உருவாகின. அந்நாடுகளில் இருந்த பூர்வீக மொழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஆங்கில மொழியை அரியாசம் ஏற்றினர். இவ்வாறு உலகத்தில் மொழி வளர்ச்சி அமைந்ததற்கு காரணம், அந்தந்த நாட்டு மக்களின் மொழிபற்றே! ஒரு மொழியை கற்கும்போது அந்த மொழியின் கலாசாரமும் கற்பிக்கப்படுகிறது. எனவே தான், மொழி வழியே அந்த மொழிக்குரிய கலாசாரமும் கற்போருக்கு படிந்து விடுகிறது.

தமிழகத்தில் ஐரோப்பியர் காலத்தில் துவங்கிய ஆங்கிலேய கல்வி, சுதந்திரம் பெற்ற நாளோடு விடைபெறவில்லை. மாறாக, எல்லா இடத்திலும் மேலும் செங்கோலோச்ச துவங்கி விட்டது. பேச்சில், எழுத்தில், கல்வியில், ஆட்சியில் என, அனைத்து பயன்பாட்டு தளங்களிலும் இருக்க வேண்டிய தமிழை ஒதுக்கிவிட்டு, ஆங்கிலம் குடியமர்ந்து விட்டது. குடிசையில் ஒண்ட இடம் கேட்டு வந்த ஒட்டகம், குடிசைக்குரியவனை வெளியேற்றி விட்டதைப் போல, ஆங்கில ஒட்டகம் தமிழை வெளியேற்றி விட்டது என்பதே உண்மை. ஆங்கில மொழி வழி பயிலுகிற இளம்சிறார்கள், மொழியை பயில்வதோடு இல்லாமல், ஆங்கில மொழிக்குரிய ஐரோப்பிய கலாசாரத்தையும் பயில்கின்றனர். விளைவு, தமிழகத்தில் தமிழ் கலாசாரத்தையே இழந்த இளைஞர்களையும், குழந்தைகளையும் பார்க்கிறோம். இன்னும் ஒருபடி மேலே போய், நம் இளைஞர்களும், குழந்தைகளும், தங்கள் மொழி, கலாசாரம், உணவு, உடை, உறை முதலானவற்றையும் தாழ்வாக கருத துவங்கி விட்டனர். தங்கள் பராம்பரியத்தை தாழ்வாக கருதுவதால், அயல் பாரம்பரியத்தை உயர்வாக எண்ணுகின்றனர். இதனால், ஒருவகை தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி விட்டனர். இவர்களை இந்த நிலையிலிருந்து முழுவதும் மீட்பதே நம் கருத்தும், கவலையுமாக இருத்தல் வேண்டும்.

இந்நோக்கில் அண்ணல் காந்தியடிகள் மிக சரியாக சிந்தித்தார். காந்தி காட்டிய வழியைவிட்டு எதிர் திசையில் சென்றுக் கொண்டிருக்கும் நம் அரசுகளும், அமைப்புகளும் மாற வேண்டும். இல்லை யென்றால், நம் பாரம்பரியத்தை படுகுழியில் புதைத்தவர் ஆவோம். அயல்நாட்டு பாரம்பரியத்திற்கும், கலாசாரத்திற்கும் அடிமைகளாக தொடர்வோம். அடுத்து அமையும் அரசு, முதல் அடியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் -சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை தவிர, முதல் ஐந்து வகுப்புகள் வரையிலாவது தமிழை பயிற்று மொழியாக அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு படித்து வந்தவர்களுக்கு மட்டுமே, அரசிலும், தனியார் நிர்வாகத்திலும் வேலை என்று, முறைப்படி சட்டம் இயற்ற வேண்டும். எந்த மொழியும் நிலைபெற வேண்டுமானால், அது பயன்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால், தமிழ் மொழியின் பயன்பாடு கடந்த 60 ஆண்டுகாலமாக சுருங்கிக் கொண்டே வருகிறது. மறுதலையாக அது வெறும் வீட்டுமொழியாக மட்டும் ஆகிக் கொண்டிருக்கிறது. தெருவிலோ, பொதுஇடங்களிலோ, குறிப்பாக, நகரங்களில் தமிழ்மொழி பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. வீட்டில்கூட காலப்போக்கில் ஆங்கில வழி கற்றவர் குடும்பங்களில், தமிழ் பேச்சு மொழி அந்தஸ்தையும் இழந்துவிடும் ஆபத்து உள்ளது. இந்நிலை, பள்ளிக்கல்வியை தமிழ்வழிக் கல்வியாக மாற்றும் போதுதான் காலப்போக்கில் மாறும். அதுபோலவே, ஆட்சிமொழியாக தமிழ் எல்லா தளத்திலும் இடம்பெறுவதை உறுதியாக்க வேண்டும். மத்திய அரசு நடத்தக்கூடிய, யு.சி.ஜி., ராணுவ சேவை தேர்வுகள் அனைத்தும் தமிழ்மொழியில் நடத்தப்படுவதில்லை. இவற்றை எல்லாம் தமிழ்மொழியில் நடத்த வேண்டும். புது அரசு, இதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

திங்கள், 11 ஏப்ரல், 2011

article in dinamani about so called emergency in thamizhnaadu : தமிழகத்தில் நெருக்கடி நிலை அறிவிப்பா!

நன்று.   ஆனால், அரசியல் காரணங்களுக்காகப் போடப்படும் வழக்குகளையும் மோசடி, கொலை, கொள்ளை முதலான குற்ற வழக்குகளையும் வேறுபடுத்திக் காண வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனமா!



நாளை மறுநாள் (13-4-2011) நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல முக்கிய புள்ளிவிவரங்கள், வாக்கு அளிப்பவர்களாகிய நமக்கு விரல் நுனியில் கிடைப்பதற்கு தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், அதன் தாய் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த இயக்கமும் மீண்டும் உதவியுள்ளன.  தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் எல்லா வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களையும் மார்ச் 30-ம் தேதி பதிவேற்றியது.  மிக விரைவாக 48 மணி நேரத்துக்குள் அவற்றில் உள்ள எல்லா விவரங்களையும் எடுத்துத் தொகுத்து, நாம் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாகத் தனது இணையதளத்தில் இடம்பெறச் செய்துள்ளது தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு.  நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம். முருகானந்தம் என்பவர் மீது தான் மிக அதிகமாக 10 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. இதுபோக, 34 இபிகோ குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ளன.  இவர் போலவே, ஜெயம்கொண்டம் பாமக வேட்பாளர் காடுவெட்டி குரு மீது 9 கிரிமினல் வழக்குகளும், அந்தியூர் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா மீது 7 கிரிமினல் வழக்குகளும் உள்ளன.  அதிகமாக கிரிமினல் வழக்குகள் உள்ள வேறு சில வேட்பாளர்களில் முறையே, திண்டுக்கல் பாஜக வேட்பாளர் டி.ஜி. போஸ் மீது 4 வழக்குகள், சோழவந்தான் பாமக வேட்பாளர் எம். இளஞ்செழியன் மீது 7 வழக்குகள், கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் அருக்குட்டி மீது 4 வழக்குகள், பட்டுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் என். செந்தில்குமார் மீது 2 வழக்குகள், ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீது 17 வழக்குகள், பூம்பூகார் பகுஜன் சமாஜ் வேட்பாளர் டி . இளஞ்செழியன் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட முக்கியமான கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 66 பேர் மீது உள்ளவை மிகக்கடுமையான கிரிமினல் வழக்குகள்.  பெண் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலைவிட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.  அதிமுகவின் 160 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். திமுகவின் 119 வேட்பாளர்களில் 11 பேர் மட்டுமே பெண்கள். காங்கிரஸில் 5 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 2 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஒரு பெண் வேட்பாளரைக்கூட களத்தில் இறக்கவில்லை.  பாமக கட்சியின் பேச்சுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளியும், இரட்டை வேடமும்தான் இத்தேர்தலின் மிக முக்கிய அம்சமாகி உள்ளது. சாராய வியாபாரம், மணல் கொள்ளை, சமூக நீதி என்று தினம் ஒரு பிரச்னையைப் பேசினார் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ். இப்பொழுதோ, சிறிதும் கூச்சமின்றி கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை பொன்னான ஆட்சி என்று தேர்தல் ஜுரத்தினால் மாற்றிப் பேசி வருகிறார்.  பல புரட்சிகரமான பெண்ணியக் கருத்துகளை மக்கள் தொலைக்காட்சி மூலம் பேசும் இவரது அமைப்பு வெளியிட்டுள்ள 30 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில், ஒரே ஒரு பெண்ணின் பெயர்கூட இடம் பெறவில்லை.  பாமகவின் 30 வேட்பாளர்களில், 15 வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. ஒருவேளை தமிழக அரசியல் என்பது இனி வன்முறை சார்ந்துதான் இருக்கும், இதற்கு காடுவெட்டி குரு போன்றவர்கள்தான் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று கருதி, பெண் வேட்பாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று பாமக முடிவு செய்துவிட்டதோ என்னவோ?  தேர்தல் களத்தில் உள்ள முக்கிய கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 240 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் மிக அதிகமாகவே சொத்துக் கணக்கு காண்பித்துள்ளனர்.  கடந்த தேர்தலின்போது வருமான வரி அட்டை எண் குறிப்பிடாததோடு, ரூ.1.35 கோடி மட்டுமே காண்பித்த திமுக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, இம்முறை தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பச் சொத்து மதிப்பு ரூ.15.43 கோடி.  கடந்த முறை தேர்தலின்போது திமுக அமைச்சர் பொன்முடி அளித்த சொத்து மதிப்பு ரூ.2.98 கோடி. ஆனால், இப்பொழுது அவரது சொத்து ரூ.8.22 கோடியாக உயர்ந்துள்ளது.  அமைச்சர்களில், கே.என். நேருவின் சொத்து விவரங்கள்தான் வியப்பைத் தூண்டுகிறது. கடந்த தேர்தலில், ரூ.2.52 கோடி அசையும் சொத்தும், ரூ. 26.9 லட்சம் அசையாச் சொத்தும் காண்பித்துள்ளார் நேரு. இம்முறை அவரது அசையாச் சொத்து ரூ. 26.9 லட்சத்திலிருந்து ரூ.15 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனது மகனின் சொத்து ரூ.14.3 கோடி என்றும், அவர் ரூ.10 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.  இதைப் பார்க்கும்போது, நாட்டில் வாங்கும் சக்தி அதிகமாகி உள்ளது என்று சில அரசியல் தலைவர்கள் கூறி வருவது உண்மை என்றே தோன்றுகிறது.  வேட்பாளர்களின் கடன் பற்றிய விவரங்களும் சுவாரஸ்யமானவைதான். கோடீஸ்வரர்களைவிட, கோடிகளில் கடன் வைத்திருக்கும் வேட்பாளர்கள் அதிகமாக உள்ளனர். ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 679 வேட்பாளர்களில், 269 வேட்பாளர்களுக்கு ஒரு கோடிக்கும்மேல் கடன் உள்ளது. ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் சி.காந்தி வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு ரூ.27.8 கோடி. ஆனால், அவரது சொத்தைவிட அதிகமாக ரூ.50.3 கோடி கடன் உள்ளது.  அதேபோல, கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் வகிக்கும் ஹெச். வசந்தகுமார் அளித்துள்ள சொத்து ரூ.133 கோடி. ஆனால், அவரோ ரூ.46.85 கோடி கடன் காண்பித்துள்ளார்.  மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் சொத்து மதிப்பு ரூ.64.45 கோடி. ஆனால், அவரது கடன் மதிப்பு ரூ.44.84 கோடி.  முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 5 ஆண்டுகளில் திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி வரும் வருமானத்தை உடனுக்குடன் கொடையாக வழங்கி விடுவதாக ஊடகங்களில் அவ்வப்போது செய்தி வந்தது.  அப்படியிருக்க, 2006-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்துள்ள விவரங்களின்படி, ரூ.23.55 கோடியாக இருந்த அசையும் சொத்து, 5 ஆண்டுகளில் ரூ. 40.95 கோடியாக அதிகரித்தது எப்படி என்பதுதான் புரியவில்லை.  அதுபோலவே, 2006-ம் ஆண்டு ரூ. 2 கோடி அசையும் சொத்து காண்பித்திருந்த ஜெயலலிதா, இப்பொழுது ரூ.13 கோடியாக அசையும் சொத்து காண்பித்துள்ளார். இதையும் புரியாத புதிர் என்றே சொல்ல வேண்டும்.  ஆக, 2006-ம் ஆண்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரங்களையும், இப்பொழுது வேட்பாளர்கள் தந்துள்ள விவரங்களையும் கூர்ந்து கவனிக்கும்பொழுது, கீழ்க்கண்ட புரிதல்கள் மட்டும் நமக்கு ஏற்படுகின்றன.  அமைச்சர்கள் உள்பட பெரும்பாலான வேட்பாளர்கள், முழுமையான விவரங்களைத் தமது பிரமாணப் பத்திரத்தில் கொடுப்பதில்லை. அவர்களது கணக்கு வழக்குகள் பல குளறுபடியானவை.  ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களைப் பணங்காய்ச்சி மரங்களாக வைத்துள்ள நிலையில், அவற்றை அறக்கட்டளைகளாக வைத்துக்கொள்ளும் எளிய வசதி நமது மக்கள் பிரதிநிதிகளில் மோசமானவர்களுக்குக் கிடைத்துள்ளது.  ஆனால், எல்லோருமே தவறான வழியில் செயல்படுகிறார்கள் என்று கூறுவதற்கில்லை.  கருப்புப் பணம் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடமாக இந்தியத் தேர்தல் களம் உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மீண்டும் மீண்டும் கூறி வருவதை நினைவுகூர வேண்டியுள்ளது.  அவர் கூறுவதை மெய்ப்பிப்பது போன்றே, கமுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக டீக்கடையில் பதுக்கப்பட்ட ரூ. 40 லட்சம் பறிமுதல், மதுரையில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கவர்களில் இருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல், திருச்சியில் உள்ள தனியார் மினி பஸ்ஸில் இருந்து ரூ. 5.11 கோடி பறிமுதல் என்று அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.  ஆனால், இன்றைக்குத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிற வரலாறு காணாத அதிரடி நடவடிக்கைகளோ, தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகம் தசை பலத்தாலும், கள்ளப் பண பலத்தாலும் சாகடிக்கப்படக் கூடாது எனும் சீரிய நோக்கத்தின் செயல் வடிவம்தான்.  அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை முழுமையாகவும், தீவிரமாகவும், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் பயன்படுத்தி, தமிழகத்தில் தேர்தலைக் கண்ணியமாக நடத்தி, பணநாயக நெருக்கடி நிலையில் இருந்து, உண்மையான ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அவ்வமைப்புக்கு முழு ஆதரவு கொடுத்து நம் தலைமுறையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசர அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

Parties of Election Seasons: dinamani article: தேர்தல் நேரக் கட்சிகள்!

இராசாசி என எழுதத் தெரிந்த விக்கிரமசிங்கனுக்கு அணணா என்று எழுத மனம் வரவில்லையா?  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்


தேர்தல் நேரக் கட்சிகள்!



ஓவ்வொரு தேர்தலின் போதும், ஒன்றிரண்டு அரசியல் கட்சிகள் உதயமாவதும் அவற்றில் சில தங்களைத் தக்க வைத்துக் கொள்வதும் மற்றவை வந்த சுவடே தெரியாமல் காணாமல் போவதும் இந்திய அரசியலுக்கே உரித்தான தனித்துவம். இந்த விஷயத்தில் தமிழகமும் விதிவிலக்கல்ல.1957-ல் நடந்த இரண்டாவது சட்டப் பேரவைத் தேர்தலில் அரசியல் அரங்கத்தில் சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக நுழைந்தபோது அடுத்த பத்தே வருடங்களில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்தக் கட்சியினரே கூடக் கனவு கண்டிருக்கமாட்டார்கள். அன்றைய முதல்வர் கு. காமராஜின் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் பிரஜா சோஷலிஸ்ட்டுகளும் தேர்தல் களத்தில் மோதினாலும் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.வின் வெற்றிதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.1962-ம் ஆண்டு நடந்த மூன்றாவது சட்டப் பேரவைத் தேர்தலில் பரபரப்பாக வலம் வந்த புதிய கட்சி ராஜாஜியால் தொடங்கப்பட்ட சுதந்திரா கட்சி. இன்றைய பொருளாதார சீர்திருத்தம், தனியார்மயமாக்குதல் போன்ற கொள்கைகளை முன் வைத்து, காங்கிரஸ் கட்சியின் சோஷலிஸத்துக்கு மாற்றாக செயல்படப் போவதாக அறிவித்த சுதந்திராக் கட்சி, தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. தி.மு.க.வின் அசுர வளர்ச்சி, காங்கிரஸô அல்லது தி.மு.க.வா என்கிற இருமுனைப் போட்டியை உருவாக்கியதாலோ என்னவோ மற்ற மாநிலங்களில் சுதந்திரா கட்சிக்குக் கிடைத்த வரவேற்பு தமிழகத்தில் கிடைக்கவில்லை.நான்காவது சட்டப் பேரவைத் தேர்தல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், எம்.ஜி.ஆருக்கு நேர்ந்த துப்பாக்கிச் சூடு போன்ற பல பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில் அமைந்தது. அதனால், புதிய கட்சி எதுவும் களத்தில் இறங்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவுக்குப் பிறகு நடந்த முதல் பொதுத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் காங்கிரஸ் கட்சியுடனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் அங்கம் வகித்தன.1971-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் ஒரு வகையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம். காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல். இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸô அல்லது காமராஜ் போன்ற மூத்த தலைவர்களின் ஸ்தாபன காங்கிரஸô என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் இந்தத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது.மக்களுக்குப் பழக்கமான காங்கிரஸ் கட்சியின் இரட்டைக் காளை சின்னம் முடக்கப்பட்டு, ஸ்தாபன காங்கிரஸ் "ராட்டை' சின்னத்திலும், இந்திரா காங்கிரஸ் "பசுவும் கன்றும்' சின்னத்திலும் போட்டியிட்டன.ராஜாஜியின் சுதந்திரா கட்சியும், காமராஜ் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் ஒரு புறமும், இந்திரா காங்கிரஸýடன் கைகோத்து தி.மு.க. மறுபுறமும் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலின் இன்னொரு முக்கியமான அம்சம் - சி.என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு மு. கருணாநிதி தலைமையில் தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் இது என்பது.மக்களவைத் தொகுதியில் மட்டும் இந்திரா காங்கிரஸ் போட்டியிடுவது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜை வீழ்த்துவது குறிக்கோள் என்பதால் போட்டியிடாமல் திமுகவை ஆதரிப்பது என்றும் முடிவெடுத்தது இந்திரா காங்கிரஸ். அதனால், 184 இடங்களில் திமுக வெற்றிபெற்று மிருகபலத்துடன் ஆட்சியமைத்தது. அதற்குப் பிறகு இந்த அளவுக்கு இடங்களைக் கைப்பற்றி எந்தக் கட்சியும் பதவிக்கு வரவில்லை. 1972-ல் எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகு நடந்த முதல் தேர்தல் ஆறாவது சட்டப் பேரவைத் தேர்தல். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பெயரில் எம்.ஜி.ஆரின் தலைமையிலான கட்சி மக்களைச் சந்தித்தது. இதற்கு முன்பே திண்டுக்கல் மக்களவைத் தேர்தலுக்கு நடந்த இடைத்தேர்தலிலும், கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் எம்ஜிஆரின் புதிய கட்சி மாபெரும் வெற்றியடைந்திருந்தது.1977-ல் நடந்த இந்தத் தேர்தலில்தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வுக்கும், எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் இடையே நடந்த பலப்பரீட்சையில் மற்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது 1977 தேர்தலில்தான்.ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி மற்றும் சோஷலிஸ்டுகள் ஒன்றாக இணைந்து ஜனதா கட்சி என்கிற பெயரில் களத்தில் இறங்கினர். அகில இந்திய அளவில் ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது என்றாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் தாக்கம் குறைவாகத்தான் இருந்தது. காமராஜின் மறைவுக்குப்பிறகு நடந்த முதல் தேர்தல். ஸ்தாபன காங்கிரஸில் இருந்த பெரும்பான்மையான தலைவர்கள் இந்திரா காங்கிரஸýடன் இணைந்துவிட்ட பிறகு நடந்த தேர்தல் என்பதும் இதன் தனிச்சிறப்பு. 1979 நாடாளுமன்றத் தோல்வியைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர். தலைமையிலான மாநில அரசு கலைக்கப்பட்டதால் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்பந்தம்தான் 1980 சட்டப் பேரவைத் தேர்தல். இந்தத் தேர்தலில் தி.மு.க.வும் இந்திரா காங்கிரஸும் கைகோத்து நின்றபோது, அந்தப் பலமான கூட்டணியை எதிர்கொள்ள எம்.ஜி.ஆரால் அமைக்கப்பட்டதுதான் 16 கட்சிக் கூட்டணி.இந்தத் தேர்தலில் களம் கண்ட இரண்டு மாநிலக் கட்சிகள் - ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து வந்த குமரி அனந்தனின் தலைமையிலான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸýம், இந்திரா காங்கிரஸிலிருந்து வெளியேறிய பழ. நெடுமாறனால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸýம். காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸில் இணைந்துவிட்டது. தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் போட்டியிட்டது என்றாலும் அதற்குப் பிறகு காணாமல் போய்விட்டது.எட்டாவது சட்டப் பேரவைத் தேர்தலை ஒரு அனுதாப அலைத் தேர்தல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்திரா காந்தியின் படுகொலையும், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவும் பெரிய அளவில் அனுதாபத்தை ஏற்படுத்தியதால் தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க. மற்றும் இந்திரா காங்கிரஸýக்கு சாதகமாக அமைந்தது. 1984-ல் நடந்த இந்தத் தேர்தலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லாமல் போனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.(தொடர்ச்சி நாளை)

செவ்வாய், 4 ஜனவரி, 2011

periyar articles-writ petition dismiss: பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுப

பெரியார் எழுத்துகள் எனக் குறிப்பதை விடப் பெரியாரின் படைப்புகள் எனக் குறிப்பது சரியாக இருக்குமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுபடி


சென்னை, ஜன.3: பெரியார் எழுத்துகளை வெளியிடுவது தொடர்பாக பெரியார் சுயமரியாதை பிரசார மையத்தின் செயலர் கி. வீரமணி அளித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  குடியரசு இதழில் பெரியார் எழுதியவற்றை பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதற்கு உரிமை இல்லை என்று கூறி கி. வீரமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அதே வழக்கில் பெரியாரின் எழுத்துகளை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இடைக்கால மனு தாக்கல் செய்தார்.  இந்த இடைக்கால மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கடந்த 27.7.09-ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து வீரமணி செய்த மேல்முறையீட்டை நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கடந்த 9.6.10-ல் தள்ளுபடி செய்தது.  பெஞ்சின் உத்தரவை எதிர்த்து வீரமணி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.) தாக்கல் செய்தார். அதில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் 26.11.10-ல் உத்தரவு பிறப்பித்தது.  இந்த நிலையில், வீரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர், ""நான் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் சில புதிய விஷயங்களைத் தெரிவித்துள்ளனர். எனவே, அது தொடர்பாக, எனது மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.  இந்த மனுவை நீதிபதி டி. மதிவாணன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  "பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய எழுத்துகள் பொதுமக்களுக்கு உரியன என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, ""மனுதாரர் தான் கூற விரும்பும் விளக்கங்களை தனியாக அளிக்கலாம். ஆனால், அவரை மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது வழக்கின் தன்மையை மாற்றிவிடும். அது எதிர் மனுதாரர்களைப் பாதிக்கும்'' என்று சரியாகக் கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. மனுதாரர் வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி மதிவாணன் கூறியுள்ளார்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இராணுவ, சிங்கள – பவுத்த மயமாக்கல் ஆகியவற்றால் முற்றுகையிடப்படும் தமிழீழம் !

06 February, 2010 by admin

இலங்கை சுதந்திரம் பெற்ற 62 ஆவது ஆண்டு நிறைவை சிங்கள தேசம் கண்டியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம் இருக்கிறது. இலங்கையின் வட – கிழக்கு மாகாணங்களை சிங்களப் பேரினவாத அரசு தனது மேலாண்மைக்குள் வேகமாகக் கொண்டு வருகிறது. இலங்கைத் தீவின் வரலாற்றில் அது என்றுமே ஒரு நாடாக, ஒரே அரசாக இருந்தில்லை.

இராசரட்டை, உறுகுணரட்டை, மாயரட்டை என இலங்கை மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றை வெவ்வேறு குறுநில அரசர்கள் ஆண்டார்கள்.
முதலாவது விஜயபாகு, ஆறாவது விக்கிரமபாகு இவர்கள் காலத்திலேயே இலங்கை ஒரு குடைக்குள் ஆளப்பட்டது எனக் கொள்ளலாம். குடியேற்ற நாடுகளில் ஒன்றான போர்த்துக்கேசியர் புயலில் சிக்குண்டு கிபி 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கரை தட்டியபோது இலங்கையில் மூன்று அரசுகள் வரையறை செய்யப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தன.

1)தெற்கே கோட்டையைத் தலைநகராகக் கொண்ட கோட்டை இராச்சியம்.

2)வடக்கே யாழ்ப்பாணத்தை தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம்.

3)மத்தியில் கண்டியைத் தலைநகராகக் கொண்ட கண்டி இராச்சியம்.

யாழ்ப்பாண இராச்சியம்; கிபி 1215 தொடக்கம் கிபி 1619 வரை யாழ்ப்பாண மன்னர்களால் தனிநாடாக ஆளப்பட்டது. அதன் எல்லைகள் புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக கிழக்கே பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை விரிந்திருந்தது

ஒல்லாந்தர்; இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாகப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.

இலங்கையில் போர்த்துக்கேயரது ஆட்சி 1656 வரை நீடித்தது. பின்னர் அவர்களிடம் இருந்து ஒல்லாந்தருக்குக் கைமாறியது. ஒல்லாந்தரிடம் இருந்து 1796 இல் ஆங்கிலேயர் கைக்கு மாறியது.

1815 இல் மத்தியில் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தின் மீது படையெடுத்து அதனை ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீவிக்கிரம இராசசிங்கனைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு வந்து அங்கிருந்து லேலூருக்கு அவனும் அவனது குடும்பமும் அனுப்பி வைக்கப்பட்டனர். 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கை மூலம் அந்த இராச்சியம் ஆங்கிலேயருக்குக் கையளிக்கப்பட்டது.

இலங்கையில் இருந்த மூன்று பகுதிகளையும் தனித்தனியாக ஆண்டு வந்த ஆங்கிலேயர் 1833 இல் நிருவாக வசதிக்காக மூன்று பகுதிகளையும் (அதாவது யாழ்ப்பாணம், கண்டி, மற்றும் கோட்டை) ஆகியவற்றை) ஒரே நிருவாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். 1948 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கிய போது செயற்கையாக அய்க்கியப்படுத்திய இலங்கைத் தீவைப் பெரும்பான்மை சிங்களவர்கள் கையில் கொடுத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒன்றுபட்ட இலங்கையில் தங்களை முதலில் இலங்கையர் என்றும் பின்னர் தமிழர் என்றும் கருதிய தமிழர்கள் ஆங்கிலேயரிடம் தங்களது மூதாதையர் போர்முனையில் இழந்த அரசைப் பிரித்துத் தருமாறு கேட்கத் தவறிவிட்டனர்.

சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன் போன்றோர் சிங்களவர்களும் தமிழர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக தேசிய இனங்கள் (Founding Nations) என்றே நம்பினார்கள். தங்களைச் சிறுபான்மை இனம் என அவர்கள் நினைக்கவில்லை. கடைசிக் காலத்தில்தான் சிங்களவர்கள் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்ற திரைக்குப் பின்னால் அரசியல் அதிகாரம் முழுவதையும் தங்கள் கைக்குள் கொண்டுவரச் சதி செய்தார்கள் என்பதையும் தம்மை அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டார்கள்.

அண்டை நாடான இந்தியாவில் முஸ்லீம் லீக் தலைவர் மொகமது ஜின்னா மாட்டை வழிபடும் இந்துக்களும் மாட்டை அடித்துச் சாப்பிடும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழமுடியாது என பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு வாதாடி பாகிஸ்தான் என்ற தனி நாட்டைப் பிரித்து எடுத்துக் கொண்டணர். 'பிரிட்டிஷ்காரரே வெளியேறுங்கள் ஆனால் முதலில் இந்தியாவைப் பிரித்து விட்டு வெளியேறுங்கள்' என்று ஜின்னாவின் முழக்கத்தை தமிழ்த் தலைவர்கள் காதில் போட மறுத்துவிட்டார்கள்.

சோல்பெரி ஆணைக்குழு முன் தோன்றி 50 க்கு 50 க்கு வாதாடிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதில் சிறுபான்மை இனத்தவர்களது நலன்களைப் பாதுகாக்க சோல்பெரி யாப்பில் விதி 29 சேர்க்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் குடியுரிமைச் சட்டத்தை டி.எஸ். சேனநாயக்கா நிறைவேற்றினார். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

1947 இல் நடந்த தேர்தலில் மலையக மக்கள் 7 தொகுதிகளில் வென்றிருந்தார்கள். இதனை சிங்கள இனவாதியான டி.எஸ். சேனநாயக்காவால் செரிக்க முடியவில்லை. இரண்டாவதாக மலையக மக்களின் வாக்குப் பலத்தால் மேலும் 20 தொகுதிகளில் இடதுசாரிக் கட்சிகள் வெற்றிபெற்றிருந்ததை சேனநாயக்கா தனது அரசியல் இருப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என நினைத்தார்.

1952 இல் நடந்த தேர்தலில் வாக்குரிமை பிடுங்கப்பட்ட மலையக மக்களால் ஒருவரைக் கூட நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியாது போய்விட்டது. அறுபதுகளில் சிறிமா – சாத்திரி உடன்பாட்டின் கீழ் 525,000 மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப் பட்டார்கள். இதனால் சிங்களவர்களது எண்ணிக்கை அதிகரிக்கவும் தமிழர் எண்ணிக்கை குறையவும் ஏதுவாயிற்று.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் எப்படிச் சிங்களவர்களுக்கு சாதகமாகவும் தமிழர்களுக்கு பாதகமாகவும் மாறியதை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது.





இலங்கை சுதந்திரம் பெறு முன்னரே சட்ட அவையில் காணி, வேளாண்மை அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா கிழக்கில் காணி மேம்பாடு என்ற போர்வையில் பாரிய சிங்களக் குடியேற்றத் திட்டங்களைத் தொடக்கி அவற்றில் தென்னிலங்கையில் வாழ்ந்த சிங்களக் குடும்பங்களை ஆயிரக்கணக்கில் குடியேற்றினார்.

1948 இல் டி.எஸ்.சேனநாயக்கா தனது மகன் டட்லி சேனநாயக்காவை காணி, அமைச்சராக நியமித்து அந்த சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து நடைபெற வழிகோலினார்.

கிழக்கில் 1949 இல் கல்லோயா (பட்டிப்பளை) பள்ளத்தாக்கு திட்டத்தின் கீழ் 120,000 ஏக்கர் நிலம் கல்லோயா மேம்பாட்டு அவையின் கீழ் கொண்டுவரப்பட்டு 40 கொலனிகளில் 20,000 சிங்களவர்கள் முதற்கட்டமாகக் குடியேற்றப்பட்டனர். இந்தக் குடியேற்றத்தின் விளைவாக 1963 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டம் என்ற புதிய மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. 1960 இல் அம்பாரை (டிகமடுல்ல) என்ற புதிய தொகுதி சிங்களவர்களுக்கு உருவாக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள பெரும்பான்மை சேருவெல தொகுதி 1976 இல் உருவாக்கப்பட்டது.

எண்பதுகளில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மதுர ஒயா சிங்களக் குடியேற்றத் திட்டத்தினால் மேலும் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடியேற்றப்பட்டார்கள்.

இதே போல் திருகோணமலை மாவட்டத்தில் அல்லை – கந்தளாய் என்ற பாரிய குடியேற்றம் அய்ம்பதுகளில் தொடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து முதலிக்குளம் ( மொறவேவா) பதவிக்குளம் பெரியவிளாங்குளம் போன்ற சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன.

இந்தத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் கிழக்கு மாகாணத்தின் இனவாரிஙாந மக்கள்தொகை விழுக்காடு மாறத் தொடங்கியது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1827-1981 இடையில் ஏற்பட்ட மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறது.



இதுபோன்று சுமார் 50 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை அடிமைப்படுத்த நினைக்கும், சிங்கள மரபணுவில் ஊறியுள்ள இந்த இனவெறியை நாம் இலங்கை அரசுடன் கூடி நின்று செயலாற்றி வெல்லமுடியுமா ? இலங்கை தேசிய நீரோட்டத்தில் கலக்க நினைக்கும் தமிழர்களுக்கு இது ஒரு நல்ல வரலாறுப் பாடம். இனியாவது தெளிவுபெற இது ஏதுவாக அமையும்


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1623

புதன், 11 நவம்பர், 2009

குடியாட்சி குடிகளுக்காக இல்லையா?



"மக்களின் நலன் கருதி நாங்கள் இணக்கமாகப் போய்விட்டோம்' என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளுக்கு இனிப்பூட்டி மகிழ்ந்திருக்கிறார். எந்த மக்களின் நலன் என்பதை எடியூரப்பா விரித்துரைக்கவில்லை!
ஒரு தொடர்பும் இல்லாத ஒகேனக்கல்லுக்குச் சொந்தம் கொண்டாடி வம்படி அரசியலில் ஈடுபாடு காட்டுகிற எடியூரப்பாவா, இப்படி வாலைக் குழைத்துக் கொண்டு ரெட்டி உடன்பிறப்புகளிடம் மண்டியிட்டு நிற்கிறார் என்பதை நம்ப முடியவில்லை!
ஒரு சாதாரண ஏட்டையாவாக என்றாவது ஒருநாள் ஆகிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில், நாடு விட்டு நாடு சென்று, மொழி அறியாக் கன்னட தேசத்துக் காவல்துறையில் சேர்ந்து, கண்டவனுக்கெல்லாம் "சல்யூட்' அடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட ஆந்திரத்துச் செங்கரெட்டிக்குத் தன்னுடைய மக்கள் மூவருக்கும் ஒருநாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவே "சல்யூட்' அடிப்பார் என்று கடவுளே நேரில் தோன்றிச் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டார்.
செங்கரெட்டியின் காலம் அப்படிப்பட்ட காலம்; அது நேரு நாடாண்ட காலம். சோஷலிச பாணி சமுதாயத்தை உருவாக்க நேருவுக்கு நம்முடைய ஊரான ஆவடி அடியெடுத்துக் கொடுத்த காலம்.
""டாட்டா பிர்லா கூட்டாளி, பாட்டாளிக்குப் பகையாளி'' என்ற முழக்கங்களால் பெருமுதலாளிகள் ஒரு வரையறைக்குள் வைக்கப்பட்டிருந்த காலம். ஆயினும் காலத்தின் சுழற்சியை யார் மறிக்க முடியும்? மேற்கு வங்கப் பொதுவுடைமை முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சாரியா, டாட்டா பிர்லாக்களுக்குக் கூட்டாளியாகி விடுவார் என்று யார்தான் கருதியிருக்க முடியும்?
நவீன உற்பத்தி முறைகள் தோற்றுவித்திருக்கும் "பகாசுர' முதலாளிகளிடமிருந்தும், பன்னாட்டு முதலாளிகளிடமிருந்தும் தொழிலாளி வர்க்கத்தைக் காப்பாற்றப் பிறப்பெடுத்த பொதுவுடைமைக் கட்சிகள், பிறப்பு நோக்கம் மாறி, டாட்டாக்களுக்கு ஏழை உழவர்களின் நந்திகிராமத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கப் புறப்பட்டுவிட்ட காலம்தானே, ஆந்திரத்துச் செங்கரெட்டியின் மக்கள் பெல்லாரியில் செழித்து வளர்வதற்குரிய காலமாகவும் இருக்க முடியும்.
முன்பெல்லாம் பணமுதலைகள் தங்களின் சிறுசிறு தேவைகள் நிறைவேற அரசின் தயவுக்காகக் காத்துக் கிடப்பார்கள். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்குக் குறிப்பாக ஆளும் கட்சிகளுக்குச் சிறு சிறு கொடைகள் கொடுப்பதுண்டு.
அதற்காகப் பிரதமர் நேருவைச் சந்திப்போர் பட்டியலில் டாட்டா பிர்லாக்களின் பெயர்கள் என்றுமே இடம்பெற்றது கிடையாது. அண்ணல் காந்தி அடிகள் தில்லியில் தாழ்த்தப்பட்ட மக்களின் சேரிகளிலும் தங்குவார்; பிர்லா மாளிகையிலும் தங்குவார்! ஆனால் பெருமுதலாளியான பிர்லா, காந்தியைப் பொறுத்தவரை இன்னொரு சேவாதள ஊழியர்; அவ்வளவே!
ஆனால் இன்று முதலமைச்சர்களெல்லாம் சேவாதள ஊழியர்களாகிவிட்டனர். ஆளுநரின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரை ஓர் அரசு பதவியில் நீடிக்கலாம் என்பது எழுதப்பட்ட அரசியல் சட்டம். பகாசுர முதலாளிகளின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரைதான் ஓர் அரசு பதவியில் நீடிக்க முடியும் என்பது இன்றைய எழுதப்படாத அரசியல் சட்டம்.
கர்நாடகத்தில் ஒருவர் முதலமைச்சராக நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது, பெல்லாரியில் சுரங்கத் தொழில் நடத்தும் மூன்று ரெட்டி உடன்பிறப்புகள் கையில் இருப்பதை நாடு அதிர்ச்சியோடு பார்த்து உறைந்து போனது. நாட்டின் பிரதமர் நாற்காலிக்கு அறிவிக்கப்பட்ட அத்வானியால்கூட நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையே.
சிறுத்தை கவ்வி விட்ட தொடையைச் சிறுத்தையிடமே விட்டுவிட்டு, மீதி உடலோடு எப்படியோ உயிர் பிழைத்து ஓடிப் போய் மீதிக் காலத்துக்கு ஆட்சி நடத்த முயல் என்றுதானே அத்வானியாலேயே சொல்ல முடிந்தது. ரத்த ருசி கண்டுவிட்ட சிறுத்தை ஊருக்குள் மீண்டும் மீண்டும் வராதா? இது ஒரு தொடைதானே என்று முடித்துக் கொள்கிற கதையா?
இரும்புத்தாது ஏற்றிச் செல்லும் சரக்குந்து (லாரி) ஒன்றுக்குச் சுங்கவரி ஒரு நடைக்கு ஆயிரம் ரூபாய் என்று அரசு விதித்திருப்பதை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்பது ரெட்டி உடன்பிறப்புகள், எடியூரப்பா அரசின் தலைக்குக் கேட்ட விலைகளில் ஒன்று.
தனியொரு நிறுவனம் தனக்கு என்ன வரி விதிக்க வேண்டும்; எவ்வளவு விதிக்க வேண்டும் என்னும் உரிமையை எடுத்துக் கொள்வது என்றால், இதற்கு அரசு எதற்கு?
ஒருவன் வங்கியிலே வாங்குகிற கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை அளவுக்குப் போகிறான். தனியாள்கள் கடன் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய்தான் வட்டி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட கந்துவட்டிச் சட்டம் கடன் கொடுத்தவனைச் சிறையில் தள்ளும். ஆனால் இதே சட்டம் மத்திய அரசின் பார்வையில் இயங்கும் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாதாம். அந்த வங்கிகள் தனியாரைப்போல் மூன்று மடங்கு, அதாவது முப்பத்தாறு விழுக்காடுவரை வட்டி வாங்குகின்றன. கட்டத் தாமதமானால் அபராத வட்டி வேறு! இந்த வட்டியைக் கட்டவே வழியில்லை; இந்த வட்டிக்குச் சேவை வரி வேறு போட்டார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
இப்படி ஈரக்குலையை அறுக்கும்வண்ணம் வரிமேல் வரியாகப் போட்டு மக்களை அடிவரை அரசு சுரண்டுவது ஒருபக்கம். அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாயை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, அலைக்கற்றை உரிமம் போன்றவற்றை மத்திய அமைச்சர் ஆ. ராசா போன்றவர்கள் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கருவூலத்தின் வருவாய் வரத்தை அடைத்துவிடுவது இன்னொரு பக்கம். அதே பாணியில்தானே பெல்லாரியில் இரும்புத்தாதுச் சுரங்கங்கள் அடிமாட்டு விலைக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
அரசுக் கருவூலம் நிறைந்தால்தானே அது சாலைகளாகவும் சோலைகளாகவும் மாறும்; ஏரிகளாகவும் வாய்க்கால்களாகவும் மாறும்; மருத்துவமனைகளாகவும் பள்ளிகளாகவும் மாறும்; ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவு மானியங்களாக மாறும். அரசின் வருவாய்க் கால்கள் தனியாருக்குத் திருப்பிவிடப்பட்டால், தனியாரும், அவ்வாறு திருப்பிவிட்ட மந்திரிகளும்தானே கொழுப்பார்கள்.
""எங்கள் கையில் அறுபது சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நீ ஆட்சியில் இருப்பதும் இல்லாததும் எங்கள் கையில்; எங்களுக்குச் சுங்க வரி போட நீ யார்? எங்களுக்குச் செய்யும் சேவையை ஏழுமலையானுக்குச் செய்யும் சேவையாக எண்ணி மகிழும் அதிகாரிகளை மட்டுமே பெல்லாரியில் நியமிக்க வேண்டும்; எங்களுக்குப் பாதபூஜை செய்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருக்க வேண்டும். எங்களுடைய பதிலாளாக இருந்து எங்களுக்காக ஆட்சி நடத்து; இன்னோர் ஆறு மாதம் பார்ப்போம். இல்லையென்றால் உன்னுடைய லிங்காயத் ஜாதியைச் சேர்ந்த பேரவைத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராவார்.''
இவையெல்லாம் பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் வெளிப்படையான அறிவிப்புகள். கூரைமேல் ஏறிக்கொண்டு இவற்றையெல்லாம் அறிவிப்பதில் அவர்களுக்கு எந்தக் கூச்சமுமில்லை. எடியூரப்பாவின் தலையைத் தப்பச் செய்வதற்கு எல்லா நிபந்தனைகளும் தில்லி மேலிடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதுதான் பேரவலம்.
இனி முதல்வர் எடியூரப்பாவுக்கு மக்களிடம் என்ன மதிப்பிருக்கும்; அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு வழியாகத்தான் அதிகாரிகள் நியமனம், அவர்களின் இடமாற்றம், வரி விதிப்புகள் மற்றும் முக்கிய முடிவுகளும் முடிவாகும் என்றால் முதலமைச்சர் எதற்கு? எந்த அதிகாரி எடியூரப்பாவுக்குக் கட்டுப்படுவான்? எந்த அமைச்சருக்காவது ரெட்டி உடன்பிறப்புகளை எதிர்க்கத் துணிவு வருமா? தலைமைச் செயலகம் பெங்களூரில் இருக்குமே தவிர, அரசு பீடம் பெல்லாரியில் அல்லவா இயங்கும்.
ரெட்டி உடன்பிறப்புகள் கர்நாடகத்தை வேட்டைக்காடாக்குவதற்கு உடன்பட்டுப் பதவியிலிருப்பதைவிடச் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மக்களைச் சந்தித்திருக்கலாமே எடியூரப்பா. அது முன்மாதிரி அரசியலாகவும் இருந்திருக்குமே.
ஒருவேளை நெறியற்ற தேவ கௌடாவும், அவருடைய மகனும், நெறிமுறையற்ற காங்கிரஸýம் ஒன்றுகூடி, ரெட்டி உடன்பிறப்புகளின் "கையாள்' ஒருவரை முதலமைச்சராக்கி, அரசமைக்கும் இழி செயலில் ஈடுபட்டால் என்ன செய்வது என்று கேட்டால், இவற்றை எதிர்கொள்வதுதானே நெறி சார்ந்த அரசியல்?
நெறிசார்ந்த அரசியலை இந்தியாவுக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தானே ராமன் அவதாரம் எடுத்தான். கர்நாடகத்தை ராமராஜ்யம் ஆக்காமல், அயோத்தியில் ராமனுக்குக் கோயில் கட்டி ஆகப் போவதென்ன?
ரெட்டி உடன்பிறப்புகள் இந்த அளவுக்கு அசுர வலிமை அடைய முடிந்ததற்குக் காரணம் ஆந்திர முதல்வராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பதவிக்கு வந்ததும், அவருடைய குடும்பத்துக்கு ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழிலில் கணிசமான பங்கு ஏற்பட்டதும்தான்.
ஆந்திர எல்லையிலுள்ள பெல்லாரியிலிருந்து இரும்புத்தாது கடத்தல் ஆந்திரம் வழியாகத்தான் நடக்கிறது. ஆந்திரத்தில் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அதன் முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்தபோது, அவர் வைத்துவிட்டுச் சென்ற எல்லையில்லாத பணமும், சொந்தத் தொலைக்காட்சியும், சொந்தச் செய்தித்தாள் பின்னல்களும் அடுத்து முதல்வராக வந்த ரோசய்யாவுக்கு எதிராக ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியால் ஏவப்பட்டன.
பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழில் போன்ற பகாசுர நிறுவனங்கள் எடியூரப்பாவை மட்டுமன்று, ஆந்திர முதல்வர் ரோசய்யாவையும் தவித்துத் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் முந்நூற்றைம்பதுக்கு மேற்பட்டவர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள். அவர்கள் அரசியலில் இருப்பதே அம்பானிகளுக்கு நிகராகத் தங்களை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இவர்கள் கையில் சட்டம் செய்யும் அதிகாரம். அவர்கள் யாருக்காகச் சட்டம் செய்வார்கள்?
பாக்சைட்டையும், இரும்புத் தாதுக்களையும், கனிம வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் தவிக்கிறது மத்திய அரசு. அந்தப் பகுதிகளிலெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களும் ஆதிவாசிகளும் வாழ்கிறார்கள். டாட்டா மற்றும் எஸ்ஸôர் ஸ்டீல் அங்கே காலூன்ற அறுநூறு எழுநூறு கிராமங்களிலுள்ள மக்கள் அகதிகள் ஆக வேண்டும்.
நாட்டின் வளம் அரசுக்குச் சொந்தம்; அரசு அடிமட்ட மக்களுக்குச் சொந்தம் என்னும் நிலை இங்கு கிடையாதே.
கனிமங்களை அரசு தோண்டும்; அந்தந்தப் பகுதி மக்கள் அதன் காரணமாக ஒளி பெறுவார்கள் என்னும் நிலை இங்கு இல்லையே.
ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களின் கனிம வளங்களையும், மலைவாழ் மக்களையும் பன்னாட்டு முதலாளிகள் சூறையாடி விடாதபடி, ஊருக்கு வெளியே இருக்கும் ஐயனார்களைப்போல பாதுகாத்து நிற்பவர்களே இந்த நக்சலைட்டுகள்தானே. குடியாட்சி தீர்வாக முடியவில்லை என்னும்போது மக்கள் வேறு ஏற்பாடுகளைத் தேடிக் கொள்கிறார்கள். இது குடியாட்சியின் குற்றமா? மக்களின் குற்றமா?
சோற்றுப் பதம் பார்ப்பதுபோல் சொல்லப்பட்ட தீமைகள் சிலவே. நாட்டின் உயிர்ப்புக் கொஞ்சம் கொஞ்சமாக நாடெங்கிலுமுள்ள கயவர்களின் கையில் அடங்கிக் கொண்டிருக்கிறது. குடியாட்சி, விழி பிதுங்கி நிற்கிறது.
இன்னொரு பக்கம் நக்சலைட்டுகள் நாட்டின் நாற்பது விழுக்காடு மாவட்டங்களில் வேரூன்றி நிற்கிறார்கள். நாட்டைச் சந்தைப் பொருளாதாரத்தின் பேரால் பன்னாட்டு முதலாளிகளிடம் கூறு போடுவதற்கு இவர்களே தடை என்று மத்திய அரசு நினைக்கிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஜாதிக்கட்சி, மதக்கட்சி, உதிரிக்கட்சி என்று அனைத்துமே தீமைகளுக்கு முன்னால் அவிந்து அடங்கிப் போய் விடுகிறபோது, தீமையின் பலன்களைப் பங்கிட்டுக் கொள்ள முண்டி அடித்துக் கொண்டு நிற்கும்போது, குடியாட்சி குடிகளுக்காக இல்லை என்று ஆகிவிடாதா?
நாடு நக்சலைட்டுகளிடம் சென்று கொண்டிருக்கிறது என்பது ஆட்சியாளர்களின், அரசியல் தலைவர்களின் அச்சமானால், அதை ராணுவம் கொண்டு களைய முடியாது. நாட்டை அவர்களிடம் செலுத்துவதே நீங்கள்தானே!

செவ்வாய், 3 நவம்பர், 2009

இனப்படுகொலையாவது ஒன்றாவது...



சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது. சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார். அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொருவரிடமும் இலங்கையில் நடக்கும் அநியாயத்தைக் கூறினார். யாரும் முதலில் செவிமடுக்கவில்லை. அந்த இளம் எம்.பி.யின் பிடிவாதத்தால் கடைசியில் மக்கள் உரிமைக் கமிஷன் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அந்த எம்.பி.யின் கருத்துகளைக் கேட்டது. அப்படி லட்சியத்துடன் செயல்பட்ட எம்.பி. யார் தெரியுமா? இன்று இலங்கையின் அதிபராக ஐ.நா. மக்கள் உரிமைக் கமிஷனால் கண்டிக்கப்படுகிற சாட்சாத் மகிந்த ராஜபட்சதான். அவருடைய நண்பர்கள், இன்று மகிந்தாவிடம் எல்லா பழைய லட்சியங்களும் போய்விட்டன, அவருடைய மீசையையும் அவருடைய கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரத்தையும் தவிர என்கின்றனர். சில நாள்களுக்கு முன் வந்துள்ள செய்தியில் யுத்தத்திற்கான எல்லா சட்டதிட்டங்களையும் புறக்கணித்ததோடு தன் சொந்த நாட்டு மக்கள் போர் அபாயத்திலிருந்து ஒதுங்கி இருந்த இடங்களில்கூட தாக்குதல் நடத்திக் கொலை பாதகச் செயல்புரிந்த இலங்கை அரசு தண்டனைக்குரியதாக பல மேற்கத்திய நாடுகளாலும் கருதப்படுகிறதென்ற செய்தி வந்துள்ளது. யுத்தத்தால் படுகாயமுற்ற மக்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் இலங்கை அரசு சுமார் 30 முறை தாக்குதல் தொடுத்தது என்று புள்ளிவிவரம் கூறுகிறது. யுத்தம் நடந்த இடத்தில் தன் சொந்த நாட்டு நிருபர்களையோ வெளிநாட்டு நிருபர்களையோ இலங்கை அனுமதிக்காததால் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இது நடந்தது. இலங்கை அரசு கொடுக்கும் செய்தி மட்டும் தான் வெளியில் வந்தது. ஐ.நா.வின் பிரதிநிதிகளையோ, செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகளையோ, யுத்தம் நடந்த இடத்தில் அனுமதிக்கவில்லை என்பது அகில உலகத்திற்கும் இன்று தெரிந்துவிட்டது என்று துணிந்து எழுதியவர் "ஸன்டேலீடர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்களவர். தனது அரசு தவறு செய்கிறது என்று கூறியதால் அவர் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் திரண்டு இதற்குக் கண்டனம் தெரிவித்தது. சமீபத்தில் திசைநாயகம் என்பவர் இலங்கை அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து அனைத்து உலகினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாதியாக இருந்த மகிந்த தான் இவ்வளவு கொடுமைகளுக்கும் தலைமை தாங்குபவர். அன்று அரசு ராட்சசனாக மாறிவிட்டது என அறிந்து நியாயம் கேட்கப் போன ஒரு மனிதர்தான் இன்று ராட்சசனாக மாறி தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக தனது நாட்டின் ஒரு பகுதியினரின் இனப்படுகொலைக்குக் காரணமானவர் என்று உலக நாடுகளால் குற்றம்சாட்டப்படுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் இரண்டரை லட்சம் மக்கள் தனிமைச்சிறையில் தனது குடும்பத்திலிருந்தும், பிள்ளைகள், ஊரார் உற்றாரிடமிருந்தும் பிரிக்கப்பட்டுக் கம்பி வேலிகள் இட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏன் அவர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யவில்லை என்று உலகினர் கேட்டபோது, யுத்தம் நடந்ததால் பூமி எங்கும் கண்ணி வெடிகள் உள்ளன என்ற பதிலைக் கொடுத்த இலங்கை அரசு, சமீபத்தில் 50 ஆயிரம் மக்களை விடுதலை செய்யப் போகிறோம் என்றது. அப்படி என்றால் கண்ணி வெடிகளால் தான் தமிழ் மக்களைச் சிறை வைத்துள்ளோம் என்ற வாதம் தவறுதானே! பொய்தானே! உலகையும் உலகத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காகக் கூறிய பொய்க்காரணம் தானே! இலங்கையின் அரசியலோடு இந்தியாவின் ஒரு பகுதியின் அரசியல் பின்னிப் பிணைந்தது தமிழ்மொழியால். இந்த அடையாளம் இன்றைய தமிழ்ச் சந்ததியினரின் மூதாதையரால் கட்டமைக்கப்பட்டது. தமிழர்கள் ஒரு வரலாற்று நியதியின் பாற்பட்டவர்கள். இந்த வரலாற்று நியதி இன்று சிதற ஆரம்பித்துள்ளது. பாரதி, பிஜி தமிழர்களுக்காகப் புலம்பியதும், பாரதிதாசன், தென்னாசியத் தமிழர்களுக்காகப் புலம்பித் தீர்த்ததும் இந்த நியதியில் விழுந்த அடியை உணர்ந்ததால்தான். சமீபத்தில் தமிழ் மக்களில் சுமார் 50,000 பேர் நம் எல்லோரின் கண்முன் செத்து மடிந்தது வரலாறு. இது சாதாரணம் என இன்று நினைத்துள்ளவர்கள் கணிப்பு தவறு. சுமார் 20 பேர் புரிந்த தற்கொலை ஏதோ ஒன்றுக்கான அறிகுறி. தமிழ் மக்களை இனி இந்தியா கவனிக்காது என்ற உற்பாதங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. இலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டாலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை. ஜெர்மனியும் ஆர்ஜென்டினாவும் இலங்கை அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி பணம் கொடுக்கும் முடிவை எடுக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகுதான் 2009 ஜூன் மாதம் இப் பணம் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகளானாலும் இரண்டையும் நடத்த வேண்டிய முறையில் நடத்த இலங்கைக்குத் தெரிகிறது. இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் வேண்டிய அளவு உதவி செய்ததுபோலவே பாகிஸ்தான் (நூறு மில்லியன் டாலர்) ஈரான் (450 மில்லியன் டாலர்) லிபியா (500 மில்லியன் டாலர்) மனித உரிமையற்ற ராணுவ ஆட்சி நடைபெறும் பர்மா (50,000 டாலர்) ஆகியன பல்வேறு முறையில் உதவுகின்றன; அல்லது உதவ முன்வந்துள்ளன. மலேசியாபோல எந்த இன அடையாளத்தையும் அங்கீகரிக்காத நாடாக இலங்கை தன்னை உருவமைக்க நினைக்கிற சூழலில் ஒரு பெரிய அடி சமீபத்தில் இலங்கைக்கு விழுந்திருக்கிறது. தமிழர்களைச் சித்திரவதை செய்து வருகிற இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் என்று அழைக்கப்படும் வியாபார ஒப்பந்தம் மூலம் இந்தப் பேரிடி விழுந்துள்ளது. அதாவது 2005-ம் ஆண்டிலிருந்து சுங்கவரி இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை, துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. சுமார் ஒரு லட்சம் இலங்கை மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்த துணி ஏற்றுமதியில் சுமார் ஆயிரம் மில்லியன் யூரோ அளவு வியாபாரம் நடக்கிறது. இலங்கையின் கைகளில் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்திருப்பதால் இந்த வியாபார உடன்படிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. இதற்காக ஐ.நா.வின் மக்கள் உரிமைக் கமிஷனர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்தால் போதும் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு உடன்பட இலங்கை மறுக்கிறது. இந்தியா இலங்கையை அது எது செய்தாலும் ஆதரிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறதுபோலும். அதாவது ஐ.எம்.எப். நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்காவிடில் இந்தியா அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இச்செய்தி ஓர் ஆங்கில நாளிதழில் (அக்.22. 2009) வந்துள்ளது. இலங்கையின் துணை நிதியமைச்சர் சரத் அமுனுகாமா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இச்செய்தியை உறுதியும் செய்திருக்கிறார். இப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று. நம் அரசு பணத்தில் மிதக்கிறது என்று. நம் நாட்டில் ஏழை விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்வதில்லை என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது. இனி தமிழர்களை வதைக்காதே என்று எங்கோ இருக்கிற வெள்ளைக்கார ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக்கூட வியாபாரத் தடையை ஏற்படுத்த முடியாது. பணக்கார இந்தியா இருக்கவே இருக்கிறது, பண உதவி செய்ய! இலங்கை அரசு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. முள்கம்பிவேலி முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட செயல் இலங்கைக்கு ஏற்படுத்திய அபகீர்த்தியைப் போக்க ராஜபட்ச அவருடைய தமிழக நண்பருக்குக் கடிதம் எழுதித் தீர்த்துக் கொண்டார். தமிழக நண்பர், பத்துப் பேர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஐரோப்பியர்களின் கவனத்தைச் சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். நாங்களே குறை சொல்லாதபோது ஐரோப்பியனே உனக்கென்ன கவலை? மக்கள் உரிமை, "ஜீனோûஸட்' என்னும் இனப்படுகொலை, தமிழ் மக்களின் உரிமை என்பதெல்லாம் ஐரோப்பியர்கள் நேரம் போகாததால் கண்டுபிடித்த விஷயங்கள்! நெஞ்சு பொறுக்குதில்லையே...!(கட்டுரையாளர்: போலந்து நாட்டு வார்ஸô பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்).
கருத்துக்கள்

அருமையாக உணர்த்தியுள்ளார் கட்டுரையாளர் தமிழவன். ஆனால் உணர்வுள்ளவர்கள்தாமே உணருவார்கள். உணராதது போல் நடித்து ஏமாற்றுவோரை என்ன செய்ய முடியும்? போலந்து நாட்டு மக்களிடம் தமிழினப் படுகொலைகாரர்களுக்கு எதிரான கருத்தை விதைத்துத் தொண்டாற்ற தமிழவன்முன் வரவேண்டும். நடுநிலையோடு உண்மைகளை உணர்த்தும் கட்டுரைகளை வெளியிடும் தினமணிக்கும் பாரட்டுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2009 4:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 7 அக்டோபர், 2009

காலாவதி ஆகிவிட்ட இயக்கங்களின் திரிபுகள்!



நாள்தோறும் பெருக்கி மெழுகித் தூய்மையாக வைத்துக் கொள்ளப்படும் வீட்டிலும் தூசி சேரும்! ஆகவே தூசி அகற்றல் என்பது நாள்தோறும் செய்யப்பட வேண்டிய ஒரு பணி ஆகிறது. ஒரு சமூகமும் அத்தகையதுதான். பெரும்பான்மையான மக்கள் எளியவர்கள். நல்லதன் நன்மையையும், தீயதன் தீமையையும் பாகுபடுத்தி அறியத் தெரியாதவர்கள். ஒரு குதிரைப் பாகன் குதிரையை நிலமறிந்து செலுத்துமாறுபோல, மக்களைத் தலைமை சான்றவர்கள் நெறியறிந்து செலுத்தும்போதுதான் சமூகம் வாழத்தக்க நாகரிகமுடையதாகிறது. மக்களைக் கூட்டமாகச் செயல்பட வைக்கும் ஒரு கொள்கை தலைதூக்கி நிற்கும்போது, அது ஓர் இயக்கமாக உருமாறுகிறது. இருபதாம் நூற்றாண்டில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத காந்தியின் விடுதலை இயக்கம், பெரியாரின் தன்மான இயக்கம், அண்ணாவின் தமிழியக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எதேச்சாதிகார எதிர்ப்பு இயக்கம், லோகியா, கிருபளானிகளின் சோஷலிச இயக்கங்கள் என்பன போல பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாரால் கட்டப்பட்ட சன்மார்க்க இயக்கம், 6-ம் நூற்றாண்டு தொடங்கி 400 ஆண்டுகள் நீடித்த பக்தி இயக்கம் எனச் சுழித்தடித்தார்த்த இயக்கங்கள் பல. இந்த இயக்கங்களின் நோக்கங்கள் வேறு வேறு என்றாலும், இந்த இயக்கங்களால் மக்கள் ஓர் இலக்கு நோக்கிச் செலுத்தப்பட்டனர். பிடிப்பற்ற தலைமுறையினர்க்கு இந்த இயக்கங்களால் ஒரு பிடிப்புக் கிடைத்தது. அவற்றால் மக்கள் ஒரு கூட்டமாக மாற்றமுற்றனர். ஓர் இயக்கங் கட்டுவதென்பது ஒரு மலையேறும் முயற்சி! எதிர்நோக்கு, நிகழ்காலச் சிக்கல்கள் குறித்த தெளிந்த பார்வை, அந்தச் சிக்கல்களை அவிழ்க்கும் திறன், கூரிய அறிவு, தன்னல மறுப்பு ஆகியவை இயக்கங் கட்டுபவர்களுக்குத் தேவையான அடிப்படைக் குணங்கள். இந்தக் குணங்களெல்லாம் மேலே கூறப்பட்ட இயக்கங்களின் தலைவர்களுக்கு முற்றாக இருந்தன. ஆகவே அந்த இயக்கங்கள் வெற்றி பெற்றன. மக்களை மடைமாற்றம் செய்தன. காந்தியின் விடுதலை இயக்கம் நீங்கலாகத் தன்மான இயக்கம், தமிழ் மறுமலர்ச்சி போன்றவை எல்லாம் அழுத்தப்பட்ட நிலைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றவை. ஆனால் போராளிகளை நெறிப்படுத்தும் தன்மை கொண்டவை அல்ல. அதனால் போர் நடக்கும்போது அவர்கள் எந்தவித ஆதாயத்தையும் எதிர்பார்க்காத குறிக்கோட் பற்றினர்தாம் என்றாலும் போர், வெற்றியில் முடிந்த பிறகு, பழைய கால முடிமன்னர்களின் போர்வீரர்கள் வெற்றிபெற்ற நாட்டைக் கொள்ளையடித்துச் சூறையாடி விடுவது போல, இந்த அரசியல் கட்சியினரும் போராட்டம் முடிந்து ஆட்சிக் கட்டிலில் அமரும் நிலையில், அலிபாபா கதையில் வரும் நாற்பது திருடர்களைப்போல் ஆகி விடுகின்றனர். கொள்ளையடிக்க விடவில்லை என்றால் "கட்சி நிற்காது' என்று இன்றைய கட்சித் தலைவர்கள் சொல்வது போலத்தான், பழைய கால மன்னர்களும் போர்வீரர்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் அனுமதித்தனர். காந்தி ஒருவர்தான் அரசியலில் அறத்தைப் பின்னியவர்! வெள்ளைக்காரனை விரட்டி விட்டால் போதும்; நாட்டில் பாலும் தேனும் பெருகிஓடும் என்பன போன்ற வீண் நம்பிக்கைகளை அவர் வளர்க்கவில்லை. மக்கள் நெறிசார்ந்த அரசியலுக்கு மாறாவிட்டால் விடுதலை அடைந்தும் பயனிருக்காது என்று கடுமையாக எச்சரித்தவர் அவர். பெரியாரும், அண்ணாவும் ஆர்ப்பாட்டம், மறியல், கறுப்புக்கொடி என்று நடத்திய போராட்டங்களெல்லாம் காந்திய வழிப் போராட்டங்களே! "காந்தி ஒழிக' என்று சொல்லிக் கொண்டே வெட்கமில்லாமல் காந்தியிடம் கற்றுக்கொண்ட போராட்ட முறைகள் அல்லவா இவை! ஆயுதந் தாங்கிப் போராட வேண்டிய பொதுவுடைமைக் கட்சியினரே, அஞ்சலகம் கண்ட இடங்களிலெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுக் கலைந்து போய்விடுகிறார்களே! மனிதச் சங்கிலிப் போராட்டங்களெல்லாம் அவர்கள் மார்க்சிடம் கற்றுக்கொண்டவை அல்லவே! காந்தியின் பிடியிலிருந்து சர்வதேசக் கட்சிகளும் தப்ப முடியவில்லையே! எதிரியை வருத்தாமல் தானாகவே உவப்போடு முன்வந்து அடிபட்டும், சிறைப்பட்டும் தன்னை வருத்திக்கொண்டு, மக்களிடம் தன்னைக் குறித்த பரிவையும், அதன் வழியாகக் குறிக்கோள் பற்றிய விழிப்புணர்வையும் உண்டாக்கிப் போராடும் முறை உலகம் முழுவதிலும் எங்கும் கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் காந்திக்கு முன்னால் கற்பனையாகக்கூட நினைத்துப் பார்க்க முடிந்த ஒன்றல்லவே! இவ்வளவு பெரிய ஊழித்தலைவன் காந்தி நடத்திய கட்சியே அந்தத் தலைவனின் மறைவுக்குப்பிறகு, அவன் வகுத்துத்தந்த நெறிசார்ந்த ஆட்சியை மத்தியிலும் மாநிலங்களிலும் இருபது ஆண்டுகளுக்குத்தான் வழங்க முடிந்தது! 1967-ல் காந்தியம் என்பது கட்சியிலும், ஆட்சியிலும் ஒரு கடந்த காலக் கனவாகிவிட்டதே! எந்த ஓர் இயக்கமும் அது தோன்றிய நோக்கம் நிறைவேறிய கையோடு, இயற்கையாகவே காலமாகி விடவேண்டும். இல்லாவிடில் அந்த இயற்கை விதியை மீறி மிச்சமிருக்கிற இயக்கம் ஒரு பயனுமில்லாத தொங்கு சதையாகிவிடும். சில சமயங்களில் தோன்றிய நோக்கத்துக்கு முரணாகக்கூடச் செயல்படத் தொடங்கிவிடும்! இதுதான் காலாவதி ஆகிவிட்ட கட்சிகளால் நேரும் மிகப்பெரிய கேடு! பல கட்சிகள் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனால் ஒன்று கூட்டப்பட்டு ஜனதா கட்சி ஆனது! நெருக்கடி நிலை வதைகளையும், சொல்லொணாத் துயரங்களையும் உறுதி குலையாமல் எதிர்கொண்ட அந்தக் கட்சி, மக்களால் பதவியிலும் அமர்த்தப்பட்டது. அது பதவியிலமர்ந்து மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் தோன்றிவிடா வண்ணம், அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வலுவான திருத்தங்கள் செய்து முடித்துவிட்டு, இரண்டரை ஆண்டுகளில் அந்த ஆட்சியும் கலைந்து கட்சியும் மண்டையைப் போட்டு விட்டது! இனிக் கல்லறைத் திருவிழா நாள்களில் அந்த வரலாற்றுப் புகழ்மிக்க கட்சி மலர்வளையம் வைத்து மறக்காமல் நினைவு கூரப்படும்! அவ்வளவுதான், அதனுடைய வரலாற்றுத்தேவை! அதுபோலவே விடுதலை அடைந்தவுடன் காந்தி விரும்பியவாறு காங்கிரஸ் கட்சி கலைக்கப்பட்டிருக்க வேண்டும்! நேருவும், படேலும் அதற்கு இசையவில்லை. வயதான காலத்தில் ஆளுக்கொரு கொள்கை உடைய அவர்கள், ஆளுக்கொரு கட்சி கட்ட விரும்பவில்லை. காங்கிரஸின் பெயராலேயே ஆட்சியில் இருந்துவிட்டுப் போகவிரும்பினர். ஆனால், அவர்களிருவரும் காந்தியின் வளர்ப்பு என்பதால், நெறிசார்ந்த அரசியலை விட்டு அணுவளவும் மாறவில்லை! நாட்டுக்கும் அவர்களால் நன்மையே விளைந்தது! ஆனால் நேருவுக்குப்பிறகு இந்தியாவில் முதலில் குடும்பக் கட்சியாகி வம்சாவளி ஆட்சிக்கு வித்திட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான்! அதனால்தான் எங்கே ஆட்சி நம் வம்சத்தின் கையை விட்டுப் பறி போய்விடுமோ என்னும் அச்சத்தில், விடுதலையைப் பெற்றுத்தந்த காங்கிரஸின் பெயராலேயே விடுதலையைப் பறித்தார் இந்திரா காந்தி! இது ஓர் எதிர்நிலை அல்லவா? சோஷலிசம் பேசிய காங்கிரஸ், இன்று பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கும், பாரதப் பெரு முதலாளிகளுக்கும் பாதபூஜை செய்து கொண்டிருக்கிறது! இந்த முரண் காரணமாகத்தான் நாட்டில் மூன்றில் ஒரு பகுதி நக்சலைட்டுகளின் பிடிக்குள் போய்விட்டது! காங்கிரஸின் கருப்பைக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் அதன் எதிர் சக்தி நக்சலிஸம்! பசியை நீக்கு; வறுமையை ஒழி! அம்பானிகள் "ஆகாய அரண்மனைகளில்' வாழ்வார்கள்; குப்பன் கூவச் சாக்கடையில் குடியிருக்க வேண்டுமா? இவற்றையெல்லாம் மாற்று; முதலில் பாதபூஜை செய்வதைக் கைவிடு; நக்சலிஸம் தானாக ஆற்றல் இழக்கும்! இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, உள்துறை அமைச்சர் ராணுவத்தின் துணைகொண்டு அவர்களை ஒடுக்குவாராம்! பதினாறாம் லூயியிடம் ராணுவம் இல்லையா? பிரெஞ்சுப் புரட்சியை ஒடுக்க முடிந்ததா? சார் மன்னனிடம் ராணுவம் இல்லையா? லெனின் முளைத்தானே? இவற்றையெல்லாம் உள்துறை அமைச்சருக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சொல்லிக் கொடுத்ததில்லையா? கேளம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியில் கூடச் சொல்லிக் கொடுக்கிறார்களே! வரலாற்றுத் தேவைக்கு மேல் ஒரு கட்சியின் ஆயுள் நீள்வதால் ஏற்படும் கால முரண்கள் இவை! இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் தோன்றிய பெரியாரின் தன்மான இயக்கம், தமிழர்களைச் சூத்திர நிலையிலிருந்து விடுவித்தது. தொட்டால் தீட்டு; பார்த்தால்கூடத் தீட்டு என்று பன்னூறு ஆண்டுகளாய் நிலவிவந்த இழிநிலை. பெரியாருடைய பிறப்பையே அர்ப்பணித்த ஓய்வறியாத் தொண்டால் ஒழிந்தது! இந்த அரிய பணியோடு திராவிடர் கழகத்தின் வரலாற்றுப் பணி நிறைவுற்றது! தன்னுடைய காலத்திற்குப் பிறகு தன்னுடைய கருத்துகள் பரப்பப்படாமல் மறக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி, அவற்றைப் பரப்புவதற்குத் தன்மான இயக்கத்தின் பேரால், தான் அனுபவிக்காமல் சேர்த்துவைத்த சொந்தச் சொத்தையும், மக்கள் தந்த சொத்தையும் சேர்த்து, பன்னூறு கோடி மதிப்புள்ள ஓர் அறக்கட்டளையை நிறுவினார். பணம் சேர்த்து வைத்ததுதான் பெரியார் செய்த பிழை! அன்றே திராவிடர் கழகம் திருமடங்களின் நிலையை அடைந்துவிட்டது. பெரியாருடைய நூல்களை அச்சிட்டுப் பரப்ப கோவை ராமகிருஷ்ணனின் திராவிடர் கழகம் முனைந்து நின்றபோது, அதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தின் தயவை நாடினாரே வீரமணி. ஏன்? ஆகாத போகாத நூல்களைக்கூட நாட்டுடைமையாக்குகிற கருணாநிதி, பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்கவில்லையே ஏன்? வீரமணியின் இந்தத் தடைச் செயல் கருணாநிதிக்கு உடன்பாடுதான்! ஆனால், பெரியார் இதற்கு உடன்பட்டிருப்பாரா? இது தோன்றிய நோக்கத்துக்கு எதிராகச் செயல்படும் போக்குத்தானே? முரண்நிலை தானே? அதுபோல் 1949-ல் அண்ணா ஒரு கட்சியைத் தோற்றுவித்து, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தை வெற்றியை நோக்கிச் செலுத்தினார். அக்கிராசனர் தலைவரானார்; பிரசங்கி சொற்பொழிவாளரானார்; ரமேஷ் அறிவுநம்பி ஆனார்; பஸ் ஸ்டாண்டு பேருந்து நிலையமானது; மதறாஸ் ராஜ்ஜியம் தமிழ்நாடு ஆனது! இந்தி எல்லா நிலைகளிலும் எதிர்க்கப்பட்டுத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாவது தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்பு என்னும் முழுமுதல் அரசியல் கொள்கை அண்ணாவை அரியணையிலும் ஏற்றிவிட்டது. அண்ணாவின் திராவிட இயக்கத் தேவை நிறைவெய்திவிட்டது. அண்ணாவின் மறைவோடு அந்த இயக்கம் முற்றுப் பெற்றிருக்க வேண்டும்! அதற்கு மாறாக அது நீடித்ததால், எந்த ஈழத் தமிழர்களின் கண்ணீரால் கடல்நீர் உப்புக் கரிக்கிறது என்று அண்ணா சொன்னாரோ, அந்த ஈழத்தமிழினம் அழிவதற்கு, அந்தக் கட்சியே காரணமானது! சுத்தியல் கொடுத்தது இந்தியா; அடித்தது அரக்கன் ராஜபட்ச; அப்படி அடிக்கும்போது அடிபட வேண்டிய இரும்புத் தண்டு மண்ணுக்குள் புதைந்து அடியின் வேகம் தைக்காமல் போய்விடாதபடி அதற்குத் தாங்கு பட்டறையாகச் செயல்பட்டது அண்ணா கலைத்து விட்டுப் போயிருக்க வேண்டிய அவருடைய கட்சிதான்! ""சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை'' (821) என்பார் அறிஞர்க்கெல்லாம் அறிஞரான வள்ளுவர். போர் நிறுத்தத்துக்காகக் கருணாநிதி ஒருவேளை உண்ணாநோன்பு போல பல நாடகங்களை அரங்கேற்றினார்! தமிழ்நாட்டில் காங்கிரஸின் தயவிலிருக்கும் தன்னுடைய ஆட்சியைப் பலி கொடுத்து விடாமல் தடுப்பதற்கு ஈழத் தமிழினத்தைப் பலி கொடுத்தார் கருணாநிதி. இதுதான் திமுக தோற்றுவிக்கப்பட்ட நோக்கமா? இது எதிர்நிலைதானே! காலத்தால் தோன்றிய முரண்நிலை அல்லவா? அவை போல் கடவுள் மறுப்புச் சமயங்களான சமணமும், பௌத்தமும் ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சி விட்டுத் தளர்ந்தபோது, விண்ணப்பிப்பதற்கோர் கடவுள் வேண்டும் என்பதை மூல முழக்கமாகக் கொண்டு சைவமும், வைணவமும் பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தன. இந்தப் போரில் பக்தி இயக்கம் கடவுளை வெற்றிகரமாக நிறுவியது. சமணமும் பௌத்தமும் தமிழ் மண்ணில் வேரற்றுப் போயின. ""தீவினை செய்தால் தீர்ந்தாய்'' என்று மிரட்டிய பௌத்தத்தையும் சமணத்தையும் விட, ""கும்பிட்டு விழுந்து சரி செய்து கொள்ளலாம்'' என்று சொன்ன சைவ, வைணவ சமயங்கள் எளிமையாக இருந்ததால் மக்கள் கூட்டமாக இவற்றுக்கு இடம்பெயர்ந்தார்கள்! தமிழ்நாட்டை ஆட்டிவைத்த இயக்கம் பக்தி இயக்கம்! மக்கள் ஐயப்பன் கோயிலுக்குப் போகிறார்கள்; பழனிக்கு நடக்கிறார்கள்; நாக்கில் வேல் குத்திக் கொள்கிறார்கள்; தீ மிதிக்கிறார்கள்; ஆனால், எதுதான் மாறியிருக்கிறது? பசித்தோர் பசியாறவில்லை; கடவுளின் பெயரால் பலிகள் நடக்கின்றன; மனித வயிறுகள் கல்லறைகள் ஆகின்றன. பக்தி இயக்கம் தேக்கமுற்று விட்டது; அதன் தேவை முடிந்துவிட்டது; அது திருத்தத்துக்கு உரியதாகிவிட்டது. இந்நிலையில் 19-ம் நூற்றாண்டில் திருவருட் பிரகாச வள்ளலார் வந்தார். சைவத்துக்கெதிரான போர் தொடங்கியது. சன்மார்க்க இயக்கமாக அது வெளிப்பட்டது! பசி நீக்கம், உயிரிரக்கம் இரண்டுமே அவருடைய மூல முழக்கங்கள்! வள்ளலார் கடவுளைச் சற்று பின்னுக்குத் தள்ளினார். பலி கேட்கிற சிறு தெய்வங்களை எல்லாம் தூக்கி வீசிவிட்டார்! பசியோடு வந்தவனுக்குச் சோறிடுவதைக் கணவன் தடுத்தால், மனைவி கேட்க வேண்டாம். கடவுள் தடுத்தால் அடியார் கேட்க வேண்டாம்! இது தமிழுக்குப் புதிய குரல்! பிற உயிர்களிடம் தயவு காட்டாமல் கடவுளின் தயவைப்பெற முடியாதென்றார். வழிபாடு முக்கியமில்லை. தயவைக் கொண்டுதான் தயவைப்பெற முடியும் என்றார். இதிலே பேரவலம் வள்ளலாரைச் சைவ சமயம் உறிஞ்சிக் கொண்டுவிட்டதுதான்! தேக்கமுற்ற நிலையிலேயே சைவம் நீடிக்கிறது! காங்கிரஸ், தி.க., தி.மு.க., பக்தி இயக்கம், சன்மார்க்க இயக்கம் என்று அடுத்தடுத்து வந்த பல்வேறு இயக்கங்களில் பக்தி இயக்கம் தேக்கமுற்றது; சன்மார்க்க இயக்கம் சைவத்தால் உறிஞ்சப்பட்டுவிட்டது! காங்கிரஸ், தி.க., தி.மு.க. ஆகியவை வரலாற்றுத் தேவை முடிந்தும் ஆயுள் நீள்வதால் முரண்பாடுகளில் சிக்கிச் சீரழிகின்றன. தான் தோன்றிய நோக்கத்துக்கு எதிராக அவை திரிபடைந்துவிட்டன. தேவைக்கதிகமாக நீளும்போது எதிர்நிலையாய்த் திரிவதுதானே இயற்கை விதி!

கருத்துக்கள்

விட்டு விட்டு எழுதியிருப்பார் போலும். ஒரு சிலகட்டுரைகளைச் சேர்த்துத் தந்தது போல் இருக்கிறது. தி.மு.க.வைத் திட்டா விட்டால் உறக்கம் வராது என்பதால் காந்திக்கு முன்பே உலக நாடுகளில் இருந்த ஆர்பாட்ட முறைகளைக் காந்தியடிகளிடம் இருந்து கற்றுக் கொண்டதாக உளறி விட்டுப் பின் வேறு நிலையில் புகழ்கிறார். பெரியார், அண்ணா ஆகியோரின் இனநலப் பணிகளைப் பாராட்டினால் தன் கட்சியுணர்வுக் கற்புக்குப் பங்கம் வந்து விடும் என்று பயப்படுகிறார். சிறந்த பேச்சாளரும் படைப்பாளருமான பழ.கருப்பையா அவர்கள் தம் கருத்தை வெளிப்படுத்துவதில் கருத்து செலுத்த வேண்டுமே தவிர எக் கட்டுரையாயினும் திராவிட இயக்கங்களைத் தாக்கியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதக் கூடாது. இதனால் படிப்போர்குக் குழப்பம் மிஞ்சி இவரது படைப்புகளைத் தாமாகவே ஒதுக்கி விடுவர். நடுநிலையோடு நல்ல கருத்துகளை வெளியிடுவாராக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/7/2009 4:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *