ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

Tamils should protest against UN demanding referendum: May 17 Movement

Tamils should protest against UN demanding referendum: May 17 Movement

[TamilNet, Sunday, 12 August 2012, 04:07 GMT]
Criticizing the UN for collaborating with vested interests of world powers in denying a just political solution for the Eezham Tamils, Thirumurugan Gandhi from the May 17th Movement said that Tamils should direct their protests against the UN asking for an internationally monitored referendum to resolve the national question of the genocide affected Eezham Tamils at a demonstration held at Valluvar Kottam, Chennai on Saturday. Speaking to TamilNet, Mr. Gandhi said “The single point common demand of Tamils world over should be to demand for a referendum for Tamil Eelam,” adding that talks about rehabilitation and ‘step by step approach’ without addressing the fundamental demand for political freedom was useless, only giving legitimacy to genocidal Sri Lanka.

Protest in Tamil Nadu


At the demonstration in Chennai, Mr. Gandhi observed that the trends of military-corporate nexus in the North-East were deployed to build Special Economic Zones in the Tamil homeland, after depriving the Eezham Tamils of their lands. Similarly, ‘rehabilitation’ was used as a ruse to create a labour force and a market for Indian corporates.

He further strongly condemned John Ging, the Director of the Coordination and Response Division of the UN Office for the Coordination of Humanitarian Affairs, for endorsing the ‘rehabilitation’ process of the war crimes and genocide accused Sri Lankan state, claiming that this was an irresponsible position to take by an institution like the UN.

The demonstration was organized by TN political activists to convey solidarity with the demands of Eezham Tamil youth activist Gobi Sivanthan, who is entering the 22nd day of his hunger strike. University students, journalists, academics, IT sector employees, and a broad range of civil society activists participated at the demonstration.

Tapasi Kumaran from the PDK, Mallai Sathya from the MDMK, Aruna Bharathi from the Tamizh Desiya Pothuvudamai Katchi, and Prof. Saraswathi from the Friends of TGTE also spoke at the demonstration.

Prof. Saraswathi said that the de facto state that was established with the popular support of the Eezham Tamils was broken by the India and world powers.

Gobi Sivanthan addressed the gathering through phone, conveying his regards for the support shown by TN Tamils for his non-violent protest. He further said that principled position for Tamils world over to take is to never compromise on freedom of Tamil Eelam.

Protest in Tamil Nadu
Protest in Tamil Nadu
Protest in Tamil Nadu
Protest in Tamil Nadu
Protest in Tamil Nadu
Protest in Tamil Nadu


Chronology:

நட்பிற்குத் தடை எதுவும் இல்லை! சமையல்காரரின் நட்புக் கிளிகள்!

சமையல்காரரின் நட்புக் கிளிகள்!

தினமணி First Published : 12 Aug 2012 01:57:01 PM IST


தருமபுரி, ஆக.12: உறவுகள் கூட குறிப்பிட்ட எல்லை வரைதான்; ஆனால், நட்புக்கு எல்லையே இல்லை என்கிறார் பச்சைக் கிளிகளை நண்பர்களாகக் கொண்டுள்ள சமையல்காரர்.  தருமபுரியை அடுத்த புளியம்பட்டி அருகேயுள்ள கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (52). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.  சமையல்காரரான முருகன், திருமணம், கோயில் விழா மற்றும் இதர நிகழ்வுகள் அனைத்துக்கும் சமையல் செய்து தரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் கூண்டில் விற்கப்பட்ட 2 பச்சைக் கிளிகளை வாங்கி வீட்டில் வளர்த்தார்.  அந்தக் கிளிகள் இவருடன் நன்றாகப் பழகவே அதன் மீது அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினார். குட்டியாக இருந்த கிளிகள் வளர்ந்தவுடன் இவருடனே போகும் இடமெல்லாம் சென்று வந்தன. இதில், ஒன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கிழே விழுந்து இறந்து போனது. மற்றொன்று நாய் வசம் சிக்கி விட்டது. இந்தக் கிளிகள் இறந்த துக்கத்தில் சிறிது நாள்களை நகர்த்தினார்.  பின்னர், மீண்டும் இரு கிளிகளை குட்டியாக வாங்கி வளர்க்கத் தொடங்கினார். இந்தக் கிளிகளும் அவருடன் நடப்பாகப் பழகின. இப்படி, கிளிகளை குட்டியாக வாங்குவதும், அவற்றை நன்றாக வளர்ப்பதும் இவரது வாடிக்கையாகிவிட்டது. சில தருணங்களில் யாரேனும் விரும்பிக் கேட்டால் அவற்றைக் கொடுத்துவிடுவார். இல்லையெனில், யாரேனும் திருடிச் சென்றுவிடுவர்.  ஆனால், 2 கிளிகள் போனால் மற்றொரு 2 கிளிகள் எனப் புதிதாக வாங்கி வளர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 6 மாதங்களுக்கு முன்புதான் 2 புதிய கிளிகளை வாங்கினார். இறகுகள் முளைக்காத பருவத்தில் வாங்கிய இந்தக் கிளிகளுக்கு இப்போது இறகுகள் முளைத்து முருகன் செல்லும் இடமெல்லாம் சென்று வருகின்றன.  இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இரு சக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்துள்ள கிளிகள் வாகனம் 60 கி.மீ. வேகமாக இருந்தாலும், 80 கி.மீ. வேகமாக இருந்தாலும் அசையாமல், கீழே விழாமல் அப்படியே நின்றபடி பயணம் செய்கின்றன.  கிளிகள் நிற்பதற்காக இரு சக்கர வாகனத்தின் கைப்பிடிகளை இணைக்கும் வகையில் பிரம்புகளை கட்டி வைத்துள்ளார். சங்கிலியால் பிணைக்கப்பட்ட இந்தப் பிரம்புகளில்தான் கிளிகள் எப்போதும் இருக்கின்றன.  வாழைப் பழம், கொய்யா உள்ளிட்ட பழங்கள், நெல், அரிசி, சோறு என அனைத்தையும் சாப்பிடுகின்றன. அதிகாலையில் வேலைக்காக முருகன் வெளியே புறப்படுவதற்கு முன்பாகவே காலை 7 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் இந்தக் கிளிகள் தானாக வந்து அமர்ந்து விடுகின்றன.  பின்னர், தனது எஜமானார் செல்லும் இடங்களுக்கெல்லாம் இணை பிரியாது செல்கின்றன. வாகனத்தை நிறுத்திவிட்டு முருகன் எங்காவது சென்றுவிட்டால் அவர் வரும் வரைக்கும் வாகனத்தின் மீதே அமர்ந்திருக்கின்றன. இந்தக் கிளிகளைப் பார்க்கும் மக்களும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.  இதுகுறித்து முருகன் கூறியது:  8 ஆண்டுகளுக்கு முன் ஆசைக்காக கிளிகளை வாங்கினேன். இப்போது, நான் விட்டாலும் கிளிகள் என்னை விடாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இதுவரை 30 கிளிகளுக்கு மேல் வளர்த்து விட்டேன். பெரும்பாலான கிளிகளை யாராவது திருடிச் சென்று விடுகின்றனர். இல்லையெனில், நாய் கடித்து விடுகிறது. இப்போதுள்ள கிளிகளுக்கு வயது 7 மாதம். எனக்கு சிறந்த நண்பர்களாக இருக்கின்றன என்றார்.

தமிழீழமே தீர்வு: இராமதாசு

தமிழீழமே தீர்வு:  இராமதாசு

தினமணி First Published : 12 Aug 2012 05:37:45 PM IST


சென்னை, ஆக.12: இலங்கை பிரச்னைக்கு தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.எனினும், இலங்கையுடனான இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் மாநாட்டில் எதையும் பேசக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதன் மூலம் ஈழம் பற்றி பேச மறைமுக தடை விதித்துள்ளது. இப்படித் தடை விதிப்பதும், மாநாடு நடத்த மாநில அரசு அனுமதி மறுப்பதும் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும்இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்வது என்பது நடைமுறை சாத்தியமே இல்லாத செயலாகும். இந்திரா காந்தி இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு எப்போதோ தனி நாடு கிடைத்திருக்கும்.ஈழத் தமிழர் நலனுக்காக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.இலங்கை பிரச்னைக்கு தமிழீழமே தீர்வாக இருக்கும். தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் தனிப்பிரிவில் முன்முறையாகத் தமிழ் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.


பொதுமக்கள் நன்மை பெறுவதற்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால் ஆங்கிலப் பயன்பாட்டில் இருப்பதால்  பெருவாரியான மக்களுக்கு என்ன நன்மை? எனவே, தமிழில் பயன்பாடு முழுமையாக இருக்கும் வகையில் வலைத்தளத்தை மாற்ற வேண்டும். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து அனுப்பப்படும் மடல்களும் தமிழில் இருத்தல் வேண்டும். இது குறித்து நான் முன்னரே இப்பிரிவிற்கு முறையிட்டுள்ளேன். இதன் அடிப்படையில், தமிழ் வளர்ச்சி இயக்குநரும் மடல் எண் ந.க.ஆ.மொ.3 /5316/2012  நாள் 30 .07 .12  இல் இந்திய அரசால் வகுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிச் சட்டத்திற்கு உறுதுணை புரியுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவி்ற்கு மடல் அனுப்பி உள்ளது.  எனவே, முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையத் தளம் உட்பட அனைத்திலும் தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தைமுழுமையாக நிறைவேற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், சென்னை 600004.


முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க புதிய வலைத்தளம்: தொடங்கி வைத்தார் முதல்வர்


Last Updated : 12 Aug 2012 01:08:49 PM IST
சென்னை, ஆக.12: முதல்வர் 11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்.இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..." ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் அவர்களை சென்றடையும் வகையிலும்,  தங்கள் குறைகளை தெரிவித்து உரிய நிவாரணம் பெறும் நோக்கத்துடனும், முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது.தற்போது முதலமைச்சரின் தனிப்பிரிவில் நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், அஞ்சல் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள்  வாயிலாகவும்  நாளொன்றுக்கு சுமார் 3000 முதல் 3500 வரை மனுக்கள் பெறப்படுகின்றன.  இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பொது மக்கள் பயனடைந்து வருகின்றனர்.முதலமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளத்தினை 11.8.2012 அன்று முதல்வர் துவக்கி வைத்தார். இவ்வலைதளத்தின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு  உடனுக்குடன் மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும்.புதிய வலைத்தளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும்.  சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள  முதலமைச்சர் தனிப்பிரிவின்  ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால்  மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். தற்போது அனைவரிடமும் கைப்பேசி பயன்பாடு அதிகமாக இருப்பதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் மூலம்  மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையினை முதல்வர் துவக்கி வைத்தார்கள். அஞ்சல் வழியாக அனுப்பப்படும் மனுக்களில் மனுதாரர் தங்களது கைப்பேசி எண்ணை குறிப்பிடிருந்தால் முதலமைச்சரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண்,  தொடர்புடைய  அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து  குறுந்தகவல்  மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வர் 11.8.2012 அன்று மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 113 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். ”-இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெசோ மாநாடு குறித்த விகடனின் கருத்துத் தொகுப்பு


காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோஅமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?


 
கருணாநிதியின் டெசோ மாநாடு! நடக்குமா? நடக்காதா?



சேசுராஜ், முன்னாள் போராளி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)

''
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளும் 500 வரையான காயப்பட்ட பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலம் எங்கும் வியாபித்து இருந்தது. ஷெல் அடி காதைப் பிளந்தது. மருத்துவமனையில் சரியான மருந்துகள், மருத்துவ ஆளணி இல்லாமல் மருத்துவர்கள் திணறிக்கொண்டு இருந்தனர்.

அன்றைய பொழுதில் கடைசி நம்பிக்கையாக கருணாநிதியை நம்பிக்கொண்டு இருந்தனர் எங்களில் பலர். அந்த அவல நிலையிலும் வானொலிப் பெட்டியின் முன் குந்தி இருந்தனர். கருணாநிதி அறிவித்ததாக 'போர் நிறுத்தப்பட்ட அறிவிப்புவானொலியில் வந்த கணத்தில் மக்கள் அதனை முழுவதும் நம்பினார்கள். எங்கும் சந்தோஷ மயம். அனைத்தையும் இழந்துவிட்ட அந்த நிலையில் அவர்கட்கு கருணாநிதி மீட்பராகத் தெரிந்தார். தேவதூதராகத் தென்பட்டார். ஆனால், நடந்தது எல்லாம் நாடகம் என்பதை ஜந்து நிமிடங்களுக்குள் நான் உணர்ந்துகொண்டேன். அன்றுதான் வழமையைவிட ஷெல் அடி அதிகமாக இருந்தது. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.

நான் தலைவர் பிரபாகரனிடம் பற்றுக்கொண்டு போராட்டத்தில் இணைந்துகொண்டவன். தமிழீழம் என்பதுதான் எமது ஒற்றை நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை பொய்த்துப்போனதுகூட எனக்கு வலிக்கவில்லை. உடம்பில் தெம்பு இருந்தவரை நான் போராடினேன் என்கிற ஆத்ம திருப்தி இருக்கிறது எனக்கு. ஆனால், நாங்கள் நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டோம் என்பதை இன்று வரை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!''

ஸ்ரீதரன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

''
நாங்கள் 60 வருட காலம் போராடிப் பார்த்துவிட்டோம். இன்றைக்கு எங்கள் எதிர்காலம் சம்பந்தமாக எந்தவிதமான நம்பிக்கையும் அற்று இருக்கிறோம். இத்தகைய சூழலில் எமக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியத் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் உண்டு. இப்போது உள்ள நிலையில் அவர்களால் மாத்திரம்தான் ஈழத் தமிழர்களின் மேலான அடக்குமுறையைச் சர்வதேசத்துக்குக் கொண்டுசெல்ல முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தும் மாநாட்டு அழைப்பை நாங்கள் எதிர்கொள்கிறோம். சொந்த விருப்புவெறுப்புகளை விடுத்துப் பார்த்தால் அவர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க தலைவர். அவர் பின்னால் பெரும் தொண்டர் படையணி உள்ளது. அவரை நாங்கள் புறக்கணிக்க முடியாது. ஆனால், அவரிடம் உளச் சுத்தியான ஈழ ஆதரவு இருக்கும் என நம்பும் அளவு நான் முட்டாள் அல்ல. ஈழத் தமிழர்கள் அனைவருமே கருணாநிதியின் மேல் மிகப் பெரிய கோபத்திலும் வெறுப்பிலும் உள்ளார்கள். ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது ஆட்சியில் இருந்தவர் அவர். ஈழப் போரை நிறுத்த வேண்டிய தார்மீகக் கடமை அவருக்கு இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார். புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் கடும் வெறுப்பில் அவர் இருந்தார். அந்த வெறுப்பை புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது அவர்கள் மேல் காட்டினார். ஆனால், புலிகளின் தோல்வி, ஈழத் தமிழர்களின் தோல்வி என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அவர் எதுவும் செய்யாமல் இருந்திருந்தாலே ஈழத் தமிழன் அவரை மன்னித்து இருப்பான். ஆனால், உண்ணாவிரதம் எனும் நாடகத்தை நடத்திவிட்டு, 'ஈழத்தில் போர் முடிந்துவிட்டதுஎன அவர் ஒரு பொய்யான தகவலை உலகத்துக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சொல்லி தமிழ்நாட்டிலே ஏற்பட்ட மக்களின் எழுச்சியை நயவஞ்சகமாக அடக்கினார். அதை நாம் எப்படி மறப்பது?''

சயந்தன், ஈழ எழுத்தாளர்:

''
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் - குறிப்பாக தி.மு.க-வின் தற்போதைய நடவடிக்கைகளை - ஒருவிதமான விரக்தி, ஏமாற்றம், ஏளனம், கோபம் எனக் கலவையான உணர்வுகளின் ஊடாகத்தான் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை விடுத்துப் பார்த்தாலும்கூட, இறுதி யுத்தத்தில் சிக்குண்டவர்கள், உறவுகளை இழந்து தவித்தவர்கள், இன்னமும் சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாது அவலப்படுவோர் அனைவரிடத்திலும் கலைஞர் மீதான ஆற்றாமையும் கோபமும் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. நம்பிக் கெட்ட சனங்களின் உணர்வுகள் அவை.

ஈழ விவகாரமும் தமிழகத் தேர்தல் அரசியலில் ஒரு முக்கியக் கூறாகப் பார்க்கப்படுவதால், அவரவர் வசதிப்படி நடனம் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் 'டெசோவும் ஒன்று. சற்றே புத்தி தெளிவுள்ள ஒருவனால்கூட இதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும். காலங்காலமாகத் தமது சொந்த மீனவர்கள் சுடப்படுவதைக்கூட நிறுத்த முடியாதவர்கள், இப்படி எல்லாம் கூத்தடிக்கும்போது, யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது

'
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ ''

வழிமூலம்: ஆனந்தவிகடன்
நன்றி. இருமேசு, இணையத் தென்றல் குழு
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

Gagged Tamil leadership fumbles on telling truth

Gagged Tamil leadership fumbles on telling truth

[TamilNet, Saturday, 11 August 2012, 23:32 GMT]
Eezham Tamil political leaders in the island refused of visa by the New Delhi establishment to participate the TESO conference convened by the DMK chief Mr. Karunanidhi, fumble on telling the truth. Instead of letting the world know that they were unable to do justice to the democratic struggle of Eezham Tamils due to New Delhi and Colombo jointly gagging them, they surrender by simply saying that they had cancelled their participation considering circumstances, commented new generation Tamil political activists in the island. The Sinhala politician, Dr. Wikramabahu Karunaratne is honest in bringing out the circumstances to media. Three years ago, Mr. Karunanidhi in the hands of New Delhi was accused of dishonesty and betrayal. Whether the Eezham Tamil leadership is in his shoes now, the activists asked.

Sending a note to TamilNet and other media outlets on Friday, Dr. Karunaratne came out with the following statement on the status of his Indian visa for participation in the TESO conference:

“I was invited by ex chief minister Karunanidhi. He telephoned me and I agreed to participate. I got the invitation letter dated 14th July on 20th July and I applied for visa 27 July. Aug 2 I got the e-ticket from ex CM's office. I was asked to collect the passport on 3 August. When I went to collect the passport on 8, agency told me that visa was not given. I informed Karunanidhi’s office, and an hour later, I was requested by the Indian HC council Sunil that I should bring the passport to Indian HC for visa on 9th morning. I handed over the passport to Ramesh Ayyar, the visa officer, on 9th 9.:0 am. Thereafter no communication and passport is in Indian HC.

Dr. Karunaratne further stated:

“I was planning to say that Mahinda regime, who was supported by India in his genocidal war, has not done any thing to implement the political recommendations of the LLRC report. Instead he is building roads, hotels and other structures for the benefit of MNCs grabbing lands of Tamils. There is non-consultation even with TNA MPs. Military is everywhere and military rule is supreme. However we are campaigning against this set up. The protest of the opposition which includes UNP, TNA, DPF, and the left is having success in actions and meetings. We all agree with LLRC recommendations and demand full implementation. NSSP believes that this will be a serious step towards autonomy for the Tamil homeland. Today the government is unpopular and opposition was able to mobilize trade unions, peasant movements, fishers associations and students. If Mahinda continues his chauvinist oppressive policies he will be thrown out and a government that will implement LLRC could come to power.”

With all respect to the good but naïve intentions of Dr. Karunaratne, the thrust of the LLRC recommendations is the annihilation of the identity and territoriality of the nation of Eezham Tamils in the island, and this goes contrary to Dr. Karunaratne’s earlier spirit of recognizing the nation and right to self-determination of Eezham Tamils, the activists in the island commented, but adding that they appreciated the Sinhala leader’s exposure of the joint suppression of polity in the island by Colombo and New Delhi.

The TNA leaders Mr. Sampanthan and Mr. Maavai Senadhiraja also have earlier told media circles that they had been personally invited by Mr. Karunanidhi and they wished to honour it.

The TNA and Mr. Mano Ganeshan came out with statements on the cancellation of their participation in the TESO meet, without revealing the true reasons. The TNPF is silent, even though the circumstances were the same.

Meanwhile, sections in a leading diaspora outfit have been ‘advised’ to revise its constitution to drop the sovereignty of the nation of Eezham Tamils to accommodate ‘non-descriptive self-rule,’ informed circles said.

The entire scenario is one such that even the democratic polity of Eezham Tamils is brutally gagged in the island, in India and in the diaspora. Those who play a role in Tamil leadership are obliged to tell the truth and expose the culprits, so that, if they can’t do justice to the struggle any further the next generation would do it and take care of the culprits in appropriate democratic ways, the new generation political activists in the island said.

TESO would do a great service if its resolutions and future operations were going to be of any substance in providing confidence to the gagged leaders in the island. Tamils all over the world are watching whether TESO is going to do any justice to the polity or is going to advocate succumbing to the gag, the activists further said.

மதுக்கடையும் இல்லை! கட்சிக் கொடியும் இல்லை! விந்தைச் சிற்றூர்


ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவலிங்காபுரத்தில், டாஸ்மாக் கடைகள் கிடையாது; கட்சிக் கொடிகளையும் ஏற்ற, மக்கள் விடுவதில்லை. இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடி மட்டும் ஏற்ற, கொடிக் கம்பம் ஒன்று மட்டும் உள்ளது. இதன் கட்டுப்பாடால் இங்குள்ளோர், எந்தவித பிரச்னையின்றி அமைதியுடன் வாழ்கின்றனர்.

ராஜபாளையத்தில் இருந்து, 18 கி.மீ., தூரத்தில் உள்ளது, சிவலிங்காபுரம். இங்கு, விவசாயம் தான் முக்கிய தொழில். மற்ற கிராமங்களைப் போல, இங்கும், சில ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாப் அருகே, கொடிக் கம்பங்கள் அணிவகுத்து நின்றன. இரவு வர வேண்டிய தலைவருக்கு, காலையிலேயே, "மைக் செட்' வைத்து, கிராம அமைதி சூழலுக்கு சவால் விடுவது போன்ற பிரச்னைகளும் நடந்தன. இதற்கு முடிவு கட்ட, கிராமத்தினர் முடிவு செய்தனர். பார்லிமென்ட் தேர்தலும் வந்தது; தேர்தல் விதிப்படி கொடிக் கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன; கொடிமர பீடங்கள் மட்டும் இருந்தன. தேர்தல் முடிந்த பின், பீடங்களில் கொடிக் கம்பங்கள் வைக்க, மக்கள் அனுமதிக்கவில்லை. "தேர்தல் நேரங்களில் மட்டும் ஒலி பெருக்கி உபயோகிக்கலாம்; கட்சிக் கொடிகளுக்கு அனுமதி இல்லை' என்ற நிலையை மக்களே உருவாக்கி விட்டனர்.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""இங்கு, கொடிக் கம்பங்கள் தான் இல்லை; கட்சிகள் உண்டு. கிராமத்திற்கு எந்த தலைவர் வந்தாலும், சர்வ கட்சியினரும் சென்று வரவேற்போம். தலைவர்கள் வரும் போது, அந்தந்த கட்சியினர் மட்டும், தெருக்களில் கொடி கட்டுவர். தலைவர்கள் சென்றவுடன், அவர்களாகவே அகற்றி விடுவர்,'' என்றார்.

ஊராட்சி துணைத் தலைவர், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த, கேசவன், ""இங்கு டாஸ்மாக் கடைக்கும் வழி இல்லை. கடை துவங்க நடந்த முயற்சி, மக்களின் ஒற்றுமையால், முறிந்தது. கொடிமர பீடங்களை அகற்றவும் பேசி வருகிறோம். இங்கு வரும் கட்சித் தலைவர்கள், கொடி ஏற்ற விரும்பினால், தேசியக் கொடியை ஏற்ற மட்டுமே அனுமதிக்கிறோம். இதற்கு அனைவரும் சம்மதித்ததால், பிரச்னை இல்லை. மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், இது சாத்தியப்படுகிறது,'' என்றார்.



ஈழம் எதிர்த்த கலைஞர்




"ஈழம்' மீது கருணாநிதி தொடுத்த யுத்தங்கள்










கடந்த, 1990 ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்த போது, பழ.நெடுமாறன், "தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாடு' நடத்த திட்டமிட்டார். அந்த மாநாட்டில், "ஈழம்' என்ற தலைப்பில், கண்காட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மாநாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. தவிர, மாநாடு தொடர்புடைய, சாலை.இளந்திரையன் உள்ளிட்ட பலர், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.சென்னையில், 1996ம் ஆண்டு, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பா.ம.க., நடத்திய மாநாட்டில், "ஈழம்' குறித்து பேசியதற்காக, சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க., கூட்டணியில் இருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில், 2008 டிச., 27ம் தேதி, "ஈழ உலக அங்கீகார மாநாடு' நடத்தினார். அப்போது, "ஈழம்' என்ற வார்த்தையை போஸ்டர் ஒட்டியும், பெயின்ட் அடித்தும் போலீசார் மறைத்தனர். அப்போதும், தமிழக முதல்வராக கருணாநிதி தான் இருந்தார்."இலங்கை போரை நிறுத்த வேண்டும்' என, தீக்குளித்து இறந்த முத்துக்குமரனுக்கு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே சாணுரப்பட்டியில் ரத்தினவேலன், தன் சொந்த இடத்தில் சிலை வைக்க முயன்றார்.

அதற்கு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் இயங்கிய அரசு, சிலை வைக்க தடை விதித்தது. கலெக்டர் சண்முகம் சிலை வைக்க அனுமதி தர மறுத்தார். ரத்தினவேலன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, "தனியார் இடத்தில் சிலை வைக்க தடை விதிக்க முடியாது. அது அவரது சொந்த விருப்பம்' என்று தெரிவித்தார்.இப்படி, "ஈழம்' குறித்து பேசியவர்கள், மாநாடு நடத்தியவர்கள் மீது, கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, தாக்குதல் நடத்தியுள்ளார். "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பது போல, கருணாநிதி நடத்தும், "டெசோ' நாடகத்துக்கு போலீசார் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

- நமது நிருபர் -

pesum patam










விடுதலை நாள் கொண்டாடக் கூடாது

சுதந்திர தினத்தைக் கொண்டாடக்கூடாது: அசாம் மக்களுக்கு "உல்பா' எச்சரிக்கை

தினமணி First Published : 12 Aug 2012 01:33:49 AM IST


 குவாஹாட்டி, ஆக. 11: சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றால் தாக்குதல் நடத்தப்படும் என உல்பா தீவிரவாதிகள் அசாம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  உல்பா அமைப்பின் செய்திப்பிரிவு துணைச் செயலாளர் அருணுடே அசோம், ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது:  ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடாமல் புறக்கணித்து, பந்த்துக்கு ஒத்துழைக்க வேண்டும். சுதந்திரத்தினக் கொண்டாட்டம் நடைபெறும் இடங்களில் உறுதியாகத் தாக்குதல் நடத்தப்படும் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின்னஞ்சலுடன் தனி அறிக்கை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், வடகிழக்குப் பகுதிகளில் சுதந்திர தினப் புறக்கணிப்பில் ஈடுபடவும், நள்ளிரவு 1 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் உல்பா, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, கம்டாபூர் விடுதலை இயக்கம், மணிப்பூர் ஒருங்கிணைப்புக்குழு, திரிபுரா மக்கள் ஜனநாயக முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, ஹைன் நியூ ட்ரெப் தேசிய விடுதலைக் குழு ஆகிய 7 தீவிரவாதக்குழுக்களின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அசாம் காவல்துறைத் தலைவர் ஜே.என். செüத்ரி கூறியது: உல்பா தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாகவே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சிறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் வலிமை பெற்றுள்ளனர்.  அதன்மூலம், சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த முனைகின்றனர். ஆனால், அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குவாஹாட்டி மீது தாக்குதல் நடத்தினால் நாடு முழுதும் பெரிதாகப் பேசப்படும் என்பதால், அவர்களின் தாக்குல் இலக்கில் குவாஹாட்டியும் உள்ளது. வெள்ளிக்கிழமை 7 உல்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.  மேகாலயாவில் உஷார் நிலை:  ஹைன் நியூ ட்ரெப் தேசிய விடுதலைக் குழு (எச்என்எல்சி)வின் 25-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14ம் தேதி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மோகாலயாவின் 6 மாவட்டங்களிலும், கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.  மேகாலயா மாநில போலீஸôர் கூறியது:  வங்கதேச-மேகாலயா சர்வதேச எல்லைப்பகுதியில், 443கி.மீ. தூரம் வேலி அமைக்கப்படவில்லை.  அந்தப்பகுதி வழியாக எச்என்எல்சி தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் போலீஸôரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காசி ஜெயின்டியா மலைப்பகுதியில் 6 மாவட்டங்களில் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.