periyar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
periyar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

புரட்சியாளர்கள் - பெரியார் Periyar by Dr.S.Ilakkuvanar



புரட்சியாளர்கள்

பெரியார்

- தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

இன்று பெரியார் எனின், யாவரும் அவர் ஈரோட்டு வே. இராமசாமி என அறிவர். “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே” என்று பாரதியார் பாடினாலும் அது நிறைவேறியது பெரியார் அவர்களின் பெருந்தொண்டினால்தான் என்பது உலகறிந்த உண்மை. நான்கு வகை வருணமுறை நிலை நாட்டப்பட்டு இந்நாட்டுத் தொல்குடிப் பெருமக்கள் எல்லாரும் சூத்திரர் என்று அழைக்கப்படும் இழிநிலை வேரூன்றி இருந்தது. பிறப்பால் உயர்வு தாழ்வு கருதப்பட்டத் தமிழ்ப் பெருமக்கள் சாதி வேறுபாடுகளால் அலைப்புண்டு தீண்டாமை, பாராமை முதலியவற்றிற்குப் பெருமதிப்புக் கொடுத்து நாயினும் கடையராய் நலிந்து வாழ்ந்தனர். பிராமணியம் மேலோங்கித் தனியாட்சி புரிந்தது. மூடப்பழக்க வழக்கங்கள் எதிர்ப்பின்றி எங்கும் எத்துறையினும் இறுமாந்து கோலோச்சின. அறியாமை இருள்  மறைந்திருந்தது. பெரியார் அவர்கள் பிறவிப் புரட்சியாளர். நாட்டுரிமைக்காகக் குடும்பத்தோடு போராடி வந்த அவர், சாதிவேறுபாட்டுக் கொடுமைகளை ஒழிக்கப் போர்க்கோலம் பூண்டு தன் மதிப்பு இயக்கம் கண்டு அயராது உழைத்தார். அவர் உழைப்பின் பயனே இன்று பிராமணணும் பறையனும் ஓரிடத்தமர்ந்து உரையாடி உண்ணும் காட்சி.

  பெரியார் அவர்களின் பெரும் புரட்சி  தோன்றிலதேல் இன்று தொடர் வண்டிகளில் சாதிக்கொரு பெட்டிகள் சேர்க்கப்பட் டிருக்கும். ஆட்சித்துறை தலைவர்களும், ஆசிரியர்களும் பிராமண குலத்தையே சார்ந்தவர்களாயிருப்பர். உயர்திரு. பக்தவச்சலனார் முதல் அமைச்சராகவும், உயர்திரு. காமராசர் அ.இ. காங்கிரசு தலைவராகவும் ஆகி இருக்க முடியாது. இன்று எங்கு நோக்கினும் பிராமணர் அல்லாதவர்களே தலைமை இடங்களில் வீற்றிருக்கும் காட்சியைக் காண இயலாது. புத்தரால் அழிக்க முடியாத பிராமணியம் பெரியாரால் செல்வாக்கு ஒழிந்தது. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று அறவுரை மொழிந்தார், உலகப் பொதுமறையருளிய திருவள்ளுவர். அவ்வறவுரையைச் செயலுக்குக் கொண்டுவந்தார் நம் பெரியார். சாதிகள் இல்லையடி பாப்பா என்றார் பாரதியார். அக் கூற்றை நிறைவேற்றும் அரும் பணியில் தலைமை பெற்றார் தமிழர் தலைவராம் பெரியார். இன்று சாதிகள் முழுவதும் ஒழியிவில்லையாயினும் சாதிப் பாகுபாடுகள் ஆங்காங்குத் தோன்றி மக்களாட்சியை மாசுபடுத்தினும் இனி அவை என்றும் நிலைத்திருக்க இயலாத நிலை தோன்றி விட்டது. இதற்குக் காரணம் பெரியார் அவர்களின் பெரும் புரட்சியேயாகும். அப் பெரியாரின் புகழ் மக்கள் உள்ளவரையில் மறையாது. மன்பதைப் புரட்சி செய்த மாபெரும் வீரர் வாழ்க.
[தண்டமிழைப் போற்றிய பாரதி இன்றில்லை; ஆயினும் அவர் கனவு நனவாகி வருகின்றது. பெரியார் தோற்றுவித்த மன்பதைப் புரட்சி மக்களாட்சி வெற்றி பெறத் துணைபுரிந்து வருகின்றது. அறிஞர் அண்ணா தொடங்கியுள்ள மொழியுரிமைப் புரட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இந்திய அரசியல் தலைவர்களை எண்ணிப் பார்த்துச் செயலாற்றத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. புரட்சியாளர்கள் பெருந் தொண்டுகள் நம்மைப் புத்துலகுக்கு அழைத்துச் செல்வதாக. நம் நாடு புதுமை நலம் பெற்றுப் பழமையைப் போற்றிப் பாரில் ஈடு இணையற்று வாழ்வதாக. ஓங்குக புரட்சி. உயர்க தமிழ் நலம். மக்களினம் ஒன்றுபட்டுமாண்புடன் வாழ்வதாக.
            செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்
            நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்
            செய்த புரட்சிகளைச சீர்தூக்கிப் போற்றுமின்
            எய்துமின் இன்பமெலாம் இங்கு. ]
குறள்நெறி(மலர்1 இதழ்17): 15.09.1964

செவ்வாய், 27 டிசம்பர், 2011

thanthai periyaar kaaviya thamizh book publication: தந்தை பெரியார் – காவியத் தமிழ் – நூல் வெளியீட்டு விழா


தந்தை பெரியார் – காவியத் தமிழ் – நூல் வெளியீட்டு விழா

பதிவு செய்த நாள் : 26/12/2011


பெரியார் நூலக வாசகர் வட்டம், சென்னை நடத்தும் நூல் வெளியீட்டு விழா
தந்தை பெரியார் – காவியத் தமிழ்
(உலக மனித நேய உரிமைக் காவலரின் உண்மை வரலாறு)
நாள் : 29-12-2011 (வியாழன்) மாலை 6.30 மணி
இடம் : அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை
தலைமையுரை : திரு. மு.மீனாட்சி சுந்தரம் (தலைவர், பெங்களூர் தமிழ் சங்கம்)
ஆய்வாளர் : திரு. மறைமலை இலக்குவனார் எம்.ஏ. பிஎச்.டி
மனிதம் வெளியீடு அனைவரையும் வரவேற்கிறது.







1

வியாழன், 27 அக்டோபர், 2011

பெரியார் : தீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு

தீபாவளி கொண்டாடும் தமிழர்களின் சிந்தனைக்கு..

இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப்போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் “நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்” என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான “பழய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். “எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? “நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்” என்றால் அதற்கு “நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்” என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?
அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு.
மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.
ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரீகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ “காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது” என்றால் உடனே “கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய “காளைமாடு எப்படி கன்றுப் போடும்” என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூட சிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம்.
உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கௌரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு” என்பாரும் “புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு “நாங்கள் தான் பிரதிநிதிகள்” என்பாரும் மற்றும் “திராவிடர்களின் பழைய நாகரீகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு” மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற “படித்த” கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும்.
உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும் வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின் தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
தீபாவளியின் கதைச் சுருக்கம்
ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம். நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம். ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.
முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? “எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு”க்கும் பூமி “தேவி”க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி “தேவி” என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! “பொறுமையில் பூமிதேவிபோல்” என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த “அம்மையாரை” உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவஅசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
————————
- ஈ.வெ.ரா.
குடி அரசு கட்டுரை 01.11.1936


சனி, 17 செப்டம்பர், 2011

Periyar by Annaa: பெரியார் எப்படிப்பட்டவர்?

Blog post image #1
கல்லூரி காணாத கிழவர்!
அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாது கிளர்ச்சிக்காரர்!
பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!
யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்!
கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லாதவர்!
தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்!
ஆரிய மதம், கடவுள் எனும் மடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இச்சைக்குக் கட்டுப்பட மறுப்பவர்!
ஆம்! இராமசாமியின் கட்சியிலே தோட்டக் கச்சேரி கிடையாது! முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது! இலண்டன் கிளை கிடையாது; இலட்சாதிபதிகளின் பிச்சை கிடையாது.
சாமான்ய மக்களின் - இது அரசியல், இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்!
தேர்தலா . . . ? வேண்டாம்! பதவியா? கூடாது! துரைமார் தயவா? தூ… அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! என்றெல்லாம் கூறுபவர்!
சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலர்கிறது!
கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு!
இவ்வளவு வயதாயிற்று - இவ்வளவு ஆண்டுகளாகப் பொதுவேலை செய்தார் - ஒரு சர் பட்டம் பெற்றாரா?
ஜெனீவா போனாரா அரசு செலவில்?
அமெரிக்கா போனாரா அரசாங்கத்தின் செலவில்?
எதைக் கண்டார்?
எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்!
இவர்தானய்யா இராமசாமி நாயக்கர்!
இப்படிப்பட்ட இராமசாமி, இப்படிப்பட்ட தமிழரைக் கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்ய முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்? தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருந்தார்! எப்படி?
எப்படி எனில், அவர் ஒரு மாயாவி! ஜால வேடிக்கைக்காரர்!
வேடிக்கை பேசாதே என்று கூறுவீர்! வேடிக்கையல்ல நாம் கூறுவது!
தாசரான தமிழரைக்கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர் தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும்?
மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைபட்டுக் கிடக்கும் பொன் இருக்குமிடமும், எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா, எப்படி? என்று கேட்பான்.
பெரியார் இராமசாமியின் பெரும்பணி இதுபோன்றதே!
அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்ட காலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும் மானத்தையும் உரிமையையும் பெரிதெனக் கொண்ட தமிழரிடை சாதிப்பித்தும், வைதீக வெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவை கிடையா என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்கள் கவடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்றுவிட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந்தது என்ற போதிலும் தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர் - விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.
மனி மேலே மாசு! மடு மேலே பாசி! வயலிடையே களை!
தமிழர் - அவர்களுக்குள் இந்நாள் நிலவும் தகாதாரின் கூட்டுறவு!
மாசு துடைத்திடுக - பாசி போக்கிடுக - களை நீக்குக - கவடரின் பிடியைப் போக்குக என்று கனிவுடன் கூறுகிறார் கடமை வழி நிற்கும் கிழவனார்!
இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக் கொண்டு காலவேகம், கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடையே உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும் - இரசனைக்காகவோ சொற் பெருக்காற்றவோ மட்டும் பயன்படும் அறிவாக அதனைக் கொள்ளாமல், மக்கள் விடுதலைக்கு, மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு அந்த அறிவைத் துணைகொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை, இன்பதுன்பம் எனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த இராமசாமியால் தமிழர்களும் ஆள முடியும் என்று தைரியமாகக் கூற முடிகிறது.
அந்த இராமசாமியும் ஏடு தாக்கியதாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார்; கனமாகி இருப்பார்; ஆனால் இனம் மெலிந்து போயிருப்பார்.
துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால், ஒரு சர் ஆகியிருப்பார். ஆனால், இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது.
அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.
அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!
அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!
தமிழன் ஒரு நாட்டுச் சொந்தக்காரன்! தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!
இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!
ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.
இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வாதைப்படுகிறான்.
எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!
எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!
அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!
அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!
-அறிஞர் அண்ணா( திராவிடநாடு - 03.06.1945)

புதன், 19 ஜனவரி, 2011

Periyar for separate thamizh nadu: பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! – தலைவர் கொளத்தூர் மணி

பெரியார் பேசியது தமிழ் தேசியமல்ல; அவர் வலியுறுத்தியது தனித் தமிழ் நாடே! – தலைவர் கொளத்தூர் மணி

dscf46994
மீண்டும் மீண்டும் பெரியாரை கொச்சைப்படுத்தும் சில தமிழ்த் தேசியவாதிகளுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி விரிவாக பதிலளித்தார். டிசம்பர் 24 அன்று வடசென்னை பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கழகத் தலைவர் ஆற்றிய உரை:
இன்று பெரியாரின் நினைவு நாளில் நாம் கூடியிருக் கிறோம். வழக்கமாக பெரிய அளவில் எடுக்கப்படும் பிறந்த நாள் விழாக்களைவிட, நினைவு நாள் விழாக்கள்தான் மிகவும் தேவையானதும், பொருத்தமானதும் என்று நாம் கருதுகிறோம். பிறந்த நாள் விழாக்களை அந்தந்த தலைவர்கள் வாழுகின்ற காலம் வரை எடுப்பார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பொழுதெல்லாம் பார்க்கிறோம். அவர்களுக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு கொடுக்கும் அடைமொழிகளை பார்த்து நமக்கு கூச்சமாக இருக்கிற அளவுக்கு, பல்வேறு அடைமொழிகளை கொடுத்து சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் மறைந்துவிட்ட தலைவர்களுக்கு நினைவு நாள் எடுப்பது என்பதுதான், அவர்களுடைய கொள்கைகளை, அவர்கள் ஆற்றிய தொண்டினை, அவற்றை நாம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய தேவையை, இவை எல்லாவற்றையும் எண்ணி பார்க்கிற நிகழ்ச்சியாகவும் இருக்கும். நினைவு நாள் கூட்டம் என்பதுதான் ஒரு இயக்கத்திற்கு மிகவும் தேவையானது என்ற அடிப்படையில், இன்று நாம் பெரியார் நினைவு நாள் எடுக்கிறோம்.
நம் நாட்டில் பல தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மிகப் பெரிய தலைவராக கருதப்பட்ட மனிதர்களுக்கும் மேலாக கருதப்பட்ட ‘மகாத்மா’க்களெல்லாம் வாழ்ந்திருக் கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் என்பது, அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்குவதை படம் பிடிக்க, செய்தியாளர்களை ஏற்பாடு செய்வது என்ற அளவோடு முடிந்து விடுகிறது. நினைவு நாள் கூட்டங்களில் அவருடைய கொள்கைகளைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் நம்மிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதையோ, நாம் அவருடைய வழியில் ஏன் செல்ல வேண்டும் என்ற தேவையை விளக்குவதற்கோ எந்த முயற்சியும் செய்வ தில்லை. தமிழ்நாட்டிலும் பெரியாருக்கு இணையாக (வயதில்) வாழ்ந்த தலைவர் ஒருவர் இருந்தார். இந்த நாட்டின் பொறுப்பில் இருந்தார். குடிஅரசு தலைவருக்கு இணையான, கவர்னர் ஜெனரலாக இருந்தார். பிறகு உள்துறை அமைச்சர், இலாகா இல்லாத அமைச்சர், முதலமைச்சர் என இருந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்குள் இறந்து போன இராஜாஜி, அவர் உயிரோடு இருந்த காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினர், அவரை மூதறிஞர் என்றெல்லாம்கூட பாராட்டினர். இன்று அவரைப் பற்றிப் பேச ஆள் இல்லை. சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகில் இராஜாஜி சிலை இருக்கிறது. அவரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும், நகராட்சி ஊழியர்கள் சலிப்போடு ஒரு மாலை அணி விக்கிறார்கள். வேறு யாரும் மாலைகூட அணிவிப்பதில்லை.
ஆனால், பெரியார் மறைந்து இவ்வளவு காலங்களுக்குப் பின்னால், முப்பத்தி ஏழு ஆண்டுகள் கடந்த பின்னாலும், அவருடைய கொள்கைகளைப் பேச, செயலாற்ற பல இயக்கங்கள், பெரியாரை இன்றும் பேசியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் பல இயக்கங்கள் இருப்பதை பார்க்கிறோம். பெரியார் வாழ்ந்த காலத்தில், அவரை விமர்சித்தவர்கள் கூட, இன்று பாராட்டி போற்றுவதை பார்க்கிறோம். பொதுவுடமை இயக்கங்கள் எல்லாம் அவரைப் பற்றி பேசினர். முதலாளித்துவ சிந்தனையாளர் என்று சொன்னார்கள். “அடிக் கட்டுமானத்தில்” இல்லாத சமயத்தை, சாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எகத்தாளம் செய்தவர்களெல்லாம், இன்று அவர் கொள்கைகளைத் தான் பேசிக் கொண்டிருக் கிறார்கள். அதை செயல் திட்டமாக வைத்துக் கொண் டிருக்கிறார்கள். உலகத்தில் தங்களைவிட அறிவாளி கள் யாரும் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிற ஒரு இயக்கம் சி.பி.எம். கட்சி. அவர்கள் பெரி யாரைப் பற்றி செய்கிற விமர்சனங்கள் (பெரியாரை மட்டும் அல்லாமல், தமிழர், தமிழீழம் பற்றியும்) எதிராகத்தான் இருக்கும். இன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்று வைத்துக் கொண்டு, சாதி ஒழிப்பை ஒரு செயல் திட்டமாக வைத்திருக்கிறார்கள். அதை நாம் விமர்சிக்கவில்லை; வரவேற்கிறோம். பெரியார் இறுதியாக கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருந்தார். அனைத்து சாதி யினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவிலின் கருவறையில் தொண்டர்களோடு நுழையப் போவதாக அறிவித்தார். அப்போது வரவேற்றார்களோ இல்லையோ, இப்பொழுது வருகிற ஜனவரி 30-ம் நாளில், இந்திய பொதுவுடமைக் கட்சி அதே மன்னார்குடி ராஜ கோபால்சாமி கோவிலில் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் சொன்ன, சமய வழிபாட்டு இடங்களிலும் சமத்துவம், தமிழ் மொழிக்கு முன்னுரிமை வேண்டும் என்பதைப் பற்றியே பேசுகிறார்கள்.
பெரியார் 1925-க்கு முன்னால் பேசியவற்றை, சுமார் எண்பது, எண்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுது எல்லோரும் பேச தொடங்கியிருக்கிறார்கள். ஒரு நல்ல மருத்துவர் என்பவர் நோயை துல்லியமாக தெரிந்து  கொள்வார். அதுவே பாதி மருத்துவம் முடிந்தது போல என்று சொல்வார்கள். அதேபோல பெரியார், இந்த சமுதாயத்தின் நோயை மிகத் துல்லியமாக அறிந்திருந்தார். அதற்கான மருந்தை மிகச் சரியாக மக்களிடத்தில் கொண்டு போய் கொடுத்தார் என்பதை பெரியார் தொண் டர்களைவிட அவர்கள் சரியாக புரிந்து கொண்டிருக் கிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், பழுத்த மரத்தின் மீது தான் கல்லடி படும் என்று சொல்வார்கள். இப்பொழுது அரசியல்வாதிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே ஒரு பழுத்த மரமாக கண்ணுக்கு தெரிவது பெரியார் தான். பெரிய தத்துவங்களை பேசுகிறவர்கள் எல்லாம், பெரியார் மீது தங்கள் விமர்சனங்களை பேச துடிக் கிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர் மீது குற்றச்சாட் டுக்களை வைத்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் கூட, பெரியாரை தமிழ் தேசத்தின் தந்தையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார். (அவரிடம் நாம் சான்றிதழ் கேட்டு நிற்கவில்லை) பெரியார் குழப்பமாக பேசினார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியார், தமிழ் தேசியமே பேசவில்லை. தனி தமிழ்நாடு வேண்டும் என்று தான் பேசினார் என்பதை இவர்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் என்றால், ஸ்டாலினும், லெனினும் ஒரு கொள்கையை உண்டாக்கி வைத்து விட்டார்கள் என்பதற்காக பெரியார் இங்கு தனி தமிழ்நாடு கேட்கவில்லை. ரஷ்யாவில் தைத்து விட்ட செருப்பை எடுத்துக் கொண்டு இங்குள்ள காலை வெட்டியவர் அல்ல பெரியார். இங்குள்ள காலை அளந்து பார்த்து செருப்பு தைத்தார் – அதுதான் தனி தமிழ்நாடு போராட்டம். பிரிந்து செல்லும் உரிமையோடு இணைந்து வாழ விரும்புகிற சிந்தனை அவருக்கு இருக்கவே இல்லை. நாம் இணைந்து வாழ முடியாது, பிரிந்தே சென்றாக வேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னவர். “அருகோ” எனும் தோழர் அரு.கோபாலன் சொல்லிக் கொண் டிருக்கிறார் “திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சேலம் மாநாட்டு நாள் அன்று காலை வரை, தமிழர் கழகம் என்று பெயர் வைப்பதாக இருந்ததாம். நீங்கள் கன்னடராயிற்றே, தமிழர் கழகம் என பெயர் வைப்பதா என்று, சத்யமூர்த்தி அய்யர் பெரியாரிடம் தொலைபேசியில் கேட்டாராம். உடனே திராவிடர் கழகம் என பெரியார் மாற்றிக் கொண்டாராம்”. சத்யமூர்த்தி அய்யர் இறந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான், அந்த மாநாடே நடைபெற்றது. இறந்து போனவர் எப்படி தொலைபேசியில் பேச முடியும் என நமது பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதினார். பிறகு இராஜாஜி பேசியதாக மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியும் நுணுக்கமான கேள்விகளைப் பார்ப்பனர்கள்தான் கேட்க முடியும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போலும். 1939 முதல் தமிழர், திராவிடர் என்பதை பற்றி பேசி விவாதிக்கப்பட்டு, பெரியார் தெளிவான விளக்கத்தையும் சொல்லியிருக்கிறார். தமிழர் கழகம் என்பது மொழி போராட் டத்திற்கு தான் பயன்படும். சமூக விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதி தான் மொழி போராட்டமே யொழிய, அதுவே முழு போராட்டமாகி விடாது. இந்தி எதிர்ப்பு என்பது மொழி போராட்டம் அல்ல, தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, சமயயியல் இவற்றில் ஆரியத்தை, மனுதர்மத்தை புகுத்த நினைக்கும் சூழ்ச்சிக்கு எதிரானது என்றே பெரியார் சொன்னார்.
பெரியார் மறைந்த அடுத்த மாதமே, 1974 ஜனவரியில் திராவிடர் கழகத்தால் ஒரு பிரச்சார பயணம் தொடங்கப் பட்டது. அப்பொழுது மணியம்மையார் தலைவராக இருந்த காலம். “பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடிப்போம்” என்று சூளுரையை பொதுக் கூட்டத்தில் நாங்களெல்லாம் உறுதிமொழியாக எடுத்தோம். உறுதிமொழியை எங்களுக்கு சொன்ன மணியம்மையார் மறைந்தார். அவருக்கு பின்னால் சொல்லிக் கொண்டிருந்தவர் சூளுரையை மறந்து விட்டார். இப்பொழுது நாங்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் தான், அதை பின்பற்றச் சொல்ல முடியும். பெரியாரின் நூல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த வீரமணி அவர்கள், நாங்கள் வெளியிட்ட பெரியாரின் நூல்களுக்கு, ‘குடிஅரசு’ தொகுப்பு வெளியீட்டுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கினார். பெரியார் நீண்டகாலமாக திராவிடர் என்ற சொல்லை எவ்வளவு அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாரென்பது அந்த குடிஅரசு பக்கங்களை புரட்டும்போது தெரிகிறது. திராவிடர் என்ற சொல்லை இன விடுதலைக்கு, சமூக விடுதலைக்கு அவர் பயன்படுத்தினார். நம்மை அடிமையாக்கிய ஆரியத்திற்கு எதிரான சொல்லாக திராவிடத்தை பார்த்தார். அரசியல் விடுதலைக்கு தமிழ்நாடு தமிழருக்கே என்று பேசினார். சமூக விடுதலை என்று வருகிறபோது திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத் தினார்.
1944 இல் தென்னிந்திய நல உரிமை சங்கம், திராவிடர் கழகம் என மாற்றப்படுவதற்கு முன்பே, சுயமரியாதை இயக்க தலைமையோடு, நீதிகட்சி தலைமையையும் பெரியார் ஏற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு விட்டன. 1942 ஆம் ஆண்டிலேயே திருச்சியில் உள்ள பொன்மலையில் திராவிடர் கழக ஆண்டு விழா கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார். 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் திராவிடர் கழகம் என்ற அமைப்பை துவங்கி வைக்கிறார். 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் திராவிடர் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கூட்டத்தில் பேசுகிறார். திராவிடர் கழகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இயங்குகிறது என்றாலும், அதிகார பூர்வமாக பெயர் மாற்ற எப்பொழுது முடிவு செய்தார்கள் என்றால், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியிலுள்ள தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் நீதிக்கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடை பெற்றிருக்கிறது. 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாத குடிஅரசில் (26.11.1943) அக்கூட்டத்தின் தீர்மானங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தென்னிந்திய நல உரிமை சங்கம் என்பதை, தமிழில் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் சௌத் இந்தியன் திரவிடியன் பெடரேசன் (South Indian Dravidian Federation) என்று பெயர் மாற்றப்பட வேண்டும் என்றும், கடந்த திருவாரூர் மாநாட்டில் திட்டமிட்ட படி அடுத்த ஆண்டு சேலத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் இதை அறிவிப்பது என்றும் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இன்று தமிழ் தேசியவாதிகள், காலையில் முடிவு செய்து, மாலையில் பெரியார் மாற்றிக் கொண்டதாக, பொய்ப் பிரசச்hரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். காரணம் பெரியார் ஒரு பழுத்த மரம் என்பதுதான்.
பெரியார், திராவிட நாடு என்று சென்னை மாகாணத்தைதான் சொன்னார். நான்கு நாடுகளின் கூட்டு அரசே, திராவிட நாடு என்று அண்ணா தான் சொன்னார். அண்ணாகூட பிரிந்து செல்லும் உரிமையோடு கூடிய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நாடுகளின் கூட்டு அரசாகத் தான் திராவிட நாட்டை கூறினார். மொழி வழி பிரிந்தும், இன வழி கூடியும் உள்ள நாடாகத்தான் திராவிட நாட்டை கூறினார். முப்பது மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் இருந்து பிரிந்து செல்லும் உரிமையோடு நான்கு நாடுகள் கொண்ட அண்ணாவின் திராவிட நாட்டை ஏன் விமர்சிக்கிறார்களோ, நமக்கு புரியவில்லை.
அப்படித்தான் எல்லைப் போராட்டத்தில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்றும், இப்பொழுது ஒரு பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 1953 இல் ஆந்திரா பிரிந்தபோதுதான் இந்த சிக்கல் வந்தது. அப்போது நடந்த இரு நிகழ்ச்சிகளில் ஒன்று, திருத்தணியில் நடந்த ஒரு எல்லைப் போராட்டம், மற்றொன்று சென்னை நகரை ஆந்திராவுக்குக் கேட்டார்கள் என்பது. இதில் பெரியார் என்ன நிலைப்பாடு எடுத்தார் என்றால், 1956 ஆம் ஆண்டு, வேலூரில் ஒரு கூட்டத்தில் பெரியார் பேசுகிறார், எல்லைப் போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி வருகிறது. அதற்கு அவர் விளக்கம் அளிக்கிறார். “முதல் கூட்டத்தில் ம.பொ.சி. உட்பட நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டோம். எல்லைப்போராட்டத்தைப் பற்றி பேசினோம். அப்போது நான் ஐந்து திட்டங்களை முன் வைத்தேன். எல்லைப் போராட்டத்தில் கலந்து கொள்ள தயார். இந்தப் போராட்டத்தோடு இந்தி எதிர்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். படை, போக்குவரத்து, வெளியுறவு துறை தவிர அனைத்து அதிகாரங்களும் மாநிலத்திற்குதான் இருக்க வேண்டும். சென்னை ராஜ்யம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தட்சிண பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நினைக்கிறது அதை எதிர்க்க வேண்டும்” – என்று.
இந்த ஐந்து கோரிக்கைகளில், தமிழ் தேசியத்திற்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால், தமிழ் தேசத்தின் தந்தையாக கருதப்படுகிற ம.பொ.சி. சொன்னார் – அவர், “நான் இந்தியன் என்பதால் இந்தி மொழியை ஏற்றுக் கொள்கிறேன். நான் இந்து என்பதால்  என் சமய சடங்குகளில், சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என்றவர். இதை இரண்டையும் எதிர்த்த பெரியார் வைத்த அந்த கோரிக்கைகளுக்கு, “கம்யூனிஸ்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே வேண்டாம்” என ம.பொ.சி. சொன்னார். ம.பொ.சி. உயிரோடு இருந்த காலத்தில் பெரியார் இதை பதிவு செய்துள்ளார். தாராளமாக நீங்கள் போராடுங்கள், நாங்கள் உங்களோடு இணைந்து நிற்க முடியாது என்று பெரியார் தெரிவித்து விட்டார்.
அதன் பின்னால் சென்னையைப் பற்றி விவாதம் வந்தபோது தான், நான் விஸ்தீரணத்திற்கு போராடுபவன் அல்ல. விடுதலைக்கு போராடுபவன் என்று அழுத்தமாக பெரியார் சொன்னார். இருந்தாலும் இதில் ஏன் சம்பந்தப் பட்டிருக்கிறேன் என்றால், மொழிவாரி என்று பேசுகிறவர்கள், மொழிவாரியாக பிரிந்துவிட்டு, மொழி அல்லாத நாட்டிலும் ஆதிக்கம் செலுத்த பார்க்கிறார்களே என்ற கருத்துதானே அல்லாமல், மற்றபடி சென்னை நகரம் தமிழர்களுக்கோ, தமிழ்நாட்டிற்கோ பெரிய தொண்டு செய்திருக்கிறது. செய்து வருகிறது. அல்லது செய்ய முன்வரும் என்பதற்காக அல்ல என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டையும் சொன்ன பெரியாரின் கருத்துகளை, எங்கள் பழைய தலைவர் (வீரமணி) மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தால், இந்த தமிழ் தேசியவாதிகள் சொல்லும் புரட்டுகளை மக்கள் புரிந்திருப்பார்கள். பெரியாரின் கொள்கைகள் திடலுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. வெளியே கொண்டு வருபவர்களையும், தடுக்க பார்க்கிறார்கள். குடிஅரசு வழக்கில் பார்த்திருப்பீர்கள். உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கே தகுதி அற்றது என்று தள்ளுபடி செய்த செய்தி, வீரமணி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. கோரிக்கைளை மாற்றிக் கொள்கிறோம் என்ற மனுவை, இப்பொழுது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பெரியார் நினைவு நாள் பரிசாக அவருக்கு கொடுத்திருக் கிறது.
பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லுகிற, நடைமுறைபடுத்துகிற, பெரியாரின் வழியில் தொடர்ந்து போராடுகிற இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள இயக்கமாக, பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. எங்களுக்குள்ள சக்தி குறைவாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று கருதுகிறோம். அதன் வெளிப்பாடாகத்தான், பல போராட்டங்களை நடத்துகிறோம். அண்மையில் ஆயுத பூஜை அன்று கூட ஒரு போராட்டம் நடந்தது. அரசியல் சட்டம் எழுதப்பட்ட போதே, இது மதசார்பற்ற நாடு என்று எழுதி விட்டார்கள். அரசு அலுவலகங்களை கோவிலாக்காதே, கடவுள் படங்கள் இருந்தால் அகற்றுங்கள் என அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஆணை பிறப்பித்தார். அதன் பின்னர், அடிக்கடி கலவரம் ஏற்பட காரணம் என்ன என்பதை கண்டறிய, 1994 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி காலத்தில், உள்துறை மூலமாக ஒரு குழுஅமைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் மதம் கலப்பதுதான் இதற்கு காரணம் என அந்த குழு அறிவுறுத்தியது. அரசு அலுவல கங்களில் கடவுள் படங்களை நீக்கவும் மத வழிபாடுகள் கூடாது என்றும், மத சுலோகங்கள் எழுதப்படக் கூடாது என்றும், மத வழிபாட்டிடங்களை கட்டக் கூடாது என்றும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது. தலைமை செயலாளர் இப்போது இருப்பதை போலவே அப்போதும் ஒரு பார்ப்பனர்தான் (ஹரி பாஸ்கர்). அவர் அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு எ.டி.ஜி.பி.யாக இருந்த லத்திகாசரண் (இப்போது டி.ஜி.பி.), காவல் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பாக காவலர் குடியிருப்புகளில்கூட மதவழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளது. இவ்வளவு இருந்தும் தொடர்ந்து காவல் நிலையங்களில் ஆயுதபூஜை நடைபெற்று வந்தது. இவ்வாறு இந்த ஆண்டும் நடக்குமேயானால், அதை தடுக்கும் நேரடி நடவடிக்கையில் இறங்குவோம் என, பெ.தி.க. தலைமை செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத் தின்படி, பல இடங்களில் எங்கள் தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையிலும், மேட்டூரிலும் தடுத்து, வழக்குகளை சந்தித்தார்கள். பெரியார் வன்முறையை விரும்ப மாட்டார் என்று அப்போது பலர் சொன்னார்கள்.
ஆனால், பாரதிதாசன் பாடல்களை பாட நூல்களில் சேர்க்கப்பட வேண்டும் என்ற செய்திகளைக் குறிப்பிட்டு விட்டு, “எனக்கு பின்னால் இதை சொல்லவும் ஆள் இல்லை, தி.மு.க.வை தவிர இதை செய்யவும் கட்சியில்லை. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை அகற்றாவிட்டால், நானும் எனது தோழர்களும் உள்ளே நுழைந்து அகற்றுவோம்” என, 1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெரியார் விடுதலை நாளேட்டில் ஒரு அறிக்கை விடுகிறார். அதை இன்று நாங்கள் செய்திருக்கிறோம்.பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டு தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்து முடித்திருக்கிறோம். இது தானே நாம் பெரியார் மறைந்த வுடன் எடுத்த உறுதிமொழி.
நாம் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது என்பதில் பெரியாரின் நிலைபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் பெரியார் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று பார்ப்பனர்கள் சொல்லி கொண்டிருந் தார்கள். காங்கிரஸ் கட்சியை எதிர்த்த வண்ணம் இருந்த பெரியார், 1954 இல் காமராசர் வந்தவுடன் ஆதரித்தார். அடுத்து தி.மு.க.வை ஆதரித்தார் அவ்வளவுதான்.
காமராசர் ஆட்சியின்போதுகூட காங்கிரசை ஆதரிக் கிறேன் என்பது தவறு. காமராசரைத் தான் ஆதரிக்கிறேன் என்று பலமுறை தெளிவாக கூறியிருக்கிறார். காமராசருக்கு பின், ஆட்சிக்கு வந்த பக்தவத்சலத்தை எதிர்த்து, 1965இல் பக்தவச்சலம் ஆட்சி கண்டன கூட்டம் நடத்தியவர் பெரியார். எப்பொழுதும் ஆளுங்கட்சியை ஆதரிப்பவர் என்று சொல்லப்பட்டபோது, “எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்கான காரணம்” என்ற தலைப்பில் 19.9.1968 இல் ஒரு அறிக்கை எழுதினார். எனது ஆசை யெல்லாம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாக (நாத்திகர்களாக) ஆக வேண்டும். சாதி ஒழிய வேண்டும். உலகில் பார்ப் பனர்கள் இருக்கக் கூடாது. பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனி எந்த கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ, எனக்கே தெரியாது” என்று எழுதி விட்டு, கீழே குறிப்பு என்று ஒன்று எழுதுகிறார். அதில், “இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரியானால், என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது” என்று எழுதியுள்ளார். அண்ணா ஆட்சியில் இருக்கும்போதே இதை எழுதி யுள்ளார். கல்வித் துறை உட்பட எந்த துறையில் பார்ப்பனர்கள் இருந்தாலும், பெரியார் உடனடியாக “விடுதலை” நாளேட்டில் பட்டியல் போட்டுவிடுவார். ஆட்சியாளர்கள் மாற்றிக் கொள்வார்கள். எனவே தவறு நடந்தால் பட்டியல் போட்டு சுட்டிக்காட்ட ஒருவர் வேண்டும்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்….          என்கிறார் திருவள்ளுவர்.
ஒரு ஆட்சிக்கு ஜால்ரா அடிப்பதல்ல பெரியார் தொண் டனின் வேலை. 2001 முதல், இந்த நாட்டில் தொடர்ந்து யார் தலைமை செயலாளராக இருக்கிறார்கள்? பாப்பாத்தி ஆட்சியைகூட விட்டுவிடுங்கள். ‘திராவிடர்கள்’  ஆட்சி வந்த பின்னால், திரிபாதி, ஸ்ரீபதி, மாலதி உட்பட எல்லோரும் பார்ப்பனர்கள். இந்த நாட்டின் தலைமை செயலாளராக தொடர்ந்து பார்ப்பனர்களே இருந்தால் நமக்கு என்ன நடக்கும்? இதை சுட்டிகாட்ட வேண்டாமா? சுட்டிக்காட்டாமல் இருப்பது தவறு என்றுதான், எங்கள் பங்காளி இயக்கத் திற்கு சொல்கிறோம். கல்லூரி முதல்வராக இருந்தபோது ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை சரிசெய்ய மாணவிகளை அனுப்பி வைத்ததாக இரண்டு முறை குற்றம்சாட்டப்பட்ட மீனா என்ற ஒரு பார்ப்பன அம்மையார், திருச்சி பாரதி தாசன் பல்கலைக் கழகத்திற்கு இப்போது துணைவேந்தராக வந்துள்ளார். உடனே இவ்வளவு காலம் இயங்கி வந்த ‘பெரியார் உயராய்வு மய்யம், பாரதிதாசன் உயராய்வு மய்யம்’ உடனடி யாக மூடப்பட்டுவிட்டது. நாம் யாருமே போராடத் தான் இல்லை.
பெரியாரின் முதல் கொள்கையாக இருந்தது சாதி ஒழிப்பு. காங்கிரஸ்காரராக இருந்தபோதே, கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டபோது, அது மலையாள நாடாக இருந்தபோதும், அங்கு சென்று போராடினார். அப்போது, தென்னாட்டில் நடந்த இரண்டு சம்பவங்கள் என் மனதை உலுக்கியது என்றும், அதில் ஒன்று வைக்கத்தில் இராமசாமி நாய்க்கர் நடத்திய போராட்டம் என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஏட்டில் தலையங்கம் எழுதினார்.
1922 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர் களையும், நாடார்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, திருப்பூர் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார். பின்னாளில் கோவில் நுழைவு போராட்டம் நடத்தி யதாக சொல்லப்பட்ட வைத்தியநாத அய்யர் இராமா யணத்தையும் மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டி, அப்போது கோயில் நுழைவை எதிர்த்துப் பேசினார். இராமாயணமும் மனுதர்மமும் என் மக்களை கோவிலில் நுழைய தடுக்குமே யானால், அதை எரிக்க வேண்டும் எனப் பேசினார் பெரியார். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடன், சாதி ஒழிப்பு வேலைகளைத் தான் செய்தது. 1926 முதல் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசினார். 1928 இல் இருந்து பொதுவுடமையைப் பற்றிப் பேசினார். 1938 இல் தனி தமிழ்நாட்டைப் பற்றி பேச தொடங்கினார். பெரியார் தொண்டர்கள் என்பவர்கள் இந்த நான்கு கொள்கைகளை முன்னெடுத்து செல்வோர் தான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்ற பிரச்சினையைப் பற்றி உங்களுக்கு தெரியும். 1971 இல் கலைஞர் சட்டம் போட்டார். 234 சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது. ஒட்டு மொத்த தமிழகமும் ஏற்றுக் கொண்டதை, பதினொரு பார்ப்பனர்கள், பதிமூன்று வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தார்கள். அப்போது தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும், அதே நேரத்தில் பார்ப்பனர் அல்லாதாரை நியமித்தால் என்னிடம் வா என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. ‘ஆபரேசன் வெற்றி, நோயாளி மரணம்’ என பெரியார் சொன்னார். பி.வி.கானே என்ற ஒருவன் ஒரே ஒரு புத்தகம் எழுதினான் (சட்டபுத்தகம் அல்ல). இந்து சட்டங்கள் பற்றிய தொகுப்பு எழுதினான். அதை வைத்து தீர்ப்பு சொன்னார்கள். பெரியார் நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். ஒரு குழு அமைத்தார். ஆய்வு செய்தார்கள். கலைஞர் ஆட்சிக்கு
வந்து அர்ச்சகர் பயிற்சி கொடுத்தார். எல்லாம் முடிந்தது. மீண்டும் பார்ப்பனர்கள் தடை ஆணை வாங்கிவிட்டார்கள். நீதிமன்றம் சொல்லிவிட்டது. நான் என்ன செய்வது என கலைஞர் இப்போது சொல்லிவிட்டார்.
ஆனால், சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ உறுப்பினராக இல்லாத பெரியார், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கொள்கையோடு வைத்திருந்த இயக்கத் தோழர்களை கொண்டு பெரியார் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தை கொண்டு வந்தார். எனவே நாம் மக்களை திரட்டி போராடியிருக்க வேண்டும். கேரளாவில் ராகேஷ் என்ற தாழ்த்தப்பட்டவரை அர்ச்சகராக்கியதற்கு, ஆதித்யன் என்ற பார்ப்பான் வழக்கு தொடுத்தான். மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும், மனுவை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் பராசரன் வாதாடினார். இந்தியாவில் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பின்னால், சமவாய்ப்புகளை மறுக்கும் சாஸ்திரம் உட்பட எதுவும் செல்லாது என தீர்ப்பு சொல்லப்பட்டது. தீர்ப்பைச் சொன்னவர்கள், தமிழ்நாட்டை சார்ந்த துரைசாமி ராஜூ, கர்நாடகத்தில் பிறந்திருந் தாலும், தமிழ்நாட்டில் படித்து, பகுத்தறிவு பெற்ற ராஜேந்திரபாபு நீதிபதிகளாக இருந்தார்கள். தென்னாட்டைச் சார்ந்தவர்கள் சட்டம் தான் பெரிது என்றார்கள். ஆனால், நமக்கு எதிராக தீர்ப்பு சொன்ன வடநாட்டு பார்ப்பனர்கள், சாஸ்திரம் தான் பெரிது என்கிறார்கள்.
உங்களுக்கு சாஸ்திரம் பெரிது என்றால், எங்களுக்கு தமிழர்களுக்கு, குறைந்தபட்சம் இறை நம்பிக்கையுள்ள தமிழர்களுக்கு, திருமூலம் பெரிது. திருமூலர் சொல்கிறார்,
“பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சிக்கில்
போர்கொண்ட மன்னர்க்கு பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமுமாம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே”
பார்ப்பான் பூஜை செய்தால், நாட்டில் பஞ்சம், ஆட்சி செய்கிறவர்களுக்கு நோய் வரும் என்கிறார் திருமூலர்.
அதேபோல தொல்காப்பியம், பார்ப்பனர்களுக்கு என்ன வேலை என்பதை சொல்கிறது.
காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்
அன்னவை பிறவும் பார்பார்க்கு உரிய.
என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது – இது நல்லது கெட்டது என்று கூறுவது);, செலவுறு கிளவி – இப்போது செல்ல லாம் – அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனி யாகத்தான் இருக்கிறாள் என்பது போல – செலவழுங்கிளவி – செல்லக் கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போய்விடாதே – உதைத்தான் விழும் என்பது போல…) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார். பூஜை செய்வதை அல்ல….
அவ்வையார் சொல்கிறார்
“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்,
கோலெனிலோ பாங்கே குடிசாயும் – நாலாவான்
மந்திரியுமாவான், வழிநடைக்குத் துணையும் ஆவான்,
அந்த அரசே அரசு”…
என்று! பார்ப்பான் ஆட்சி செய்தால் காட்டிக் கொடுத்து நாடு கெட்டுவிடும். சத்ரியன் ஆட்சி செய்தால், சண்டையாகவே இருக்கும். வைசியன் ஆட்சி செய்தால் வரி போட்டே ஒழித்து விடுவான். சூத்திரன் ஆள்வதுதான் நல்ல அரசு.
தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் இவைகளெல்லாம்தானே சட்டமாக இருந்திருக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்கு எந்த தடையும் வந்திருக்காதே!
பெரியார், காரைக்குடி காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசுகிறபோது சொல் கிறார், “பறையன், சக்கலியன் என்பதைவிட சூத்திரன் (வேசிமகன்) என்பவன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது கொள்கை. குடிப்பதற்கு தண்ணீர் தராமல், அவன் குளிக்கவில்லை என்று சொல்வது உன் தவறா? அவன் தவறா? என்று கேட்டார். இப்படி வாழ்கிறபோது இருக்கிற சாதி கொடுமை, இறந்த பின்னால் சுடுகாட்டிலும் இருக்கிறது. இதை ஆதிக்க சாதிகள் மட்டும் அல்ல, அரசும் செய்கிறது.
அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்படும் சுடுகாட்டில், தாழ்த்தப்பட்டவர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என பிரித்து வைத்திருக்கிறார்கள். தீண்டாமை வன்கொடுமை சட்டம் யார் மீது பாய வேண்டும்? மாவட்ட ஆட்சி தலைவர், திட்ட அலுவலர், வட்டார அதிகாரிகள் மீதல்லவா பாய வேண்டும்? தீண்டாமையை ஒழிக்கிறேன் என போலித்தனமாக பேசிக் கொண்டிருந்த, காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள், போராட்டத்தை எடுத்தோம். அப்போது, குறைந்தபட்சம் அரசு திட்டங்களில் கட்டப்படும், இரட்டை சுடுகாடுகளையாவது அகற்றுங்கள் என்று பெரியாரின் சிந்தனைகளை ஆட்சியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொன்ன அண்ணா அவர்களின் நினைவுநாள் வரை அரசுக்கு ஒரு கால அவகாசத்தை கொடுத்தோம். பெரியார் நினைவு நாளில், பெரியாரின் விரல் பிடித்து அரசியல் நடை பயின்ற, கலைஞரிடம் நாம் வைக்கிற வேண்டுகோள், உங்களை ஆளாக்கி, அமைச்சரவையில் உட்கார வைத்த அண்ணா நினைவு நாளுக்குள் குறைந்தபட்சம் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட சுடுகாடுகளில், இடுகாடுகளில் இருக்கும், இடைச் சுவரை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், சட்டவிரோதமாக இருக்கும் இடைச் சுவரை, சட்டத்தை நடைமுறைபடுத்தும் நோக்கத்தோடு, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் உள்ளே நுழைந்து சுவரை உடைப்பார்கள் என்பதை அறிவிக்கிறோம். தாழ்த்தப்பட்டோர் சுடுகாடு, இதரர் சுடுகாடு என்று இரட்டை சுடுகாடுகளை அரசே அமைக்கலாமா? இது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி குற்றமல்லவா? இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டத்தின்போது அரசு நம்மை கைது செய்தது. இப்போது என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம். பெரியார் நினைவு நாளிலும், வழக்கமாக நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்.
சிந்திக்க முடியாத மூடன் – சிந்தித்து சரியெனப்பட்டதை செயல்படுத்த முன் வராத அறிவாளி, இருவருக்கும் என்ன வேறுபாடு? எனவே நாங்கள் சொன்னதையெல்லாம் சிந்தித்து உங்களுக்கு சரியெனப்பட்டால் – எல்லாம் சரிதான்… இருந்தாலும்… என்றாலும்… என்று வீட்டை, ஊரை, உறவுகளை காட்டி பின்வாங்காமல் சரியெனப்பட்டதை நடைமுறை படுத்த அனைவரும் முன் வாருங்கள் எனக் கூறி விடைபெறுகிறேன்.
}

தமிழ்த் தேசியம் பேசுவோரில் பலர் பெரியாரைத் தாக்கினால்தான் தமிழ்த்தேசியம் என எண்ணித் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர்கள் இந்த உரையைப் படித்த பின்பாவது திருந்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thiruvalluvan. I. 1/19 இந்த இடுகையை நீக்கு பதிலளி
 

செவ்வாய், 4 ஜனவரி, 2011

periyar articles-writ petition dismiss: பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுப

பெரியார் எழுத்துகள் எனக் குறிப்பதை விடப் பெரியாரின் படைப்புகள் எனக் குறிப்பது சரியாக இருக்குமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

பெரியார் எழுத்துகள்: வீரமணி மனு தள்ளுபடி


சென்னை, ஜன.3: பெரியார் எழுத்துகளை வெளியிடுவது தொடர்பாக பெரியார் சுயமரியாதை பிரசார மையத்தின் செயலர் கி. வீரமணி அளித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  குடியரசு இதழில் பெரியார் எழுதியவற்றை பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதற்கு உரிமை இல்லை என்று கூறி கி. வீரமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அதே வழக்கில் பெரியாரின் எழுத்துகளை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இடைக்கால மனு தாக்கல் செய்தார்.  இந்த இடைக்கால மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கடந்த 27.7.09-ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து வீரமணி செய்த மேல்முறையீட்டை நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கடந்த 9.6.10-ல் தள்ளுபடி செய்தது.  பெஞ்சின் உத்தரவை எதிர்த்து வீரமணி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.) தாக்கல் செய்தார். அதில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் 26.11.10-ல் உத்தரவு பிறப்பித்தது.  இந்த நிலையில், வீரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் அவர், ""நான் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் சில புதிய விஷயங்களைத் தெரிவித்துள்ளனர். எனவே, அது தொடர்பாக, எனது மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.  இந்த மனுவை நீதிபதி டி. மதிவாணன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  "பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய எழுத்துகள் பொதுமக்களுக்கு உரியன என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, ""மனுதாரர் தான் கூற விரும்பும் விளக்கங்களை தனியாக அளிக்கலாம். ஆனால், அவரை மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது வழக்கின் தன்மையை மாற்றிவிடும். அது எதிர் மனுதாரர்களைப் பாதிக்கும்'' என்று சரியாகக் கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. மனுதாரர் வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி மதிவாணன் கூறியுள்ளார்.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

periyar: விடுவிக்கப்படுவாரா பெரியார்?

விடுவிக்கப்படுவாரா பெரியார்?

First Published : 24 Dec 2010 03:19:41 AM IST


பெரியாருக்குச் சொந்தமான இடம் விற்பனை தொடர்பான கிரயப் பத்திரம். திருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றிக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் பெரியார் பய
திருச்சி, டிச. 23: திருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.  அந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973}ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு இப்போது குப்பையாகக் கிடக்கிறது.  அதே திருச்சியின் சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது "பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்' (சர்வீஸ் என்றால், சோஷியல் சர்வீஸ் அல்ல; வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ்). நகரில் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.  பெரியாரின் சொத்துகள் இன்றைக்கு எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன; எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இரு சின்ன உதாரணங்கள் இவை.  பெரியார் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் எனினும் தன்னுடைய சொத்துகளைச் செலவிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர் அல்லர்; மிக எளிமையான வாழ்க்கையை வரித்துக்கொண்டவர். பெரியாருக்கு வாரிசுகள் இல்லாதபோதும் அவர் சிக்கன வாழ்க்கை வாழ்ந்ததற்கும் சொத்துகளைப் பேணி பராமரித்ததற்கும் மூன்று காரணங்கள் உண்டு: 1. இந்தச் சொத்துகள் யாவும் தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். 2. திராவிடர் கழகம், பொதுப்புத்தியை உடைக்கும் கருத்துகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல பொருளாதாரம் எந்தக் காலத்திலும் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. 3. இந்தச் சொத்துகளில் தொண்டர்களின் } பொதுமக்களின் நிதியும் இருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் பெரியார் தனது இயக்கத்தின் பெயரில் எல்லா சொத்துகளை வாங்கியதன் காரணம்.  ஆனால், இப்படியெல்லாம் பெரியார் பார்த்து பார்த்து சேர்த்த } பராமரித்த சொத்துகள் பலவும் விற்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இப்போது பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக, பெரியாருடைய எழுத்துகள் காப்புரிமை தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடர்ந்த வழக்கில், ""சொத்துகளுக்கான உரிமை கோரும் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவை பொதுச் சொத்துகளாக } மக்கள் சொத்துகளாகவே கருதப்படும்'' என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் இந்த விற்பனை முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் பெரியாருக்கு நெருக்கமாக இருந்த பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.  ""தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பேரூராட்சி, சின்ன கடைவீதியில் 1950}களில் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் (புல எண்: 183/1; பட்டா எண்: 53) இப்போது விற்கப்பட்டுவிட்டது. இதேபோல, திருச்சி மாவட்டம், இடையாற்றுமங்கலம், மேலவாளாடி; சென்னை, ஷெனாய் நகர்; ஏற்காடு எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியாராலும் பெரியாரின் தொண்டர்களாலும் வாங்கப்பட்ட சொத்துகள் பலவும் இப்போது விற்கப்பட்டுவிட்டன அல்லது அவற்றை விற்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் பெரியாரின் வழக்குரைஞரான எஸ். துரைசாமி.  ""தமிழகத்தில் சின்ன கிராமங்களில்கூட "பெரியார் படிப்பக'ங்கள் இருக்கும். பெரியார் மீது கொண்ட மதிப்பினால் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமான சொத்துகளை பெரியார் பெயரிலும் இயக்கத்தின் பெயரிலும் வாங்கினர். இந்தச் சொத்துகளில் பெரும் பகுதியானவை கை மாறிவிட்டன. எஞ்சியிருக்கும் பெரிய சொத்துகளும் முற்றிலும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன'' என்று கூறும் துரைசாமி, பெரியார் "விடுதலை' பத்திரிகையை நடத்திய - சென்னையில் அவர் வாழ்ந்த } சிந்தாதிரிப்பேட்டை, மீரான் சாகிப் தெருவிலிருந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, இப்போது "பெரியார் பிளாஸô' என்ற பெயரில் வணிக வளாகமாக மாற்றப்பட்டுவிட்டதையும் பெரியார் தன் இறுதிக் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்த திருச்சி "பெரியார் மாளிகை' பல்வேறு நிறுவனங்கள் இயங்கும் இடமாக மாறிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.  இது ஒருபுறமிருக்க, ""பண மதிப்புக்கு அப்பாற்பட்ட - இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்பட வேண்டிய - பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய பெரியாரின் நினைவுகள் பொதிந்த அவருடைய சொத்துகள் - அவருடைய எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன'' என்கிறார் பசு. கெüதமன்.  பெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள் சேகரிப்பாளர்களில் முக்கியமானவர் இவர். "ஈ.வெ. ராமசாமி என்கிற நான்' நூலின் தொகுப்பாசிரியரும்கூட.  ""திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி "விடுதலை' இதழில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் - விளம்பரங்களின்படி, பெரியார் நடத்திய "குடிஅரசு' மற்றும் "விடுதலை' இதழ்களின் பல ஆண்டு பிரதிகள் அவரிடத்தில் -  திராவிடர் கழகத்தினிடத்தில் இப்போது இல்லை; குறிப்பாக "குடிஅரசு' இதழின் 8 ஆண்டுத் தொகுப்புகள் (1925 - 28; 1946 } 48) இல்லை. பெரியாருடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பெரும் பகுதி - இன்னும் அச்சேறாதவை - அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.  பெரியாருடைய பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழைகளில் பெரும் பகுதியானவை அழிந்துவிட்டன. மிகச் சொற்பமான பதிவுகள் மட்டுமே தற்போது திராவிடர் கழகத்தின் வசம் இருக்கின்றன. அவையும் அரசியல் சூழல்களுக்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக, அவர்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.  பெரியார் அணிந்திருந்த மரகதக் கல் மோதிரம் இப்போது நடிகர் சத்யராஜிடம் இருக்கிறது; திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அன்புப் பரிசாக!  பெரியார் தொடர்பான அனைத்துக்கும் உரிமை கோரும் வீரமணியின் பொறுப்பில் பெரியாரின் எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் இப்படித்தான் பாதுகாக்கப்படுகின்றன'' என்கிறார் கெüதமன்.  இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்கிறார் பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவரும் பெரியாரியல் சிந்தனையாளருமான வே. ஆனைமுத்து. குறிப்பாக, ""பெரியாருடைய பேச்சுகளையும் எழுத்துகளையும் அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்'' என்று அவர் கோருகிறார்.  இன்று பெரியார் நினைவு நாள். தந்தை பெரியார் மறைந்து 37 ஆண்டுகளாகியும் இன்னும் பெரியாருடைய படைப்புகளையும், அவர் தொடர்பான சொத்துகளையும் அரசு ஏன் நாட்டுமையாக்கிப் பராமரிக்காமல் தவிர்க்கிறது என்கிற துரைசாமி, கெüதமன் போன்றோரின் கேள்விகளுக்கு, தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உருவானவர் என்று அடிக்கொரு தரம் கூறிக் கொள்ளும் முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும்!
கருத்துகள்

பகுத்தறிவுன்ர பேர்ல, மக்கள மூடனாக்கி, பெரியார் சொத்தயும் நாட்டையும் கொள்ள அடிக்கிற திருட்டு கூட்டத்த, நாட்டைவிட்டு வெரட்டியடிக்க மக்கள் தயாரா இருக்காங்க.
By பெரியார்பித்தன்
12/24/2010 4:16:00 PM
வார்த்தைக்கு, வார்த்த தந்தை பெரியார் என்று சொன்ன அவரது தனயர்கள் எல்லாம், இப்ப எங்கே ஒழிந்து போனார்கள்? அப்ப..... நீங்க பண்றதெல்லாம் மாய்மாலம்தானா? அவர வச்சு வித்து ஒங்க வைத்த கழுவுரீங்களா? இப்படி அவர் பேர சொல்லி ஊர ஏமாத்தி பொழப்பு நடத்துரதேல்லாம் ஒரு பொழப்பா?
By Periyarnesan
12/24/2010 4:05:00 PM
The name of Periyar, his party's name and principles are now commercially being used by Mr. Veeramani etc. They actually not interested in awakening people or even their own partymen. Their "Paguththarivu" concept has become a joke and entertainment among our people. Karunanidhi himself not showing much interest in such issues. If any such pay attention on such issues that is seasonal.
By Parasuraman
12/24/2010 3:04:00 PM
இவர்கள் ஈரோட்டு பெரியாரின் வேனை மட்டும் குப்பைக்குள் போ டவில்லை .புதுசு புதுசாக பல கழகங்களை கட்சிகளாக ஆக்கி காசு பார்க்கும் காரியத்தில் அல்லவா பெரியாரை யூஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் /கருப்பு நிறத்தை வுடைகளில் மட்டும் காட்டட்டும் மனசை வெள்ளையாக்கி .இனியாவது பெரியார் பேரை கெடுக்காமல் இருந்தால் போதும். .
By பி.டி.முருகன்
12/24/2010 2:59:00 PM
இவர்கள் ஈரோட்டு பெரியாரின் வேனை மட்டும் குப்பைக்குள் போ டவில்லை .புதுசு புதுசாக பல கழகங்களை கட்சிகளாக ஆக்கி காசு பார்க்கும் காரியத்தில் அல்லவா பெரியாரை யூஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் /கருப்பு நிறத்தை வுடைகளில் மட்டும் காட்டட்டும் மனசை வெள்ளையாக்கி .இனியாவது பெரியார் பேரை கெடுக்காமல் இருந்தால் போதும். .
By பி.டி.முருகன் திருச்சி
12/24/2010 2:57:00 PM
கன்னடுதுகரன் பெரியாருக்கு இவ்வளவு மரியாதையை தேவையா? வீரமினியும் அந்த குள்ள பொம்பளையும் சேந்து கூத்து அடிக்கிற கொடுமை .. இதுக்கும் மேல திருடன் சொத்தை திருடரங்கோ
By இந்தியன்
12/24/2010 11:57:00 AM
கி வீரமணி என்ற கொடியர்தான் பெரியாரின் கொள்கையை சிதைத்தது . எல்லரோகும் ஜால்ரா அடிப்பவராக மாறி விட்டார். திராவிட கழகத்திற்கு கேட்ட நேரம் என்றால் அது கி வீரமணி என்ற ஜால்ரா தான். எனக்கு ஒரு அனுபவம் நான் BE முடித்து ME cse படிபதற்காக ஒரு நேர் காணலுக்காக தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரிக்கு சென்று இருந்தேன் ,அந்த பெரிய மனிதர் பிரின்சிபால் மற்றும் பல கருப்பு சட்டைக்கர்கள் இருந்தன . அவைகள் என்னிடம் வெட்க்கம் இல்லாமல் 2 லட்சம் கொடு, 1 லட்சம் கொடு என்று பேரம் பேசினார்கள். நான் உண்மையில் அடைந்த சோகதிருக்கு அளவே இல்லை.. உண்மையாக சொல்ல வேண்டுமானால் பெரியாரின் அணைத்து சொத்துகளையும் நாட்டு உடைமை ஆக்க வேண்டும் ,கி வீரமணியை நடுரோட்டில் பிச்சை எடுக்க அனுப்ப வேண்டும். .... இப்படிக்கு ஒரு பகுத்தறிவாளன்.
By பாரதி
12/24/2010 10:44:00 AM
ஏன் எந்த பகுத்தறிவுவாதியும் தங்கள் கருத்தை பதிவு செய்யவில்லை - பெரியார்நேசன், அச்சரபாக்கம் மா பா மற்றும் விவேகாநந்தன் என்கிற பெயரில் சிலர் பார்பனர்களை திட்டுவார்கள் அல்லது சங்கராச்சாரியாரை திட்டுவார்கள் இவர்கள் வீரம் எங்கே போனது ஓ நீங்கள் செய்யும் தவறை சொன்னால் உங்களுக்கு தாங்க முடியாதே. விமர்சனங்களை தாங்கும் சக்தி உங்களுக்கு கிடையாதே. மிரட்டினாலே அஞ்சி ஓடும் ஒரு சமூகத்தை திட்டினால் தான் நீங்கள் வீரர்கள் அல்லவா.
By கோ க
12/24/2010 8:09:00 AM
அவருக்கு ரொம்ப பெரிய லிஸ்ட்டே இற்கு பதில் சொல்ல இதுக்கெல்லாம் பதில் சொல்ல என்ன இது சி பி ஐ கேள்வியா.
By prabu
12/24/2010 7:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *