செவ்வாய், 15 ஜூன், 2010

தமிழர் மறு குடியமர்வுக்கு ராஜபட்ச உறுதி: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம்



சென்னை, ஜூன் 14: இலங்கையில் முகாம்களில் வசிக்கும் 47 ஆயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என அந் நாட்டு அதிபர் ராஜபட்ச தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச 3 நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன்னதாக, இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்தும், அவர்களது மறு குடியமர்வு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடந்த 5-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.இதன் பின்னர், இந்தியாவுக்கு வந்த ராஜபட்சவை தி.மு.க. அணி எம்.பி.க்கள் சந்தித்து மனு அளித்தனர். அதில், முள்வேலி முகாம்களில் வாழும் தமிழர்களை மறு குடியமர்வு செய்வதில் ஏற்படும் தாமதம் கவலை அளிப்பதாகக் கூறியிருந்தனர்.இந்த நிலையில், முதல்வர் எழுதிய கடிதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் உள்ள முகாம்களில் வாழும் தமிழர்களை மறு குடியமர்வு செய்வது தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இலங்கை அதிபர் உடனான விவாதத்தின் போது இந்தப் பிரச்னையை எழுப்பினேன். முகாம்களில் வசிக்கும் 47 ஆயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மறு குடியமர்வு செய்யப்படுவார்கள் என்று என்னிடம் ராஜபட்ச உறுதி அளித்தார்.மேலும், அந்த மக்களை மறு குடியமர்த்தும் வகையில் இந்தியா - இலங்கை கூட்டு முயற்சியாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறு குடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குரிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை வகுத்துத் தருவதிலும் இந்திய அரசு பணியாற்றி வருகிறது.இலங்கையில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரிடையே வேறுபாடுகளை நீக்குவது அவசியம் என்பதை அந்த நாட்டு அதிபரிடம் வலியுறுத்தினேன்.மேலும், இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மையினருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை ராஜபட்சவுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளேன் என்று தனது கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.போர் முடிந்து ஓராண்டாகியும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.அந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் விடுதலைப் புலிகளும் இருக்கக் கூடும் எனக் கூறி மறு குடியமர்வை இலங்கை அரசு தாமதப்படுத்தி வருகிறது.தமிழர் மறு குடியமர்வு தொடர்பாக இலங்கை அரசு முழு மனதுடன் செயல்படவில்லை.இதை இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன.இலங்கை அரசின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலுக்கு சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன.அண்மையில் இந்தியாவுக்கு ராஜபட்ச வந்தபோது, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரிழப்புக்கும், தற்போது அனுபவித்து வரும் துயரத்துக்கும் காரணமான அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கக் கூடாது என தமிழகத்திலும் கண்டனக் குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

பேரின அழிப்பாளர்கள் சந்தித்த பொழுது தமிழர் நலன் குறித்து ஒன்றும்பேசப்படவில்லை என்றே செய்திகள் வந்தன. ஆனாலும் ஏதேதோ பேசியதாகவும் வலியுறுத்தியதாகவும் கூட்டாளி கூறுகிறார். ஆனால், மடல் வந்து சேரும் முன்னே சிங்கள அமைச்சர் தமிழர் நலன் குறித்து ஒன்றும் அழுத்தம் கொடுக்கவில்லை என்கிறார். சிங்களர்கள் வாக்குறுதிகள் காற்றில் கரைவனவே. அத்தகைய வாக்குறுதிகூடக் கொடுக்காத பொழுது கூட்டாளிகள் பேசியிருந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.குறைந்த காலக்கெடு கொடுத்து அதற்குள் தமிழர்களுக்கு உரிய அதிகார வழங்கலும் தமிழ் நிலங்கள் இணைப்பும் நிகழாவிட்டால் தமிழ் ஈழத்தை ஏற்றுக் கொண்டதாகப் பொருள் என இந்தியா அறிவித்தால் ஏதும் நிகழலாம். ஆனால், சிங்களர்களே ஒத்துக் கொண்டாலும் இந்தியம் ஒத்துக் கொள்ளாதே. எனவே, இருக்கின்ற ஒரே வழி உலக மனித நேய உணர்வாளர்களை ஒன்று திரட்டுவதுதான். தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழம் தனியுரிமை பெறும் வரை எல்லா நாடகங்களும் அரங்கேறத்தான் செய்யும்.நாம் வேடிக்கை பார்க்காமல் நம் கடமையை ஆற்றுவோம். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 1:11:00 PM

இலங்கைத்தமிழர் நலன்களை முன்னிட்டு செற்படும் இந்தியப் பிரதமருக்கு நன்றிகள் பல! அமரர் ராஜீவ் காந்தி அவர்களால் இலந்கைத்தமிழர் வரலாற்றில் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியப் பிரதமராக இருந்த அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக இலங்கை வந்து, சிங்களச் சிப்பாயால் தாக்கப்பட்டும், தமிழர் நலன் காக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதிசயமும் நடந்தது. இலங்கைத்தமிழரில் சில நன்றி கெட்டவர்களால் அமரர் ராஜீவ் காந்தியின் உயிர் பறிக்கப்பட்டது. ஆனாலும் இந்திய அரசுகள் தமிழ்மக்கள் மீது தொடாந்தும் அக்கறை காட்டிவருவது பாரட்டத்தக்கது. ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நண்ணயம் செய்து விடல்'

By Ravi
6/15/2010 12:29:00 PM

HE..HE..HE THIS POODLE OF SONIA IS TALING ABOUT LETTER FROM BUTCHER TO WALKING CORPSE CHEAP MINISTER KARUNANIDHI..SAME RAJAPAKSE TOLD SAME STORY TO BUDDHIST BAN-KI-MOON LONG AGO...EVEN SOME PEOPLE WENT TO THEIR OWN HOUSE HAVE FOUND THERE ARE NO HOUSES..NO FOOD AND FACING DAILY HARRASSEMENT FROM SINHALA MILITARY....HE..HE..HE..POVERTY .INDIANS LEADERS ARE GOING TO EAT THEIR OWN SHIT SOON...ALREADY OVER 50,OOO CHINESE ARE IN SRI LANKA SOON THEY WILL TEACH A LESSON TO POVERTY INDIA

By KOOPU
6/15/2010 12:20:00 PM

HE..HE..HE THIS POODLE OF SONIA IS TALING ABOUT LETTER FROM BUTCHER TO WALKING CORPSE CHEAP MINISTER KARUNANIDHI..SAME RAJAPAKSE TOLD SAME STORY TO BUDDHIST BAN-KI-MOON LONG AGO...EVEN SOME PEOPLE WENT TO THEIR OWN HOUSE HAVE FOUND THERE ARE NO HOUSES..NO FOOD AND FACING DAILY HARRASSEMENT FROM SINHALA MILITARY....HE..HE..HE..POVERTY .INDIANS LEADERS ARE GOING TO EAT THEIR OWN SHIT SOON...ALREADY OVER 50,OOO CHINESE ARE IN SRI LANKA SOON THEY WILL TEACH A LESSON TO POVERTY INDIA

By KOOPU
6/15/2010 12:20:00 PM

ALSO TAMIL..DONT BARK WITHOUT KNOWING THE REALITY..HOW THE HELL A GUY LIVE IN A DAMIL NADU SHANTY KNOW THE FACTS....??? SOON YOUR SINHALEASE WILL SAY 50,000 TAMILS DISAPPEARED DURING TSUNAMI.....BETTER SHUT UP AND ENJOY MONEY BEING PAID TO YOU BY SL CONSULATE IN CHENNAI..

By KOOPU
6/15/2010 12:16:00 PM

ALSO TAMIL..DONT BARK WITHOUT KNOWING THE REALITY..HOW THE HELL A GUY LIVE IN A DAMIL NADU SHANTY KNOW THE FACTS....??? SOON YOUR SINHALEASE WILL SAY 50,000 TAMILS DISAPPEARED DURING TSUNAMI.....BETTER SHUT UP AND ENJOY MONEY BEING PAID TO YOU BY SL CONSULATE IN CHENNAI..

By KOOPU
6/15/2010 12:16:00 PM

Sir, In NDTV Interview , Congress spokeswomen Mrs Jeyanthi Natarajan was admitted that there is tamil Genocide in Srilanka . Now , Congress govt giving Red carpet wel come to those butchers . How congress Govt has courage to do that .Every one knows the reasons. It is very painful but true that we tamil nadu tamils are sold our soul for money and lost self respect.

By Mohan
6/15/2010 11:48:00 AM

அப்பா மன்மோகனே!உன்னையும் தெரியும்,உன் அப்பனையும் தெரியும் என உனக்கு விரைவில் செருப்படி கொடுப்பான் இந்த இரசபட்ச!சிங்களவர்கள் எனறைக்கும் தன சொல்லைக் காப்பாற்றியதாக வரலாறே இல்லை!கையெழுத்துப்போட்ட ஒப்பந்தங்களையே கிழித்துப்போட்ட உததமார்கள் இவர்கள்! வழக்கம்போல மன்மோகன் முகத்தில் கரிக்குப்பதில் சாணி பூசப்போகிரர்கள்! மன்மோகன் அவர்களே தயாராக இருங்கள்! வாழ்த்துக்கள்!

By vendhan
6/15/2010 11:31:00 AM

ராஜபக்சே மற்றும் மன்மோகன் சிங் இருவருமே மாபாவிகள். ஒருத்தன் புத்தனை கொண்டு புதைத்தான் , இன்னொருத்தன் பாபா ஜி குருநானக்கை குழித் தோண்டி புதைத்தான். பணத்துக்காக மரணத்தை வியாபாரம் செய்பவர்கள் தான் இருவருமே. தனக்காகவும் சுடுகாட்டில் இடம் உண்டு என்பதை மறந்துப் போனவர்கள். இவர்களின் தலைவி சோனியா காந்தியும் ரோம ராஜ்யத்தின் ரத்தின கம்பளத்தில் நடை பயின்றவர் தான். இவர்கள் மூவருமே அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

By bhagya
6/15/2010 11:21:00 AM

இப்பொது வெளிவருகின்ற பல மனித உரிமை அத்துமீறல்காட்சிகளை முன்பே பலரிடம் ஆதாரமாக இருந்தும் கூட கொஞ்சம் கொஞ்சமாக ளியிடுவதற்கான காரணம்தான் எனக்குத்தெரியவில்லை! இவ்வாறான கோரக்காட்சிகள் புலிகளால் வெளியிடப்பட்ட பிவுகளில் அதே தாக்கங்களுடன் பல வருடங்களாக வெளியிட்டவைகளே என்பதனை தமிழர்களும் புலிகளின் சார்பில் மறந்துவிட்டார்கள். எனவே புலிகளின் முன்னாள் பதிவுகளை எடுத்து பார்க்கும் படி தமிழர்களை வேண்டப்படுகின்றீர்கள். அப்பொதே இவ்வாறான தாக்கங்களை வெளியிட்டு புலிகள் ஏன் இலங்கை அரசிற்கெதிரான வழக்குகளைத் தெடுக்கவில்லை… தீர்வு காணவில்லை??? இவ்வாறான சான்றுகள் வியாபார நோக்கில் தற்போது பரிமாற்றப்பட்டும், தமது டகங்களை பிரபல்யப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு செயல் என்பதனை மக்கள் எப்போது றியப்போகின்றார்கள்.

By Also Tamil
6/15/2010 10:48:00 AM

Why India post is running in losses. they are sending and replying letters or i misunderstand them even they are using emails. India is grown like that???...........I dont think so, Unbelievable. aanaa onnu kaditham podrannu solli indiavila ulla marathhayellaam kaali pannitaathingadaa...............

By ram
6/15/2010 10:33:00 AM

Life of people especially of Tamils have become a joke for this learned PM. His half baked economics has given him this post. Let some body advice him to study a chapter in humanity.

By karunakaran
6/15/2010 10:30:00 AM

Finally you and sonio give indian's money to them to kill the tamil people. You ppl are doing great game and making tamilian as a fool. Especially you, sonia and other great cheatted fellow karunanithi all making tamilian as fool.

By Tamilan
6/15/2010 7:16:00 AM

Priminister is joking to Indian Tamils. (2ம் இணைப்பு) விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கு: நான்கு இராணுவத்தினரை அடையாளம் காட்டியுள்ளனர் [ திங்கட்கிழமை, 14 யூன் 2010, 03:14.08 PM GMT +05:30 ] விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் இவர்களை குறித்த பெண்கள் அடையாளம் காட்டியுள்ளனர். இந்தநிலையில் அடையாளம் காட்டப்பட்ட நான்கு இராணுவ வீரர்களையும் வவுனியா சிறைச்சாலையில் தப்பியோடாதவாறு பாதுகாப்பாக தடுத்து வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் எஸ் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் பாதிக்கப்பட்ட பெண்கள், இருவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு மாங்குளம் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆஜராகியிருந்தார். இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய

By Subas
6/15/2010 4:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

போராளி சே குவேரா பிறந்த நாள்

கருவிப்பட்டை
PathivuToolbar ©2010thamizmanam.com

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்ஸியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடம் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடி போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சேகுவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தான். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார்.

தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.

இளமைக்காலம்

சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜெண்டினாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய ,பாஸ்க்கு,ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.

வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.

குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ்,போல்க்னா,கைடே,சல்காரி,வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ்,லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ்,வெல்ஸ்,புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்

எழுத்தாளர்களானகுயிரோகா,அலெக்ரியா,இக்காசா,டாரியோஆஸ்ட்டுரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர் அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவன்ஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா,பெரு,ஈக்குவிடார்,பனாமா,கொஸ்தாரிக்கா,நிக்கரக்குவா,ஹொண்டுராஸ், சல்வடோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ்குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.

குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகு
தேசிய மொழிகள் ப்ல உள்ள நாட்டில் ஒரு மொழி மட்டும் அறிந்தால்தான் பதவி உயர்வு என்ற நிலையை மாற்ற வேண்டும். மாறாக அந்த மொழியைக் கற்காதவர்களுக்குப் பதவி உயர்வு இல்லை எனவே, அதனைக் கற்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. இந்தியா வலிவும் பொலிவும் மிக்க நாடாகத் திகழ உடனே இந்தித்திணிப்பைக் கைவிட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++
"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை

ராமநாதபுரம் : ""அனைத்து தகுதிகளிலிருந்தும் இந்தி மொழி தெரியாததால், ராணுவத்தில் முக்கிய பதவிகளை தமிழர்களால் பெற முடியவில்லை,'' என கர்னல் தாமஸ் ஆபிரகாம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவையிலுள்ள ராணுவ சேர்க்கை மையம் மூலம் தொடர்ந்து ஆள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை, இத்தேர்வு நடைபெறும். தென்னிந்தியாவிலிருந்து தான் அதிகமானோர் ராணுவத்தில் சேர்கின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பங்கு பெரும்பான்மையாக உள்ளது. இந்த இளைஞர்களிடம் தான் சரியான வலு மற்றும் உடற்தகுதி உள்ளது. அதனால் தான் ராமநாதபுரத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராணுவத்துக்கு ஏற்ப எல்லா அமைப்புகள் பெற்றிருந்தும், "இந்தி' மொழி தெரியாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் உயர் பதவியைப் பெற முடிவதில்லை.


ஒவ்வொருவரும் ராணுவத்தில் சேர்ந்த பின்னரே இந்தியை கற்றுக்கொள்கின்றனர். ராணுவத்தில் சேரும் ஆர்வத்தை சாதகமாக்கி, சில இடைத்தரகர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்; இதை யாரும் நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். எந்த பாரபட்சமுமின்றி, சரியான வழியில் தான் தேர்வு நடக்கிறது. தேர்வாளர்களின் எண்கள் ரகசியம் காக்கப்படுவதால், அதில் எந்த சாதகமும் செய்ய வாய்ப்பில்லை. இதை அனைவரும் உணர வேண்டும். இது தொடர்பாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாமஸ் கூறினார்.


போலி சான்றிதழ்: இருவர் கைது: நேற்று நடந்த முகாமில், அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இதில், திண்டுக்கலைச் சேர்ந்த செல்வம், விருதுநகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர், போலியான கல்விச் சான்றிதழ் கொண்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிய ராணுவ அதிகாரிகள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தைப் பார்த்த போலி சான்றிதழ் கொண்டு வந்த சிலர், அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் நடையை கட்ட ஆரம்பித்தனர்.


செம்மொழி நிலைமை கருத்துப்படம்

நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக விளங்க நடவடிக்கை: துரைமுருகன்



சென்னை, ஜூன் 14: உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்க அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார். நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடக் கோரி அமைச்சர் துரைமுருகன் செய்திக் குறிப்பு மூலம் திங்கள்கிழமை விடுத்த வேண்டுகோள்: உயர் நீதிமன்றத்தில் தமிழ் அங்கீகாரம் பெற்ற வழக்காடு மொழியாக இருக்க வேண்டுமென்பதற்காக தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நீதித் துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன்மீது மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதங்களை எழுதினார். அதன்பின், இந்தக் கருத்துருவை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க கடந்த 2008-ம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நினைவூட்டுக் கடிதங்களை கருணாநிதி எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் கருத்துரு மத்திய அரசின் சீரிய பரிசீலனையில் உள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி பதில் அளித்தார். தமிழக அரசின் உள்துறை அலுவலர்கள் அளவில் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கு தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இறுதியாக, கடந்த மே மாதம் மத்திய அரசின் நீதித் துறை எழுதிய கடிதத்தில், இந்தக் கருத்துரு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழித் துறையின் பரிசீலனை மற்றும் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் அளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்க அனைத்து விதமான நடவடிக்கையையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.
கருத்துக்கள்

அமைச்சரின் இந்த அறிக்கைக்கிணங்க உண்ணா நோன்பிருக்கும் தமிழ்நல வழக்குரைஞர்கள் தங்கள் உண்ண நோன்பை முடித்துக் கொண்டு வெற்றி கிட்டும் வரையில் வேறு வகையில் போராட்டத்தைத் தொடர வேண்டும். உங்களைப் போன்ற உணர்வாளர்களின் உயிர் விலைமதிப்பற்றது. எனவே, உடனே உண்ணா நோன்பைக் கைவிடுக.

வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 3:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்



சென்னை, ஜூன் 14: இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலேயே, தமிழர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா. அவர் இப்போது காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பித்து கொழும்பு சென்று விட்டார். மத்திய அரசால் தப்பிக்க வைத்து, அனுப்பப்பட்டுள்ளார் என்பதே சரியானதாகும். டக்ளஸ் தேவானந்தா பற்றிய தகவல் தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், தேவானந்தா குறித்து தில்லிக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந் நிலையில் அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்கியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்பிச் சென்றுள்ளது, ஒரு குற்றவாளியை தப்பிக்க வைக்கும் மத்திய அரசின் உள்நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என தெளிவாகத் தெரிந்தும், தீர்ப்பு வரட்டும். பார்க்கலாம் என்று ப. சிதம்பரம் கூறியிருப்பது, கண்டனத்துக்குரியது. தமிழர்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு இப்போது உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழ் அமைச்சர்களும் அவ்வாறுதான் உள்ளனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போயிருக்கும் மத்திய அரசு, தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என்று இப்போது கூறியிருக்கிறது. இதற்கு முன்பு அளிக்கப்பட்ட ரூ.1000 கோடி, தமிழர்களுக்காக செலவிடப்பட்டதாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான விவரங்களைப் பெற மத்திய அரசு முயற்சிக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பெயரில் கொடுக்கப்படும் பணம், அவர்களுக்குதான் பயன்படும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை. ù தாடர்ந்து தமிழர் எதிர்ப்பு நிலையையே மத்திய அரசு எடுத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்த நிலையிலும் இப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி பாராமுகமாக இருப்பது நல்லதல்ல. எனவே, கருணாநிதி உடனே தலையிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

உண்மையைத்தான் சொல்லுகிறார் பொன்.இராதாகிருட்டிணன். ஆனால், மத்திய அரசு கொள்கையே எங்கள் கொள்கை எனக் கூறும் தமிழக அரசு தமிழர் எதிர்ப்பு நிலையைக் கைவிடுமாறு மத்திய அரசிடம் சொல்லும் என எதிர்பார்ப்பது அறியாமையே. தமிழக அரசின் நிலையைத் / தமிழர்களின் உணர்வை மத்திய அரசிற்கு உணர்த்தும் நிலையை /மத்திய அரசிற்கு உணர்த்துவதே கடமை எனத் தமிழக அரசு நினைத்திருநதால் பேரின அழிப்பு நடைபெற்றிருக்காதே. எனவே, நாடு தழுவிய நிலையில் தன் கட்சி மூலம் இதனை அறிவுறுத்தும் கடமையை அவர் மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 14 ஜூன், 2010

தமிழ் இலக்கியங்களில் பாடலிபுத்திரம் எனறே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதுவே தொன்மையான பெயர். அத்வானியின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++
பாட்னா : பீகார் தலைநகர் பாட்னா பெயரை பாடலிபுத்திரம் என மாற்ற வேண்டும் என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். மேலும் அவர் பனாரஸ் நகரின் பெயர் வாரணாசி என்று மாற்றப்பட்டது, பாம்பே நகரின் பெயர் மும்பை என மாற்றப்பட்ட. இதேபோல் பாட்னாவின் பெயரும் பாடலிபுத்திரம் என மாற்ற வேண்டும் என்று கூறினார். பாடலிபுத்திரம் என மாற்றுவதால் பிரச்சனை எதுவும் ஏற்படாது என்றும் கூறினார்.
பலிகடாவாகும் ஈழத் தமிழர்கள்



2009-ம் ஆண்டு மே 21-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றி பெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் ராஜபட்ச பேசும்போது, இந்தியாவின் போரையே நான் நடத்தினேன் என பகிரங்கமாக அறிவித்தார். இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய ராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததைத் தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார். கடந்த ஓராண்டில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுத்துறைச் செயலரும் பலமுறை கொழும்புக்குச் சென்று ராஜபட்சவுக்கு நன்றிகூறி பேச்சுவார்த்தை நடத்தித் திரும்பினார். ஓராண்டு கழித்து வெற்றி வீரராக தில்லியில் அடியெடுத்து வைத்த ராஜபட்சவுக்கு, இந்திய அரசு ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தது. தில்லியில் அவர் தங்கிய ஒரே நாளில் ஏழு உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இந்தியாவில் சிறப்புப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்பது முக்கியமான உடன்பாடாகும். இந்த உடன்பாட்டுக்கு அவசியம் என்ன? இலங்கைக்கு அருகில் உள்ள ஒரே நாடான இந்தியா மிகச்சிறந்த நட்பு நாடாகும். அப்படியிருக்கும்போது மேலும் மேலும் சிங்கள ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டிய நோக்கம் என்ன? போர் உச்சகட்டமாக நடந்த கடந்த ஆண்டு இலங்கையின் பாதுகாப்புச் செலவு 210 பில்லியன் ரூபாய்களாகும். போர் முடிந்து புலிகளும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2010-ம் ஆண்டு பாதுகாப்புச் செலவுக்காக கிட்டத்தட்ட அதே அளவு தொகையான 201 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு ராணுவ ரீதியாக உதவுவது என்பது நாளை இந்தியாவுக்கு எதிராகவே திரும்பாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க இந்தியா ரூ. 1,000 கோடி வழங்க முன்வந்துள்ளது. சிங்களப் பகுதியில் ஏராளமான தரிசு நிலங்கள் உண்டு. அனல் மின் நிலையங்களை அங்குதான் அமைப்பது வழக்கம். ஆனால், திரிகோணமலைக்கு அருகே மக்கள் செறிந்து வாழும் சம்பூர் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள மக்களை எல்லாம் விரட்டியடித்து அனல் மின் நிலையம் அமைக்க ஒதுக்கியுள்ளது சிங்கள அரசு. காலங்காலமாக சம்பூரில் வாழ்ந்து சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்களின் கதி என்ன என்பது குறித்து இந்தியா கவலைப்படவில்லை. இலங்கையின் ரயில்வே புனரமைப்புக்காக ரூ. 4,000 கோடியைத் தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் ரயில்வே திட்டங்கள் போதுமான பணம் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. தமிழர் பகுதியில் உள்ள காங்கேசன் துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றைத் திருத்தி நவீனமயமாக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு எப்படியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஆனால், இதன் மூலம் சிங்களப் படைகள் விரைவான முறையில் தமிழர் பகுதிகளில் வந்திறங்கி அவர்களைத் தாக்க முடியும். வேறு பயன் எதுவும் இல்லை. ஏனெனில், இலங்கையில் கொழும்புத் துறைமுகம் மட்டுமே சர்வதேசத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியும், இறக்குமதியும் அதன் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். தூத்துக்குடி - கொழும்பு, தலைமன்னார் - ராமேசுவரம் ஆகியவற்றுக்கிடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலும் வெளியில் தங்கள் சொந்தச் செலவிலும் தங்கியுள்ள மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இனிமேல் நீங்கள் உங்கள் நாட்டுக்குத் திரும்பலாம் என்று கூறி விரட்டியடிக்கவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வேறு பயன் எதுவும் இல்ல. 2008-ம் ஆண்டு இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்பட்ட உடன்பாடு மேலும் பலப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு கையெழுத்திட்ட பிறகும் கடந்த 2 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகமாகியிருக்கிறது. ராஜபட்ச தில்லியில் இருக்கும் காலகட்டத்திலேயே ராமேசுவரம் மீனவர்களை சிங்களக் கடற்படை மிகக்கடுமையாகத் தாக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. உடன்பாடுகளில் உள்ள மற்ற அம்சங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சாதகமானதே தவிர ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவையே ஆகும். இந்தியாவுக்கும் இதனால் எவ்விதப் பயனும் இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தமிழக முதலமைச்சர் அனுப்பி வைத்த தூதுக்குழுவிடம் ராஜபட்ச பேசும்போது, இன்றிலிருந்து 15 நாள்களில் முள்வேலி முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்படுவது தொடங்கும்; மூன்று மாதத்தில் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தார். ஓராண்டு காலத்துக்கு மேலாகியும் அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். விடுவிக்கப்பட்டவர்களும் அவர்கள் ஊர்களுக்குத் திரும்பினாலும் வாழ முடியவில்லை. வீடுகள் எல்லாம் குண்டு வீச்சால் இடிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ் - தி.மு.க. தூதுக்குழுவை நமது முதலமைச்சர் தில்லிக்கு அனுப்பி ராஜபட்சவிடம் முறையீடு செய்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வெளியே வந்தபோது தனது திருப்தியின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியா புறப்படுவதற்கு முன் ஜூன் 7-ம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராஜபட்ச அழைத்துப் பேசினார். அந்தப் பேச்சில் நடந்தவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு கூறியிருக்கிறார்: ""போரினால் அழிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்றும் இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டபோது, அவற்றுக்கான நிதிவசதி அரசிடம் இல்லை என்று ராஜபட்ச கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு குறித்துப் பேச முற்பட்டபோது சிங்கள மக்கள் தனக்கு வழங்கிய ஆணைப்படிதான் எதையும் தன்னால் செய்ய முடியும். உங்கள் கோரிக்கைகளைக் கேட்பதற்குத் தயாராக இல்லை என ராஜபட்ச கண்டிப்புடன் கூறினார். மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வளையங்களாக அறிவித்து ராணுவம் கைப்பற்றியதை மீண்டும் மக்களிடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் குறித்து நாங்கள் முறையிட்டபோது இலங்கை சிங்கள நாடு; எங்கு வேண்டுமானாலும் குடியேற சிங்களர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார்'' எனத் தெரிவித்திருக்கிறார். போரில் தனக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி கூற வேண்டும் என்பதற்காக ராஜபட்ச இங்கு வரவில்லை. மாறாக, அவருக்கு உலக அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, மேற்கு நாடுகள் உள்பட பல உலக நாடுகள் ராஜபட்சவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதிலிருந்து தாம் தப்புவதற்காக இந்தியாவின் உதவியை நாடி அவர் வந்திருக்கிறார். இந்தியாவின் துணையுடன் ஈழத்தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையில் தான் முயல்வதாக ஒரு மாயத்தோற்றத்தை அவர் ஏற்படுத்த விரும்புகிறார். இந்த கபட நாடகத்துக்கு இந்திய அரசும் துணைபோகிறது. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உள்பட்ட சின்னஞ்சிறிய நாடான இலங்கையை எப்படியாவது திருப்தி செய்து தனது பக்கம் வைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு பெருமுயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளின் விளைவுகள் விபரீதமாகவே அமைந்துவிட்டன. ஜவாஹர்லால் நேரு வகுத்த நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கை இந்திரா காந்தி காலம் வரையில் முழுமையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால், ராஜீவ் காலத்தில் ஒரு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. பிரதமருக்கு அதிகாரிகள் வழிகாட்டத் தொடங்கினார்கள். நேரு, இந்திரா காலங்களில் மிகப்பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க நாடுகள் இந்தியாவின் வழிகாட்டுதலுக்கு இணங்க அணிசாரா கொள்கையைப் பின்பற்றின. இதன் விளைவாக, அந்நாடுகளின் இயற்கையான தலைமை இந்தியாவை வந்தடைந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போயிற்று. அணிசாரா நாடுகள் மட்டும் அல்ல, அண்டையில் உள்ள தெற்காசிய நாடுகளே இந்தியாவின் தலைமையை ஏற்கவில்லை. இதன் விளைவாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் தேர்தல் நடைபெற்றபோது, அத்தேர்தலில் இந்தியா பரிதாபகரமான தோல்வியைத் தழுவ நேர்ந்தது. நேரு காலத்தில் இலங்கையில் அந்நிய வல்லரசுகள் நுழையத் தயங்கின. ஆனால், ஜெயவர்த்தன காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிப்பதன் மூலம் நெருக்கமான உறவு கொண்டன. 1984-ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலிய மொசாட் படையினர் இலங்கைக்கு வந்து சிங்களப் படையினருக்குப் பயிற்சி கொடுத்தார்கள். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கான பயிற்சிகளை அளித்தார்கள். இந்த இரண்டரை ஆண்டுகளில் சிங்கள ராணுவம் ஐந்து மடங்கு பெருகியதற்கு மேற்கு நாடுகளின் உதவியே காரணம். இதனால் இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்த இந்திரா, இதற்குப் பதிலடியாக ஈழத்தமிழரை வலுப்படுத்தத் திட்டமிட்டார். ஈழப்போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தார். ஏனெனில், சிங்களரை அவர் ஒருபோதும் நம்பவில்லை. சீனப் படையெடுப்பு, வங்க தேசப்போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை செய்த துரோகத்தை அவர் மறக்கவில்லை. திரிகோணமலையை அமெரிக்கக் கடற்படைத் தளத்துக்குத் தாரைவார்க்க ஜெயவர்த்தன முன்வந்தபோது அதற்குக் கடும் கண்டனத்தை இந்திரா தெரிவித்தார். அதன் விளைவாக, அந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. ராஜீவ் காலத்தில் நிலைமை அடியோடு மாறியது. அரசியல் அனுபவமோ, குறைந்தபட்ச ராஜதந்திர அறிவோ, தொலைநோக்குப் பார்வையோ கொஞ்சமும் இல்லாதவர் ராஜீவ் என்பதைப் புரிந்துகொண்ட அதிகாரிகள், அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கினார்கள். இதை உணர்ந்த ஜெயவர்த்தன விரித்த வஞ்சக வலையில் ராஜீவ் விழுவதற்கு ரொமேஷ் பண்டாரி, ஜே.என்.தீட்சித் போன்ற அதிகாரிகள் உதவினார்கள். ராஜீவ் - ஜெயவர்த்தன உடன்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக இந்திய ராணுவம் முதன்முறையாக இந்தியாவின் எல்லைக்கு வெளியே அந்நிய நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டது. இதன் விளைவாக, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தொடக்க காலத்திலிருந்து இந்தியாவைத் தங்களது இரண்டாவது தாயகமாகக் கருதிவந்த ஈழத்தமிழர்கள், இந்தியாவை வெறுக்கத் தொடங்கினார்கள். பிற்காலத்தில் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன. ராஜீவின் தவறான கொள்கைகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஊக்குவித்தன. ஈழத்தமிழர்களின் வலிமைக் கரமாக விளங்கிய விடுதலைப் புலிகளை ஒடுக்க உதவுவது, சிங்களப் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் என்பதையோ எதிர்காலத்தில் இந்திய எதிர்ப்பில் ஊறிப்போன சிங்களரை சீனா பக்கம் கொண்டுபோய்ச் சேர்க்கும் என்பதையோ ராஜீவோ மேற்கு நாடுகளோ கொஞ்சமும் உணரவில்லை. மேற்கு நாடுகள் ஒரு கட்டத்துக்கு மேல் தனக்கு உதவ முன்வர மாட்டார்கள் என்பதை உணர்ந்தவுடன் இந்தியாவுக்கு எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு பூண இலங்கை முயற்சிகளை மேற்கொண்டது. ராஜீவுக்குப் பிறகு வந்த காங்கிரஸ் அல்லது அதன் ஆதரவு பெற்ற பிரதமர்கள் அதிகாரிகளின் வழிகாட்டலையே பின்பற்றினார்கள். சிறிது சிறிதாக சீனா, பாகிஸ்தானின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவருவது குறித்தும் அதனுடைய விளைவுகள் குறித்தும் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை. பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கைக்கு ராணுவ ரீதியான எந்த உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது என்ற முடிவெடுப்பதற்குக் காரணமாக இருந்தார். அதேவேளையில் பிற அந்நிய நாடுகள் இலங்கையில் ஊடுருவுவதையும் கண்டிக்க அவர் தவறவில்லை. 2003-ம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி மத்திய ஆட்சியைக் கைப்பற்றியபோது ராஜீவ் காந்தியின் செல்லாத கொள்கையையே பின்பற்றத் தொடங்கியது. இலங்கைக்கு ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டன என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். இலங்கையில் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் ஒடுக்குவதற்கு சிங்கள அரசுக்கு உதவுவது என்பது, தனது தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும் என்பதை இந்தியா உணரவில்லை. இந்தியப் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் போன்ற அதிகாரிகளே வழிகாட்டிகளாக அமைந்தார்கள். இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கு ஓங்குவதற்குப் பதில் அவர்களின் தவறான ஆலோசனைகளின் விளைவாக இந்தியாவின் பகைநாடுகளின் செல்வாக்கு அங்கு மிகுந்தது. இந்துமாக்கடல் மார்க்கம் சீனாவின் பிடியில் சிக்கிக்கொண்டதை உணர்ந்த மேற்கு நாடுகள் அதிர்ச்சியடைந்தன. ஈழப்போரின் கடைசிக்கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை ஈவுஇரக்கமின்றி சிங்களர்கள் படுகொலை செய்யத் துணிந்தபோது அதைத் தடுக்கும் சக்தி மேற்கு நாடுகளுக்கோ, ஐ.நா.பேரவைக்கோ இல்லாமல்போயிற்று. ராஜபட்சவைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டுமென மேற்கு நாடுகள் ஐ.நா. மனித உரிமை கமிஷனில் குரல் எழுப்பியபோது இந்தியா மீண்டும் மீண்டும் தவறுக்குமேல் தவறு செய்தது. இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற சீனாவுடன் கைகோர்த்து நின்றது. இந்தப் பின்னணியில்தான் ராஜபட்சவுக்கு இந்திய அரசு தில்லியில் ரத்தினக் கம்பள வரவேற்புக் கொடுத்து பல ஆயிரம் கோடிகளை அள்ளித் தரும் உடன்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. இலங்கையை எப்படியாவது தாஜா செய்து இந்தியாவின் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களை இந்தியா கைகழுவிவிட்டது. சிங்கள பலிபீடத்தில் தமிழரைக் காவுகொடுத்தாவது இலங்கையை திருப்திப்படுத்த வேண்டும் என்பதையே தனது கொள்கையாக இந்திய அரசு கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் சீனா பலிபீடத்தில் இந்திய நலன்களைக் காவுகொடுத்துவிட்டது. சிவசங்கரமேனன், எம்.கே. நாராயணன், நிருபமா போன்ற உலகப் பார்வையும், தொலைநோக்கும் அற்ற அதிகாரிகளால் வழிநடத்தப்படும் மன்மோகன் சிங் அரசு எதிர்காலத்தில் தெற்கே தொல்லைதரும் பகைநாடாக இலங்கை விளங்கப்போகிறது என்பதை உணரும்போது காலம் கடந்திருக்கும். எல்லாமே கைமிஞ்சிப் போயிருக்கும். ஈழத்தமிழர்களை இந்தியா நெருக்கடியான காலகட்டத்தில் அடியோடு கைகழுவியது கண்டு தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல, மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் உள்ள உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பெரும் கவலையும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் கொண்டுள்ளனர். சிங்கள அரசைப் பின்பற்றி மேற்கண்ட நாடுகளின் அரசுகளும் தங்களை விரட்டியடிக்க முனைந்தால் இந்தியா தனது கண்களையும் காதுகளையும், வாயையும் பொத்திக்கொள்ளும் என்பதை அவர்கள் உணர்ந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்தியாவின் இந்தத் துரோகம் கண்டு தமிழக மக்களின் உள்ளங்கள் எரிமலையென குமுறிக்கொண்டே இருக்கின்றன. அது வெடிக்கப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கருத்துக்கள்

நெடுமாறன் போன்றோர் தொடர்ந்து இவ்வாறான உண்மைகளை உரைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். சதிக்கூட்டாளி என்பதால் இந்திய அரசு கேளாச செவியாக இருக்கின்றது. ஆனால், தமிழ் மக்கள் இவற்றை உணர்ந்து ஒன்று சேர்ந்தால் வலிமை பெற்று நம் இனத்தைக் காப்பாற்றலாம் அல்லவா? சில காலம் தேர்தலையும் கட்சி அரசியல்களையும் மறந்து இவர் தலைமையில் ஒன்று சேரலாமே! தமிழினப்பகையான இந்தியமும் சிங்களமும் ஒன்று சேர்ந்து தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மக்களுக்கும் வஞ்சகம் புரிகின்றனர். நம்நாடு வலிமையும் வளமும் பெற்றுத் திகழ வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்னும் உண்மையை நாம் ஓங்கி உரைக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/14/2010 4:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சதி... சதி... சதி...தலையங்கம்



அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை. விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில், அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது. தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றால் அவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக் கூடாது. மேலும், பல அப்பாவி உயிர்களைப் பலி கொண்டு தங்களது பழியைத் தீர்த்துக்கொள்ள முயலும் யாரையும், அவர்களது லட்சியம் நல்லதாகவே இருந்தாலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரத்தில், மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் காணப்படும் சில துண்டுப் பிரசுரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவசர ஆத்திரத்தில் சாதாரண பொதுஜனம் முடிவு எடுப்பது சகஜம். பத்திரிகையாளர்கள்கூட பல சந்தர்ப்பங்களில் கண்ணில் தெரியும் தடயங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதிவிடுவதும் உண்டு. அப்படி நடக்கும்போதெல்லாம், காவல்துறையினர் அதை வன்மையாகக் கண்டிப்பதுடன், முழுமையான விசாரணை இல்லாமல் முடிவுக்கு வருவதும், கருத்துத் தெரிவிப்பதும் தவறு என்று பத்திரிகையாளர்களைக் கடிந்து கொள்வதும் உண்டு. ஆனால், விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல்துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை. முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்திருந்தால் அவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதம் எந்தவகையினது ஆனாலும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதுதான். ஆனால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதாவது சக்திகள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு. எல்லா நாடுகளும் அண்டை நாடுகளில் தங்களது உளவுத்துறையின் மூலம் செயல்படுவது புதியதொன்றும் அல்ல. இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சர் என்கிற போர்வையில் தனது குழுவுடன் அழைத்துவந்து இந்தியப் பிரதமருடன் கைகுலுக்க வைத்து தனது தாயகம் திரும்பியிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபட்ச. இதனால் எழும்பியிருக்கும் சர்ச்சையும், இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமும் கொஞ்சநஞ்சமல்ல. சமீபகாலமாக தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஈழத்தமிழர் பிரச்னை இப்போது தேசிய அளவிலான ஊடகங்களில் முன்னுரிமை தரப்படுகின்றன. பிரச்னையைத் திசைதிருப்ப இலங்கை அரசின் உளவுத்துறையேகூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்னையை மூடி மறைக்க முற்பட்டிருக்கக்கூடாது? துண்டுப் பிரசுரத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுப்பது சிறுபிள்ளைத்தனம். யாரும் யார் பெயரிலும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு சம்பவம் நடந்த இடத்தில பார்வையில்படுவதுபோல போட்டிருக்கலாம். பொறுப்பான காவல்துறை அதிகாரிகள், முழுமையான விசாரணையை மேற்கொண்டு துப்புத்துலக்கி தக்க ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்வதுதான் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும். தவறு இழைத்தது, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக இருந்தாலும், இலங்கை அரசின் கைப்பாவைகளாக இருந்தாலும், வேறு தீவிரவாத இயக்கத்தவர்களாக இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சதிகாரர்கள் யாராக இருந்தாலும், அப்பாவி மக்களைப் பழி வாங்காதீர்கள். இந்த நாசவேலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அதற்கு ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும், ராமனுக்கு சடாயு சொன்னதைத்தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சீதையை ராவணன் கவர்ந்து செல்ல, துக்கம் தாளாமல் காணும் அனைத்தின்மீதும் கடும்கோபம் கொள்ளும் ராமனிடம் சடாயு தன் உயிர் பிரியும் முன் சொல்கிறார்: "ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை; உள்ளம் ஆறுதி'. தனிப்பட்ட ஒருவரின் துயரத்தை அனைவருக்குமாக மாற்றுகிற, பழி வாங்கும் படலத்துக்கும், திசைதிருப்பும் முயற்சிக்கும், வெறிச்செயல்களுக்கும் எங்கள் தமிழகம் களமாவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!
கருத்துக்கள்

வன்முறையாளருக்கு எதிரான வன்முறை உணர்வு வருவது இயற்கையே. ஆனால், தொடர்பில்லாத பொதுமக்களுக்கு எதிரான வன்முறை என்பது எக்காலத்திலும் ஏற்கத்தக்கதல்ல. இதனைத் தமிழ் ஈழ விடுதலைப் போராளிகள் பின்பற்றி வந்தமையால்தான் சிறையை உடைக்கும்பொழுது கூட யாருக்கும் தீங்கிழைக்காமல் தம்மவர்களை மீட்டுக் கொண்டு திரும்பி வந்துள்ளனர். ஈழவன் குறிப்பிட்டாற்போன்று அருகே உள்ள சிங்கள மக்களைப் பழிவாங்காதவர்கள்- அவர்கள் அழித்தொழிக்கப்பட்பட்டதாகக் கூறும் இச் சூழலில் இங்குவந்தா அழிவு வேலைகளில் ஈடுபடுவார்கள்? மிகச் சரியாக நடுநிலையுணர்வுடன் ஆசிரியவுரை அமைந்துள்ளது. பாராட்டுகள். ஒரு வேளை இந்திய உளவுத்துறையின் சதியாகக் கூட இருக்கலாம். தமிழகக் காவலதுறைக்குக்கூடப் பங்கிருக்கலாம். இல்லையேல் தினமணி கூறுவதுபோல் அவசரப்பட்டு உளற வேண்டிய தேவையில்லையே! வன்முறையாளர் சதியாக இருப்பின் மக்கள் உயிர்களைப்பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆட்சியாளர் பங்கு இருப்பாதால் உயிரிழப்பு பெருஞ்சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சி அழிப்பு வேலையைச் செய்து துண்டறிக்கையையும் போட்டிருப்பார்கள்.எவ்வாறாயினும் வன்முறைகளுக்குக் களமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டா.

By Ilakkuvanar Thiruvalluvan
6/14/2010 4:03:00 AM

Tamils if they want to kill people they could kill thousands of Sinhala people when they were lost battle time(2009 May) but they did not kill any sinhala civilions. Even they were losing their lives they didn't kill any one of sinhalaease. How you expected they will kill our Tamils? You know who like kill Tamils. All north Indians and Sinhala People want to kill Tamil.

By EElavan
6/14/2010 3:34:00 AM

உங்கள் கருத்து நன்றாக உள்ளது,அதே சமயம் மிக அருமை

By பின்னை ஜாபர்
6/14/2010 3:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்