வியாழன், 23 ஜூலை, 2009

பிரான்சின் இரு பல்கலைக் கழகங்கள்
தமிழர்களைப் பற்றி கருத்தரங்கு நடத்தவுள்ளது.
பிரசுரித்த திகதி : 23 Jul 2009

'புலிகள் சரணடைந்து விட்டார்கள்' என்ற எடுகோளினை அடிப்படையாக வைத்து 'தமிழரின் உரிமைப்' பிரச்சனை எவ்வாறு இருக்கும் என்ற சர்வதேச கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கின்ற வேலைகளில் பிரான்ஸ் பலகலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன. 'சாதி மற்றும் சமய ஒருமைப்பாட்டினை முக்கியத்துவப்படுத்தியே கட்டமைக்கப்பட்ட பாரம்பரிய தமிழ் சமுதாயத்தின்' தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சமயம் சார்ந்த சமூகத்தின் பங்கு என்ன என்பது இந்த கருத்தரங்கின் முக்கிய கருப்பொருளாக இருக்கப்போகின்றது.

கொழும்பிலுள்ள தமிழ் கல்வியறிவாளர் இந்த கருத்தரங்கு திட்டம் பற்றிப்பேசியபோது, கொழும்பு, புதுடில்லி மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை ஈழத்தமிழர்கள் இருந்தார்கள் என்ற சுவடுகளை இல்லாமல் செய்வதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கே ஊடகங்களையும், பல்கலைக்கழகங்களையும் வழிநடத்துவதால் முதலில் ஈழத்தைச் சேர்ந்த தமிழர்களின் நிலைத்த தன்மையை உலகுக்கு நிரூபிக்கவேண்டியது மிக முக்கியம் என்று கூறியுள்ளார்.

தீர்வுத்திட்டம், தேசிய அரசியலில் சிறுபான்மைத் தமிழர்களை மீளவும் ஒருங்கிணைத்தல், தடுப்பு முகாம்களிலுள்ள மக்கள், கொழும்பின் 'பலதரப்பட்ட இனத்தவர்களிடையே' அகப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள், 'மற்றவர்கள்' புலிகளுடன் இணைந்துவிட்டதால் வேலை தேடுவதிலும், குடும்ப சுமையைச் சுமப்பதிலும் ஈடுபட்டுள்ள பெண்கள் போன்ற தலைப்புகளில் இந்த கலந்துரையாடல்கள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள், அனைவரின் கண்களையும் உறுத்திக் கொண்டிருப்பதால், இந்த கலந்துரையாடலின் அடுத்த கரு புலம்பெயர் நாடுகளிலுள்ள ஈழ தமிழர்களின் முக்கிய தொழிற்பாடுகள் என்ன என்பதும் ஈழத் தமிழர்களின் கேள்விகளுக்கு தமிழ் நாட்டு தமிழர்கள் உட்பட பிற தமிழர்கள் எவ்வாறு செயற்படப்போகிறார்கள் என்பதுமாகும்.

பூர்வாங்கமாக அறிவிக்கப்படுகின்ற இந்த கருத்தரங்கானது தமிழ் பொதுமக்களைப் புலிகள் தமக்கான கவசங்களாகக் கையண்டார்கள் என்ற கருத்தையும் பேணிவருகிறது.

"மேற்குலகின் தலைவர்கள், ஒபாமா, கிலாரி உட்பட அனைவரும் முதலில் தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். ஏனெனில் தடுப்பு முகாம்களுக்கு மக்கள் வரவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்த அவர்கள், மக்கள் தடுப்பு முகாமுக்கு வந்ததும் அங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், கொலைகள் எவற்றுக்கு எதிராகவும் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். பிற்காலத்தில் ஒருநாள் குறிப்பாக இந்தியத் தலைவர்கள் இப்போதைய வெட்கக்கேடான செயலுக்கு தமிழர்களிடம் மன்னிப்பு கோருவார்கள்" என்று தமிழ் கல்வியியலாளர் அடித்துக் கூறுகிறார்.

ஈழ தமிழ் மக்களோ அல்லது பிரபாகரனுக்கு கீழிருந்த புலிகளோ என்றுமே தேசிய கொளகையையோ அல்லது போராட்டத்தையோ அடிபடிய வைக்கவில்லை என்று அந்த கல்வியியலாளர் மேலும் கூறினார். எனவே வருகின்ற 2010 ஆம் ஆண்டு பெப்பிரவரியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கல்வியியலாளர்களும் சரி பல்கலைக்கழகங்களும் சரி இந்த கருத்துரைக்கு மதிப்புக்கொடுத்து நேர்மையாக தமது அறிவுசார் கருத்துக்களை வெளியிட வேண்டும் என இக் கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக