ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மதுரை மல்லி இந்தியாவின் புவியியல் மலராகிறது: Madurai malli-geography flower of india

மதுரை மல்லி இந்தியாவின் புவியியல் மலராகிறது: பதிவுரிமை வழங்க முடிவு
மதுரை மல்லி இந்தியாவின் புவியியல் மலராகிறது: பதிவுரிமை வழங்க முடிவு
சென்னை, செப். 30-

மயங்க வைக்கும் நறுமணம் கொண்ட ‘மதுரை மல்லி’ நமது நாட்டின் புவியியல் அடையாளத்துக்குரிய முதல் மலராக அறிவிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டஙக்ளில் மதுரை மல்லி வகை பூச்செடிகள் பயிரிடப்படுகின்றன. இவ்வகை பூக்களின் இதழ்கள் வட்ட வடிவில், நான்கு அடுக்கு கொண்டவை.

மதுரை மல்லி மொட்டுக்கள் தாமதமாகவே விரிகின்றன. இதனால் மனதை மயக்கும் ஆழ்ந்த நறுமணம் கொண்ட இவ்வகை பூக்கள் பெண்களின் விருப்பதேர்வாக உள்ளது.

பயிரிடப்பட்ட 6 மாதங்களில், பலன் அளிக்கும் மதுரை மல்லி செடிகள், முதல் ஆண்டு மகசூலில் ஏக்கருக்கு 750 கிலோ வரை பூக்கும். 2-ம் ஆண்டில் 2 ஆயிரம் கிலோ, 3-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 500 கிலோ, 4-ம் ஆண்டிலிருந்து 3 ஆயிரத்து 500 கிலோ என்று இதன் மகசூல் அதிகரித்துக் கொண்டே போகும். தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை இவ்வகை செடிகளில் மொட்டு அரும்புவது இயல்பு.

மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் விவசாயிகள் மதுரை மல்லியை விளைவித்து வருகின்றனர். தனியார் அமைப்பு ஒன்று, மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மதுரை மல்லி விவசாயிகள் சங்கம் மூலமாக மதுரை மல்லி பூக்களுக்கு பதிவுரிமை கோரி சென்னையில் உள்ள புவியியல் அடையாள பதிவாளர் அலுவலகத்தில் மனு செய்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மேற்கண்ட அலுவலகத்தின் செய்தி குறிப்பில், மதுரை மல்லிக்கு இந்திய புவியியல் அடையாள மலர் என்ற தகுதியை தருவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் நபர்கள் தங்களது கருத்துக்களை எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விளை பொருட்கள் பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம் (2002)ன் படி, ஆட்சேபனைகள் ஏதும் பெறப்படபாத பட்சத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி, இந்தியாவிலேயே முதல் முறையாக பதிவுரிமை மற்றும் பாதுகாப்புரிமை பெற்ற முதல் மலர் என்ற பெருமையை மதுரை மல்லி பெறும்.

வணிகப் பொருள்கள் மற்றும் புவியியல் அடையாள விளைப்பொருட்கள் துணை பதிவாளர் ஒருவர் இதுபற்றி கருத்து கூறுகையில், இந்த பதிவின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மல்லி உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள். நாட்டின் பிற பகுதியினர் அங்கீகாரமற்ற வகையில் பதிவுரிமை பெற்ற பொருட்களை பயிரிட முடியாத வகையில் அவர்கள் சட்ட ரீதியான பாதுகாப்பும் பெறுவார்கள் என்றார்.

DDoS attacks on TamilNet foiled

DDoS attacks on TamilNet foiled

[TamilNet, Saturday, 29 September 2012, 22:47 GMT]
Following persistent Distributed Denial-of-Service (DDoS) attacks on TamilNet in late February that coincided with the UN Human Rights Council sessions in Geneva, the site was again intensively attacked this week by sources originating from various countries. Most of the attacks on 26 September originated from India, Malaysia, Israel and Germany. The attacks have also come from Thailand, Georgia, Brazil and Pakistan. This time, the cyber attacks on TamilNet coincided with its exclusive coverage exposing resettlement farce in Vanni, while Colombo and its abettors in the International Community of Establishments and in the international organisations, were projecting the closure of the IDP camp in Vavuniyaa as marking the successful completion of resettlement, ostensibly for the bailout of Colombo and continuation of the deceptive LLRC roadmap.

Attack details 26th September
Attack details 26th September


Despite the site being subject to DDoS attacks, TamilNet was able to sustain the service without interruptions.

TamilNet is thankful for the support it has received from its readers to sustain its services and seeks further support from the readers to expand its coverage.

Established in June 1995 as an electronic mailing list, TamilNet emerged into a newswire service with dedicated reporters, special correspondents and feature writers since it launched its web based newswire service on 07 June 1997.

It now completes 15 years of service as an independent and not-for-profit newswire.

Sri Lanka is blocking the site inside the island since June 2007.

