keetru லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
keetru லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஜூலை, 2012

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளின் வினாத்தாட்கள் ஏன் தமிழில் வேண்டும்?



இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளின் வினாத்தாட்கள் ஏன் தமிழில் வேண்டும்?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
தரவு :  கீற்று
நடுவண் அரசு இந்தியக் குடியுரிமைப்பணிகளுக்கானத் தேர்வுகளை (Civil Services Examination, CSE) ஒன்றியப் பொதுப்பணித் தேர்வாணையத்தின் (Union Public Service Commission, UPSC) மூலம் நடத்தி வருகிறது.
இந்தியக் குடியுரிமைப் பணிகளின் கீழ் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS), இந்திய வெளியுறவுப் பணி (Indian Foreign Service, IFS) போன்ற இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் வருகின்றன.
இது, முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), பிரதானத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) என மூன்று கட்டங்களைக் கொண்டது.
முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam):
முதல்நிலைத்தேர்வில் இரண்டு Papers உண்டு. First Paper, General Studies என்கிற பொது அறிவுத் தாள்; Second Paper, Civil Services Aptitude Test (CSAT) என்கிற சிசேட் Paper. இவ்விருத் தாள்களும் கொள்குறி வினா (objective type with multiple choice questions) வடிவத்தில் அமைந்தவை. அதாவது, ஒரு வினாவுக்கு நான்கு விடைகளைக் கொடுத்திருப்பார்கள். அவற்றில், சரியான விடையைக் கண்டுபிடித்து, அதன் விடைக்குறியீடை, அனைவருக்கும் பொதுவான கணினியால் திருத்தப்படக்கூடிய OMR விடைத்தாளில் shade செய்ய வேண்டும்.
நம் பிரச்சினை என்னவென்றால், முதல்நிலைத்தேர்வின் வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ் உட்பட இதர தாய்மொழி வழிக்கல்வி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழிலும் வினாத்தாட்களை வழங்க வேண்டும். இதை எளிதாக நடைமுறைப்படுத்தி விடலாம். விடைத்தாள் அனைவருக்கும் பொதுவானது. எனவே, UPSCக்கு வினாக்கள் மொழிமாற்றம் மட்டுமே தேவை.
தமிழிலும் வினாக்களை மொழிபெயர்த்து, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வினாத்தாளில் இணைத்தாலே இப்பிரச்சினை முடிந்து விடும்.http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3595439.ece
2011 ஆம் ஆண்டில் முதல்நிலைத் தேர்வில் தமிழ் மாணவர்களைத் தடுக்க UPSC செய்த சதி:
2010 ஆம் ஆண்டு வரை முதல்நிலைத் தேர்வின் இரண்டாம் தாள் optional paper ஆக இருந்தது. இந்த optional paper இல் பாடத்திறமை மட்டுமே பரிசோதிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2011 ஆண்டிலிருந்து optional paperக்குப் பதிலாக சிசேட் என்ற தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாள், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 9 இந்தி மாநிலத்தவர்களையும் எளிதாக உள்ளே கொண்டுவர அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, சிசேட் தாளின் மொத்தமுள்ள 80 வினாக்களில் 50 வினாக்கள் Comprehension வகையைச் சேர்ந்தவை. ஆங்கில மொழியிலும் இந்தி மொழியிலும் ஒரு கதை அல்லது கட்டுரை கொடுத்திருப்பார்கள். அதிலிருந்து கொள்குறி வினாக்களை (objective questions) எழுப்பியிருப்பார்கள். நாம் கதையைக் கவனமாக வாசித்து விடையைக் கண்டுபிடித்து குறியிட வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இந்தியிலும் மொழிபெயர்த்து வழங்கப்பட்ட இக்கதை, இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒன்பது மாநிலத்தவர்களுக்கும் மிக மிக எளிது. இதனுடை மொழிபெயர்ப்பு தமிழிலும் இருந்தால் எவ்வளவு எளிது ஆக இருக்கும் என்பதை என்னால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
இந்தியைத் தாய்மொழியாகக்கொண்ட 9 இந்தி மாநில மாணவர்களுடன் ஆங்கிலத்தையும் பிறத் தாய்மொழிகளையும் பயிற்று மொழியாகக்கொண்ட மாணவர்கள் போட்டிப் போடவே முடியாத நிலைமை, சதித்திட்டமிட்டு சென்ற ஆண்டு முதல் உருவாக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு வரை இரண்டாம் தாளில் optional paper ஆக ஒரு பாடத்தை தேர்ந்தெடுத்து அப்ப்பாடத்தின் பாடத்திறமைச் சோதிக்கப்பட்டு வந்தது. தற்போது, optional paper, சிசேட் எனும் வெறும் ஆங்கில-இந்தி மொழித்தாளாக மாற்றப்பட்டு விட்டது. இது சுதந்திரத்திற்குப் பின் வேலைவாய்ப்பில் இந்தியைத் திணிக்கும் ஆதிக்கவாதிகளின் இரண்டாம் கட்டம். 
இதனால் தமிழ் மாணவர்கள் எவ்வாறு விழுந்துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
2010 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 122
2011 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 96
2012 இல் தமிழ்நாட்டில் தேர்வானவர்கள் - 72
அதாவது, சிசேட் அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு 122 லிருந்து 96 மற்றும் 72 ஆக குறைந்து வருகிறார்கள். இந்நிலை நீடித்தால் இன்னும் குறைவது திண்ணம். 
பிரதானத் தேர்வு (Main Examination):
பிரதானத் தேர்வில் 9 தாள்கள் உண்டு. அவையாவன,
General Studies Paper I & II, First Optional I & II, Second Optional I & II), Essay Paper, Tamil Language Paper and English Language Paper.
ஆங்கில மற்றும் தமிழ் மொழித்தாள்களைத் தவிர இதர 7 தாள்களின் வினாத்தாள்களும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த 7 தாள்களும் விரிவான விடை (Descriptive) வடிவத்தில் அமைந்தவை. மேலும், இவற்றுக்கான விடைகள் தமிழ் உட்பட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வினாக்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் தான் இருக்கும்.
உதாரணமாக, Critically analyze the significance of Portuguese arrival in India? என்ற வினா கேட்கப்பட்டிருக்கிறது என்று வைப்போம். இது ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருக்கும். இதற்கான விரிவான விடையைத் தமிழில் எழுத விரும்பும் மாணவர்கள், ஆங்கிலத்தில் எழுப்பப்பட்ட வினாவிற்கு தமிழில் பொருள் புரிந்து, விடையைத் தமிழில் எழுத வேண்டும். இங்கேயும் தமிழில் எழுதுவோருக்கு முட்டுக்கட்டை இடப்பட்டுள்ளது. எனவே, தமிழிலும் வினாக்களை மொழிபெயர்த்து, நடைமுறையில் இருக்கும் இருமொழி வினாத்தாளில் இணைத்தாலே இப்பிரச்சினை முடிந்து விடும். அப்போதுதான் சம உரிமை கிடைக்கும்.
நேர்முகத்தேர்வு (Interview):
நேர்முகத்தேர்வை 22 மொழிகளிலும் அளிக்கலாம் என்று விதிமுறைகள் இருந்தாலும், இதுவும் திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் நேர்முகத்தேர்வு அளிக்கும் போது, ஒரு குழப்பமும் வருவதில்லை. மாறாக, தமிழில் ஒருவர் நேர்முகத்தேர்வை அளிக்க விரும்பினால், அவருக்கு தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை, UPSC நியமிக்கும். இவர் பெரும்பாலும் Group D ஊழியராக இருப்பார். மணிநேர ஒப்பந்த அளவில் (Time based contract employee) நியமிக்கப்படுவார். இவர் தவறுதலாக மாற்றி பதிலளித்து விட்டால் மதிப்பெண் குறையும். இதைக்கண்டு பயந்து, தமிழில் யாரும் நுழைவுத்தேர்வு கொடுப்பதில்லை. எனவே, தமிழக அரசு தமிழில் நுழைவுத்தேர்வு அளிக்கும் மாணவர்களைக் காக்கும் விதமாக, தமிழக Group I அதிகாரிகள் Panel-ஐ UPSC க்கு பரிந்துரைச் செய்ய வேண்டும். UPSC அவர்களில் ஒருவரை மொழிபெயர்ப்பாளராக நியமிக்கலாம். இதனைத் தமிழக அரசும் UPSC யும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரச்சினை சுருக்கம்:
I.முதல்நிலைத்தேர்வில் தமிழிலும் வினாக்கள் இரயில்வேத் தேர்வு வினாத்தாளைப் போல் வேண்டும்.
II.பிரதானத் தேர்விலும் தமிழிலும் வினாக்கள் இரயில்வேத் தேர்வு வினாத்தாளைப் போல் வேண்டும்.
III.நேர்முகத்தேர்வில், தமிழக அரசு, தமிழில் நுழைவுத்தேர்வு அளிக்கும் மாணவர்களை காக்கும் விதமாக, Group I அதிகாரி ஒருவரை மொழிபெயர்ப்பாளராக நியமித்து UPSC நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Bookmark and Share

செவ்வாய், 1 மே, 2012

திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்... பேராசிரியர் மா.நன்னன் அவர்களோடு ஒரு நேர்காணல்

 

திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்...


திராவிட இயக்கம் தோன்றியதன் நூற்றாண்டு விழா தருணத்தில் இந்த இயக்கம் நிறைவான பணிகளைச் செய்ததாகக் கருதுகிறீர்களா?
திராவிட இயக்கம் நிறைவான பணிகளைச் செய்வதற்கு முயன்றிருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். இது ஒரு சமுதாய இயக்கம். அதனால் இது எப்போதுமே தனது கடமைகளைச் செய்து முடித்துவிட்டது என்ற முடிவு நிலையை அடைய இயலாது. அரசியல் கட்சிகள் போல இதன் இலக்கு எல்லைக்குட்பட்டதன்று! திராவிட இயக்கம் பல சமூக மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அவற்றில் முதன்மையானது, திராவிடனை, அஃதாவது தமிழனை தன் உணர்வு பெறச் செய்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் மனிதனை மனிதனாக ஆக்க முயன்றிருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த வெற்றியையும் பெற்றிருக்கிறது.
ஒரு வேளை இப்படி ஓர் இயக்கம் தோன்றியிராவிட்டால் என்னவாகி இருக்கும். இதுபற்றி நீங்கள் நினைத்ததுண்டா?
நினைத்ததுண்டு! அதற்குரிய விடைகளையும் கண்டதுண்டு. பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனத் தொடங்கிய, திராவிடர் இயக்கம் தோன்றியிராவிட்டால், நாமெல்லாம் கல்வி அறிவற்ற விலங்குகளைப் போலக்கூட வாழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால் விலங்குகளில் உயர்வு, தாழ்வு கிடையாது. மனித விலங்குக்கு மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டுக்குரிய மக்களைக் கல்வி பெறத் தகுதியில்லாதவர் களாகவும், ஒருவனை ஒருத்தி மணந்து வாழத் தகுதியில்லாதவர்களாகவும், பார்ப்பனர்களுக்கு குற்@றவல் செய்வதற்கே பிறந்தவர்களாகவும் இருந்த அந்த பழைய நிலையானது வேரூன்றி, விழுதுவிட்டு, பல்கிப் படர்ந்து செழித்து வளர்ந்திருக்கும்.
திராவிட இயக்கம் இனி எப்படிச் செல்ல வேண்டும் என எண்ணுகிறீர்கள்?
திராவிட இயக்கம் தன்னுடைய இலக்கில் இருந்து சற்றே நகர்ந்ததும் உண்டு! விலகிச் சென்றதும் உண்டு! ஆனால் அவ்வப்போது தன்னைச் சரி செய்து கொண்டும் வந்துள்ளது. உதாரணமாக, பெரியார் காலத்திலேயே திராவிடர் இயக்கம் தன் பகுத்தறிவுப் பாதையில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டு. தேர்தலில் நீதிக்கட்சியை ஆதரிப்பது என்ற நிலையில் சில ஆண்டுகள் அது அரசியல் கட்சிபோலவே இயங்கியது. இதை உணர்ந்த பெரியார் மீண்டும் அதனைச் சரிசெய்து பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்!
திராவிடர் இயக்கம் இந்தச் சமூகத்தை செப்பனிட அல்லது புதுமைப்படுத்த உண்டான இயக்கம். அதன் மாசு துடைத்து, ஒளி ஊட்டி, இக்காலத்துக்கும், எக்காலத்துக்கும் தக்கதாக ஆக்க வேண்டும். இதுதான் அதன் ஒரே பணி, தலையாய பணி. அரசியல் இன்றியமையாதது என்றாலும், பொருளியல் போன்றவற்றைப் புறக்கணிக்க முடியாது. இதற்கென்று ஒரு பிரிவாவது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் கருத்து. இக்கால அரசியல் போன்ற எந்தவிதமான பளபளப்பிலும் கண் கூசுதல் இல்லாமல் தன் பாதையைத் தெரிந்து நடக்க வேண்டும்.
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக விளங்கிய வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித்துவம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக விளங்கியதே வகுப்புவாரி அரசியல் பிரதிநிதித் துவம் என்பதல்ல. இது அதன் ஒரு கூறு மட்டுமே. திராவிட இயக்கத்தின் மையப்புள்ளியாக இருப்பது மனிதனை மனிதனாகக் கருத வைப்பதுதான். அதாவது தமிழனைத் தமிழனாக!
வகுப்புவாரி உரிமை என்பது பெருமளவு நிறைவேறிவிட்டது என்று சொல்லலாம். நம் இன எதிரிகள் அவர்களுக்கு வகுப்புவாரி உரிமை கேட்கும் நிலை வந்துவிட்டது. பெரியாரால் உருவாக் கப்பட்ட பெரியார் கல்வி நிறுவனங்களில் பார்ப்ப னர்களுக்கும் இடம் ஒதுக்கித் தருகிறார்கள். சமூக நீதியை விழைந்த இயக்கம். தங்கள் நிறுவனத்திலும் நேர்மையாக அவர்களுக்கும் சமூக நீதியை வழங்கும் பொருட்டு அங்கு இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு குறித்து இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவதில்லை?
பெரும்பாலும் அது நிறைவேறிவிட்டது. அதனால் பேசப்படுவதில்லை. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டனர். அமைச்சரவையில் கூட ஏதாவது ஓர் இடத்தைத்தான், 'அவர்கள்' பெறுகிறார்கள்! மற்ற இடங்களில் நாம்தான். இதில் அ.இ.அ.தி.மு.க.வை நான் திராவிட இயக்கமாகக் கருதுவதில்லை!
திராவிட இயக்கக் கோட்பாடுகளில் உங்களைக் கவர்ந்தது எது?
பகுத்தறிவு. இது ஓர் அறிவியல் இயக்கம். பகுத்தறிவு ஏற்பட்டுவிட்டால் சுயமரியாதை தானே வந்துவிடும். சுயமரியாதை வந்துவிட்டால் பகுத் தறிவு வருமா என்பது எனக்குத் தெரியவில்லை!?
மனித இனம் பகுத்தறிவுக்கு முதன்மை தர வேண்டும். பகுத்தறிவுக் கோட்பாட்டில் அடங்காதது என்பது எதுவுமே இல்லை. தவிரவும், பகுத்தறிவுக் கோட்பாட்டைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள இன்னொரு கோட்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
திராவிட இயக்கங்களைப் பற்றித் தமிழ்த் தேசியம் பேசுவோர் கூறும் கருத்துகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இன்றைய தமிழ்த்தேசியம் பேசுவோரின் கோட்பாடு என்பது திராவிட இயக்கக் கோட்பாடுகளில் அடங்காதது அன்று. தமிழ்த்தேசியத்தின் மறுபெயர்தான் திராவிட தேசியம். அல்லது திராவிட தேசியத்தின் மறுபெயர்தான் தமிழ்த்தேசியம் அல்லது இரண்டும் ஒன்றேதான்! பல்வேறு வகைப்பட்ட தனித்தனிக் காரணங்களுக்காக திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கூட்டாக ஏற்படுத்திக் கொண்டுள்ள கோட்பாடுதான் தமிழ்த்தேசியம்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், தி.மு.க. என்று யாராக இருந்தாலும் சரி. எல்லோரும் உழைத்தது, உழைப்பது தமிழர்களுக்கே. தமிழ் நிலத்துக்கே. எந்தத் தலைவர்களும் தனியே, தெலுங்கர்களுக்காக பனகல் அரசர், மலையாளிகளுக்காக டி.எம். நாயர் போன்றோர் இல்லை.
அப்போது இருந்த ஒரே நாடு சென்னை மாநிலம். அன்றிருந்த பார்ப்பனரல்லாதவர்களுக்கான, அனைவருக்குமான ஓர் இயக்கமாகத் தான் அது விளங்கியது. பின்னர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் இந்த உடன்பாட்டு உணர்வுக்குள் ஒத்துவராதபோது, தமிழ்நாடே திராவிட நாடு எனக் கூறப் பட்டது. விடுதலை ஏட்டில் தமிழ்நாடு தமிழருக்கே என்று போட்டார்கள். பின்னர் திராவிட நாடு தமிழருக்கே என்று கூறினர். திராவிட நாடு தமிழ்நாடு என்ற மூலக்கோட்பாட்டிலிருந்து பிறழவில்லை.
தமிழ் இலக்கணத்தில் சுசந்தனக்கோல் குறுகினால் பிரப்பங்கோல் ஆகிவிடாது. சந்தனக் கோல் சந்தனக்கோல்தான். அதுபோல் திராவிட நாடு தன் எல்லையில் குறுகநேர்ந்தாலும் தன் குணம் மாறாது!
இன்றைய அரசறிவியல் என்ற கல்வி அளவுகோலில் திராவிட இயக்கம் குறித்து ஒரு மதிப்பீட்டைக் கூறுங்களேன்?
திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ நிலநடுக்கங்கள்! புயல்கள்! காட்டுத் தீ போன்றவை ஏற்பட்டும் அது தன் இயல்பிலிருந்து முற்றிலும் அழிந்துவிடாமல் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது.
திராவிட இயக்க எழுச்சியால்தான் இடதுசாரி சிந்தனைப் பெருக்கம் முடங்கியதாகக் கூறப்படுகிறதே?
திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இடதுசாரி சிந்தனை முடங்கி இருப்பதாகக் கூறுவதைவிட, இடதுசாரிகளின் முடங்கிப்போன சிந்தனை வெற்றிடத்தால்தான் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது என்பதே உண்மை!
இறைவணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு முன்பெல்லாம் கூச்சப்பட்டனர். இன்று பகிரங்கமாக நெற்றிக்குறி, தேர் இழுப்பது என மாறியுள்ளதே?
இது திராவிட இயக்கத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள்! அது அக அழுக்கா, புற அழுக்கா என்று தெரியவில்லை!
நன்றி: ஆழம் மாத இதழ் ஏப்ரல் 2012

புதன், 21 செப்டம்பர், 2011

Indira Gandhi assasination: conspiracy of cong.











Muthamizh Vendhan  
 
 
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு மட்டுமல்ல, இக்கொலை
பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டிலும் பல மர்ம
முடிச்சுகள் காணப்படுகின்றன. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக்
கண்டறிவதில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு உண்மையான கவலை இருக்கவே இல்லை
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

எப்படியாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தினரையும், அந்த இயக்கத்தின்
இலட்சியத்துக்காக தமிழின உணர்வோடு செயல்பட முன் வந்த தமிழின இளைஞர்களையும்
தண்டித்தாக வேண்டும் என்ற ‘ஒற்றைப் பார்வை’யோடு, காங்கிரஸ் ஆட்சி
செயல்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய
முடியாமல், அது தொடர்பான விசாரணைகளை மூடி மறைக்கவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சி
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பது ராஜீவ் மரணத்துக்கு இழைத்த மிகப்
பெரும் அநீதியாகும்.

<http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/09/sanjayindira.jpg>ராஜீவ்
கொலையில் சதித் திட்டம் தீட்டியவர்கள் மற்றும் ராஜீவ் பாதுகாப்புக்கு உரிய
ஏற்பாடு செய்யாதவர்களைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் ஆட்சி துடிப்புடன்
செயல்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர்
தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ், தனது
ஆதரவோடு சந்திரசேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி யிருந்தது.
சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை
நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற
உச்சநீதிமன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை
அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ்
காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா
என்பது குறித்து ஆராய்வதே இந்த ஆணையத்தின் பணி என்று உள்துறை அமைச்சகம்
அறிவித்தது. இதை அப்போது காங்கிரஸ் எதிர்த்தது. ராஜீவ் கொலையின் சதித்
திட்டங்கள் பற்றியும், விசாரணை வரம்பு விரிவாக்கப்பட வேண்டும் என்று அப்போது
காங்கிரஸ் தலைவராக இருந்த பி.வி. நரசிம்மராவ், பிரதமர் சந்திரசேகருக்கு கடிதம்
எழுதினார். ஆனால், ஜெ.எஸ். வர்மா பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகளை
மட்டுமே தம்மால் விசாரிக்க முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார். அதன்
காரணமாகவே ஜெ.எஸ். வர்மா விசாரணை வரம்பிலிருந்து ஒதுக்கப்பட்ட அயல்நாட்டு சதி
தொடர்புகள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஜி. ஜெயின்
தலைமையில் மற்றொரு விசாரணை ஆணையம் 1991 ஆக. 23 இல் அமைக்கப்பட்டது.

சந்திரசேகர் ஆட்சியின்போதும் அடுத்த சில மாதங்களில் அமைந்த நரசிம்மராவ்
தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போதும் நீதிபதி வர்மா ஆணையம் செயல்படுவதற்கான
நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. அலுவலக செயலாளரோ,
பணியாளர்களோ நியமிக்கப்பட வில்லை. மனம் குமுறிய ஜெ.எஸ். வர்மா, வெளிப்
படையாகவே, “இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சி, எந்த அளவுக்கு உள்ளது என்பதையே இது
காட்டு கிறது. இது இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. உலக மக்கள்
இதை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்” (2.5.1991 ‘இந்து’ நாளேடு) என்று கூறினார்.
ஒரு வழியாக நீதிபதி சர்மா, 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிக்கையை மத்திய அரசிடம்
சமர்ப்பித்தார். 5 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் தான் நரசிம்மராவ் ஆட்சி,
அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைத்தது. உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான் சர்மா
அறிக்கையின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்தார். ஆனால், காங்கிரஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்களே, இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்த்ததால், பிரதமர்
நரசிம்மராவ், அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானது. அதன்
பிறகும், இரண்டு ஆண்டுகாலம் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. பிறகு
எதிர்கட்சிகள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு
ஒன்று அறிக்கையை பரிசீலித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டது.

வர்மாவின் அறிக்கை மத்திய மாநில ஆட்சிகளின் காவல்துறை, உளவுத் துறையைக்
கடுமையாகக் குறை கூறியது. ராஜீவ் கொலை நடந்தபோது மத்தியில் நடந்த சந்திரசேகர்
ஆட்சியும், தமிழ்நாட்டில் நடந்த ஆளுநர் ஆட்சியும் காங்கிரசின் ‘பினாமி’
ஆட்சிகள் தான் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும். ராஜீவுக்கு பாதுகாப்பு
வழங்குவதில் தமிழக காவல்துறை, தமிழக அரசு, இந்திய உளவுத் துறை மற்றும் ராஜீவ்
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த காங்கிரசார் தங்கள் கடமையிலிருந்து நழுவி விட்டனர்
என்று குற்றம்சாட்டியது வர்மா அறிக்கை, இவர்கள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால்
ராஜீவ் கொலையைத் தடுத்திருக்க முடியும் என்று கூறியது.

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகருக்கும், தமிழ்நாடு
காங்கிரசுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததால், மரகதம் சந்திரசேகர்,
தமிழக காங்கிரசார் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, தானே ஏற்பாடு
செய்தார் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தமிழ்நாடு
காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தியும், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல்
ஒதுங்கி நின்றார் என்றும் ஆணையம் குற்றம் சாட்டியது. வர்மா விசாரணை
ஆணையத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எவ்வித ஒத்துழைப்பையும் தரவில்லை
என்று கூறிய அந்த பரிந்துரை, “ஸ்ரீபெரும்புதூர் பொதுக் கூட்டம் நடந்த இடத்தில்
காங்கிரஸ் கட்சிக் காரர்களின் செயல்பாடுகள் எந்தவிதமான ஒழுக்கமும் இல்லாமல்
பொது இடத்துக்குரிய பொறுப்பு இன்றி இருந்தது” என்று கடுமையாக காங்கிரசாரை
இடித்துரைத்தது.

வர்மா அறிக்கை பற்றி பரிசீலிக்க அமைக்கப் பட்ட அமைச்சர்கள் குழு, கடமை தவறிய
சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
கடமை தவறிய நான்கு மூத்த அதிகாரிகளிடம் அமைச்சரவைக் குழு நேரில் விசாரணை நடத்தி
விளக்கம் கேட்டது. உளவுத் துறை தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறை செயலாளர்
ஜி.எஸ். மணிசர்மா, பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய், அமைச்சரவை செயலாளர்
வினோத் பாண்டே ஆகியோர் தான், விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள். ஆனால், இவை
எல்லாமே கண் துடைப்பு நாடகம் தான். வர்மா, பரிந்துரையை சமர்ப்பித்தபோது, இந்த
அதிகாரிகள் பதவியில் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற
பிறகே, விசாரணை நடத்தி விளக்கம் கேட்கப்பட்டது. பணி ஓய்வு பெற்ற பிறகு,
நடவடிக்கை எடுக்க இயலாது என்பதைத் தெரிந்தே, காங்கிரஸ் ஆட்சியினர், இப்படி ஒரு
விசாரணை நாடகத்தை நடத்தினர். உடனடியாக, அந்த நான்கு அதிகாரிகளும், தங்களிடம்
விளக்கம் கேட்கப்பட்டதை எதிர்த்து, மத்திய நிர்வாக மன்றத்திடம் முறையீடு
செய்தனர். ஓய்வு பெற்ற பிறகு, இவர்களிடம் விளக்கம் கேட்பது, முறையற்றது என்று
நிர்வாக மன்றம் தீர்ப்பளித்து விட்டது. ராஜீவ் கொலையில் கடமையை செய்யாமல்
தவறிழைத்த அதிகாரிகளை காங்கிரஸ் ஆட்சியே இப்படி திட்டமிட்டு காப்பாற்றியது.
வர்மா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படை யில் எந்த ஒரு நடவடிக்கையையும்
காங்கிரசாரோ, காங்கிரஸ் ஆட்சியோ இதுவரை எடுக்கவில்லை என்பதோடு
குற்றம்சாட்டப்பட்டவர்களையும் காப்பாற்றி விட்டார்கள்.

ராஜீவ் கொலை நடந்தபோது, இந்தியாவின் உளவுத் துறை இயக்குனராக இருந்தவர் எம்.கே.
நாராயணன். ஜெ.எஸ். வர்மா ஆணையம், தனது அறிக்கையில் எம்.கே. நாராயணன் ‘நம்பகத்
தன்மை’ குறித்து கேள்விகளை எழுப்பியது.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் மீது குண்டு வெடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ
படத்தின் மூலப் பதிவு சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் இருந்தது போலவே, உளவுத்
துறை இயக்குனர் எம்கே. நாராயணனிடமும் இருந்தது. ஆனால், இந்த வீடியோ மூலப் பதிவை
சிறப்புப் புலனாய்வுக் குழுவும் எம்.கே. நாராயணனும், வர்மா ஆணையத்திடம்
தரவில்லை. தங்களிடம் அப்படி எந்த ஒரு ‘வீடியோ கேசட்டும்’ இல்லை என்றே சிறப்புப்
புலனாய்வுக் குழுத் தலைவர் கார்த்திகேயன், ஆணையத்திடம் கூறி விட்டார் என்று
அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதன் பிறகு, இந்த வீடியோ காட்சிகளில் ஏதேனும்
அழிக்கப்பட் டுள்ளதா என்று வெளிநாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக
கார்த்திகேயன் வர்மா ஆணையத்தில் தெரிவித்து விட்டார். கடைசி வரை அந்த படப்பதிவு
ஆணையத்திடம் தரப்படவில்லை. விசாரணையின் கடைசி அமர்வில்கூட இது பற்றி நீதிபதி
வர்மா கேட்டார். அப்போதும்கூட ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவே,
ஆணையத் திடம் கார்த்திகேயன் சார்பில் கூறப்பட்டது.

வர்மா ஆணையத்திடம் வழங்கப்பட்ட பிரதி எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவுகளில்
வெடிகுண்டுப் பெண் ராஜீவுக்கு மாலையிட முயன்று வெடிகுண்டை வெடிக்கச் செய்யும்
காட்சிகள் தெளிவின்றி திட்டமிட்டே மங்கலாக்கப்பட் டிருந்தன என்று வர்மா, தனது
பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமான இந்தக் காட்சிகள் மட்டும்
ஏன் மங்கலாக்கப்பட்டன என்ற கேள்வியை நீதிபதி வர்மா எழுப்புகிறார். பாதுகாப்பு
குறைபாடுகள் பற்றி விசாரணை நடத்திய வர்மா, ஆணையத்திடம் வீடியோ கேசட் மூலப்பதிவை
தர மறுத்த அதே சிறப்புப் புலனாய்வுக் குழு, அன்னிய சதி பற்றி விசாரணை நடத்திய
ஜெயின் ஆணை யத்திடம் நான்கு வீடியோ கேசட்டுகளை வழங்கியது. காரணம், பாதுகாப்பு
ஏற்பாடுகளை செய்யத் தவறிய அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள் நோக்கம்
தான். இது தவிர, ராஜீவ் காந்தி விமான நிலையத்திலிருந்து இறங்கி,
ஸ்ரீபெரும்புதூர் சென்றது வரை எடுக்கப்பட்ட வீடியோ கேசட், தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டியிடம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப் பாளர்கள், அந்த
வீடியோ பதிவு தங்களிடம் இல்லை என்றும், அதை காவல்துறை கைப்பற்றியிருக்கலாம்
என்றும், வர்மா ஆணையத்திடம் கூறி விட்டனர். ராஜீவுடன் வந்த காங்கிரஸ்காரர்கள்
ஏன் ஸ்ரீபெரும் புதூர் போகவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என்ற
அச்சம்தான் இதற்குக் காரணம். இது குறித்து வர்மா தனது வருத்தத்தைப் பதிவு
செய்துள்ளார். ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ நூலில் அதன் ஆசிரியர் ராஜீவ்
சர்மாவும் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.

ராஜீவ் படுகொலையில் இறுதி வினாடி வரை, அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு
செய்யப் பட்டதா? கொலை சதிக்கு திட்டமிட்டவர்கள் மீது கேமிரா பார்வை விழுந்ததா?
தாணு மற்றும் சிவராசன் அருகில் யார் யார் நின்றார்கள்? அல்லது அமர்ந்தார்கள்?
கேமிராவில் உள்ள சில பதிவுகளை திட்டமிட்டு மங்கலாக்கியது யார்? இதற்கு ஆணை
யிட்டது யார்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

எம்.கே. நாராயணன் பற்றி வர்மா ஆணையம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும்
குறிப்பிடப்பட வேண்டியதாகும். “ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட் டிருந்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் எம்.கே. நாராயண னுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை
இந்த ஆணையம் உணருகிறது. ஆனால் வெளியே சொல்ல முடியாத காரணங்களால், அவரால் இதற்கு
எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது பற்றி, இன்றைய நாள்வரை எம்.கே.
நாராயணன் வாயை மூடி மவுனம் சாதிக்கிறார். உயர்மட்டத்தில் நடக்கும் இந்தக்
குறைபாடு களுக்கான காரணங்களை கண்டறிந்து, உடனே களைய வேண்டும்” என்று வர்மா
ஆணையம் குறிப்பிடுகிறது. இது குறித்து ராஜிவ் சர்மா, தனது நூலில் பல கேள்விகளை
எழுப்பியுள்ளார்.

“ராஜீவ் உயிருக்கு திட்டவட்டமான அச்சுறுத்தல் உள்ளது என்பதை எம்.கே. நாராயணன்
முன்கூட்டியே தெரிந்திருந்தாரா? அல்லது ராஜீவ் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி
செய்ய விரும்பினாலும், ‘அதிகார பலம் கொண்ட மேலிட உத்தரவினால்’ அவரால் செயல்பட
முடியாமல் போனதா? ராஜீவ் மரணத்தால், அரசியல் ரீதியாக பயனடைந்தவர்கள் யார்?
ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள் மே 20 அன்று அப்போதைய உளவுத் துறையின்
இணை இயக்குனர் எஸ்.கே. தாக்கூர் அனைத்து மாநில காவல்துறை தலைமை
அதிகாரிகளுக்கும், ராஜீவ் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி, ஒரு கடிதம்
எழுதியிருந்தார். அப்படியானால், அடுத்த நாள் ராஜீவ் கொலை நடக்கப் போகிறது
என்பது முன்கூட்டியே தெரியுமா? ஏன் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற
கேள்விகளை அவர் முன் வைக்கிறார்.

1991 இல் நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் உள்துறை
செயலாளர் பார்கவா தலைமையில், உயர் அதிகாரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில்
உளவுத் துறைத் தலைவர் எம்.கே. நாராயணனும் கலந்து கொண்டார். அப்போது ராஜீவுக்கு
தரப்படும் பாதுகாப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. எனவே எம்.கே. நாராயண னுக்கு,
ராஜீவுக்கு தரப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த எல்லா விவரங்களும் தெரியும்
என்று கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த உள்துறை அமைச்ச கத்தின் இணைச் செயலாளர்
என்.கே. சிங், என்பவர் வர்மா ஆணையத்தின் முன் தெரிவித்தார். ஆனால், அதுபற்றி
தனக்கு எதுவுமே தெரியாது, அப்படி ஒரு கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளவே இல்லை
என்று எம்.கே. நாராயணன் மறுத்தார். நீதிபதி வர்மா விடவில்லை. இருவரையும்
எழுத்துப் பூர்வமாக தங்கள் கருத்துகளைக் கூற முடியுமா என்று கேட்டபோது, என்.கே.
சிங், எழுத்துபூர்வமாக அக்கூட்டத்தில் பங்கேற்றது உண்மையே என்று எழுதிக்
கொடுத்தார். எம்.கே. நாராயணன் எழுத்துப் பூர்வமாக தர முன்வரவில்லை. எம்.கே.
நாராயணன், ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு
தனக்குக் கிடைத்த உயர்மட்ட கூட்டத்தின் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வில்லை
என்ற முடிவுக்கு தாம் வந்ததாக வர்மா, தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எம்.கே. நாராயணன், பொய் கூறுவதற்கும் தயங்காத ஒரு மனிதர் என்பதையே, இது
காட்டுகிறது.

இந்திய உளவுத் துறையை கடுமையாக விமர்ச்சிக்கிறது வர்மா அறிக்கை. “உளவுத்
துறையில் அரசியல் தலையீடுகள் மிக சாதுர்யமாக நடக் கின்றன. அதன் செயல்பாடுகள்
புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு கறை படிந்து கிடக்கின்றன. அதன் நம்பகத்
தன்மை நடைமுறையானாலும், கற்பனையானாலும் மோசமான பாதிப்புக்குள்ளாகி விட்டது.
அரசியல் சார்பு, அடியாட்கள் அச்சுறுத்தல் இல்லாமல், சுதந்திரமான, நேர்மையான
அதிகாரிகளைக் கொண்ட புதிய அமைப்பாக உளவு அமைப்புகள் உருவெடுக்க வேண்டும்” –
என்று வர்மா நெத்தியடியாகக் கூறுகிறார்.

ராஜீவ் கொலையில் ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்க காங்கிரஸ் ஆட்சி நியமித்த ஜெயின்
விசாரணை ஆணையத்தின் கதையோ, இதைவிட மிக மோசம்!

1991 ஆகஸ்டு மாதம் இந்த விசாரணை ஆணை யத்தை அமைத்ததே நரசிம்மராவ் தலைமையில்
நடந்த காங்கிரஸ் ஆட்சி தான். காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர்களின்
வற்புறுத்தலினால்தான் அது வந்தது. ஆனால், பெற்ற குழந்தையை தாயே, கழுத்தை
நெறித்து சாகடிப்பது போல், இந்த ஆணையத்தின் செயல்பாட்டையும் காங்கிரஸ் ஆட்சி
முடக்கிப் போடவே துடித்தது.ஜெயின் ஆணையம் எப்படி எல்லாம் காங்கிரஸ் மைதானத்தில்
பந்தாடப்பட்டது என்ற விவரங்கள் அதிர்ச்சித் தரக்கூடியதாகும். “ராஜீவ் கொலையை
மறக்க முடியுமா? மறைக்க முடியுமா?” என்று கசிந்துருகி கண்ணீர் வடிக்கும்
காங்கிரஸ் கட்சியினர் இந்த விசாரணை ஆணை யத்தை முடக்கி, ராஜீவ் கொலையில் அன்னிய
சதியை மூடி மறைக்க எடுத்த முயற்சிகள் அதிர்ச்சியூட்டு பவையாகும். அந்த துரோகச்
செயல்பாடுகளை, அப்படியே பட்டியலிட்டுக் காட்டுகிறோம்.

நீதிபதி ஜெயின், தனது விசாரணையைத் தொடங்கு வதற்கு முன்பு, விசாரணைக்கான வரம்பை
நிர்ணயிக்க விரும்பினார். எனவே ஏற்கனவே ஜெ.எஸ். வர்மா, விசாரணை ஆணையத்தை
நியமித்து அரசு பிறப்பித்த மூல அறிக்கை அடங்கிய கோப்பை, உள்துறை அமைச்சகத்திடம்
கேட்டார். ஆனால். அந்த கோப்பே தொலைந்து போய் விட்டதாக அமைச்சகம் கூறிய பதில்,
நீதிபதியை அதிர்ச்சியடையச் செய்து விட்டது.

• நாடாளுமன்றத்தில், அரசின் அலட்சியத்தைக் கண்டித்து உறுப்பினர்கள்
கொந்தளித்தனர். நாடாளுமன்றமே குலுங்கியது. இதைத் தொடர்ந்து காணாமல் போன
கோப்பைத் தேடி கண்டுபிடிக்க கோப்பைத் தேடும் ஒரு ‘சிறப்புப் பிரிவு’
உருவாக்கப்பட்டது.

• கோப்புகளைத் தேடிப் பிடிக்க சிறப்புப் பிரிவு அமைத்த சம்பவம், அநேகமாக இதுவே
முதல் முறையாக இருக்கும். வலை வீசித் தேடக் கிளம்பிய சிறப்புப் பிரிவு பிரதமர்
அமைச்சகம், சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில்
தேடியும், கோப்பு கிடைக்காத நிலையில், அந்தக் கோப்பைக் கண்டுபிடிக்க
முடியவில்லை என்று நரசிம்மராவ் ஆட்சி அறிக்கை வெளியிட்டது.

• இதனால் ஒரு வருட காலம், ஆணையத்தின் பணி முடங்கியது. பிறகு, முதன்முதலாக பொது
மக்கள் கருத்து கேட்கும் பணியைத் தொடங்க, ஆணையம் முன் வந்தது. அப்போது, மத்திய
அரசின் வழக்கறிஞரே (அட்டர்னி ஜெனரல்) , ஜெயின் ஆணையத்தின் விசாரணை அதிகாரம்
பற்றிக் கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் தருமாறு சட்ட
அமைச்சகத்திடம் நீதிபதி ஜெயின் கேட்டார்.

• ஆனால், நீதிபதிக்கு பதில் தருவதற்கு, சட்ட அமைச்சகம் எடுத்துக் கொண்ட கால
அவகாசம், மீண்டும் ஒரு வருடம். ஒரு வருடத்துக்குப் பிறகு, சட்ட அமைச்சகம் தந்த
பதிலில் ஏற்கனவே தமிழ் நாட்டில் சி.பி.அய். (சிறப்புப் புலனாய்வுக் குழு)
நடத்திய விசாரணையில் ஜெயின் ஆணையம் தலையிடக் கூடாது என்றும், சி.பி.அய்.
விசாரித்த நபர்களை ஜெயின் ஆணையம் விசாரிக்கக் கூடாது என்றும், அதற்கான அதிகாரம்
ஜெயின் ஆணையத்துக்கு இல்லை என்றும் பதில் தந்தது.

• ஜெயின் இதை ஏற்க மறுத்தார். ‘அன்னிய சதி’ பற்றி விசாரிக்கும்போது,
எல்லாவற்றையும் விசாரிக்கும் உரிமை தனக்கு உண்டு என்று 60 பக்கங்களில் விரிவான
ஆணையை ஜெயின் வெளியிட்டார். சி.பி.அய். செய்த தவறுகளை விசாரிக்கவும்,
சி.பி.அய். விசாரணைப் பணிகளை நேரில் பார்வையிடவும், தமக்கு அதிகாரம் உண்டு
என்றார் ஜெயின்.

• ஜெயின், தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய
அரசு, அதுவரை, ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்
என்று கேட்டது. இடைக்காலத் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜெயின் மறுத்து
விட்டார்.

• இதைத் தொடர்ந்து ஆணையத்தை நீதிமன்றம் வழியாக முடக்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப் பட்டன. டெல்லியைச் சேர்ந்த முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞர் டெல்லி
உயர்நீதிமன்றத்தில், ஜெயின் ஆணையத்தை நியமித்த அரசு ஆணை செல்லாது என்று
‘பொதுநல’ வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். ஏற்கனவே, சி.பி.அய். குற்றவாளிகளைக்
கண்டறிந்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதால், ஜெயின் ஆணையம்,
மீண்டும் குற்றவாளிகளைக் கண்டறிய முற்படுவது நேர் எதிரான விளைவுகளை
உருவாக்கிவிடும். சி.பி.அய். கண்டறிந்தவர்கள் மட்டுமே குற்ற வாளிகள். ஜெயின்
ஆணையம், வேறு குற்ற வாளிகளைக் கண்டறிந்தால், வழக்கு விசாரணையை பாதிக்கும்”
என்று அவர் கோரியிருந்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம்,
ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் சி.பி.அய்.
சாட்சிகளை வர்மா ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. பிறகு வழக்கை
விசாரித்த உயர்நீதிமன்றம், 1995 நவம்பரில், டெல்லி வழக்கறிஞர் மனுவை தள்ளுபடி
செய்தது, ஜெயின் ஆணையத்தின் விரிவான விசாரணை அதிகாரத்தை உறுதிப் படுத்தியது.

• பதறிப் போன மத்திய காங்கிரஸ் ஆட்சி, முகமூடியைக் கிழித்துக் கொண்டு வெளியே
வந்தது. முஸ்டாக் அகமது என்ற வழக்கறிஞரின் தனி நபர் மனுவை மத்திய அரசே,
உச்சநீதி மன்றத்துக்குக் கொண்டு போனது. ஆக, ஒரு வழக்கறிஞரைப் பிடித்து, தனது
சார்பில், ‘பொது நல’ வழக்கைத் தொடர்ந்ததே, மத்திய அரசு தான் என்ற உண்மை
வெளிச்சத்துக்கு வந்தது. தனி நபர் தொடர்ந்த பொது நலன் வழக்கில் அரசு
மேல்முறையீடு செய்ததை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டது. அதன் பிறகு, மத்திய அரசே
தயாரித்துக் கொடுத்து தனி மனிதர் வழியாக தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவை
திரும்பப் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

• ஜெயின் ஆணையத்தின் விசாரணையில் ராஜீவ் கொலையில் தொடர்புடைய அரசியல்
பிரமுகர்கள் அம்பலமாகி விடுவார்களோ என்று அஞ்சி, அதை முடக்கத் துடித்தது
காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் உறுப்பினர்களின் வலியுறுத்த லால் வேறு வழியின்றி
அமைக்கப்பட்டஜெயின் ஆணையத்தை செயல்படவிடாமல் தடுக்க மேற்கொண்ட கடும் முயற்சிகள்
பலத்த சந்தேகங்களை மக்கள் மன்றத்தில் எழுப்பி நிற்கின்றன.

ஜெயின் ஆணையமோ விரிவான விசாரணையை நடத்தியது. 1987 ஆம் ஆண்டு முதல்
சந்திராசாமியின் சர்வதேச ரகசிய தொடர்புகள், வெளிநாட்டு வங்கிகளில் போட்ட பணம்,
சுப்ரமணியசாமி தொடர்புகள் பற்றி இந்திய உளவுத் துறை தயாரித்து வைத்திருந்த
ஆவணங்கள், ஜெயின் ஆணையத்திடம் வந்து சேர்ந்தன. அந்த ஆவணங்கள் அரசிடம்
சமர்ப்பிக்கப்படாமல் உளவுத் துறை வசமே இருந்தன. 1998 பிப்ரவரியில் ஜெயின்
ஆணையத்தின் செயலாளராக இருந்த டி.ஆர். லுத்ரா, மத்திய உள்துறை செயலாளர் பி.பி.
சிங் என்பவருக்கு அதுவரை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டு போகாமல், உளவுத்
துறை, தன் வசம் ரகசியமாக வைத்திருந்த அந்த ஆவணங்களை, அரசுக்கு அனுப்பி
வைத்தார். 1991 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையம் 12 முறை கால நீட்டிப்பு
பெற்றிருந்தாலும், அரசுக்கு புதிய ஆவணங்கள் தரவுகள் கிடைத்துள்ளதால்
சந்திராசாமி, சுப்பிரமணிய சாமி, அன்னிய சதிகள் பற்றி கண்டறிய மேலும், ஓராண்டு
கால அவகாசம் தருமாறு ஆணையத்தின் சார்பில் அதன் செயலாளர் டி.ஆர். லுத்ரா அரசிடம்
கேட்டார். அப்போது குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி
நடந்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் குஜ்ரால் ஆட்சியில் பங்கேற்கவில்லை; வெளியிலிருந்து ஆதரவு தந்தது.
காங்கிரஸ் பலத்தை நம்பியே குஜ்ரால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய
நிலை! ஜெயின் ஆணையத்தின் விசாரணகள் தொடருவதை விரும்பாத காங்கிரஸ் தலைமை கால
நீட்டிப்புத் தரவேண்டாம் என்றே குஜ்ரால் ஆட்சியை மிரட்டியது; இல்லாவிட்டால்
ஆதரவைத் திரும்பப் பெற்று ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். எனவே, “கால
நீட்டிப்பு தரஅரசு விரும்பவில்லை; அடுத்த ஏழு நாட்களில் ஆணையம் இறுதி அறிக்கை
தந்தாக வேண்டும்” என்று 1998 பிப்.27 அன்று நள்ளிரவு உள்துறை அமைச்சகம் ஜெயின்
ஆணையத்துக்கு ஆணையிட்டது நீதிபதி ஜெயின் பதறிப் போனார்.

குஜ்ரால் அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நீதிபதி ஜெயினை தொலைபேசியில் அழைத்து,
“ஆணையம் விரிவான அறிக்கை தரத் தேவை யில்லை. மேலோட்டமான அறிக்கையை சமர்ப்
பித்தாலே போதுமானது. மேலோட்டமான அறிக்கை என்பதால் நாடாளுமன்றத்தில் வைக்கத்
தேவையில்லை. அது நேரடியாகவே அமைச் சரவைக்கு வந்து சேர்ந்து விடும். அத்துடன்,
செயல்பாட்டுக்கான அறிக்கையை (action taken Report) சமர்ப்பிக்க வேண்டிய
அவசியமும் இல்லை” என்று கூறினார்.

இறுதி அறிக்கை தயாரிப்பில் பரபரப்பாக இருந்த ஆணையத்தை சி.பி.அய். அதிகாரிகளும்
மிரட்டினர். ஏற்கனவே ஆணையத்தின் அறிக்கை ஊடகங்களில் கசிந்திருந்தன. அவை
காங்கிரசுக்கு எதிராகவே இருந்தன. கசிய விட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று, சி.பி.அய். அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். நீண்ட நேரம்
சி.பி.அய். அதிகாரிகளுக்கும் ஜெயின் ஆணையத் திற்குமிடையே கடும் வாக்குவாதம்
நடந்தது. ஜெயின் ஆணையம் கடும் நெருக்கடிகளை மிரட்டல்களை சந்திக்க
வேண்டியிருந்தது. அறிக்கை தயாரிப்புக்கு எதிராக, நீதிபதிக்கு தொலைபேசி
மிரட்டல்கள் வந்தன. நீதிபதியே உள்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் இந்த
தொலைபேசி மிரட்டல்களைப் பதிவு செய்தார். இதே நீதிபதி 1997 ஆம் ஆண்டு அப்போதைய
உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவிடம், ஊடகங்கள் புடை சூழ, 2000 பக்க
அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையிலிருந்து நிர்ப்பந்தத் தால்
சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை முற்றிலும் முரண்பட்டதாகவே இருந்தது.
மிரட்டலுக்கு அஞ்சிய ஜெயின் தனது பரிந்துறைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு
உள்ளனார். முதல் அத்தியாயத்தின் முதல் பக்கத்தில் ராஜீவ் காந்தி படத்தை அறிக்கை
தாங்கியிருந்தது. முதல் அத்தியாயம் முழுவதிலும் ராஜீவ் காந்தியின் பெருமைகளையே
ஜெயின் புகழ்ந்து தள்ளியிருந்தார். எந்த ஒரு விசாரணை ஆணையமும், இப்படி, தனிநபர்
புகழ் பாடிய முன் உதாரணங்கள் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் விரும்பியவாறே
அறிக்கை வடிவம் பெற்றது. ஒரு வாரம் கழித்து, நீதிபதி ஜெயின், அவரது சொந்த ஊரான
ஜோத்பூருக்குப் போனார். அங்கே எதிர்பாரத ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சோனியா
காந்தி – நீதிபதி இல்லம் தேடி வந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

எந்த ஜெயின் ஆணையத்தை கடமையை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், அலைக் கழித்ததோ, அதே
விசாரணை ஆணையத்துக்கு சோனியாவின் பாராட்டும் நன்றியும் கிடைத்தது. வர்மா
ஆணையத்தின் பரிந்துரை முடக்கப்பட்டது. ஜெயின் ஆணையத்தின் பரிந்துரை மிரட்டலால்
வளைக்கப்பட்டது. இதுவே விசாரணை ஆணையங்களின் சோகமான முடிவு. இதே சோக முடிவைத்
தான் இந்திரா காந்தி கொலையை விசாரிக்க அவரது ‘தவப்புதல்வன்’ ராஜீவ் காந்தியால்
நியமிக்கப்பட்ட தாக்கர் ஆணையமும் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்திரா கொலை பற்றி விசாரிக்க நாடாளுமன்ற விதிகளின் கீழ் தாக்கர் ஆணையம்
நியமிக்கப் பட்டது. ஆணையமும் விசாரணை நடத்தி அறிக்கை தந்தது. ஆனால், பிரதமர்
ராஜீவ் அதை நாடாளு மன்றத்தில் வைக்க மறுத்தார். விசாரணை அறிக்கை யில்
அடங்கியிருந்த உண்மைகளை மறைக்கவே முயன்றார். விதிகளை சுட்டிக்காட்டி
உறுப்பினர்கள் எதிர்த்தனர். உடனே ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத் தின் விதிகளையே
திருத்தி அறிக்கையை வெளி வராமல் தடுத்தார். ஆனாலும், ஆணையத்தின் முக்கிய
பரிந்துரைகள் ஊடகங்களில் கசிந்துவிட்டன. அந்த செய்திகள் அதிர்ச்சியூட்டு
பவையாகும்.

“இந்திரா கொலையில் அவரது இல்லத்துக் குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன. அரண்மனை
சூழ்ச்சி போன்ற (Palace Intrigue) பெரிய சதிகள் அடங்கியுள்ளன. இந்தக் கொலையில்
இந்திராவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே. தவான் மீது சந்தேகம் எழுகிறது.
இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று பரிந்துரை கூறியது. (‘சண்டே’
ஆங்கில வார ஏடு 3.2.1991)

தாக்கர் விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய ஆர்.கே. தவான், இந்திராவின் உதவியாளர்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் காங்கிரஸ் ஆட்சி எடுக்க வில்லை. ராஜீவ் சில காலம்
ஒதுக்கி வைத்திருந்தார். பிறகு சோனியாவின் செல்வாக்கு ஓங்கிய நிலையில் ஆர்.கே.
தவான், டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்
பட்டார். காங்கிரஸ் கட்சி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் முதலிடம்
பெற்றிருந்ததே ஆர்.கே. தவான் பெயர் தான். அதன் பிறகு, சீத்தாராம் கேசரி
காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில், ஆர்.கே. தவான், காங்கிரஸ் கட்சியின்
செயலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அப்போது இந்திராவின் ‘அரண்மனையில்’ இருந்த
அவரது ஒரே குடும்ப உறுப்பினர் சோனியாதான். அப்படியானால் தாக்கர் கூறிய
அரண்மனைச் சதி என்பதன் பெருள் என்ன? இதற்கும் ஆர்.கே. தவானுக்கும் உள்ள தொடர்பு
என்ன? குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை உயர் பதவியில் உட்கார வைத்து அலங்கரிக்க
வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? இந்தக் கேள்விகள் அர்த்தம் பொதிந்தவை.

இந்திரா தனது வீட்டு வளாகத்தில் உள்ள அலுவலகம் வந்தபோது, வழக்கமாக அணியும்
குண்டு துளைக்காத கவசத்தை சம்பவம் நடந்த அன்று அணியாமல் வந்தார். அந்த செய்தி
‘அரண்மனைக்குள்’ இருந்தவர்களால் இந்திரா பாதுகாவலர்களில் ஒருவரான பென்சிங்
என்பவருக்கு தரப்பட்டதால், பாதுகாவலர் வயிற்றைக் குறி பார்த்து சுட்டார் என்று
கூறியது. தாக்கர் ஆணையம்! இந்திராவை சுட்ட அந்தப் பாதுகாவலரை, காவலாளிகள்
உயிருடன் பிடிக்காமல், உடனே சுட்டுக் கொன்று விட்டனர். உண்மைகள் மூடி
மறைக்கப்பட்டுவிட்டன. இந்திரா கொலையில் பொய்யாக வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டு
காலம், சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு அரசாலே வழக்கை திரும்பப்
பெறப்பட்டவர் கிம்ரஞ்சித் கிங் மான். பென்சிங்கை சுட்டுக் கொன்றது ஏன் என்ற
கேள்வியை எழுப்பிய அவர், இந்திரா கொலையில் இத்தாலி நாட்டின் தொடர்பு
இருக்கிறது. அப்பாவிகள் தூக்கிலிடப்பட்டு விட்டனர். எனவே மறுவிசாரணை நடத்தப்பட
வேண்டும் என்றார். (‘தி இந்து’ 1.4.1990)

மத்திய காங்கிரஸ் ஆட்சி தனது அதிகாரத்தை உண்மைகளை மூடி மறைத்து குற்றவாளிகளைக்
காப்பாற்றவே முயன்றிருக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பார்ப்பன
சூழ்ச்சி யோடு குலைக்க தொடர்ந்து சதித் திட்டங்களையும், குழி பறிப்புகளையும்
அரங்கேற்றியே வந்திருக்கிறது. இந்த உண்மைகளை நமது தமிழின இளைஞர் களிடம்
விளக்கிடும் முயற்சியே இந்தத் தொடர்!

‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ என்ற நூலை உளவு நிறுவன ‘ஆசியுடன்’ எழுதிய
ராஜிவ் சர்மா விடுதலைப் புலிகள் மீது சுமத்திய வீண் பழிகள் அவதூறுகளுக்கு உரிய
தரவுகளோடு மறுப்பு எழுத வேண்டும் என்று தொடங்கப்பட்ட இந்தத் தொடர், அதன்
எல்லைகளைக் கடந்து, வேறு பல உண்மை களையும் உணர்த்திட முயன்றிருக்கிறது! இந்த
உண்மைகளை தமிழர்களிடம் கொண்டு சென்றால் இந்த கடும் உழைப்பின் நோக்கம்
முழுமையடையும்.

தொடரைத் தொடர்ந்து படித்து உற்சாகமூட்டிய தோழர்களுக்கு நன்றி தெரிவித்து
முடிக்கிறேன்.

(‘புலிகளுக்கு அப்பால்’ நூலை எழுதிய ராஜீவ் சர்மா, விடுதலைப் புலிகள்
இயக்கத்தின் மீது களங்கம் சுமத்தி, சேறு வாரி இரைத்தது உண்மை. ஆனாலும்,
புலனாய்வுத் துறை ஆதரவுடன் வெளி வந்த அந்த நூலில் பல ரகசிய ஆவணங்கள்
வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஜெயின், வர்மா
ஆணையங்கள் தொடர்பாக பல வெளி வராத செய்திகளை ராஜிவ் சர்மா நூல் பதிவு
செய்துள்ளது. அதிலிருந்தே விசாரணை ஆணை யங்கள் தொடர்பான தரவுகள் இத் தொடரில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.)

(நிறைவு)

- விடுதலை க.இராசேந்திரன்,

பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

*http://www.periyarthalam.com/2011/09/16/congress-mkr-indragandhi-murd...<http://www.periyarthalam.com/2011/09/16/congress-mkr-indragandhi-murder/>

மரண தண்டனை என்பது அரசால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலையேயன்றி வேறில்லை



மரண தண்டனை என்பது அரசால் நிகழ்த்தப்படும் கொடூரமான கொலையேயன்றி வேறில்லை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

(முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான K.T.தாமஸ், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நான்கு கைதிகளுக்கு மரண தண்டனை விதித்த ஆயத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் ஆவார். கடந்த செப்டம்பர் 2, 2011ல் ஏசியன் ஏஜ் இதழில் வெளியான அவரது கட்டுரையின் மொழியாக்கம் இது)
afzalguru_360இந்திய குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததும், தமிழக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அப்சல் குரு குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் சமூக வலைப்பின்னல் தளமான ட்விட்டரில் சமீபத்தில் பதிவு செய்தவையும், மரணதண்டனை குறித்த விவாதத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. உண்மையில், பரபரப்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு நீதிமன்றங்கள் இந்த அதீதமான தண்டனையை எப்போதெல்லாம் விதிக்கிறதோ அப்போதெல்லாம் இந்த சர்ச்சை சூடுபிடிக்கத்தான் செய்கிறது. மற்ற நேரங்களில் இது குறித்த விவாதம் துடிப்பற்றே இருக்கிறது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் 26 பேருக்கும் அமர்வு நீதிபதி ஒருவர் மரணதண்டனை விதித்தபோது விவாதம் ஏதும் எழாமலேயே போனது. பின்னர் உச்ச நீதிமன்றம் 22 குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பை தள்ளுபடி செய்து, நால்வருக்கு எதிரான மரண தண்டனை தீர்ப்பை மட்டும் உறுதி செய்தது. அப்போதும் கூட கொந்தளிப்பை உருவாக்கக்கூடிய இப்பிரச்சனை பொது விவாதத்திலிருந்து தப்பியது.
இது இவ்வாறிருக்க, வன்புணர்ச்சிக் குற்றத்திற்காக ஒருவருக்கு உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பில் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி தள்ளுபடி செய்தபோதுதான் இப்பிரச்சனை முன்னிலைக்கு வந்தது. மிக நீண்ட காலத்திற்குப்பிறகு அவர் தூக்கில் இடப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உள்ள கைதிகளின் நிலையும் வேறொன்றில்லை, ஏனெனில் மிக நீண்ட காலமாக தூக்குக்கயிர் கண்கள் முன்னால் ஆட, அவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள்.
இந்த நான்கு குற்றம்சாட்டப்பட்டோருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற ஆயத்திற்கு தலைமை வகிக்க நேர்ந்தது எனது துரதிர்ஷ்டம்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் முதலில் தூக்கிலிடப்படுவதற்காக தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, என் ஞாபகத்தில், சரித்திரத்தில் வேறு எந்த வழக்கிலும் இருந்ததில்லை. நான் வழக்கறிஞராகப் பணியைத் துவங்கிய காலகட்டத்தில் மரண தண்டனை தீர்ப்பு அடிக்கடி வழங்கப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், சட்டப்படி, அமர்வு நீதிபதி மரண தண்டனை தீர்ப்பு அளிக்கவில்லையெனில், அதற்கான காரணங்களை அளிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. பின்னர் சட்டம் மாற்றப்பட்டு ஆயுள் தண்டனையே சராசரி தண்டனை ஆன போது, மரண தண்டனை விதிப்பதற்கு அமர்வு நீதிபதிகள், சிறப்புக் காரணங்களை அளிக்கவேண்டிய நிலை வந்தது!
அரிதிலும் அரிதான வழக்கு இல்லையெனில் இவ்வதீதமான தண்டனையை சுமத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பின்னர் கட்டுப்பாடு விதித்தபோது, சட்டம் மேலும் முறுக்கப்பட்டது. ஆனால் “அரிதிலும் அரிதான” என்ற இந்த கருத்து சொற்பொருளியல் அளவிலேயேதான் இருந்து வந்தது.
ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் மற்ற வழக்குகளை விட குரூரமான மேலோட்டங்கள் அதிகமாக இருப்பதாகத் தோன்றிய போதெல்லாம் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் மரண தண்டனையை விதித்து வந்துள்ளன. பெரும்பாலான கொலைகள் கொடூரமான முறையில் நிகழ்த்தப்படுபவையாகவே இருக்க, ஒரு குறிப்பிட்ட வழக்கை அரிதிலும் அரிதானது என்று தனது சொல்லாடலால் விவரிப்பது நீதிபதியின் விருப்பத்தைப் பொருத்து அமைந்தது. தீவிரவாதிகளின் தாக்குதல்களில் நிகழும் பெரும்பாலான கொலைகள் அரிதிலும் அரிதான வழக்குகளாக கருதப்படவில்லை என்று அறிந்து நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் கொலை செய்யப்படுவது பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில், அரிதிலும் அரிதானதாக விவரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்திரா காந்தி படுகொலை வழக்கிலும், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலும், ஜெனரல் வைத்யா கொலை வழக்கிலும் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்புகள் இதை உறுதி செய்கின்றன. ஆனால் 1984இல் நடந்த சீக்கியர் கலவரங்களின்போதைய கொலை வழக்குகள் ஏதும் அரிதிலும் அரிதான வழக்காகக் கருதப்படவில்லை. அரிதிலும் அரிதான வழக்குகள் என்ற கோட்பாட்டை எடுத்துரைத்த உச்ச நீதிமன்றத்தின் பிரபலமான பச்சென் சிங்க் வழக்கின் தீர்ப்பை இயற்றியவர் நீதியரசர் சர்க்காரியா ஆவார்.
இதுபோன்ற வழக்குகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான அளவுகோல் குறித்து அவர் கூறுகையில், “அரிதிலும் அரிதான வழக்கு என்பது ஆயுள் தண்டனை என்ற மாற்று கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளமுடியாத வழக்குகளே ஆகும்” என்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்தபோது சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நிகழ்ந்தமையால் இதைச் சுட்டிக்காட்டுகிறேன்.
அது, நான், நீதியரசர் வாத்வா மற்றும் நீதியரசர் முஹம்மது காத்ரி ஆகியோர் அடங்கிய ஆயம். நளினி குறித்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அவரையும் குற்றவாளியாகவே அறிவித்தது. ஆனால் மூவரில் ஒரு நீதிபதி தனது காரணங்களை முன்வைத்து, அவர் தூக்கில் இடப்படக்கூடாது என்றார். எனினும், மற்ற இரு நீதிபதிகளும் அவரும் சாகும் வரை தூக்கில் இடப்பட வேண்டியவரே என்று எடுத்துரைத்தனர். ஆகவே, பெரும்பான்மை தீர்ப்புக்கேற்ப அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் முன்னர் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டபோது, இந்த தீர்ப்பு மறுஆய்வுக்கு வந்தது. ஆயத்தின் ஒரு மூத்த நீதிபதி என்ற முறையில் வழக்கறிஞர்களிடம் மறுஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதை நான் கூறினேன். நான் அப்படிச் செய்ததற்கான காரணம், வெளிப்படையான தவறுகள் ஏதும் முந்தைய பதிவுகளில் இல்லாத பட்சத்தில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை மற்றிக்கொள்ளாது என்பது தான். ஆகவே நாங்கள் அந்த மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய முடிவுசெய்தோம்.
எனினும் அந்த மறுஆய்வு மனு மீதான தீர்ப்பு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் என் மனதில் ஒரு புது யோசனை உதித்தது. அதனால், புதிய அடிப்படையில் அந்த மறுஆய்வு மனுவை அனுமதித்துக்கொண்டு தீர்ப்பைப் பிறப்பித்தேன். மூவர் ஆயத்தில் ஒருவர் ஆயுள் தண்டனைக்குச் சாதகமான நிலைப்பாடு எடுக்க, இரு நீதிபதிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சூழலில், அரிதிலும் அரிதான வழக்குகளை அடையாளம் காண்பதற்கான அளவுகோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று கூறினேன். அதாவது, ஒரு நீதிபதி மரண தண்டனைக்கு எதிராக பேசிய சூழலில், குறைவான மாற்று என்பது கேள்விக்கிடமின்றி தள்ளுபடி செய்யப்படவில்லை. மற்ற இரு நீதிபதிகளும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியாக குடியரசுத் தலைவர் நான் கூறியதை ஏற்றுக்கொண்டார். சட்டத்தால் நிறுவப்பட்ட செயல்முறைக்கேற்ப அல்லாமல், ஒரு மனிதனின் உயிரையோ சுதந்திரத்தையோ பறிக்கக்கூடாது என்று அரசியலமைப்புச்சட்டத்தின் சரத்து 21 கூறுகிறது. இதன் பொருள், சட்டம் நியாயமாக, நேர்மையாக, சரியானதாக இருப்பின் உங்களது உயிர் கூட அச்சட்டத்தால் எடுக்கப்படலாம். மரண தண்டனை என்பது ஒரு மனிதனைக் கொல்வதாகும். சட்டத்தின் பாதுகாப்பு இருந்தால் ஒரு நபரைக் கொல்வது குற்றம் இல்லை என்பதே இப்போது சட்டம்! சட்ட அனுமதி இருப்பின் ஒரு மனிதன் கொல்லப்படலாமா?
மரண தண்டனை இருக்க வேண்டும் என்று சொல்வோரும், ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்வோருமாக, சட்டம் அறிந்தோரும், மனித உரிமை ஆர்வலர்களும் தங்களை இரு குழுக்களாக பிரித்துக்கொண்டுள்ளனர். நீங்கள் ஒருவரைக் கொன்றால் எப்படி உங்களை தண்டனையிலிருந்து விலக்க முடியும்? தண்டனை என்பது என்ன? நீங்கள் உங்கள் குழந்தையை எதற்கு தண்டிக்கிறீர்கள்? ஒருவரை சீர்திருத்தவே அவரை தண்டிக்கின்றீர்கள் என்பது திண்ணம். முன்பெல்லாம் தண்டனைக்கு மூன்று பரிமாணங்கள் கொண்ட நோக்கம் இருந்தது: சீர்திருத்தம், குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது மற்றும் பழிவாங்குவது. பழிவாங்குதல் என்ற குறிக்கோள் இப்போது வழக்கற்றுப்போன, பட்டிக்காட்டுத்தனமான ஒன்றாக கருதப்படுகிறது. பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற கோட்பாட்டை பெரும்பாலான நவீன கால குற்றவியல் நிபுணர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எஞ்சிய இரு நோக்கங்களில், சீர்திருத்தம் என்ற நோக்கம் குற்றம் இழைத்தவரை இல்லாமல் செய்யும் போது, அடையமுடியாததாகிறது.
எஞ்சுவது, குற்றங்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கம். மரண தண்டனை இருக்க வேண்டும் என்று கூறும் குழுவினர் தங்கள் கூற்றை நியாயப்படுத்த முன்வைப்பதும், மரண தண்டனை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் என்ற வாதமே ஆகும். ஆனால் இது நிஜமாகவே குற்றங்கள் நிகழ்வதை தடுக்கிறதா? இன்றைக்கும் சவுதி அரேபியாவில் வெள்ளிக்கிழமைகளில் ஜுமா வழிபாட்டிற்குப் பின்னர் ஒருவர் காண நிர்பந்திக்கப்படுகிற கொடூரமான காட்சி, குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்படுவதாகும்.
இதற்கான பொருள் என்னவென்றால், மக்கள் தொகை மிகவும் குறைவான ஒரு நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் குற்றம் புரிவோர் ஒழிக்கப்படவில்லை என்பதேயாகும். ஒரு குற்றவாளி தண்டனையில் இருந்து தப்பினால் மற்றவர்களை அதே போன்ற குற்றங்கள் இழைக்க அது ஊக்குவிக்கும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் மரண தண்டனை நிஜமாகவே குற்றம் இழைப்பதிலிருந்து குற்றவாளிகளை தடுக்கிறதா என்று ஒரு ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. எனக்கு தெரிந்த வரை, மரண தண்டனையின் தாக்கத்தையும் ஆயுள் தண்டனையின் தாக்கத்தையும் எவரும் ஒப்பீடு செய்து பார்த்ததில்லை.
perarivalan_267ஆனால் நம்மிடம் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மாகாணங்களைச் சார்ந்த பதிவுகள் உள்ளன. திருவிதாங்கூர் அரசர்தான், 1940இல் முதலில் மரண தண்டனையை ஒழித்தார். பின்னர் அதே வருடம் கொச்சியின் அரசரும் இதே போன்றதொரு அறிவிப்பை விடுத்தார். பின்னர் இந்த மாகாணங்கள் 1950இல் இந்திய குடியரசில் இணைந்த போது இங்கு மரண தண்டனையையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரவேண்டியிருந்தது. இது இவ்வாறிருக்க, இவ்விரு மாகாணங்களிலும் 1940லிருந்து 1950 வரையிலும், 1950லிருந்து 1960 வரையிலும் நடந்தேறிய கொலைகளை குற்றவியல் நிபுணர்கள் ஒப்பீட்டு ஆய்வு செய்தனர். மரண தண்டனை நிலுவையில் இல்லாத காலத்தில் இருந்ததை விட 1950லிருந்து 1960 வரையிலான காலத்தில் கொலை விகிதம் அதிகமாக இருந்ததைக் கண்டறிந்து அவர்கள் திகைப்புற்றனர். குற்றம் நிகழ்வதிலிருந்து தடுக்கும் கருவியாக மரண தண்டனை அமையும் என்ற கருத்தில் உண்மையில்லை என்பதை இது தெளிவாக்குகிறது.
இங்கிலாந்தில் சிறு திருடர்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த ஒரு சுவரசியமான சம்பவத்தை மாபெரும் தத்துவவாதியான ஆர்தர் கொட்ஸ்லர் விவரிக்கிறார். குட்டித் திருட்டுகள் புரியும் நபர்களை மரண தண்டனை தடுக்கும் என்ற எண்ணத்தில்தான் மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு திருடன் தூக்குமேடையேற்றப்படும் போதும் மக்கள் கூட்டம் கூட்டமாக அக்காட்சியை காண வருவர். அவ்வாறு ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அக்காட்சியைக் கண்டுகொண்டிருந்த மக்களில் 63 நபர்களின் பணம் அந்நிகழ்ச்சியின் போது திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு செய்திகள் கிடைத்தது. மரண தண்டனை, குற்றத்தைத் தடுக்காது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
இனி எஞ்சுவது மரண தண்டனையைச் சூழும் மனிதத்தன்மையற்ற அம்சங்களே ஆகும். முதலாவதாக, குற்றவாளியை சீர்திருத்துவதற்கான குறிக்கோளை அது அழிக்கிறது. இரண்டாவதாக, உங்கள் முடிவைத் திருத்தும் கடமைக்கு (குறிப்பாக, உங்கள் தீர்மானம் தவறானது என்று பின்னர் தெரியவரும் போது) முன்கூட்டியே முடிவுகட்ட உங்களை நிர்பந்திக்கிறது. மூன்றாவதாக, குற்றவாளியை கொல்வதின் மூலம், சட்டத்தின் மறைவில் இருந்துகொண்டுதான் என்றாலும், நீங்கள் ஒரு கொலையைத் தான் புரிகிறீர்கள். நான்காவதாக, சட்டம் கொடுக்கும் அதிகாரத்தால் ஒருவரை கொல்லும்போது, நீங்களும் அந்த நபரின் பழிவாங்கும் மனப்போக்கையே பகிர்ந்துகொள்கிறீர்கள்.
ஐந்தாவதாக, ஆத்மீகமான முறையில் சொன்னால், உங்களால் திருப்பிக் கொடுக்க முடியாத உயிரை நீங்கள் எடுக்கவும் கூடாது. ஆறாவது காரணம், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றை வைத்து மரண தண்டனை விதிக்க முடிவு செய்வதைக் குறித்ததாகும். வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருந்த எனது அனுபவங்களின் அடிப்படையில், சாட்சிகள் சாட்சியம் சொல்ல பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்று என்னால் அதிகாரப்பூர்வமாகக் கூற முடியும். கொலையின் தீவிரத்தை கொலை செய்யப்பட்டவரின் உற்றார் உறவினர் பொதுவாக மிகைப்படுத்தித் தான் கூறுவர். ஆகையால், ஒரு கொலை மிகக் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டது என்ற உங்கள் முடிவு மிக பலவீனமான அடிப்படையைக்கொண்டு எடுத்த முடிவாகவும் இருக்கக்கூடும். மேலும், கொலை வழக்குகளில், குற்றவாளிகளாக கருதப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் இவர்களில் 90 விழுக்காட்டினர் சமூகத்தின் கீழ் படிநிலைகளைச் சார்ந்தோர் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
நான் கொலை புரிவதில்லை, நீங்களும் செய்யாமல் இருக்கலாம். இதற்கு நாம் வளர்க்கப்பட்ட விதமே காரணமாகும். ஆனால், கல்விபெற்ற வகுப்பினரின் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் மதிப்பு தெரிந்த அளவுக்கு சேரியில் வாழ்பவர் மற்றும் நாடோடியாக அலைபவர்களின் குழந்தைகளுக்குத் தெரிந்திருக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு ஆத்மீகம் குறித்தும் தெரியாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் எந்தவிதமான தார்மீகமான தடைகளும் இன்றி வன்முறையில் ஈடுபடுகின்றனர். மகசேசே விருது பெற்ற கிரண் பேடி எழுதியுள்ள புத்தகத்தைப் படித்த பின்னர் எந்தவொரு குற்றவாளியும் சீர்திருத்தப்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அரசோ பொதுமக்களோ சீர்திருத்தம் என்ற இப்பிரச்சனையில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அவர்களுக்கு குறுக்கு வழிதான் தெரியும்; குற்றவாளியைத் தீர்த்துக்கட்டி அதில் கிடைக்கும் காட்டுத்தனமான மகிழ்ச்சியில் களிப்பது. எனது நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் உங்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். குற்றவாளியை நிரபராதி என்று நீதிமன்றம் கூறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஆனால் சில நேரங்களில், அரிதாகத் தான், நிரபராதிகள் குற்றவாளிகளாக்கப்படுவர்.
இது வழக்குகளைப் பரபரப்பாக்குவதின் விளைவே ஆகும். குற்றம் சுமத்தப்பட்டவர் உண்மையில் நிரபராதி என்று நீதிபதி கண்டறிந்த ஒரு உதாரணம் சரித்திரத்தில் உள்ளது. இருப்பினும் குரோதம் நிறைந்த மக்கள் கூட்டம் ஒன்றை சமாதானப்படுத்துவதற்கு அவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டியிருந்தது. இது 2000 வருடங்களுக்கு முன்னர் எருசலேம் நகரில் நடந்தது. அந்த நீதிபதியின் பெயர் பொந்தியு பிலாத்து என்றும் அந்த கைதியின் பெயர் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்றும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை இல்லை!
(K.T. தாமஸ், T.S. ஸ்ரீநிவாச ராகவனிடம் கூறியது - http://www.asianage.com/ideas/death-penalty-nothing-brutal-murder-state-814)
தமிழில்: சபிதா, இராபர்ட் சந்திரகுமார் ( robertckumar@gmail.com)

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ஈழ இனப்படுகொலைகளும் இசுலாமிய இயக்கங்களின் பார்வையும்

 
ஜூலை 8ம் தேதியிட்ட உணர்வு பத்திரிக்கையின் விளம்பர சுவரொட்டிகளில் "இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் செய்யும் தமிழக இயக்கங்கள்” என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்தது அந்தப் பத்திரிக்கையின் நீதி, நேர்மை பற்றி தெரிந்ததால் நாம் எப்போழுதும் வாங்கிப் படிப்பதில்லை. இருப்பினும் என்னதான் துரோகம் இழைக்கப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம் என்று நண்பர் "ஒடிக்கி" ஜாபரிடம் வாங்கிப் பார்த்தால் தமிழக முஸ்லீம் மக்களை இருகூறாக்கிய அமைப்பின் இலங்கை கிளையின் சார்பாக வெளிவரும் ஒரு வலைதளத்தில் (www.rasminmisc.blogspot.com) வெளியிடப்பட்ட "இலங்கை முஸ்லீம்களின் பிரச்சனையை ஊறுகாயாக்க வேண்டாம் தமிழக அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரையை உணர்வில் பதிப்பித்து உள்ளார்கள் (என்ன! ஒரு சமுகநோக்கு என்று கட்டுரையை படிப்பவர்களுக்குப் புரியும்)

உணர்வு வெளியிட்ட கட்டுரைக்கும் தற்போது நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வேறு விசயம்.

அன்பு இஸ்லாமிய உறவுகளே....

முதலில் நாம் இங்கே ஒன்றை தெளிவுபடுத்திவிட்டு மேற்படி கட்டுரை(கதைக்கு) விரிவான பதில்களைப் பார்ப்போம்..

புலிகளாக இருந்தாலும் எவராக இருந்தாலும் அப்பாவி மக்கள், பெண்கள், நிராயுதபாணிகள், குழந்தைகளைக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் கண்டிக்கின்றோம். நீங்கள் சொன்னமாதிரி, சொன்னவிதத்தில் இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டு இருந்தால் கண்டிப்போம் இதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை.

ஆனால் உறவுகளே...

உலகத்தில் யூதர்களை மிஞ்சமுடியாது பிரித்தாள்வதிலும், சூழ்ச்சி புரிவதிலும் என்பார்கள். அவர்களே செய்யமுடியாத ஒன்று உண்டு என்றால் அது இஸ்லாமியர்களுக்குள் பிளவை ஏற்படுத்த முடியாதது.

ஆனால் இன்று முஸ்லீம்களுக்குள் மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களை பல கூறுபோட்டு தந்தைக்கு எதிராக மகனையும், மகனுக்கு எதிராக தந்தையையும் யூதர்கள் செய்யமுடியாத ஒரு குழப்பத்தை இஸ்லாமிய மக்களின் ஒரு சிறு பிரிவினர் இடையே செய்து வருகின்றனர். இன்று ஈழத் தமிழ் மக்கள் மீது நாஜி இட்லர்கூட செய்யாத ஒரு இன அழிப்புப்போரை 7 நாடுகள் துணையுடன் ரத்தவெறியன் ராஜபக்சே செய்தான் என்பது உலகில் மனிதநேயம் கொண்ட அனைவருக்கும் தெரியும். ஆனால் 8வது நபராக எனது இஸ்லாமிய சமுகத்தில் இருக்கும் ஒரு சில நயவஞ்சக சிங்களக் கைக்கூலிகள் திரைமறைவாக ஈழத்தில் நடந்த இன அழிப்புப்போரில் உள்ளார்களோ என்று தற்போது எண்ணத்தோன்றுகிறது.

ஏன் என்றால் மேற்கண்ட தளத்தில் எழுதியவர்கள் நோக்கமும், அதை வெளியிட்ட உணர்வு பத்திரிக்கையின் நோக்கமும் மறைமுகமாக அல்ல வெளிப்படையாக நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. மேற்கண்ட கட்டுரையின் நோக்கம்தான் என்ன?

காத்தான்குடியில் பள்ளிவாசல் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்;
1992ல் வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றினார்கள்;
கிழக்கில் முஸ்லீம்கள் மீது தாக்குதல்;
கிழக்கில் கருணா தலைமையில் முஸ்லீகள் மீது தாக்குதல்.

இப்படி பட்டியலிடும் கட்டுரையாளர் கூறுகிறார்

“இப்படி பட்டியல் போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் போடுமளவுக்கு துரோகங்களை இழைத்தவர்கள் தான் இந்த விடுதலைப்புலித் தீவிரவாதிகள்” (ஏன் பாய் அமெரிக்கவும் இந்துத்துவவாதிகளும் உங்களையும் இஸ்லாமியர்களையும் அகிம்சாவாதிகள் என்றா சொல்றாங்க?)

நீங்க என்னதான் சொல்ல வர்றீங்கனு ஒருத்தனுக்கும் புரியல. யாருக்கும் எதுவும் புரிய கூடாதுங்கறதுதானே நீங்க இவ்வளவு கஷ்டப்படறீங்க...

சரி நீங்க சொல்கிற மாதிரியே நடந்திருந்தால் நாம் கண்டிப்போம். ஆனால் இந்தக் கட்டுரை மூலம் நீங்கள் சொல்ல வருபவை என்ன?

இறுதிப்போரில் முழுமையாக புலிகளை (உங்கள் பார்வையில் புலித்தீவிரவாதிகளை) ஒழித்து விட்டதாக உங்கள் இலங்கை இனவெறி அரசே கூறுகிறதே..! அப்படி இருக்க இன்று இனப்படுகொலையால் வீடு இழந்து மகன், மகள், கணவன் என அனைத்தையும் இழந்து முள்வேலி முகாம்களில் வாடிக்கொண்டு இருக்கும் எனது மனித உறவுகளான அனைவரையும் இன்னும் புலிகள் என்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்றும் மீதம் இருக்கும் எம் மக்களையும் அழிக்கவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?

உலகில் எங்கும் நடைபெறாத ஒரு மனிதப்பேரழிவு நடந்துள்ளதே, மனிதநேய மார்க்கத்தை கை கொண்டு இருக்கும் இஸ்லாமிய சமூகமும் அதன் இயக்கங்களும் அதை எதிர்க்கவேண்டியது கடமை அல்லவா?

இலங்கை இனவெறி அரசை எதிர்த்து இங்கே ஒரு சில எதிர்ப்பியக்கங்கள் நடந்து வருவதை சமூகநோக்கிலும் இஸ்லாமிய பார்வையிலும் வரவேற்பதைவிட்டு விட்டு ஓர் இனமே அழிந்து, மிச்சம் இருக்கும் மக்களும் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும்போது யாரை திருப்திப்படுத்த இந்த கட்டுரை?

மனிதகுலப் பேரழிவின் காரணகர்த்தா ராஜபக்சேவின் குரலாக உங்கள் குரலும் ஒலிக்கிறதே! என்ன வேதனை! அங்கே பாதிக்கப்பட்ட ஈழமக்களுக்காக இங்கு இருக்கும் முஸ்லீம் அமைப்புகள் குரல் கொடுத்தால் (எல்லா அமைப்புகளும், அனைத்து இஸ்லாமியர்களும் குரல்கொடுப்பதில்லை என்பது வெட்கமே) இலங்கை முஸ்லீம்களுக்கு எப்படி துரோகம் ஆகும்..? உணர்வு பத்திரிக்கை விளக்க வேண்டும்.

நீங்கள் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்ட தமிழக இஸ்லாமிய மக்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல.. 1,50,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டதை வரவேற்று முஸ்லீம்களைக் கொன்றதற்கு பலிவாங்கிவிட்டோம் என்று இங்கு இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லீம் மக்களும் ஆனந்தப்படவேண்டும் என்று கூறுகிறீர்களா? அதைத்தான் இறைவேதமும், நபிகள் நாயகமும்(ஸல்) கற்றுக்கொடுத்ததா?

நாங்கள் கற்றுக்கொண்டது எல்லாம் மனிதகுலம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். அவர்கள் நிறத்தால், மொழியால், இனத்தால் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்பது தான்.

நீங்கள் கூறுவது (சும்மாதானே?) போலும், திரு குரான் கூறுவது போலும் ஆதாமின் மக்கள்தான் அனைவரும் என்றால், ஈழத்தில் இனப் படுகொலையில் மாண்ட 1,50,000 மக்கள் யாருடைய மக்கள்? அவர்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா.? நீங்கள் மாற்றிப் பேசுகிறீர்களா? இல்லை குரானுக்கு மாற்றமாகப் பேசுகிறீர்களா?

இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்று பேசுபவர்களே..!

ஈழத்தில் என் சகோதரிகள், என் தாய்மார்கள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி நிர்வாண கோலத்தில் கொல்லப்பட்டதையும், குழந்தைகள், அப்பாவிமக்கள் கொல்லப்பட்டதையும், எம் இளையவர்களை நிர்வாணப்படுத்தி கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பின்மண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதையும் சேனல்4 தொலைகாட்சி ஒளிபரப்பியதே... இதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரும் பார்த்து கண்ணீர் வடிக்கும்போது உங்கள் கண்களை மட்டும் மறைத்தது எது..?

உணர்வு பத்திரிக்கை தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்ட கட்டுரையில் ஒரு புகைப்படம் உள்ளது (சுட்டி: http://issuu.com/qatartowheed/docs/unarvu_45)

அந்தப் புகைப்படத்தில் இலங்கை இனவெறி அரசின் அச்சாணியாக இருக்கும் புத்தமத இனவெறி சாமியார்களிடம், ஒப்பந்த கையெழுத்திடும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் உள்ளனர். (அப்படி என்றால் யாருடைய அரிப்பிற்கு இவர்கள் சொறிகிறார்கள் என்று இப்பொழுது நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறதா?)

மனிதகுல வரலாறு முழுவதுமே விடுதலைப்போராட்டங்கள் தீவிரவாதமென்றும், பயங்கரவாதமென்றும் தூற்றப்பட்டுத்தான் வருகிறது.

கட்டுரையாளர் கூறுகிறார்

"தங்கள் உடன் பிறந்த சகோதரர்களாய்ப் பழகிய இஸ்லாமிய சமுதாயத்தை கருப்புக் கண்ணாடி கொண்டு பார்த்தார்கள் விடுதலைப் புலிகள். தங்கள் போராட்டம் நியாயமானது என்றிருந்தால் அந்த போராட்டத்தில் முஸ்லீம்களும் கண்டிப்பாக பங்கெடுத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் போராட்டம் நியாயமானதாகவோ ஒரு கோரிக்கையை முன்னிருத்தியதாகவோ இருக்கவில்லை. தனி ஈழம் என்று அவர்கள் முன் வைத்த வாதம் கூட போலியானதுதான். ஒரு சிலரின் சுய விருப்பு வெறுப்புக்காக ஓராயிரம் தமிழ் சகோதரர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது.”

தமிழீழ போராட்டக் களத்தில் முஸ்லீம்கள் பங்குபெறவில்லை என்று பச்சைப் பொய் பேசும் நியாயவான்களே! ஈழ விடுதலைப் போராட்டத்தில் எத்தனை எத்தனை முஸ்லீம் போராளிகள், தளபதிகள் களப்பலியானார்கள் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? உங்கள் இனவெறி சிங்களக் கூட்டாளிகள் கோபித்துகொள்வார்கள் என்பதாலா.? ஈழப்போராட்டத்தில் என்ன நியாயமின்மையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்?

ஈழ விடுதலைப்போராட்டத்தில் முதல் முஸ்லீம் மாவீரர் லெப்.கேணல். ஜீனைதீன் ஆவார். அது போல பல ஆண்டுகள் அகிம்சை முறையில் போராடிய ஈழத்து காந்தி என்று போற்றப்படுகிற தந்தை செல்வா தலைமையில் சம உரிமை, அதிகாரப்பகிர்வு என்று சாத்வீகமாகத்தானே நடந்தது. சிங்கள அரசு அதை காதில் வாங்காமல் போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கினார்களே! தரப்படுத்துதல் என்ற கொள்கையில் தமிழ்மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதே! இப்படியான ஒடுக்குமுறைகளுக்கு பின்புதான் வரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இனி சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாது என்றும் தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு பின்பு தான் ஆயுதம் தாங்கிய போராட்டங்களும் நடந்தது என்ற வரலாற்றை கட்டுரையாளர் தமிழக இஸ்லாமிய மக்களுக்கு மறைத்த நோக்கம் என்ன?

உங்கள் அண்டப்புழுகுகளை ஏற்றுக்கொள்ள நீங்கள் மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் கூட்டம் அல்ல நாங்கள்.

1983 ஆண்டு ஜூலை கலவரத்தில் எத்தனை தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள்! இங்கே தமிழன் கறி விற்கப்படும் என்று போர்டு மாட்டிய கொடுமை எந்த நாட்டிலாவது நடந்தது உண்டா? பிஞ்சுக் குழந்தைகளை கொதிக்கும் தார் டின்னில் போட்ட கொடுமையைப் பற்றி எங்கள் தமிழக இஸ்லாமிய மக்களிடம் கூறும் நேர்மை உங்களிடம் உண்டா..?

செம்மணி புதைகுழிக்கும், கற்பழிக்கப்பட்ட எனது சகோதரிகளுக்கும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று வீடு திரும்பாத எனது சகோதரனை பிணமாகவாவது பார்ப்போமா என்று காத்திருக்கும் எனது அன்னைக்கும் என்ன பதில் கூறுகிறீர்கள்?

ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதன் நியாயத்தை புரிந்து கொண்டு நாட்டின் விடுதலைக்காய் ஆண்களும், பெண்களும் களப்பலியான வரலாற்றை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் கூட்டமே... சூரியனை கைகள் கொண்டு மறைக்கமுடியாது. வரலாற்றை படைப்பவர்கள் மக்கள்! உங்களின் பொய்களும் புரட்டுகளும் தொடர்ந்தால் வரலாற்றில் இருந்து மக்களால் தூக்கி எறியப்படுவீர்கள்.

ஐ.நா.சபை அமைத்த நிபுணர்குழு இலங்கையில் நடந்தது போர்க்குற்றமே என்று அறிக்கை கொடுத்துள்ள நிலையில், உலகம் முழுவதும் இலங்கை அரசுக்கு நெருக்கடி வந்த சூழ்நிலையில் தங்களது விசுவாசத்தைக் காட்டவும் தமிழகத்தில் ஈழத்தமிழ்மக்களுக்கு ஆதரவாக ராஜபக்சேவுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களை திசைதிருப்பவே மேற்கண்ட கட்டுரை என்பது நமக்குப் புரிகிறது. (பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதை இஸ்லாம் ஹராமாக்கிவிட்டதா.? என்ன ஒரு மனிதநேயம்!)

இலங்கை முஸ்லீம்களுக்கு புலிகள் அநீதி இழைத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக உலகமறிய நடந்த படுகொலைக்கு எதிராகப் போராடவேண்டாம் என்று இஸ்லாம் கூறுவதாக குரான், ஹதீஸ் ஒளியில் நிரூபிக்க நீங்கள் தயாரா?

நீங்கள் எழுதிய கட்டுரையும் அதை குதர்க்கமாக வெளியிட்ட உணர்வு பத்திரிக்கையும் இக்கட்டுரை மூலம் என்ன செய்தி சொல்லவருகிறது? இனப்படுகொலையை நாங்கள் ஆதரிக்கிறோம். தமிழக முஸ்லீம்களும் அமைப்புகளும் இனப்படுகொலையைப் பற்றி பேசக்கூடாது என்றுதானே அதன் அர்த்தம்.

அப்படிப் பேசினால் துரோகமென்றும், மார்க்கவிரோதிகளென்றும் தூற்றுவீர்கள். அன்று நடந்த சம்பவங்களுக்காக அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் மனிதநேயம் எல்லை கடந்து போய்விட்டது.

மேலும் அக்கட்டுரையில் தொடர்கிறது...

"இலங்கை முஸ்லீம்களுக்காக நாம் அறிந்த வகையில் பகிரங்கமாக போராடிய ஒரே இஸ்லாமிய அமைப்பு அப்போதைய தமுமுக. இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் அமைப்பாளர்கள் அன்றைய தமுமுகவின் அமைப்பாளர்களாக இருந்த நேரத்தில் இலங்கை முஸ்லீம்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார்கள். ஆனால் இன்றைய தமுமுகவினதும் தமிழக இஸ்லாமிய அமைப்புகளினதும் நிலை அதுவல்ல. இவர்களின் இன்றைய நிலையைப் பற்றி நினைக்கும்போது எந்த ஒரு இலங்கை முஸ்லிம் சகோதரனினாலும் தாங்கிக் கொள்ள முடியாது. ஓட்டுக்காக சொந்த சமுதாயத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாக இப்போதைய தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்”

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை எதிர்த்து ஒரு சிறு முணுமுணுப்பு கூட கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக, தங்கள் எஜமான விசுவாசத்தை காண்பிக்கிறார்கள்.

அன்பு இஸ்லாமிய உறவுகளே...

நம்மைப் பொருத்தவரையில் இலங்கை தமிழ்மக்களைப் பற்றியும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தை பற்றியும் இவர்களைப் போன்றவர்கள் தவறான தகவல்களைக் கூறி நம்மை முட்டாள்களாக்கியதோடு, இப்போது நம் சகோதர, சகோதரிகள் அநியாயமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக்கூட துரோகமென்கிறார்கள்.

2009 மே மாதம் நடந்த இறுதிப்போரிற்குப் பிறகு சர்வதேச அளவில் மக்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக அணிதிரண்டதின் ஒரு பகுதியாக தமிழகமே எழுச்சிகொண்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய சில இஸ்லாமிய அமைப்புகள் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்தார்கள். அவர்களில் மிக முக்கியமாக மேற்கண்ட குழப்பவாதிகளே எதிர்பார்க்காத அளவிற்கு த.மு.மு.க., மனித நேயமக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இஸ்லாமிய மனித நேயவாதிகள் வீதிக்குவந்தவுடன் தனிப்பட்ட முறையில் மேற்கண்ட அமைப்புகளை எதிர்க்க வேண்டுமென்பதற்காகவே எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமலேயே பிதற்றுகிறார்கள்.

மனித நேயமக்கள் கட்சியும், த.மு.மு.கவும், இந்திய தஹீத் ஜமாஅத்தும் ஈழத்தில் அப்பாவிமக்களும், பெண்களும், குழந்தைகளும் ஒரு அநீதியான போரில் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்று உணர்ந்து, போரில் அப்பாவிகள் நிராயுதபாணிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் என்றுமே ஆதரிக்காத ஒன்று என்ற இஸ்லாமிய அடிப்படையில் எழுச்சிமிகுபோராட்டங்கள் நடத்தினால், அம்மக்களுக்கு ஆதரவு கொடுத்தால் உங்களுக்கு எங்கே எரிகிறது?

நீங்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா..? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்...

நீதிமன்றத்தில் வழக்கு நிழுவையில் இருக்கும்போது எந்தநாட்டிலும் நடக்காத ஒரு அரசியல் கூத்தை தி.மு.க.வினர் நடத்தினார்கள். 'வாய்தாராணி' என்று ஜெயலலிதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தி.மு.க.வின் தற்போதைய தொங்கு சதையான (நாளை யாருடனோ) மேற்படி ஆட்கள் தங்கள் சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இருக்குமொரு பிரச்சனையை வீதிக்கு கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறவர்கள். தங்களது சொந்த சமுதாய மக்களுக்கு எதிராக துப்பாக்கி தூக்குபவர்கள் (ஏங்க பாய் முஸ்லீம்களுக்குள் பிரச்சனை வந்தால் குரான், ஹதிது அடிப்படையில் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பீர்களே எத்தனை ஜீம்மாபயானில் பேசி இருப்பீர்கள்..? ஊருக்குத்தான் உபதேசமா) இன்று ஈழமக்களுக்காக ம.ம.க.வும், தமு.மு.கவும் ஒரு கொடுமைக்கு எதிராக வீதிக்கு வந்ததை தாங்க முடியாமல் குய்யோமுய்யோ என்று கதறுகிறார்கள்.

எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று கூறிக்கொண்டே தேர்தலுக்கு தேர்தல் மாற்றி மாற்றி இவருக்கு ஆதரவு, அவருக்கு ஆதரவு என்று, இஸ்லாமிய மக்களே சென்னையில் கூடுங்கள், மதுரையில் கூடுங்கள், தஞ்சை திணறட்டும், மயிலாடுதுறை ஆடட்டும் என்று கூப்பிடுபவர்கள் நம்மை அடகு வைத்தவுடன் (அதாங்க தேர்தல்) நீ சுன்னத்ஜமாத், நாங்கள் வேறு ஜமாதென்று சொந்த சகோதரர்களுக்கு எதிராக இருக்கும் உங்களைவிட இந்தநாட்டில் இம் மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும், அனைத்து சமுக மக்களிடமும் நல்லுணர்வோடு இருக்கவேண்டும் என்றும், அரசியல் அதிகாரம் இல்லாத வஞ்சிக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்ற அடிப்படையிலும் சமுக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காய் அரசியல் களம் காணும் ம.ம.கவைப் பாராட்டுகிறோம்.

தங்கள் சொந்த சமுதாய நலன்களை மட்டும் பார்க்காமல் அனைத்து மக்களுக்காகவும் போராட வேண்டும் என்ற பரந்த சமூக நோக்கிற்காகவும், ஈழத்தில் நடந்து முடிந்த இனஒழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் த.மு.மு.க. மற்றும் ம.ம.கவை நாங்கள் மனதாரப் பாராட்டுகின்றோம்

உங்களைபோல எத்தனை பொய்யர்கள் வந்தாலும் இந்தப் போராட்டங்களை திசை திருப்பமுடியாது. சரி நீங்கள் ஈழத்தமிழனுக்குத் தான் எதிரானவர்கள். இந்தியத் தமிழன் எங்கள் தமிழக மீனவன் சிங்கள கடற்படையால் தினம் தினம் கொல்லப்படுகிறானே, அவனுக்கு ஆதரவாக நீங்களும் உங்கள் தமிழகத்து தலைமை ஏஜண்டுகளும் என்றாவது போராடியது உண்டா..?

உங்கள் சுயலாபத்திற்காக மட்டுமே வீதிக்கு வரும் நீங்கள், என் மீனவ சொந்தங்களுக்காக ம.ம.க. மற்றும் த.மு.மு.க. சகோதரர்கள் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தினால் துரோகம் என்பதா? மனித நேயமே இல்லாத நீங்கள் பாதிப்புக்கு உள்ளான இலங்கை தமிழ்மக்களுக்காகவும், தமிழக மீனவர்களுக்காகப் போராடும் ம.ம.க, த.மு.மு.க., மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் பற்றி விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை.

மேலும் கட்டுரையாளர் கூறுகிறார்...

“ஓட்டுக்காக சொந்த சமுதாயத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாக இப்போதைய தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.”

தமிழக இஸ்லாமிய அமைப்புகள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை எதிர்ப்பது சொந்த சமுதாயத்திற்கு எப்படி வேட்டு என்பதை கட்டுரையாளரும் உணர்வு பத்திரிக்கையும் விளக்கவேண்டும். நீங்கள்தான் அடிப்படை மனிதாபிமானம் இன்றி இருக்கிறீர்கள் என்பதற்காக ஒட்டுமொத்த சமுதாயம் அப்படி இருக்காது. இந்த நாட்டில் விலங்குகள் பாதிக்கப்பட்டாலே போராடுகிறார்களே, இலங்கையில் பாதிக்கப்பட்டது எங்கள் மனித உறவுகள் அல்லவா? சக மனிதன் துன்பப்படும்போது பார்த்துக் கொண்டிருப்பது மனிதமில்லை; நீங்கள் மனிதன் இல்லையா..?

முள்ளிவாய்க்காலின் துயரத்தை கட்டுரை எப்படி கொச்சைப்படுத்துகிறது?

"நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் விடுதலைத் தீவிரவாதிகளுக்காக பந்தி போட்டுத் திரியும் சீமானுடன் கூட்டணி. முள்ளிவாய்க்கால் பிரச்சினை என்ற பெயரில் புலி ஆதரவாளர்களுடன் கூட்டணி.”

யாரை தீவிரவாதி என்கிறீர்கள்? மக்கள் விடுதலைக்காக போராடும் போராளிகளை அரசுகளும், உங்களைப் போன்ற அடிவருடிகளும் தீவிரவாதிகள் எனலாம். இப்படி காட்டிக் கொடுத்து வாழ்வதை விட மக்கள் விடுதலைகாய் ஒருநாள் வாழ்ந்தாலும் அது தான் வாழ்க்கை என்போம். (ஏன் பாய் ஈழவிடுதலைப் போராட்டத்தை, போராளிகளை சிங்களவர்களோடு சேர்ந்து காட்டிக் கொடுத்தாக ஒரு பேச்சு உள்ளதே, காட்டிக் கொடுப்பவன் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றாலும் தப்புதானே..?)

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எப்பொழுதும் சிங்கள அரசுகளுக்கு அடிவருடியாகத்தானே இருந்து வருகிறது. என்றாவது தமிழர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தது உண்டா..? (ஏங்க பாய் நாங்க கேள்விப்பட்டது உண்மையா? ஈழமக்களை காட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும் கருணாவை சிங்கள அரசிடம் கூட்டிப் போய்விட்டது இலங்கையில் இருக்கும் ஒரு முஸ்லீம் முக்கியப் பிரமுகர்தான் என்பது..?)

தமிழகத்தில் அனைத்து மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி சிங்கள வெறிநாய்களால் குதறப்பட்ட அந்த மக்களுக்காகவும் போராடி வருகிறது அவர்களுடன் இணைந்து ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு எதிராகப் போராடுபவர்களை கொச்சைப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடும் நடந்த போர்க் குற்றத்தை எங்கே தமிழக முஸ்லீம்கள் புரிந்துகொண்டு ஒன்றுசேர்ந்து வீதிக்கு வந்து இலங்கை அரசுக்கு எதிராக போராடி விடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் நீங்கள் உங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டுவது எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டபோரில் ஒட்டுமொத்த தமிழ்ச்சசோதரர்களும், கொத்துக்குண்டுகளால், குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என்று குவியல் குவியலாக கொன்றுபோட்டதே சிங்கள ராணுவம்! பாதுகாப்பு வளையப்பகுதி என்று அதற்குள் வரச்சொல்லி பாதுகாப்பு வளையப்பகுதிமீது உலகளவில் தடை செய்யப்பட்ட ராசாயன குண்டுகள் போட்டு முள்ளிவாய்க்கால் பகுதியை சிங்களராணுவம் சுடுகாடாக்கியதே.. வெள்ளைக் கொடி ஏந்திவந்தவர்களை போர்மரபுகளை மீறி கொன்றுபோட்ட அநியாயம் நடந்ததே.. நீங்கள் கொச்சைப்படுத்துவதற்கு எங்கள் அப்பாவி தமிழ்ச்சகோதரர்கள் பிணங்கள் தான் கிடைத்ததா..?

முள்ளிவாய்கால் துயரம், மனிதநேயமே இல்லாத உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஏன் என்றால் ஒரு மனிதக்கூட்டத்தின் பெரும்பகுதிமக்கள் கொல்லப்பட்டதையும் அதற்கு எதிராக குரல்கொடுப்பதையும் துரோகம் என்று நினைக்கும் உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்..!

ஈழத்தில் அப்பாவி மக்களுக்காக போராடுகிறவர்களைப் பார்த்து இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம் என்பவர்களே… உங்களது தமிழகத்து தலைமை ஏஜண்டுகளிடம் சில கேள்விகள் நீங்கள் கேட்கவேண்டும்..?

“யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை” என்பது எங்கள் தமிழ்நாட்டு பழமொழி.

1997ம் ஆண்டு தமிழகத்து கோயமுத்தூரில் நடந்த இஸ்லாமிய மக்கள் மீது இந்துத்துவவாதிகளாலும், இன்றைக்கு இவர்கள் சொம்பு தூக்கிக்கொண்டிருக்கும் அன்றைக்கு ஆட்சியில் இருந்த தமிழகத்து கருணா(நிதி)யின் போலிசாலும் 19 அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்களே, அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதே இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதிகளென்று வீடு வீடாகப் புகுந்து கைதுசெய்யப்பட்டார்களே…

சோதனை என்ற பெயரில் படுக்கை அறைவரை கருணாநிதியின் போலீஸ் வெறியாட்டம் போட்டதே… பள்ளிவாசல் சோதனை, மதரஸாக்கள் சோதனை, சோதனைச்சாவடி என்று போர் நடக்கும் பகுதி போல் கோவையை வைத்திருந்த கருணா, கோகுலகிருஸ்ணன் கமிசன் என்ற தலையாட்டி கமிசனை அமைத்து அந்த கமிசன் மூலம் கலவரத்திற்குக் காரணம் முஸ்லீம்கள் தான் என்று அறிக்கை கொடுக்கச் சொன்ன கருணா...

இன்று வரை 19 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எவ்வித ஆறுதலும், நியாயமும் வழங்காத கருணா... பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்காத கருணா... அப்போது நடந்த தேர்தலில் 19 முஸ்லீம் ஜனாஸாக்கள் தாண்டியா கருணாவுக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட நீங்கள் இன்றும் கருணாநிதிக்கு சொம்பு தூக்கிக் கொண்டு இருப்பது கோவை முஸ்லீம்களுக்கு செய்யும் துரோகம் என்று வைத்துக்கொள்ளலாமா?

இந்த நாட்டில் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் கொஞ்சமா? முஸ்லீம்களுக்கு எதிராக பல இடங்களில் கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் தானே நடந்தது. இந்த காங்கிரஸ் களவாணிகள் ஆட்சியில் தானே 1992ல் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. எம் தமிழக மீனவர்கள் சிங்கள வெறிநாய்களால் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இந்த காங்கிரஸ் தானே.... அப்படிப்பட்ட காங்கிரசுக்கு தேர்தலில் ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்தது இந்திய முஸ்லீம்களுக்கு துரோகமா.? நன்மையா..?

முஸ்லீம்களுக்கு கருணாவும், காங்கிரசும் செய்த துரோகத்திற்காய் என்றாவது அவர்கள் வருந்தியதுண்டா..? எந்த வகையில் நீங்கள் அந்தக் கும்பலை ஆதரிக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா? உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ம.ம.கவையும், த.மு.மு.க. வையும் பற்றி பேசுவதற்கு? அவர்கள் மேல் எங்களுக்கு ஆயிரம் விமர்சனம் உண்டு ஆனால் உங்களைப்போல் மனிதாபிமானம் அற்றவர்கள் அல்ல...

இன்னும் கேளுங்கள் இந்த மரண வியாபாரிகளின் வாக்குமூலத்தை...

”கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளை அந்த யுத்தத்தை நிறுத்துவதின் மூலமாக புலித் தீவிரவாதிகளுக்கு உதவுவதற்கு திமுக முயன்ற நேரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பைத் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுயும் திமுகவுடன் கைகோர்த்தன”

அடப்பாவிகளா..!.

”இலங்கையில் கடுமையான யுத்தம் நடந்துகொண்டு இருந்தவேளை” என்று நீங்களே ஒப்புக்கொண்டு ஒரு சராசரி மனிதாபிமானம் கூட இல்லாமல் அந்த அநீதியான போரில் அப்பாவிமக்கள், பெண்கள், குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்களே என்ற சிறுமனிதாபிமானம் கூட இல்லாமல் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று பெருமையாக கூறிக்கொள்கிறீர்களே வெட்கமாக இல்லை.? நீங்கள் உண்மையான முஸ்லீம்கள் தானா.? (தி.மு.க போரை நிறுத்த ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை என்பது வேறு விசயம்)

உங்கள் வழிகாட்டி நபிகள் நாயகமா..? இல்லை இரத்தவெறியன் ராஜபக்சேவா..? நீங்கள் மனித நேயமார்க்கத்தை சேர்ந்தவர்கள் தானா..? உங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம்..!

தமிழகம் முழுவதும் மக்கள் அநீதியான போரை நிறுத்துங்கள், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்களே.. சர்வதேச சமுதாயமே..! மனிதாபிமானிகளே..! இலங்கையில் போரை நிறுத்த உதவுங்கள் என்று உண்மையான மனிதம் கொண்ட எங்கள் தமிழகத்து வீர மறவர்கள், இளையவர்கள், பெண்கள், ஏன் திருநங்கைகள் கூட வீதிக்கு வந்து ஈழ அப்பாவி மக்களுக்காக போராடினார்கள். எங்கள் தமிழகத்தில் இவனைப்போல் ஒரு அறிவிற்சிறந்த மாவீரன் இனி எப்பொழுது கிடைப்பான் என்று எங்களை ஏங்கவைக்கும் எங்கள் முத்துக்குமரன் உட்பட 19 பேர் தங்கள் தேக்குமர தேகத்தில் தீவைத்து மாண்டு போனார்கள்.

ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கூட போரை உடனே நிறுத்தக்கோரி தீக்குளித்து மாவீரன் ஆனார். ஆனால் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அந்த போரினால் 1,50,000 மக்கள் மாண்டு போக நீங்களும் காரணம் என்று இப்போழுது ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே என்ன வேதனை...

நாளை ஒரு நாள் உங்களுக்கு கேள்விக் கணக்கு என்று ஒன்று உண்டு என்றால்.... அந்த மக்களின் சாவுக்கு உங்களிடம் கேள்வி கேட்கப்படும்.... நடந்த அநீதியைப் பார்த்துக்கொண்டு இருந்தற்கும் கேள்வி கேட்கப்படும்.

கோவை முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது அதை தடுக்காத, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கும், பாபர் மசூதியை இடித்த பொழுது வேடிக்கை பார்த்து, அதன் விளைவாக கலவரங்களில், பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டு, பல பேர் ஆள்தூக்கி சட்டமான தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, முஸ்லீம்கள் தீவிரவாதிகளென்றும், பயங்கரவாதிகளென்றும் முத்திரை குத்தப்பட காரணமாயிருந்த காங்கிரஸ் களவாணிகளுக்கு நீங்கள் ஓட்டு கேட்டு போகவில்லையா?

இது எந்த வகைத்தந்திரம்..? தினம் தினம் எனது தமிழக மீனவன் கொல்லப்பட காரணமான சிங்களவனுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே இது எந்த வகை தந்திரம்...?

ஈழப் படுகொலைக்கு உதவிய இந்திய கொலைகார “கை”யுடன் நீங்கள் கூட்டுவைக்கும்போது விளிம்புநிலை மக்களுக்காக, தமிழக மக்களின் உரிமைகளுக்காக, சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டக்களத்தில் உள்ளவர்களுடன் கைகோர்ப்பதும், களம் காண்பதும் எங்கள் மனித உரிமைப்போராளிகள், இஸ்லாமிய அமைப்புகளின் மனித நேயக் கடமையே...

மனித நேயமே இல்லாமல் எம் ஈழமக்களின் ரத்தத்தினால் கரைபடிந்த உங்களை விட.... எங்கள் சகோதரர்கள் அவர்கள் மனிதம் எவ்வளவோ மேல்....!

இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்று பேசுபவர்களே...! எங்களின் கேள்விகளுக்கு நேர்மையான பதில் கூறமுடியுமா..?

ஈழத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை எதிர்ப்பது இஸ்லாமிய அடிப்படையில் குற்றமா?
ஈழத் தமிழ் மக்களுக்காக போராடினால் இலங்கை முஸ்லீம் மக்களுக்கு எப்படி துரோகம் ஆகும்..?
இலங்கையில் நடந்தது போர்க்குற்றமா இல்லையா..?
தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் அநீதியாக கொல்லப்படவில்லையா.?
உலகில் அநீதி எங்கு நடந்தாலும் எதிர்ப்பது நபிவழியா இல்லையா..?
நீங்கள் கூறியபடியே புலிகள்தானே தவறு செய்தார்கள் அதற்காக அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்படத்தான் வேண்டுமா?
இலங்கை முஸ்லீம்களின் பிரச்சினையை ஊறுகாயாக்க வேண்டாம். தமிழக அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் என்ற கட்டுரைக்கும், இலங்கை தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் என்ன சம்பந்தம்..?
டப்ளீன் மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது போர்க் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளதே?
ஜ.நா. அமைத்த நிபுணர்குழு இலங்கையில் நடந்தது போர்க் குற்றம் என்று அறிக்கை கொடுத்துள்ளதே?
இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, இன்னும் முள்வேலி முகாம்களில் அவதிப்பட்டு வரும் வேளையில் அவர்களுக்காக இஸ்லாமிய அமைப்புகள் போராடுவதினால் உங்களுக்கு என்ன பிரச்சனை?
அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களே..!

அண்டை வீட்டுக்காரனுக்காகவும் இரங்கும் நாம் பக்கத்தில் 18மைல் தொலைவில் நம் சகோதரர்கள் துடிதுடிக்க கொல்லப்பட்டார்களே மனிதநேயம்மிக்க எவரும் நடந்த போர்க்குற்றத்தைப் பார்த்து எதுவும் பேசவில்லை என்றால் நாம் மனிதர்கள்தானா..?

பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரக்கம் காட்டுவதைக் கூட பொறுத்து கொள்ளமுடியாத இவர்களா மார்க்க வழிகாட்டிகள்?

இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்." - திருக்குரான்: அத்தியாயம் 5 வசனம் 32

தமிழக இஸ்லாமிய மக்களே..!

பாதிக்கப்பட்ட நம் ஈழ தமிழ் சகோதரர்களுக்காக உறுதியாக குரல் கொடுப்போம்...! தமிழக மீனவர்கள் சிங்கள வெறிநாய்களால் கொல்லப்படுவதை கடுமையாக எதிர்ப்போம்..! அனைத்து சமூக மக்களோடும் அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடுவோம்..! தமிழகத்தின் உரிமைகளுக்காகப் போராடுவோம்..! மார்க்க உரிமைகளுக்காகப் போராடும் அதே வேளையில் அனைத்து மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் போராடுங்கள்! மார்க்கத்தின் பெயரால் நம்மை சுயநலவாதிகளாக்கும் மனிதநேயமே இல்லாதவர்களை புறக்கணியுங்கள்..! ஈழ தமிழ்மக்களுக்கு நம் உறுதியான ஆதரவை தெரிவிப்போம்.!

உலகில் மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் குரல்கொடுப்போம்..!

- உமர்கயான்.சே.
நன்றி:கீற்று