பாராட்டுகள். பாராட்டுகள். மத்திய அரசு தன் நிலைப்பாட்டை மாற்றி்க் கொள்ளா விட்டால் தமிழக அரசு மீனவர் நலன் கருதி நெய்தல்நிலக் காவற்படை ஒன்றை அமைத்து மீனவர்கள் உயிரையும் நலனையும் காக்கும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். துணிவுள்ளவர் என்னும் பெயர் பெற்றுள்ள
முதல்வர் துணிந்து அறிவித்து அவ்வாறே செய்ய வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
இது நடைமுறைக்கு ஒத்துவராத, விபரீத விளைவை ஏற்படுத்தக் கூடிய, மூர்க்கத்தனமான நிலைப்பாடு ஆகும். பாக் நீரிணைப் பகுதியில் எல்லை வரம்பு இல்லாமல் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து...
தாய்நாட்டு விடுதலைக்காகப் போரிடுபவர்களை அழித்து விட்டாலும் தலைவர்களைச் சிறை செய்து விட்டாலும் அமைதி திரும்பும் என்ற நோக்கில் கூட்டுப்படு கொலைகளுக்கு உடன்பட்டு விட்டு இப்பொழுது நீலிக்கண்ணீர் விடுவதால் என்ன பயன்? தமிழ் நாட்டு மீனவர்களைக்கூடக் காப்பாற்ற வழியின்றிக் கவலைதான் தெரிவிக்க முடிகின்றது என்றால் அதற்கொரு அரசு தேவைதானா? என்றுதான் மக்கள் உள்ளங்களில் எழுகின்றது .எனவே. தேர்தல் நோக்கில் பார்க்காமல் மடல்கள் அனுப்பாமல் முதலைக்கண்ணீர் விடாமல் மிக மிக மிகக் குறுகியக்காலக் கெடு வைத்து அனைத்துச் சிக்கல்களையும் தீர்கக வேண்டும். இல்லையேல்அமைதி காத்தால் போதுமானது.
சென்னை, ஜன.7: இலங்கையில் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அரசியல் தீர்வுக்கு ஆரம்பகட்ட முயற்சிகள்கூட மேற்கொள்ளாமல் இருப்பதும் கவலையளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பர்னாலா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை: சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் இருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல், தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பகட்ட முயற்சிகள் கூட இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது தமிழக அரசுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் துயரைப் போக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
அறிஞர்களின் பெயர்களுக்கான விருதாளர்கள் சரியான தேர்வு. அரசியல் தலைவர்களின் பெயர்களில் வழங்கப்படும் விருதுகள் கட்சி அரசியல்சார்புடையன என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனினும் விருதாளர்களுக்குப் பாராட்டுகள்.
சென்னை, ஜன.4- தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெருமக்கள் ஆகியோருக்கான தமிழக அரசின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.விருது பெறுவோர் விவரம் வருமாறு:2011-ம் ஆண்டுக்கான “அய்யன் திருவள்ளுவர் விருது” - முனைவர் பா. வளன் அரசு 2010-ம் ஆண்டின் சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருது” - கோ. சாமிதுரை “அறிஞர் அண்ணா விருது” -. து. ரவிக்குமார், எம்.எல்.ஏ"அம்பேத்கர் விருது” - திருமதி டி. யசோதா, எம்.எல்.ஏ.“பெருந்தலைவர் காமராசர் விருது” - திருமதி. ஜெயந்தி நடராஜன், எம்.பி. “பாரதியார் விருது” - நா. மம்மது “தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது” - பேராசிரியர் அ. அய்யாசாமி“பாவேந்தர் பாரதிதாசன் விருது” - முனைவர் இரா. இளவரசு“முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது” - முனைவர் இரா. மதிவாணன் விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியுடன், தங்கப்பதக்கமும், தமிழக அரசின் சார்பில் அணிவிக்கப்படும். வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குவார்.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்.ஆட்சியில் மக்களுக்கு மனநிறைவு இருப்பதாக எண்ணமோ? தமிழர்களைப்படுகொலை புரியும் தமிழ்ப்பகையான காங்.உடன் கூட்டு வைத்ததால்தான் தி.மு.க. மதிப்பு வீழ்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளும் காங்.ஐக் கை கழுவினால் அனைவர்க்கும் நல்லது என்ற எண்ணம் பரலவாக மக்கள் மத்தியில் உள்ளதையும் இராகுலிடம் எடுத்துச் சொலலுங்கள்.
சென்னை, டிச. 22: தமிழகத்தில் இப்போதுள்ள ஆட்சியில் தங்களுக்குத் திருப்தி இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். இரண்டு நாள் பயணமாக அவர் புதன்கிழமை தமிழகம் வந்துள்ளார். சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய இடங்களில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். சென்னையில் வானகரத்தில் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், தனது பேச்சின் நிறைவில், ""இப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் பிடிக்காதவர்கள் யார் யார்?'' என்று ராகுல் கேள்வி எழுப்பினார். அரங்கில் இருந்தவர்களில் ஏறத்தாழ அனைவருமே கைகளை உயர்த்தி, தங்களுக்கு இந்த அரசியல் பிடிக்கவில்லை என்று தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில், ராகுல் தமிழகத்தில் பயணம் மேற்கொண்டிருப்பதால், கூட்டணி பற்றி அவர் ஏதாவது கருத்து கூறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டணி பற்றி அவர் நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், இப்போதைய அரசியல் பிடிக்காதவர்கள் யார் என்று எழுப்பிய கேள்வியின் மூலம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்தை அறிந்து கொண்டுள்ளார் என கட்சியினர் தெரிவிக்கின்றனர். சென்னையில் நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் நெருக்கமாக இருந்து கடுமையாக உழைத்தால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இளைஞர் காங்கிரஸில் இருந்தேகூட ஒருவர் முதல்வர் பதவிக்கு வர முடியும் என்று கூறினார். ""வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எத்தனை இடங்கள் வழங்கப்படும்?'' என்று ஒரு நிர்வாகி கேட்டார். ""இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எத்தனை சதவீத இடங்கள் வழங்கப்படும் என்பதை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இடங்களைப் பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வேன். கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவீத இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார் ராகுல். ""கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்குமாறு நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் இப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் நாங்கள் மக்களைச் சந்திக்கச் சென்றால் அது பற்றி கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். அதனை எப்படி எதிர்கொள்வது?'' என இன்னொரு நிர்வாகி கேட்டார். ""விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. விலைவாசியைக் குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை பிரதமர் பார்த்துக் கொள்வார். எனவே, விலைவாசி உயர்வு குறித்து நாம் கவலைப்பட வேண்டாம்'' என்றார் ராகுல் காந்தி. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் அறிவுஜீவிகளைச் சந்தித்துப் பேசிய ராகுல், இலங்கையில் தமிழர்களுக்கான நிவாரணப் பணிகளில் அந் நாட்டு அரசு மேற்கொண்டுள்ள பணிகள் திருப்திகரமாக இல்லை என்று கூறினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளில் உள்ள தலித் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. அதில் பேசிய ராகுல் காந்தி, கக்கன், இளையபெருமாள் போன்ற தலைவர்கள் மீண்டும் உருவாகாமல் போய்விட்டார்கள் என வருத்தம் தெவித்தார். கல்விக்கடன் சரியாகக் கிடைப்பதில்லை என்று நிர்வாகிகள் கூறியபோது, ""கக்கன் போன்ற ஒருவர் அமைச்சராக இருந்திருந்தால், இந்தக் கடன்கள் கிடைத்திருக்குமா?'' என கேட்டார். எல்லோரும் ""ஆமாம்'' என பதில் அளித்தனர். ""அப்படியானால் நீங்கள் அவரைப் போன்ற தலைவர்களாக உருவாக முயற்சிக்க வேண்டும்'' என்றார் ராகுல்.
செவ்வாய், 12 அக்டோபர், 2010
கேரள லாட்டரி வழக்கிலிருந்து தமிழக அட்வகேட் ஜெனரல் விலகல்: முதல்வர் கருணாநிதி
First Published : 12 Oct 2010 12:56:27 AM IST
Last Updated :
சென்னை, அக். 11: கேரள லாட்டரி வழக்கிலிருந்து தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தன்னை விடுவித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். பூடான் லாட்டரிக்கு கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து, அந்த மாநில லாட்டரி ஏஜெண்டான "மெகா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் அந்த நிறுவனம் சார்பில் தமிழக அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடினார். இது, கேரளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை தொடர்பாக, கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த 8-ம் தேதி கடிதம் எழுதினார். இதற்குப் பதிலளித்து, கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தமிழக அட்வகேட் ஜெனரலாக உள்ள பி.எஸ். ராமன், தமிழகத்துக்கு எதிரான வழக்குகளில் மட்டுமே ஆஜராகக் கூடாது என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். தமிழக அட்வகேட் ஜெனரல் வேறு வழக்குகளில் ஆஜராகலாம். தங்களது மாநிலத்தின் லாட்டரி வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் அவர் ஆஜராகியுள்ளார். எனவே, அவர் ஆஜராவதற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை. என்றாலும் இந்தப் பிரச்னை தொடர்பாக தங்களது மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி எனக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். இதுபோன்ற வழக்குகளில் அவர் ஆஜராக சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை என்ற போதிலும், "லாட்டரி வழக்கில் ஆஜராக வேண்டாம்' என்று பி.எஸ்.ராமனை கேட்டுக் கொண்டேன். எனது கோரிக்கையை ஏற்று வழக்கில் ஆஜராகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனவே, இந்தப் பிரச்னைக்கு இத்துடன் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை: இலங்கை தமிழ் எம்.பி.க்கள்
First Published : 21 Jul 2010 12:59:25 AM IST
Last Updated : 21 Jul 2010 03:52:36 AM IST
சென்னை, ஜூலை 20: இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், விநாயகமூர்த்தி ஆகிய 6 தமிழ் எம்.பி.க்கள் ஜூலை 9-ம் தேதி முதல் 5 நாள்கள் புது தில்லியில் முகாமிட்டு இந்தியத் தலைவர்களை சந்தித்துப் பேசினர். பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா, ப.சிதம்பரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரை தமிழ் எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்தனர். புது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய தமிழ் எம்.பி.க்கள், மீண்டும் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் "தினமணி'க்கு அளித்த பேட்டி: இலங்கையில் இன்னும் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த இடங்களில் குடியேற முடியாமல், ராணுவத்தின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். அடியோடு இடிந்து சிதிலமான வீடுகளைப் புதுப்பித்து தர இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்திய அரசு அளித்த நிதியில், குடில் அமைக்கத் தேவையான 10 தகரம், 3 மூட்டை சிமெண்ட் மட்டும் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் மக்கள் பலரும் இப்போது வீதிகளிலும், மர நிழல்களிலும் வசிக்கும் அவல நிலை வடக்குப் பகுதியில் உள்ளது.தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் செய்யாத இலங்கை அரசு, தமிழர்களின் சொந்த மண்ணில் சிங்கள குடியேற்றங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.இப்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் 1 லட்சம் சிங்கள ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அங்கேயே குடும்பத்துடன் குடியமர்த்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 லட்சம் சிங்களவர்களை வடக்குப் பகுதியில் குடியமர்த்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.தமிழர்களின் விவசாய நிலங்களைப் பிடுங்கி, சிங்களவர்களிடம் கொடுக்கும் அவலமும் நடைபெறுகிறது. மொத்தத்தில் இப்போது முழுமையான தமிழர் பூமியாக உள்ள இலங்கையின் வடக்குப் பகுதியை, இன்னும் பத்தாண்டுகளுக்குள் சிங்கள மக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.தமிழ் மக்களின் மண்ணைப் பாதுகாப்பதுதான் இப்போது அவசரத் தேவையாக உள்ளது. எனவே, போரின்போது இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் அனைவரையும் அவரவர் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தவும், தமிழ் மக்களின் வீடு, விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் இந்திய அரசு தலையிடுவது மிக அவசியமாக உள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிரச்னை குறித்து பல வெளிநாட்டு தூதுவர்கள், தலைவர்களிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். அவர்கள் அனைவருமே, இந்தப் பிரச்னையில் இந்திய அரசு என்ன நிலைப்பாடு கொண்டுள்ளது என்ற கேள்வியையே கேட்கின்றனர். இலங்கை இனப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்க சர்வதேச சமுதாயம் தயாராக உள்ளது. எனவே, இலங்கையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் சுதந்திரமாக வசிக்கவும், தமிழ் மக்கள் விரும்பக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவும் இந்திய அரசு மனது வைத்தால் மட்டுமே முடியும். இலங்கை இனப் பிரச்னை தீர இந்திய அரசை விட்டால் வேறு வழியில்லை. இந்திய அரசால் மட்டுமே இலங்கை அரசை வற்புறுத்தி ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தித் தர முடியும். இதைத்தான் எங்கள் பயணத்தின்போது இந்தியத் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். இலங்கை தமிழ் மக்களை இந்திய அரசு கைவிடாது என்றும், மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைந்து செயல்பட்டு, தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். இதைத்தான் நாங்கள் தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் வலியுறுத்தினோம். மத்திய அரசிடம் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவரும் உறுதியளித்துள்ளார். தமிழகத்துக்கு முக்கிய பங்கு: எனினும், தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், தமிழக மக்கள் என தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் அரசியல் மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, ஒற்றுமையாக, ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் மட்டுமே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு விரைவுபடுத்தும். ஆறு கோடி தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுத்தால், மத்திய அரசு அதைப் புறக்கணித்து விடாது.இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்துள்ள நாங்கள், விரைவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளோம் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
கருத்துக்கள்
கொலைப்பணியில் ஈடுபடுவதை இந்தியாநிறுத்த தமிழ்நாடு அழுத்தம் கொடுக்கும் என்னும் நப்பாசையில் வருகின்றார்கள். சிங்களத்திற்கு ஆதரவான நிலை என்பது இந்தியப் பாதுகாப்பிற்குக் கேடானது எனத் தெரிந்தும் அவர்கள் பக்கம் இருக்கின்றது. எனினும் இந்தியா மனம் மாறும் என்னும் நம்பிக்கையில் இவ்வாறு கூறுகிறார்கள். நன்னம்பிக்கையின் அடிப்படையில் கூறவில்லை. வேறுவழியின்றி இவ்வாறு கூறுகிறார்கள். எனவே,இந்தியாவை நம்பஇயலாவிடிலும்,தமிழக மக்கள் ஒருமித்த குரலில் அதன் போக்கை மாற்ற வலியுறுத்தினால் இந்தியம் மாறலாம்.அவ்வாறு இல்லாவிடில் இந்தியம் மாறும் வரை தமிழகம் ஒன்றுபடவேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2010 1:20:00 PM
தினமலர் வாசகர்கள் என்ற பெயரில் கலைஞரை திட்டியே கருத்து வருகிறதே நாங்கள் கூறூம் நியாயமான கருத்துக்களை ஏன் போடமாட்டேன் என்கிறீர்கள் உங்கள் கருத்தை வாசகர்கருத்தாக போடுகிறீர்கள் இப்பொழுதெல்லாம் தினமலர் பத்திரிக்கையை பார்ப்பனபத்திரிக்கை என்று தாழ்த்தபட்ட,மிகவும் பிற்படுத்தபட்ட மக்கள் படிப்பதே இல்லை இதே நிலை நீடித்தால் பார்ப்பன எதிர்ப்பு போராட்டம் நடத்தவேண்டியிருக்கும்
By vadukanathan
7/21/2010 12:22:00 PM
yes you are right, we always strong
By raghupathy
7/21/2010 10:47:00 AM
இலங்கை எம்.பி குழு சொல்வது மிக சரியான வழி. இங்கே உள்ள அரசியல் அனாதைகள் வைகோ , நெடுமாறன் , சீமான் ஆகியோர் சுயநலத்துக்காக குரைப்பதை நிறுத்த வேண்டும் .
By Inam
7/21/2010 6:45:00 AM
ராஜீவ்-ஜெயவர்தனே ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டாலே போதுமானது. அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
By நாடோடி
7/21/2010 6:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
செவ்வாய், 20 ஜூலை, 2010
சிறப்புத் தூதரை இந்தியா அனுப்ப வேண்டியதில்லை: இலங்கை
சிறப்புத் தூதரைக் கண்டு ஒன்றும் சிங்களம் அஞ்சவில்லை. அவ்வாறு வருபவர் வழக்கம்போல் சிங்களத்திற்கு எந்த வகையில் துணை நின்று தமிழினத்தை அழிக்கலாம் என அறிவுரை கூறத்தான் வருவார் எனத் தெரியாதா? இந்த அறிவிப்பிற்கான காரணம் இந்தியத்துடன் மிகுந்த செல்வாக்கு உள்ளது தமிழக முதல்வருக்கா அல்லது சிங்களத் தலைவருக்கா என உணர்த்துவதற்காக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:45:00 AM
விலைவாசியைக் குறைக்க முடியவில்லை. உள்நாட்டுச் சட்டம் ஒழுங்கை முறையாகப் பாதுகாக்க முடியவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள விவசாயம் பாதுகாக்கப்படவில்லை. கல்வி, சுகாதாரம், சாலைகள் மேம்பாடு என்று அரசின் அடிப்படைக் கடமைகள் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ரூபாய்க்கு ஓர் அடையாளச் சின்னம் ஏற்படுத்தி ஆனந்தப்படுகிறோம். அடையாளங்களால் ஆகப்போவதுதான் என்ன? தமிழுக்கு செம்மொழி என்று கூறிக்கொண்டு தெலுங்கன் கருணாநிதி தமிழையும் தமிரையும் கூடு சேர்ந்து படுகொலை செய்கிறான் திருப்பி கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்கிறான் தமிழரை சிறையில் அடைத்தே தீருவேம் என்று தெலுங்கன் தங்கபாலுவும் சிதம்பரமும் கூட அறிக்கை விடுகிறான்கள் தெலுங்கரின் ரவுடீசம் எல்லை மீறியுள்ளது
By naam tamilar
7/20/2010 3:28:00 AM
According to Srilankan President and his brothers Mr. Karunanithi is a joker. So,Srilankan Government depend of Mr. Manmohan Sing and Sonia Gandi. They, both Mr.Rajapaska and His brohter Kothabaya Rajapaksha never care Tamilnadu CM because they know CM has no power ti interveien in Srilankan Tamils issues. Good Luck Mr. Karunanithi Sir. Also Mr. Chithambaram said Indian send money to build airports, build house , roads, and other government building. including Prabaharan or Srilankan political leaders like Mr.G.G. ponnamplam, Mr. Selvanayakan, Mr. Amirthaingam etc. ask India to free Srilankan Tamil from Sinhapese oppressors. Srilanka ordinary people not ask money from India instead they ask India since mrs. Indira Gandi era help to build a free indepentdent country for the Tamil nation who suffer since 1951.
சென்னை, ஜூன் 14: இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலேயே, தமிழர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா. அவர் இப்போது காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பித்து கொழும்பு சென்று விட்டார். மத்திய அரசால் தப்பிக்க வைத்து, அனுப்பப்பட்டுள்ளார் என்பதே சரியானதாகும். டக்ளஸ் தேவானந்தா பற்றிய தகவல் தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், தேவானந்தா குறித்து தில்லிக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந் நிலையில் அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்கியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்பிச் சென்றுள்ளது, ஒரு குற்றவாளியை தப்பிக்க வைக்கும் மத்திய அரசின் உள்நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என தெளிவாகத் தெரிந்தும், தீர்ப்பு வரட்டும். பார்க்கலாம் என்று ப. சிதம்பரம் கூறியிருப்பது, கண்டனத்துக்குரியது. தமிழர்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு இப்போது உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழ் அமைச்சர்களும் அவ்வாறுதான் உள்ளனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போயிருக்கும் மத்திய அரசு, தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என்று இப்போது கூறியிருக்கிறது. இதற்கு முன்பு அளிக்கப்பட்ட ரூ.1000 கோடி, தமிழர்களுக்காக செலவிடப்பட்டதாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான விவரங்களைப் பெற மத்திய அரசு முயற்சிக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பெயரில் கொடுக்கப்படும் பணம், அவர்களுக்குதான் பயன்படும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை. ù தாடர்ந்து தமிழர் எதிர்ப்பு நிலையையே மத்திய அரசு எடுத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்த நிலையிலும் இப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி பாராமுகமாக இருப்பது நல்லதல்ல. எனவே, கருணாநிதி உடனே தலையிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்
உண்மையைத்தான் சொல்லுகிறார் பொன்.இராதாகிருட்டிணன். ஆனால், மத்திய அரசு கொள்கையே எங்கள் கொள்கை எனக் கூறும் தமிழக அரசு தமிழர் எதிர்ப்பு நிலையைக் கைவிடுமாறு மத்திய அரசிடம் சொல்லும் என எதிர்பார்ப்பது அறியாமையே. தமிழக அரசின் நிலையைத் / தமிழர்களின் உணர்வை மத்திய அரசிற்கு உணர்த்தும் நிலையை /மத்திய அரசிற்கு உணர்த்துவதே கடமை எனத் தமிழக அரசு நினைத்திருநதால் பேரின அழிப்பு நடைபெற்றிருக்காதே. எனவே, நாடு தழுவிய நிலையில் தன் கட்சி மூலம் இதனை அறிவுறுத்தும் கடமையை அவர் மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்