Chronology:

240 families affected by mini-cyclone in Paduvaankarai

240 families affected by mini-cyclone in Paduvaankarai

[TamilNet, Saturday, 29 September 2012, 21:08 GMT]
At least 240 families of the resettled Tamils in 6 villages of Poaratheevup-pattu division of Paduvaankarai in Batticaola have been affected in a mini-cyclone that hit the village Friday evening, officials in Batticaloa said. 22 houses have sustained damage and the people who had resettled after their displacement during the times of war, have sought refugee again with their kith and kin elsewhere.

Paduvaankarai region was experiencing draught conditions for a while and the resettled people were struggling for their livelihood. In recent days, heavy rains was reported in the villages.

The mini-cyclone has devastated the lives of the resettled people by damaging the little they had built up after their resettlement, the officials said.

Puthu-munmaarich-choalai , Raa'namadu, Chinnavaththai, Paalaiyadivaddai, Maalaiyar-kaddu and Palaachchoalai are the villages hit by the mini-cyclone.

Tamil National Alliance (TNA) parliamentarian P. Ariyanethiran, Red Cross officials and divisional secretariat officials have visited the affected area.

While Deputy Director of the Disaster Management Centre in Batticaloa S. Inparajan put the number of families affected by the mini-cyclone at 240. According to village officer (GS) 102 persons from 22 houses had to seek refuge with their relatives and friends.

Chronology:

விலை நிலங்களாக மாறும் விளைநிலங்கள்: இங்கும் வருமா கேரளாவை ப் போன்ற தடை..

விலை நிலங்களாக மாறும் விளைநிலங்கள்: இங்கும் வருமா கேரளாவை ப் போன்ற தடை..

உழவன் கணக்குப்பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது' என்பது நிதர்சனமான உண்மை. விவசாயத்தில் கடந்த பல ஆண்டுகளாக, லாபம் என்பதே இல்லாத நிலை உள்ளது. நிலம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும், அவரது உழைப்பிற்கு மட்டுமே ஊதியமாக லாபம் கிடைத்து வந்தது.

உரம், பூச்சிமருந்துகளின் கடுமையான விலை உயர்வு, விலை பொருட்களுக்கு சரியான விலையில்லாதது, போன்ற காரணங்களால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். வாங்கிய கடன்களை அடைப்பதற்காகவும், வேறு தொழில்களுக்கு செல்வதற்காகவும், விவசாய நிலங்களை விற்க நேரிடுகிறது. ரியல் எஸ்டேட் செய்பவர்களும், நிலத்தின் மதிப்பை விட, பலமடங்கு அதிக விலை கொடுப்பதால், அதை வங்கியில் போட்டு, வட்டியை கொண்டு வாழக்கையை ஓட்ட துவங்கி உள்ளனர் விவசாயிகள் பலர். இதே நிலை நீடித்தால், இனிவரும் காலங்களில், ஏழ்மை மற்றும் நடுத்தர மக்களுக்கு, அரிசி என்பதே எட்டாக்கனியாகி விடும். வரும் சந்ததியினருக்கு, அரிசி என்றாலே என்ன என, கேட்கும் நிலை உருவாகலாம். அண்டை மாநிலமான கேரளாவில், விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்ற தடை உள்ளது. அதே தடையை இங்கும் செயல்படுத்தினால், இருக்கும் விளை நிலங்களையாவது காப்பாற்ற செய்யலாம்.
பாதியாக குறைந்த நெல் உற்பத்தி:

விருதுநகர் மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகவும்,10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறி உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன், 7 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, 1.50 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 ஆயிரம் ஏக்கராக குறைந்து, உற்பத்தியும் 70 ஆயிரம் டன்னாக உள்ளது.

கலெக்டர் ஹரிகரன்: அரசு விதி முறைகளுக்கு மாறாக, விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைக்கே ஆட்கள் இல்லை :

வி.ராதாகிருஷ்ணன் (அருப்புக்கோட்டை): மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்கள், மானாவாரி நிலங்களாக தான் உள்ளன. பருவ மழை பெய்யும் போது நடக்கும் விவசாயம், மழை பொய்த்த பின் கேள்வி குறியாகிவிடுகிறது. விவசாய பணிகள் செய்ய ஆட்களும் வருவது இல்லை. இதனால், நிலங்கள் தரிசாக உள்ளன. வாழ்ந்து ஆக வேண்டிய கட்டாயத்தில், விவசாயிகள் தங்களது விளை நிலங்களை, பிளாட்டுகளாக விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விளைநிலங்கள் தற்போது, தொழிற்சாலைகளாகவும், அடுக்கு மாடி வீடுகளாக மாறி விட்டன. இது தொடர்பாக அரசு, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கூலி வேலைக்குச்செல்லும் விவசாயிகள்


கருப்பையா (காரியாபட்டி):
சரிவர மழை இல்லாததால், விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளன. விவசாயிகளோ கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்துகின்றனர். தரிசு நிலங்களை சிலர் அபகரிப்பு செய்வதால், கேட்ட விலைக்கு விற்பனை செய்து, வெளியூர்களில் குடியேறுகின்றனர். நில புரோக்கர்களோ, தரிசு நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, "பிளாட்'களாக மாற்றி, அதிக விலைக்கு விற்பனை செய்து, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். விளை நிலங்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது, கடுமையான சட்டம் மூலம் தண்டிக்கப்பட்டாலே, இவற்றை தடுக்க முடியும்.

எந்த திட்டமும் இல்லை


குருசாமி (விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர், ஸ்ரீவில்லிபுத்தூர்):
விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றம் செய்யப்படுவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு, பட்டினி ஏற்படும் நிலை உள்ளது. அரசானது, உணவு உற்பத்தியை, மூன்று மடங்கு அதிகரிக்கப்படும், என, தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கான எந்த திட்டமும் இது வரை இல்லை. விவசாய பயன்பாட்டு நிலங்களை, மற்ற பயன்பாட்டுக்காக விற்பனை செய்வதை தடை செய்ய, அரசு முன் வர வேண்டும்.

புற்றீசல் போல்...

ராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்): விளைநிலங்கள், புற்றீசல் போல குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் உணவு தானியங்களின் விலை, கட்டுக்கடாங்காமல் உயரும். கரும்பு, மக்கா சோளம், பருப்பு தனியாக வகைகள் பயிரிடும் பரப்பு, உற்பத்தி குறைந்து போனது. இதை தடுக்க, விளை நிலங்களை விற்பதற்க தடை விதிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவை உரிய விலை

கந்தசாமி(வத்திராயிருப்பு): விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்தாலே போதும், சோறுபோடும் விளைநிலத்தை எந்த விவசாயியும் விற்க மாட்டான். எத்தனை நாள்தான், வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்வது, என்ற விரக்தியில், விளைநிலங்களை விற்க முன் வருகிறார்கள்.

அரசு சலுகைகள் இல்லை

காதர் மைதீன் (தளவாய்புரம்): விளைய வைக்கும் செலவுக்கு கூட, உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடிவதில்லை. பல விவசாயிகள் தங்கள் நகையை அடகு வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி பயிர் செய்கிறார்கள்.அதற்கான வருமானம் இல்லாததால், நிலத்தை விற்கின்றனர். இது போன்ற நிலையை தவிர்க்க, உண்மையான விவசாயிகளுக்கு சலுகைகள் பல வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

உணவு தட்டுப்பாடு ஏற்படும்



முத்துப்பாண்டி (நரிக்குடி):
விவசாயிகளின் வறுமையைப் பயன்படுத்தி, அவர்களின் நிலங்களை "அடிமாட்டு' விலைக்கு வாங்கி சிலர், கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். நிலத்தை இழந்த விவசாயிகள், இருந்த நிலமும் போச்சே என, இருக்க கூட இடமின்றி, வெளியூருக்கு பிழைப்பு தேடி சென்று விட்டனர். விளை நிலங்கள் அனைத்தும், வீடுகளாக மாறி வரும் இந்நிலை நீடித்தால், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம்.

கிராமங்களை நாடும் நகரத்தார்


டி.சி.பார்த்திபன்(சாத்தூர்):
நாகரீக வளர்ச்சி காரணமாக, நகர்புறங்களில் வசிக்கும் பலர், சொந்த வீடுகள் கட்ட, கிராமங்களையே நாடுகின்றனர். இதன் காரணமாக, விவசாயிகள் பலரும், விளைச்சல் இன்றி உள்ள நிலங்களை விற்கின்றனர். இதில் பிளாட் போடுபவர் களோ, ஊரக வளர்ச்சி துறை அனுமதி பெறாததால், வாங்குவோர், சாலை, தெருவிளக்கு, வாறுகால், குடிநீர்,கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

கே.செல்வகுமார் (ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஸ்ரீவில்லிபுத்தூர்):

வானம் பார்த்த பூமியாக உள்ள நிலங்களை தான், குடியிருப்பு மனைகளாக, அரசு அனுமதி பெற்று விற்பனை செய்கிறோம். விளையும் நிலங்களை விற்க, விவசாயிகள் முன் வருவதுமில்லை, நாங்களும் அதை வாங்குவதும் இல்லை.

இசையால் வழி நடத்தும் பார்வையற்ற சின்னபாபு

இசையால் வழி நடத்தும் பார்வையற்ற சின்னபாபு
 
ஒவ்வொரு நாளும் வித, விதமாய் நடனங்கள்

ஒவ்வொரு நடனத்திற்கும் வித, விதமாய் உடைகள்

ஒவ்வொரு உடையிலும் வித, விதமான அலங்காரங்கள்
இந்த அலங்காரங்களுடன் நேர்த்தியாய் பக்தர்கள் நடனமாடி வரும் அழகே தனி

இந்த அழகிய நடனத்தை அற்புதமான தனது மேளத்தால் இசைத்தபடி வழிநடத்திச் செல்பவர் பார்வையற்ற ஒருவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா
இந்த ஆச்சரியத்தை திருமலை திருப்பதியில் பார்த்து அசந்துவிட்டேன்.

பிரம்மோற்சவ விழாவின் போது நாள் தோறும்வீதி உலாவரும் பெருமாளைக் காண நான்கு மாடவீதிகளிலும் காத்திருக்கும் பக்தர்களை மகிழ்ச்சி படுத்தும் விதத்தில் பல்வேறு மாநில நடன கலைஞர்கள் நடனமாடியபடி வருவார்கள்
பக்தி சேவையாக செய்தாலும் இந்த நடனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் விதத்தில் அழகாக, அற்புதமாக அமைந்திருக்கும்.

இவர்களை நடனமாட வைப்பதற்கு ஒவ்வொரு குழுவிலும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் ஒருவர் இடம் பெறுவார்
அப்படி வந்த ஒரு குழுவிற்கு அபாரமான வரவேற்பு கிடைத்தது. அந்த குழு நடனத்தை சிறப்பாக இசைத்தபடி வழி நடத்திச் சென்றவர் ஒரு பார்வையற்றவர் என்பதுதான் ஆச்சர்யம்.

ஆந்திராவின் ஒரு மூலையில் உள்ள நாகரா என்ற கிராமத்தில் பிறந்த சின்னபாபுவிற்கு பிறவியிலே பார்வை கிடையாது. ஆனால் தேர்ந்த இசை ஞானம் உண்டு. படிப்பதற்கு பதிலாக கிராமங்களில் பாடிக்கொண்டு இருந்தார், அதிலும் சோதனையாக இவரது குரல் பாதிக்கப்பட்டது.
சின்ன பாபு சோர்ந்து போய்விடவில்லை, இசை வடிவத்தை குரலால்தான் தரவேண்டுமா ?என்ன என்று முடிவு எடுத்து மேளத்தில் தனது திறமையைக் காட்டினார்

அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த கீதா சங்கீதா பிரசார் மண்டலி அமைப்பின் செயலாளர் ராஜேஸ்வரிக்கு இவரது திறமை தெரியவர உடனே இவரைப்பார்த்து இசையைக் கேட்டு, தனது குழுவிற்காக இசைக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும் இவர் தன் திறமையை சீராக்கிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் உதவி செய்தார்.
ஆயிற்று இப்போது ஐம்பது வயதைத் தொட்டுவிட்ட சின்னபாபுவின் இசைப் பயணத்திற்கு மட்டுமே நாற்பது வயதாகிறது.ஆந்திராவின் மூலை முடுக்கில் உள்ள கோயில்களின் அனைத்து விழாக்களிலும் கலந்துகொண்டு அற்புதமான இசையை வழங்கிவருகிறார்.

திருப்பதி திருமலை சீனிவாசப் பெருமாள் என்றால் இன்னும் கொஞ்சம் இஷ்டம். ஒவ்வொரு பிரம்மோற்சவ விழாவினையும் தவறவிடாமல் ஒரு பெரிய குழுவினருடன் வந்துவிடுவார். சின்ன பாபு வந்தாச்சா... என்று கேட்டு அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி கொடுப்பதும் நடைபெறும்.
இவரது தோள்கள்தான் இவரது உணர்வுகள். கூடவே இருக்கும் நண்பர் தோளில் தட்டும் ஒவ்வொரு தட்டின் அர்த்த்தையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப அவரது வாத்தியத்தில் இசை நடனமாடும். மொத்தத்தில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.தனது இசைக்கு கிடைக்கும் வரவேற்பை, பாராட்டை, கைதட்டலை எல்லாம் தலைவணங்கி ஏற்கும் சின்னபாபு நிகழ்ச்சியின் நிறைவாக பெருமாள் இருக்கும் திசை நோக்கி பெரிதாக கும்பிடு போடுகிறார்.

பல பேருக்கு தெரியாது இவர் ஒரு பார்வையற்றவர் என்று, தெரிந்த பிறகு," நெருங்கிவந்து, பிரமாதம் சின்னபாபு ரொம்ப நல்லாயிருக்கு உங்க இசை,'' என்றதும், நன்றி தெரிவித்து காற்றில் கையை நீட்டுகிறார்.
 

ஒளி போனால் என்னஒலி இருக்கிறதே!"

சொல்கிறார்கள்

"தமிழக க்காவல்  துறைக்கு ப் பெருமை சேர்த்தேன்!'

அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டிகளில், இரு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ள, தமிழகக் காவலர் மணிகண்ட பிரபு: சிறு வயதிலிருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு ஒருபுறமிருக்க, சகோதரிகளைப் படிக்க வைக்க, அம்மா படும் கஷ்டத்தை எப்படியாவது போக்க வேண்டும் என, நினைத்தேன்.பிளஸ் 2 வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு, போலீஸ் தேர்விற்கு விற்கப்படும் கையேடுகள், தின நாளிதழ்கள் போன்றவற்றை ஒரு ஆண்டாக படித்து, பொது அறிவுத் திறமைகளை வளர்த்துக் கொண்டேன். பின், காவலர் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியானவுடன், தேர்வுக்கு விண்ணப்பித்து, மேலும் தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். நான் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை; போலீஸ் வேலை கிடைத்து விட்டது.வேலைக்குச் சேர்ந்த பின், அனைத்து விதப் பயிற்சிகளையும் போலீஸ் துறையில் கற்றுக் கொடுத்தனர். பயிற்சியின் போதே, துப்பாக்கி சுடுதலில் மூன்றாம் இடம் பிடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றேன். மாநில அளவில், போலீசிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில், ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளேன்.கடந்த, 2007, 2010ம் ஆண்டுகளில், அகில இந்திய அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில், ஒரு தங்கப் பதக்கம் வென்று, தமிழக போலீஸ் துறைக்கு பெருமை சேர்த்தேன். தமிழக போலீசிலேயே, தேசிய அளவில் இரண்டு முறை தங்கம் வென்ற, ஒரே போலீஸ்காரர் நான் மட்டும் தான் என, நினைக்கும் போது, பெருமையாக உள்ளது.போலீஸ் துறையில், துப்பாக்கி சுடும் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்குப் பதவி உயர்வும், ஊக்கத் தொகையும் கொடுத்து, மற்ற மாநில அரசுகள் கவுரவிக்கின்றன. ஆனால், இங்கு, 2007ல், நான் தேசிய அளவில் தங்கம் வாங்கியதற்காக, 50 ஆயிரம் ரூபாய் தருவதாக, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அந்தத் தொகையை இன்னும் கொடுக்கவில்லை. 2010ம் ஆண்டு, மீண்டும் தங்கம் பெற்றதற்காக, பரிசுத் தொகை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது; இதுவரை, ஒரு ரூபாய் கூட வந்து சேரவில்லை.

ஒளி போனால் என்னஒலி இருக்கே!"

எக்கோலொகேஷன்' எனும், ஒலியைப் பயன்படுத்தி, அன்றாடவாழ்வியலை மேற்கொள்ளும் அமெரிக்காவைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத் திறனாளி தானியல் கிஃசு (டேனியல் கிஷ்): சிறு வயதில் தூக்கம், எனக்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. என் பெற்றோர், இரவு நேரங்களில், உறங்கிக் கொண்டிருந்த போது, பல நாட்கள் நான், தூங்காமல் இருந்திருக்கிறேன்.இரவு நேரங்களில் கேட்கும் ஒலி, மிகத் துல்லியமாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு, வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதும், உங்கள் மூளைக்குள் எப்படி ஒரு, "இமேஜ்' தோன்று கிறதோ, அது போல, எதையாவது கேட்டதும், என் மூளைக்குள் ஒரு, "இமேஜ்' உருவாகிறது.என் வீட்டிற்குப் பின்னால், நான் விளையாட, நீளமான வராந்தா போன்ற பகுதி இருந்தது. அது என் ராஜ்ஜியம். அந்த வராந்தாவிற்கு அருகில், பெரிய சுற்றுச்சுவர் இருக்கும். இங்கு விளையாடும் போது, விசில் அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை உன்னிப்பாக கவனிப்பேன்.இப்படி விசிலடிப்பதன் மூலம், எனக்கும், எதிரில் இருக்கும் பொருட்களுக்குமான தூரத்தை கணிக்க ஆரம்பித்தேன். இந்த திறமை, எனக்குள் வளர்ந்து கொண்டே போனது.பள்ளி, கல்லூரிகளுக்குப் போகும் போதெல்லாம், நான் மற்ற மாணவர்களைப் போல, சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து, சிறப்பாகத் தேறினேன். எனக்கு, கார், மோட்டார் சைக்கிள் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டுவேன். சைக்கிளில், மலை கூட ஏறுவேன்."வேர்ல்ட் ஆக்சஸ் பார் ப்ளையண்ட்' என்ற லாபநோக்கில்லாத நிறுவனத்தை, 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். உலகமெங்கும், வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே, இந்நிறுவனத்தின் நோக்கம்.சுயமாகவே, நான் கண்டறிந்த, "எக்கோலொகேஷன்' முறையை, இதுவரை, குறைந்தபட்சம், 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறேன்

உழைப்பிற்கு ஊதியம் உண்டு

உழைப்பிற்கு ஊதியம் உண்டு
மார்ச் 29,2010,09:34  IST

 தினமலர்


* தேவையுள்ளவன் என்றைக்குமே மறைக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.
* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கிவிட்டது. ஆகையால் இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.
* கோபத்திலிருந்து நீங்கி, உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.
* எந்த உழைப்பிலும் ஊதியம் உண்டு. வெறும் வாய்ப் பேச்சில் ஒரு பலனும் இல்லை.
*தீய மனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகிப் பிறரையும் ஏமாற்றித் தாங்களும் ஏமாந்து போகிறார்கள்.
* நடுகிறவனும் நீர் பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரிதான்.ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவான்.
* ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான். கொள்ளைக்காரனாயுமிருப்பான்.
-பைபிள் பொன்மொழிகள்

ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள்

உரத்த சிந்தனை :  
ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள்
எசு.ஏ.சுந்தரமூர்த்தி

மக்கள் வளம் முதல், எல்லா வளமும் நம் நாட்டில் உள்ளது. இந்த வளத்தை, பலத்தால் அடைய வேண்டும் என்று, எத்தனையோ படையெடுப்புகள், இந்தியா மீது துவங்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் இந்தியா, புதுபொலிவுடன் தன்னைக் காத்துக் கொண்டது.

லட்சக்கணக்கான உயிர்களை இழந்து, ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டி, மக்கள் கண்ட சுதந்திரம் என்று வர்ணிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் பாலும், தேனும் ஓடும் என்றனர். ஆட்சி மாறியது; ஆனால், காட்சி மாறவில்லை. உலகக் கொள்ளைக்காரன் போய், உள்ளூர் கொள்ளைக்காரர்கள் பலர் வந்து விட்டனர்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் அடிப்படையில் எல்லாருக்கும், "சம நீதி' என்று நாம் படைத்து, நாமே ஏற்றுக் கொண்ட அரசியல் சாசனம், நம்மை வழிநடத்த துவங்கியது. புனிதமான அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறும் நிலைக்கு வந்துவிட்டது.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய போது, ராணுவத்திலும், பொது வினியோகத்திலும் உள்ள லஞ்சம் மற்றும் ஊழலை கண்டறிய, "சிறப்பு காவல் அமைப்பு' 1941ல் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், "டில்லி சிறப்பு காவல் அமைப்பு' எனும் பெயரில், உள்துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் லஞ்சம், ஊழல் குறைய வேண்டும் என்று எண்ணிய அன்றைய பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல், தன் சட்ட ஆலோசகர் கரம் சந்த் ஜெயின் மூலம், டில்லி சிறப்பு காவல் படையை நிர்வகித்து வந்தார்.இந்த, டில்லி சிறப்பு காவல் அமைப்பு, 1963, ஏப்., 1ம் தேதி முதல், மத்திய புலனாய்வு அமைப்பு என்றும், சி.பி.ஐ., என்றும் அழைக்கப்பட்டது.

இப்போது சி.பி.ஐ., இத்தாலி ஆயுத இடைத்தரகன், போபால் விஷவாயுக்கு சொந்தக்காரனை, "யுனைடெட் கார்பைடு' என்று, உலக குற்றவாளிக்கு உதவி வருகிறது. உள்ளூரில் நடக்கும் கொலை, கொள்ளைகளை கண்டறியும், "துப்பறியும் சாம்பு'வாக மாறிவிட்டது சோகத்திலும் சோகம்."ஊழல் ஒழியவே இல்லை. இந்தியா இனி உருப்படாது' என்று சந்தானம் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த பின் உருவானது தான், ஊழல் கண்காணிப்பு ஆணையம், 1964ல் ஏற்படுத்தப்பட்டது.
*இது ஒரு ஆலோசனைக் குழு, இதன் முடிவை ஏற்க வேண்டுமா என, முடிவு செய்யும் அதிகாரம் அரசிடமே உள்ளது.
*1,500 துறைகள் (மாநில - மத்திய) ஊழலை கண்காணிக்க, 300 ஊழியர்களுடன் உலா வருகிறது.
*சி.பி.ஐ.,க்கு விசாரணை செய்ய உத்தரவிட்டாலும், வழக்கு விவரங்களை சி.பி.ஐ.,யிடம் கேட்க முடியாத ஆணையம்.
*ஆளும் கட்சியான பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆணையரை தேர்வு செய்யும் போது, மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவரால் எதிர்ப்பு மட்டுமே காட்ட முடியும். திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து, பி.ஜே.தாமசை துரத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற வேண்டி வந்தது. உத்தரவு வந்த பின்பும் நாற்காலியை
காலி செய்யாமல் அடம்பிடித்த புண்ணியவான்.

ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்தை கைப்பற்ற, ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஆனால், பல் பிடுங்கிய பாம்பை பார்த்து, நாம் மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 324வது ஷரத்து படி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம், கொள்ளைக் கூட்ட தலைவன் கூட தேர்தலில் நின்றால், ஒன்றும் சொல்லாது. "கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்கக் கூடாது' என்று அறிக்கை தர அச்சப்படுகிறது. எப்படியோ, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுப் பெறுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 148 ஷரத்துப்படி உருவாக்கப்பட்டது தான், இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் பதவி. மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவுகளை தணிக்கை செய்து, ஜனாதிபதியிடமோ, மாநில கவர்னரிடமோ அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தற்போது, தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராய், 2008ல் தலைமைத் தணிக்கையாளராக பதவி ஏற்றார். இவருக்கு முன், 10 பேர் இந்த பதவியை வகித்துள்ளனர்.அரசுக்கு சாதகமாக இவர்கள் போனதால், பல பல ஊழல்கள் வெளிச் சத்திற்கு வராமல் போய்விட்டன. வினோத் ராய் பதவி ஏற்ற பின், பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.தற்போது கிட்டத்தட்ட, 59 அறிக்கைகளை மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து வருகிறது. தலைமைத் தணிக்கையாளர் தந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு, விவரம் பெற்று, மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து, ஓர் இறுதி அறிக்கை தரும் முன் லோக்சபா, ஆயுள் காலம் முடிந்து விடும். மத்திய கணக்குக் குழுவின் தலைவராக உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், ஆளும் கட்சியாக மாறிவிடுவர்.
தற்போது, இந்தியத் தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராயின் பதவி காலம், மே. 22, 2014 வரை உள்ளது. அதற்குள் எத்தனை ஊழலை இவர் அம்பலப்படுத்துவார் என்று, ஆளும் கட்சி அரண்டு போய் உள்ளது.

எல்லாத் துறைகளையும் போன்று, நீதித் துறையிலும் ஊழல் வேர் விட்டுள்ளது. நீதித் துறையையும் ஆளும் கட்சி ஆட்டிப் படைக்க முடியும் என்பதை, ஆள் கொணர்வு வழக்கு, 1976ல் உணர்த்தியது. இந்திரா கொண்டு வந்த மிசா சட்டத்தில், "சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்க, அரசுக்கு அதிகாரம் உண்டு' என, நான்கு நீதிபதிகள் கூறினர். தலைமை நீதிபதி ஏ.என்.ராய், பி.என்.பகவதி, யு.வி.சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகியோர் தான் அவர்கள்.ஆனால், "மிசா' சட்டம் செல்லாது; சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையில் அரசு தலையிட முடியாது' என்று, நீதிபதி எச்.ஆர்.கன்னா மட்டும் கூறினார். இந்திராவின், "மிசா' சட்டத்திற்கு எதிராகத் தனிப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மூப்பின் அடிப்படையில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரவேண்டிய அவருக்கு வாய்ப்பு தராமல், ஜன., 29, 1977ல், எம்.எச்.பெக் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

எனவே, தன் பதவியை கன்னா, ராஜினாமா செய்தார். அவர் தலைமை நீதிபதியாக இருந்திருந்தால், ஜூலை.2, 1977 வரை, பதவியில் இருந்து இருப்பார். "மிசா' சட்டத்தை எதிர்த்த எச்.ஆர்.கன்னா தலைமை நீதிபதியாக வருவதை, இந்திரா விரும்பவில்லை.இந்திராவுக்கு சாதகமான அடிப்படையில் தீர்ப்பு கூறிய பிற நீதிபதிகள் எல்லாம், இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துச் சென்றனர்.

இந்திய ஜனாதிபதிக்கு இணையாக உள்ள தலைமை நீதிபதி, தன் மருமகன்கள் பெயரில் சொத்துகளை குவித்தபின், இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை அலங்கரிப்பது என்பது, நம் நாட்டில் மட்டுமே முடியும்.மதுரையில் வெடிகளை வைத்து, "பல்லவ மன்னன்' போல கல்லை எல்லாம் குடைந்து விட்டனர். ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல், இது நடந்து இருக்குமா? மலையை காணவில்லை எனவும், குளத்தை காணவில்லை எனவும் எப்.ஐ.ஆர்., போட வேண்டிய நிலை."எல்லா வளமும் போய் சேரும் வெளிநாட்டில்... நாம் கையை நக்க வேண்டும் உள்நாட்டில்...'
இ-மெயில்: asussusi@gmail.com

எசு.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்  -தினமலர்


குரலெல்லாம்... குறள்

குரலெல்லாம்... குறள்: 7 ஆம் வகுப்பு மாணவன் அசத்தல்
தினமலர்

ஆத்மார்த்தமான வாழ்வை இரண்டடியில் சொல்லிய வித்தகனே திருவள்ளுவர். இவர், உலகுக்கு அளித்த நெறிமுறைகளை பின்பற்றுவோர், வாழ்வில் சோடை போவதில்லை. உலகமே மெச்சும் மனிதராகவும், சக மனிதர்களிடமிருந்து தனித்துவ மிக்கவர்களாகவும் உள்ளனர்.

இவ்வரிசையில், நெற்றியில் பளிச்சிடும் விபூதியும், சாந்தமான புன்னகை, அமைதி தவழும் முகம் என முகவரி கொண்ட அரிகிருஷட்டிணனும் இடம் பிடித்துள்ளார். வள்ளுவர் எழுதிய 1330 திருக்குறளையும், தடங்கலின்றி சொல்லி கேட்போரை த் திக்கு முக்காட செய்கிறார். மனத்தின் ஏட்டில் பதித்து விட்டு, யார் எம்முனையில் இருந்து கேட்டாலும், கேட்போரை குறள் மழையால் நனைய வைக்கிறார்.இவர், அவிநாசி அருகே தெக்கலூர் - வெள்ளாண்டிபாளையத்தை சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பாடப்புத்தகம், திருக்குறளின் மீது அதீத நாட்டத்தை செலுத்தி வருகிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, திருக்குறள் ஒப்புவித்தலில் உள்ள திறமையை உணர்ந்து, துவக்கப்பள்ளி ஆசிரியைகளும், பெற்றோரும் ஊக்குவித்துள்ளனர். இன்று 1,330 குறள்களையும் சரசரவென சொல்லும்மளவுக்கு, திருக்குறளை தன்வசப்படுத்தியுள்ளார்.

ஹரியின் பெற்றோர்களான சண்முகசுந்தரம், ரேணுகா தேவி இருவரும் விசைத்தறி கூடம் நடத்தி வருகின்றனர். "ச்சடக்.. ச்சடக்...' என்றே தறியின் சத்தத்தையே கேட்டுப்பழகிய அவர்களுக்கு, மகன் கூறும் குறள், காதோரம் தித்திப்பை ஏற்படுத்துகின்றன. டிவி, நண்பர்களுடன் வீண் அரட்டை மற்றும் விளையாட்டுகளில் சிக்கவில்லை. அமுத தமிழின் மீதே முழு ஆர்வத்தையும் செலுத்தி வருகிறார்.

திருக்குறள் மீதான ஆர்வம் குறித்து, ஹரி கிருஷ்ணனிடம் பேசியதிலிருந்து...: ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, 50 குறள்களை கடகடவென ஒப்புவித்தேன். ஆசிரியர்களும், அப்பா, அம்மாவும் பாராட்டினர். அதற்குப்பின் வந்த விடுமுறை நாட்களில் மற்ற குறள்களை படிக்க ஆரம்பித்தேன். முதலில் கஷ்டமாக இருந்த குறள், போகப்போக இஷ்டமானது. பல மேடைகளில் பரிசு வாங்கினாலும், நான் படிக்கும் பள்ளியில் 1,330 குறள்களையும் சொல்லி பாராட்டு வாங்கியதை என்னால் மறக்க முடியாது. தற்போது திருக்குறள் தெளிவுரை படித்து வருகிறேன். இந்தாண்டு முடிவில், குறளுடன் தெளிவுரையும் கூறுவேன். எண், ஆரம்ப மற்றும் இறுதி வார்த்தை, உதடு ஒட்டி, ஒட்டமாமல் வரும் குறள் என எம்முனையில் கேட்டாலும் சொல்வேன்.எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்."எண்ணத்தை அடைகாத்து வெற்றி காணும் மன உறுதி வாய்க்கப் பெற்றோர், நினைத்ததை நினைத்தபடியே அடைவர்,' என்ற பொருள்படும் என்ற 666வது குறள்தான் அப்துல்கலாமுக்கு பிடிக்குமாம்; அதே குறள் தனக்கும் ரொம்பவே இஷ்டம்', என திருக்குறள் போல சுருக்கமாக முடித்து கொண்டார். ஹரி... திருக்குறளில் சொல்வதெல்லாம் சரி தான்...!

''தமிழின் பெருமைகளை அறிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்''

''தமிழின் பெருமைகளை அறிந்தால்
 தன்னம்பிக்கை அதிகரிக்கும்''
 
  தினமணி
First Published : 30 Sep 2012 02:13:58 AM IST

Last Updated : 30 Sep 2012 02:36:58 AM IST

நிகழ்ச்சியில் பேசுகிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். உடன், பத்மா சேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர் மற்றும் டீன் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி.
சென்னை, செப். 29: தமிழின் பெருமைகளை மாணவர்கள் அறிந்து கொண்டால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.கல்வியின் விழுமியங்களை மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசியது: கல்வி ஒருவருடைய சுய மரியாதையை வளர்க்கிறது. வாழ்வில் முன்னேற்றத்தையும் ஒழுக்கத்தையும் வழங்குகிறது. கற்பித்தல் என்பது கடவுளை வழிபடுவது போன்றது. இதனை ஆசிரியர்கள் சேவையாக செய்ய வேண்டும்.ஒரு முழுமையான மனிதனை உருவாக்கும் புனிதமான இடம் பள்ளியும் கல்லூரியும்தான். வெறும் தகவல்களை மட்டும் மாணவர்களுக்கு வழங்காமல், அவர்களின் திறமைகளை வளர்க்க வேண்டும். புத்தகத்தில் இருப்பதை தவிர பல விஷயங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தமிழ் மொழி: ஜப்பானிய மொழியில் தமிழ் சொற்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதேபோல, தென் அமெரிக்க நாடான பெருவுக்கு சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் சென்றுள்ளனர் என்பது போன்ற தகவல்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்.இதனால் மாணவர்களுக்கு மொழியின் மீதான மதிப்பு அதிகரிக்கும். மொழியின் மீதான மதிப்பு அதிகரித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன்மூலம், அவர்கள் சொந்த காலில் நிற்கமுடியும் என்றார் அவர். கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பதாலேயே வன்முறை எண்ணங்கள் அதிகரிக்கின்றன. வன்முறை என்பது பிறப்பில் இருந்து வருவது இல்லை என்றார்.