warning லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
warning லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 நவம்பர், 2012

கடன் / சேமிப்பு அட்டையில் பொருட்களை வாங்கும் போது கவனியுங்கள்

கடன் /  சேமிப்பு அட்டையில் பொருட்களை வாங்கும் போது கவனியுங்கள்

First Published : 29 November 2012 12:21 PM IST
கிரடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது, காசாளரிடம் உங்கள் கார்டைக் கொடுத்துவிட்டு அதனை கவனமாகப் பாருங்கள் என்கிறார்கள் காவல்துறையினர்.
டெல்லியில், போலியான கிரடிட் கார்டை தயாரித்து அதன் மூலம் பல கோடி ரூபாய்களை சுருட்டிய 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த கும்பலின் செயல்பாடு குறித்துத் தெரிவித்த காவல்துறை அதிகாரி, மிகப் பெரிய கடைகளில் பணியாற்றும் காசாளர்களோடு இவர்கள் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு ஸ்கிம்மர் என்ற கருவியை அவர்களுக்கு கொடுக்கின்றனர்.
ஒரு கிரடிட் கார்டை காசாளர் வாங்கியதும், கிரடிட் கார்ட் கருவியில் ஒரு முறை தேய்த்து விட்டு, இந்த ஸ்கிம்மர் கருவியில் வாடிக்கையாளருக்குத் தெரியாமல் ஒரு முறை தேய்த்துவிடுவார். அப்போது ஸ்கிம்மர் கருவி, அந்த கார்டின் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்கிறது. அந்த தகவல்களைக் கொண்டு அதேப்போன்ற போலியான கிரடிட் கார்டை இந்த கும்பல் தயாரித்து அதனைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய்களை சுருட்டியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
எனவே எப்போதும் கிரடிட் கார்டை காசாளரிடம் கொடுத்துவிட்டு அங்கே இங்கே வேடிக்கை பார்க்காமல், நமது கார்டை அவர் எத்தனை முறை எந்த கருவில் தேய்க்கிறார் என்பதை சரி பார்த்து, உடனடியாக அதனை திரும்பப் பெறுவதில் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

அடுத்த முற்றுகை தலைமையர் இல்லம் தான் சென்னை திரும்பிய வைகோ எச்சரிக்கை

அடுத்த முற்றுகை  தலைமையர்  இல்லம் தான் சென்னை திரும்பிய வைகோ எச்சரிக்கை

ம.பி., மாநிலம் சாஞ்சியில் கடந்த, 21ம் தேதி நடந்த புத்த மத விழாவில் பங்கேற்க ராஜபக்ஷே, இந்தியா வந்தார். ராஜபக்ஷேவுக்கு, கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்த, வைகோ தலைமையில், 21 பஸ்களில் 1,000 பேர் சாஞ்சிக்கு சென்றனர். ரயில், விமானம் மூலம், 200 பேர் அங்கு சென்றனர். வைகோ உள்ளிட்ட கட்சியினரை ம.பி., போலீசார் தடுத்து நிறுத்தினர்.இந்த போராட்டத்தின் போது, ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை ம.தி.மு.க.,வினர் எரித்தனர். தொடர்ந்து, சாஞ்சியை நோக்கி, பேரணியாகச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை, 7 மணிக்கு, வைகோ சென்னை திரும்புவதாக எதிர்பார்க்கப் பட்டது. வழியில் மழை பெய்து, சாலைகளில் நீர் தேங்கியிருந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், குறித்த நேரத்தில் பஸ்கள் சென்னைக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் விமானம், ரயில் மூலமாகச் சென்றிருந்த கட்சியினரும், போபாலில் இருந்து ரயிலில் புறப்பட்டு, நேற்று காலை, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிற்கு வந்தனர். அவர்கள் ரயிலிலிருந்து இறங்கியதும் ராஜபக்ஷே, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.இதனால், அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றிரவு, சென்னை திரும்பிய வைகோவும், அவரது கட்சியினரும் அண்ணாதுரை சமாதிக்குச் சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். இந்த நடவடிக்கை இனியும் தொடருமேயானால், ரயில், விமானம், பேருந்து என, லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். ராஜபக்ஷேவுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள கள்ளத் தொடர்பை அம்பலப்படுத்துவேன்.
இவ்வாறு வைகோ பேசினார்.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

விடுதலை நாள் கொண்டாடக் கூடாது

சுதந்திர தினத்தைக் கொண்டாடக்கூடாது: அசாம் மக்களுக்கு "உல்பா' எச்சரிக்கை

தினமணி First Published : 12 Aug 2012 01:33:49 AM IST


 குவாஹாட்டி, ஆக. 11: சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றால் தாக்குதல் நடத்தப்படும் என உல்பா தீவிரவாதிகள் அசாம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  உல்பா அமைப்பின் செய்திப்பிரிவு துணைச் செயலாளர் அருணுடே அசோம், ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது:  ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடாமல் புறக்கணித்து, பந்த்துக்கு ஒத்துழைக்க வேண்டும். சுதந்திரத்தினக் கொண்டாட்டம் நடைபெறும் இடங்களில் உறுதியாகத் தாக்குதல் நடத்தப்படும் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின்னஞ்சலுடன் தனி அறிக்கை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், வடகிழக்குப் பகுதிகளில் சுதந்திர தினப் புறக்கணிப்பில் ஈடுபடவும், நள்ளிரவு 1 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் உல்பா, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, கம்டாபூர் விடுதலை இயக்கம், மணிப்பூர் ஒருங்கிணைப்புக்குழு, திரிபுரா மக்கள் ஜனநாயக முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, ஹைன் நியூ ட்ரெப் தேசிய விடுதலைக் குழு ஆகிய 7 தீவிரவாதக்குழுக்களின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து அசாம் காவல்துறைத் தலைவர் ஜே.என். செüத்ரி கூறியது: உல்பா தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாகவே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சிறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் வலிமை பெற்றுள்ளனர்.  அதன்மூலம், சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த முனைகின்றனர். ஆனால், அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குவாஹாட்டி மீது தாக்குதல் நடத்தினால் நாடு முழுதும் பெரிதாகப் பேசப்படும் என்பதால், அவர்களின் தாக்குல் இலக்கில் குவாஹாட்டியும் உள்ளது. வெள்ளிக்கிழமை 7 உல்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.  மேகாலயாவில் உஷார் நிலை:  ஹைன் நியூ ட்ரெப் தேசிய விடுதலைக் குழு (எச்என்எல்சி)வின் 25-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14ம் தேதி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மோகாலயாவின் 6 மாவட்டங்களிலும், கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.  மேகாலயா மாநில போலீஸôர் கூறியது:  வங்கதேச-மேகாலயா சர்வதேச எல்லைப்பகுதியில், 443கி.மீ. தூரம் வேலி அமைக்கப்படவில்லை.  அந்தப்பகுதி வழியாக எச்என்எல்சி தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் போலீஸôரும் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காசி ஜெயின்டியா மலைப்பகுதியில் 6 மாவட்டங்களில் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.

செவ்வாய், 29 மே, 2012

சூலை 9- ஆம் நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



சூலை 9- ஆம்  நாள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை



வாஷிங்டன், மே.28: கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட கம்யூட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் ஓடவிட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்னை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக இணையதள குறுக்கீடுகளைத் தடுக்க அரசு கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை எஃப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜூலை 9ஜம் தேதி மூடப்பட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.எஃப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு வெப்சைட்டை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவந்தும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.அவ்வாறு வைரஸால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜூலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று தற்போது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.