சிங்களப்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்களப்படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 பிப்ரவரி, 2017

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்!




தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்!
– உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு!

  இலங்கையின் சிங்களப் படையினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது.
  இலங்கைப் போரின்பொழுதும் அதன் பின்பும் தமிழ்ப் பெண்களைக் கைது செய்து, தடுத்து வைத்துப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் அவர்களிடம் மேலும் பாலியல் குற்றங்கள் பலவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படும் இலங்கைப் படை அலுவலர்கள் ஆறு பேரின் விவரங்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அளித்துள்ளது.
  இலங்கையில் தனித் தமிழீழம் கோரி நடைபெற்ற போரின்பொழுது அப்பொழுதைய இராசபச்சே அரசால் பல நூறாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்பொழுது தமிழினப் பெண்களை இலங்கைப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்துத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
  இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் சோகன்சுபர்கைத் (Johannesburg) தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு ‘தமிழ்ப் பெண்கள் இலங்கைப் படையினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தது உண்மைதான்!’ என உறுதி செய்துள்ளது!
  வவுனியா, புத்தளம் முதலான இடங்களில் பெண்களைக் கைது செய்து, அடைத்து வைத்து இலங்கைப் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ள படையினர் பற்றிய விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. முகாம்கள் இயங்கியதாகக் கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு கூறியுள்ளது.
  குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள படை அலுவலர்களில் படைத்துறைப் பணித் தலைவன் (Major) ஒருவனும் துணைநிலைப் படை அலுவலன் (இலெப்டினட்) ஒருவனும் அடக்கம். தாங்கள் பட்ட சித்திரவதைகள், கொடுமையான பாலியல் தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள பெண்கள் 55 பேர் தொடர்பான முழுமையான விவரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  இலங்கையின் முன்னாள் ஆட்சியாளன் அதிபர் இராசபச்சேவின் ஆட்சிக் காலத்தில் 48  பாலியல் வதை முகாம்களும், தற்போதைய சிறீசேனா ஆட்சியில் 7 பாலியல் வதை முகாம்களும் உருவாக்கப்பட்டுப், பெண்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
   இலங்கைப் படை திட்டமிட்டுப் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்க முடியாது என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
– நன்றி: மாலை மலர், பிப்பிரவரி 21, 2017

வியாழன், 3 அக்டோபர், 2013

தேர்தல் தோல்வியால் தமிழர்கள் மீது சிங்களப்படை தாக்குதல்

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது இராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கையர் தகவல்
இராமேசுவரம்: இலங்கையில், தமிழ் தேசிய கூட்டணி வெற்றியால், ஆத்திரமடைந்த சிங்கள ராணுவம், தமிழ் இளைஞர்களை கடத்தி தாக்குவதாக, தனுஷ்கோடி வந்த இலங்கை அகதி தெரிவித்தார்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை ரோந்து கப்பலில் சிக்காமல், இலங்கையை சேர்ந்த மர்ம படகில் வந்த மூவர், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில், இலங்கை தமிழர் ஒருவரை இறக்கி திரும்பினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, வல்வெட்டி துறையை சேர்ந்த, செல்வ கிருஷணன், 39, என்பதும், 1984ல், அகதியாக தமிழகம் வந்து, 2011ல், பாஸ்போர்ட் மூலம், இலங்கை சென்றதும், தற்போது அகதியாக தனுஷ்கோடி வந்ததும் தெரிந்தது.

செல்வகிருஷ்ணன் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த, வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணிக்கு, பிரசாரம் செய்த இளைஞர்களை, ராணுவ சி.ஐ.டி., பிரிவு, இரவோடு இரவாக கடத்திச் சென்று, சில நாள் வைத்து தாக்குகின்றனர். நானும் பிரசாரத்தில் ஈடுபட்டதால், ராணுவ சி.ஐ.டி., பிரிவினர், என்னை தேடி வந்தனர். உயிருக்கு பயந்து, மனைவி, குழந்தைகளை விட்டு, பேசாளை கடற்கரையில் இருந்த மீனவர் படகிற்கு, 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, தனுஷ்கோடி வந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.