அரசு ஊடகங்களில்தான் அரசியல் தொடர்புடையவர்கள் படங்களை வெளியிடக்கூடாது. திரையரங்கத்தில் வெளியிட்டால் அஞ்சா நெஞ்சர் அஞ்சுவானேன்? இதன் காரணமாகக் குறுவட்டு மூலம் இல்லங்களில் மிகுதியானவர்கள் பார்க்க மாட்டார்களா? மேலும் தேர்தல் விதிமுறை மீறல் என்ன உள்ளது என்று ஆட்சியர் தாளம் போட்டுள்ளார் என்றும் தெரியவில்லை. இத்தகைய போராட்டங்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான சூழலைத்தான் உருவாக்கும்.
தமிழ்ப்பெயர் இல்லாத் திரைப்படம் கண்டு அஞ்ச வேண்டா! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!
தமிழ்ப்பெயர் இல்லாத் திரைப்படம் கண்டு அஞ்ச வேண்டா! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!
கம்பம், மார்ச் 25: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விஜயகாந்த் நடித்த விருதகிரி திரைப்படம் திரையிடப்பட்டதற்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெள்ளிக்கிழமை எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் தியேட்டரை முற்றுகையிட்டதால், படம் மாற்றப்பட்டது, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தே.மு.தி.க.வினரின் முற்றுகையால் போலீஸôர் தியேட்டரில் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தேனி மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளையும், வேட்பாளர்களையும் நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். போடியிலிருந்து கம்பம் வரும்போது கோம்பை, உத்தமபாளையம் பகுதியில் அதிகளவில் விஜயகாந்த் நடித்த விருதகிரி திரைப்பட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும், இது குறித்து தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரித்ததோடு, எதிர்ப்புத் தெரிவித்தாகத் தெரிகிறது. உடனடியாக, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி பெ.செல்வேந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் விருதகிரி திரைப்படம் குறித்தும், தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் ஒன்றியச் செயலாளர் முல்லை சேகர் தலைமையிலான நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் விருதகிரி திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு, உடனடியாக திரைப்படத்தை மாற்றக் கோரினர். தியேட்டர் நிர்வாகத்தினருக்கும் தி.மு.க.வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதற்கிடையில், விருதகிரி படம் மாற்றப்பட்டு, ஆங்கிலப் படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டது. இரவுக் காட்சியின்போது, தகவல் அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட தே.மு.தி.க.வினர் மீண்டும் விருதகிரி படத்தைத் திரையிட வேண்டும் என்று கோரி, தியேட்டரை முற்றுகையிட்டனர். இதற்கிடையே, போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தியதில் தியேட்டர் நிர்வாகம், தியேட்டரில் "தாற்காலிகமாக திரைப்படம் ஓடாது' என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஆத்திரமடைந்த தே.மு.தி.க.வினர் ஆங்கிலப் படத்தின் போஸ்டர்களை கிழித்து எரித்து கோஷமிட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால், போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக