வெள்ளி, 6 ஜூலை, 2012

கொலைவெறி தொட ரும் சிங்களம்! வேடிக்கை பார்க்கும் இந்தியம்!

இலங்கை ச்சிறையில் விடுதலைப் புலி அடித்துக் கொலை



கொழும்பு, ஜூலை 5: இலங்கை அனுராதபுரம் சிறையில் கைதியாக உள்ள விடுதலைப் புலி ஒருவர் போலீஸôரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இவர் நெடுங்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் ஆவர். கவலைக்கிடமான நிலையில் ரகமா மருத்துவமனைக்கு புதன்கிழமை நிமலரூபன் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.  இவர் தவிர அனுராதபுரம் சிறையில் உள்ள 6 கைதிகள் மஹாரா சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  காயமடைந்த சிறைக் கைதிகளை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பி.க்கள், நிமலரூபன் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.  அதேநேரத்தில், மாரடைப்பு காரணமாக நிமலரூபன் இறந்ததாக சிறைத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரா கூறியுள்ளார்.  இலங்கையில் உள்ள வவுனியா சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை கைதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகள் 38 பேர் சிறைக் காவலர்கள் மூவரை 18 மணிநேரம் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த போலீஸôரும் அதிரடிப் படையினரும் கண்ணீர்ப் புகை குண்டு வீசி காவலர்களை விடுவித்தனர். பின்னர் அந்தக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் போலீஸôரால் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.  இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான மைத்திரிபால சிறிசேன, வவுனியா சிறைச் சம்பவத்தை "புலிகளின் உறுமல்' என்று கூறியுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக்கொள்ளும் உருத்திரகுமாரன் இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பதாகவும் அவர் கூறினார். மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க 500 புலிகள் முயன்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக