oppose லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
oppose லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஈழம் என்ற சொல்லுக்குத் தடை : விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்

ஈழம் என்ற வார்த்தைக்கு தடை : விடுதலை சிறுத்தைகள் கண்டனம்

First Published : 10 Aug 2012 12:30:39 PM IST  தினமணி


மதுரை, ஆக., 10 : டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெசோ மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செயல் கருத்துரிமையை பறிக்கும் செயலாகும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், இந்தியா சுதந்திரப்போராட்ட காலத்தில் எமர்ஜென்சி பீரியட் எனப்படும் அவசர காலத்தில் இருந்த அடக்குமுறையைப் போல இந்த கடிதத்தின் தாக்கம் உள்ளது. டெசோ என்பது தமழீழ ஆதரவைத்தான் குறிக்கும். அப்படிப்பட்ட நிலையில் ஈழம என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று கூறுவது சரியல்ல. ஆகவே இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
கருத்துகள்

இப்படிபட்ட மதிய அரசுடன் இன்னும் என் நீயும் உன் குரு பேடி கருணாநிதியும் ...என் தொங்கி இருக்கவேண்டும் ????
By KOOPU
8/10/2012 1:24:00 PM
 

வியாழன், 26 ஜூலை, 2012

இலண்டன் ஒலிம்பிக் விழாவில் இராசபக்சே : போராடத் தயாராகும் தமிழர்கள்

  மாலை மலர்
ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்கும் ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் போராட்டம்
லண்டன், ஜூலை 26-

உலகின் மிகப் பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி லண்டனில் நாளை (27-ந்தேதி) தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை கோலாகலமாக நடக்கிறது. இந்த தொடக்க விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார். ராஜபக்சே லண்டன் செல்ல இருக்கும் தகவலை அவரது செய்தி தொடர்பாளர் ஜெயசேகரா உறுதிப்படுத்தி உள்ளார்.

ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்க இருக்கும், ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த லண்டனில் உள்ள தமிழர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதை அங்கிருந்து வெளிவரும் “தி இன்டிபென்டன்ட்” என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. எலிசபெத் மகாராணியின் வைர விழாவில் பங்கேற்க லண்டன் சென்று இருந்த ராஜபக்சேவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சே ஒலிம்பிக் தொடக்க விழாவுக்காக லண்டன் அழைக்கப்பட்டது முற்றிலும் பொருத்தமற்றது என்று இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பை சேர்ந்த ஜான் ஜனநாயகம் தெரிவித்துள்ளார். லண்டன் செல்ல உள்ள இலங்கை குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன சுரேந்திரன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது ஒரு நாட்டின் தலைவர் என்ற போர்வையில் இருந்தே அவர் போர் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்து கொள்கிறார் என்றார்.

இலண்டன் ஒலிம்பிக் விழாவில்  இராசபக்சே : போராடத் தயாராகும் தமிழர்கள்

First Published : 26 Jul 2012 12:48:11 PM IST


லண்டன், ஜூலை 26 : லண்டனில் நாளை துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக, லண்டனில் பெரிய அளவில் போராட்டம் நடத்த அங்குள்ள தமிழர்கள் தயாராகி வருவதாக லண்டனில் வெளியாகும் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வியாழன், 5 ஜூலை, 2012

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு த் தமிழகத்தில் பயிற்சி: செயலலிதா எதிர்ப்பு

இலங்கை விமானப்படை வீரர்களுக்கு த் தமிழகத்தில் பயிற்சி: செயலலிதா எதிர்ப்பு

First Published : 05 Jul 2012 10:48:34 AM IST

Last Updated : 05 Jul 2012 10:49:16 AM IST

சென்னை, ஜூலை.5: இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை இனக் கலவரத்தில் இடம் பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டின் ஒன்பது விமானப் படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஒன்பது மாத கால தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. மத்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான, தமிழ் இனத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.இலங்கையில் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர்களுக்கு சமமமான உரிமைகளை பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது, வாய் மூடி மௌனியாக உள்ள மத்திய அரசு, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.இலங்கை இனப் போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், இலங்கை நாட்டைச் சேர்ந்த விமானப் படை வீரர்களுக்கு, இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது பொருத்தமற்றது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிரான செயலும் ஆகும் என்பதை மத்திய அரசுக்கு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உடனடியாக இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு இலங்கை விமானப் படை வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஆவன செய்ய வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

விசுவரூபம் படத்தலைப்புக்கு எதிர்ப்பு

விசுவரூபம் படத்தலைப்புக்கு எதிர்ப்பு! 

இந்து மக்கள்கட்சி அமைப்பாளர் திரு கண்ணன், தமிழ் உணர்வுடன் செயல்பட்டு வருகின்றார். தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் பெயரிட வேண்டும் என்னும் தமிழ் உணர்வைச் சரியாகவே வெளிப்படுத்தி உள்ளார். இதே போல் தமிழ்க்காப்புக் கழகம் சார்பிலும் நட்பு இணைய இதழ்மூலம் வேண்டுகோள் விடப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்துத்துறைகளிலும் தமிழுக்கே தலைமையும் தமிழர்க்கே முன்னுரிமையும் இருந்தால்தான் தமிழ்நாடு உயர்ந்தோங்கும். எனவே, அவரது வேண்டுகோளைக் கேலி செய்யாமல் நாமும் வேண்டுகோளை  வழிமொழிவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

 விஸ்வரூபம் படத்தலைப்புக்கு எதிர்ப்பு!
 நடிகர் கமல்ஃகசனின் நடிப்பில்  பெ ருஞ் செலவில்  தயாராகி வெளியாகவுள்ள விசுவரூபம் படத் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நடிகர் கமல் ஃகசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் '' தமிழகத்தில் வாழ்ந்து பெறும் புகழும் பெற்றுள்ள நீங்கள் தமிழ் மொழியை கண்டு கொள்ளாதது ஏன்? புதிய படத்துக்குச் சூட்டி இருக்கும் விசுவரூபம் என்பது சமசுகிருதச் சொல். அதை மாற்றி நல்ல தமிழ்ப் பெயராக வைத்து மற்றவர்களுக்கெல்லாம் முன் எடுத்துக் காட்டாகத்  திகழ வேண்டும். தமிழ் மொழி மீது உள்ள  பற்றால் இதைத் தெரிவிக்கிறோம். எங்கள் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கமல் இதே போன்று முன்னர் தன்னுடைய படத்துக்குச் சண்டியர் எனப் பெயர் வைத்து விட்டுப் பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால் விருமாண்டி என்று மாற்றியது குறிப்பிடத் தக்கது.

நன்றி : இந்நேரம்

சனி, 26 மார்ச், 2011

Azhagiri against Virudhagiri film: உத்தமபாளையத்தில் "விருதகிரி' படம்: மு.க.அழகிரி எதிர்ப்பு

அரசு ஊடகங்களில்தான் அரசியல் தொடர்புடையவர்கள் படங்களை வெளியிடக்கூடாது. திரையரங்கத்தில் வெளியிட்டால் அஞ்சா நெஞ்சர் அஞ்சுவானேன்?  இதன் காரணமாகக் குறுவட்டு மூலம் இல்லங்களில் மிகுதியானவர்கள் பார்க்க மாட்டார்களா?  மேலும்  தேர்தல் விதிமுறை மீறல் என்ன உள்ளது என்று ஆட்சியர் தாளம் போட்டுள்ளார் என்றும் தெரியவில்லை.  இத்தகைய போராட்டங்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான சூழலைத்தான் உருவாக்கும்.
தமிழ்ப்பெயர் இல்லாத் திரைப்படம் கண்டு அஞ்ச வேண்டா!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!

உத்தமபாளையத்தில் "விருதகிரி' படம்: மு.க.அழகிரி எதிர்ப்பு


கம்பம், மார்ச் 25: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விஜயகாந்த் நடித்த விருதகிரி திரைப்படம் திரையிடப்பட்டதற்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெள்ளிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் தியேட்டரை முற்றுகையிட்டதால், படம் மாற்றப்பட்டது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தே.மு.தி.க.வினரின் முற்றுகையால் போலீஸôர் தியேட்டரில் குவிக்கப்பட்டுள்ளனர்.  மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேனி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். போடியிலிருந்து கம்பம் வரும்போது கோம்பை, உத்தமபாளையம் பகுதியில் அதிகளவில் விஜயகாந்த் நடித்த விருதகிரி திரைப்பட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், இது குறித்து தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்ததோடு, எதிர்ப்புத் தெரிவித்தாகத் தெரிகிறது.  உடனடியாக, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி பெ.செல்வேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் விருதகிரி திரைப்படம் குறித்தும், தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் ஒன்றியச் செயலாளர் முல்லை சேகர் தலைமையிலான நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் விருதகிரி திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு, உடனடியாக திரைப்படத்தை மாற்றக் கோரினர். தியேட்டர் நிர்வாகத்தினருக்கும் தி.மு.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதற்கிடையில், விருதகிரி படம் மாற்றப்பட்டு, ஆங்கிலப் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டது.  இரவுக் காட்சியின்போது, தகவல் அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் மீண்டும் விருதகிரி படத்தைத் திரையிட வேண்டும் என்று கோரி, தியேட்டரை முற்றுகையிட்டனர். இதற்கிடையே, போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தியதில் தியேட்டர் நிர்வாகம், தியேட்டரில் "தாற்காலிகமாக திரைப்படம் ஓடாது' என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஆத்திரமடைந்த தே.மு.தி.க.வினர் ஆங்கிலப் படத்தின் போஸ்டர்களை கிழித்து எரித்து கோஷமிட்டனர்.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.