akaramuthala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
akaramuthala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 செப்டம்பர், 2020

குவிகம் இலக்கிய வாசல், இணையவழிப் புத்தகச் சந்தை

 அகரமுதல


குவிகம் இலக்கிய வாசல்

இணையவழிப் புத்தகச் சந்தை

 

இணையவழிப் புத்தகச் சந்தைபற்றிப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் விளக்க ஒரு கூட்டம் புரட்டாசி 10, 2051 சனிக்கிழமை 26/09/2020 மாலை 6.30 – 7.30 அளவில்  நடைபெறும். இணையவழிச் சந்தையின் அமைப்பாளர்களே இந்தக் கூட்டத்தில் பேச இருக்கிறார்கள்.


நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ள படிவம்:

https://forms.gle/X9QMezT1mgnS3wLe7 

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! – ஆற்காடு க குமரன்

 அகரமுதல

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள்.  நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா?

எதையும் வெளிக்காட்டாமல் நான்.

உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன்.

என்னை வைத்து எல்லாரும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

வெற்றியையும் தோல்வியையும் இரண்டு விழிகளாகப் பாருங்கள். அதற்காக நீங்கள் உழைத்த உழைப்பு காட்சியாகத் தெரியும்.

அண்மைக் காலத்தில் நிறைய மாணவர்களின் தற்கொலைகள்.

இவர்கள் எல்லாம்  தோல்விக்காகத் துவண்டவர்கள் அல்லர். தோல்விப் பயத்தினால் தூக்கிட்டு மாய்ந்தவர்கள்.

அந்தப் பிஞ்சு குழந்தைகளுக்குள் தோல்விப் பயத்தைத் தூண்டியவர்கள் யார்?

பெற்றோர்களும் ஆசிரியர்களுமே குற்றவாளிகள்!

நான் சாதிக்க முடியாததை என் பிள்ளையிடம் திணித்து.  அவனைக் கொலை செய்த குற்றவாளி  நானே!

இன்றைய நிறைய சிக்கல்களுக்குக் காரணம் கருவம், பெருமிதம் (கெளரவம்), பொறாமை.

உறவுகளுக்குள்  பொறாமைஸ பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்ஸ

போதும் என்ற மனம் பொய்த்துப் போய் வெகு நாள் ஆனது.

கூட்டுக் குடும்பம் இல்லாமல் தனித்து நிற்பது. கூட்டுக் குடும்பத்தில் நமது பெரியவர்கள் நமக்கு நல்லதை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள்.

தனிக் குடித்தனத்தில் சொல்வதை எல்லாம் நல்லதுக்கு என்று மட்டும் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. அந்த நல்லவற்றிலும் சொல்பவருடைய தன்னலம் இருக்கிறது.

நான் பள்ளிக்கூடம் செல்லும் காலத்தில் எல்லாம் எனது பாடப்புத்தகத்தில் ஓர் எழுதுகோல் அதிகமாக இருந்தாலும்

ஏன் வந்தது எப்படி வந்தது என்று ஆயிரம் கேள்விகள் என் உறவுகளிடம் இருந்து வந்தன.

இன்று பையன் பள்ளியிலிருந்து திரும்பி வருவதே பல குடும்பப் பெண்களுக்குத் தெரிவதில்லை. காரணம் அவர்களுக்குப் பணிச்சுமை.

ஆயாம்மா வேலைக்கு  வரும் முன்பு

எசமானியம்மாள் வேலைக்குச் செல்கிறாள்.

பணம் பணம் பாழாய்ப்போன பணம்.

உதை படும் பந்துக்கு உள்ளிருப்பதும் காற்று! பந்து உருளுமிடமெங்கிலும் காற்று!

பொதுநுழைவுத் தேர்வு(நீட்டு), அரசாங்கத்தின் தவறாகவே இருந்தாலும் அதைத் திருத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  காரணம் அந்த அரசாங்கத்தை அமைத்தது நாமே!

ஆதார அட்டை

 என்னிடமிருந்த அடையாளத்தை எடுத்துப் பதிவு செய்து  எனக்கென்று கொடுத்த ஆதார அட்டையில் ஆயிரம் தவறுகள்.

அவற்றைத் திருத்துவதற்கு அரசாங்கமும் வருகிறது. திருத்திக்கொள்ள நம்மை அறிவுறுத்துகிறது. அதற்குக் கட்டணம் வேறு. தவறு செய்தது அரசாங்கம். தண்டனை எனக்கு. இன்னொரு பெரிய தவற்றையும் இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. ஏதாவது ஓர் உயிர் பலியா? உடனே துயர்நீக்கு நிதி!

வசைபாடும் பெற்றோரைப் பார்த்துக் கட்டாயமாக ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தைக்கும் நெஞ்சிலும் ஓர் எண்ணம் தோன்றும். காரணம் நானும் ஒரு பெற்றோர். என் மகனைத் தண்டத்துக்குப் படிக்க வைத்தேன் நாலு பன்றியை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.  எனது மகனுக்குக் கல்வி புகட்ட வேண்டியது எனது கடமை

அதைக் கற்றுத் தெளிவது அவனது திறமை. அவன் எந்தன் சார்பாளன். என்னைப் போலத் தான் என் மகனும் இருப்பான் என்பதை யாரும் உணர்வதில்லை.

செய்த செலவை சொல்லிக் காட்டி, சொல்லிக் காட்டி அவனைச் சித்திரவதை செய்யும் போது அவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றும். என் உயிர் இழப்பு, நீ செய்த செலவை ஈடுகட்டும் என்று. அரசாங்கத்தின் துயர்நீக்கு நிதி. தற்கொலைக்கான அடுத்த தூண்டுதல். மூன்றாவது தன்னல அரசியல்வாதிகள். ஒருவன் இருக்கும் போது எவனும் திரும்பிப் பார்ப்பதில்லை. இறந்த பிறகு அவன் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது. இந்தப் பரபரப்பும் தற்கொலைக்கு ஒரு காரணம்.

தோல்வியில் இருந்து பிறப்பதுதான் வெற்றி. ஆகையால் தோல்விக்கு வருந்தாதீர்கள். பெற்றோர்களே! உங்கள் கண்களில் கனவுகளைக் காணுங்கள். உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகளின் கண்களில் காணத் துடிக்காதீர்கள்! அவர்களுக்கு என்று ஒரு கனவு இருக்கும் அதைச் சாகடிக்காதீர்கள்.

யாரையும் குறை சொல்வதாக எண்ண வேண்டாம்.  நானும் இரு பிள்ளைகளுக்குத் தகப்பன்.

பிள்ளைகளின் கனவுகளுக்குக் காட்சியாய் இருப்பவன்.

தோல்வியில் துவளும் போது தோழனாக இருங்கள்! எதுவும் நிலையில்லை என்று எடுத்துச் சொல்லுங்கள்.

இவண்

ஆற்காடு க குமரன்

9789814114 

சனி, 19 செப்டம்பர், 2020

குவிகம் இணையவழி அளவளாவல் 20/09/2020: “என் ‘சிறு’கதை”

 அகரமுதல


புரட்டாசி 04, 2051/ 20.09.2020

ஞாயிறு மாலை 6.30

குவிகம் இணைய அளவளாவல்

கோமல் சுவாமிநாதனின் பறந்துபோன பக்கங்கள்

‘என் சிறுகதை’ நிகழ்வில் வாசிக்கப்பட்ட கதைகளில் மூன்று கதைகளைத் தெரிந்தெடுத்து இந்த நிகழ்வில் அறிவிக்க இருக்கிறோம்.  இந்தக் கருத்தையும் தெரிவித்து அன்பளிப்பாகப் புத்தகங்களையும் வழங்குபவர் நண்பர் செ.பாசுகரன்.   

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்     

 நிகழ்வில் இணைய

கூட்ட எண் / Meeting ID: 892 8863 4062

கடவுக்குறி / Passcode: 874978

பயன்படுத்தலாம் அல்லது

https://us02web.zoom.us/j/89288634062?pwd=SnlTazBnbkJtYU0vWkp4c0ROaFN5Zz09

இணைப்பைச் சொடுக்கலாம்.

 

புதன், 29 ஜூலை, 2020

திருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் – முழு விவரம் தருக.

அகரமுதல

திருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் –  முழு விவரம் தருக.

திருக்குறள் பரப்புப் பணிகள் குறித்த விவரங்களுக்காக உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு பத்திற்கு மேற்பட்ட பகிரிக் குழுக்களை அமைத்துள்ளார். அவற்றுள் திருக்குறள் சாதனைப்பதிவேட்டின் இயக்குநர்களாக முனைவர் கு.மோகனராசு அவர்களும் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகிய நானும் உள்ளோம்.
திருக்குறள் பரப்பல் ஆவணமாக்கும் முயற்சிக்காகப் பின்வரும்தகவல்கள்தேவைப்படுகின்றன. அவை, அருவினை அல்லது வரலாற்று நிகழ்வு அல்லது திருக்குறள் பணிகள் முதலான ஏதேனும் குழுவில் சேர்க்கப்படும். எனவே, நீங்கள் திருக்குறள் பரப்பல் தொண்டாக என்ன ஆற்றியிருந்தாலும் தெரிவிக்கலாம்.

  1. தங்கள் நாட்டில்/மாநிலத்தில்/பகுதியில் முதன் முதல் நடைபெற்ற திருக்குறள் மாநாடு/கருத்தரங்கம்/கூட்டம் நடத்தப்பட்ட நாளும் இடமும் சொற்பொழிவாளர் விவரமும்

  1. அவ்வாறு நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை முதலில் நடத்தியவர்/நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் தொடர்பான கட்டுரைப்போட்டி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் நாட்டியம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் நாடகம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் கலை நிகழ்ச்சி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் பட்டிமண்டபம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறளைப் பரப்பவும் திருவள்ளுவரைப் போற்றவும் மேற்கொண்டபணிகள்

  1. திருவள்ளுவர் அல்லது திருக்குறள் பெயரிலான அமைப்பு விவரங்கள்

  1. திருக்குறள் சொற்பொழிவாற்றிய உங்கள் நாட்டவர்

  1. திருக்குறள் சொற்பொழிவாற்றிய வெளி நாட்டவர்

  1. நீங்கள் / உங்கள் அமைப்பினர் ஆற்றிய திருக்குறள் தொண்டுகள்

  1. திருக்குறள் ்அல்லது திருவள்ளுவர் பெயரில் வழங்கப்பெற்ற விருதுகள் விவரம்

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் பெயரில் வழங்கப்பெற்ற பட்டங்கள் விவரம்

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் தொடர்பான ஆவணப்படம் எடுக்கப்பட்டிருப்பின் விவரம்

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் தொடர்பாக எழுதிய / வெளியிட்ட கட்டுரைகள்/நூல்கள் / மலர்கள் / இதழ்கள் விவரம்

  1. நீங்கள் வாழும் நாட்டு மொழியில் திருக்கறள் மொழிபெயர்ப்பு விவரம்
  2. ஆவணமாக்கக் கருதும் பிற விவரங்கள்
இவற்றை யெலலாம் கூடியவிரைவில் அனுப்பி வைக்குமாறும் தேவையான ஒளிப்படங்கள், செய்தி நறுக்குகள் இருப்பின் அவற்றையும் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
 நனி நன்றி.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –11 (01.08.2020)

அகரமுதல

ஆடி 17, 2051 / 01.08.2020 சனி

மாலை 5.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கூடலுரை : கவிஞர் விசயக்கிருட்டிணன்

“கம்பனில் மருத்துவம்”

தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன்
இணையத் தமிழ்க்கூடல் – 11
இணைப்பு
https://tinyurl.com/ybkpa3oj
பதிவுப்படிவம்
https://tinyurl.com/y443mdfj    
பின்னூட்டப் படிவம்
ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

வெள்ளி, 24 ஜூலை, 2020

குவிகம் இணையவழி அளவளாவல் 26.07.2020

அகரமுதல

ஆடி 11, 2051 / 26.07.2020

ஞாயிறு மாலை 6.30 

என் சிறுகதை 

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  
 
நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
 
நிகழ்வில் இணைய படத்தில் உள்ள கூட்ட எண் / meeting ID, கடவுச்சொல் / password பயன்படுத்தலாம் அல்லது 
https://us02web.zoom.us/j/83305569232?pwd=YWRKOE96Z1RmYjhaeTViai9QSzJPdz09   
இணைப்பைச் சொடுக்கலாம் .   

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –10

அகரமுதல

ஆடி 10, 2051 / 25.07.2020 சனி

மாலை 5.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கூடலுரை : கவிஞர் நா.முத்துநிலவன்

“இணையத்தில் வளரும் தமிழ்”

தலைமை முனைவர் .அன்புச்செழியன்
இணைப்பு
https://tinyurl.com/ybkpa3oj

பதிவுப்படிவம்
https://tinyurl.com/y525m3nk

பின்னூட்டப் படிவம்
https://tinyurl.com/y4jjdbqk
  ஒருங்கிணைப்பு முனைவர் சு.சோமசுந்தரி

சனி, 18 ஜூலை, 2020

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கம்

அகரமுதல

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியும்
ஆவடி எழில் இலக்கியப் பேரவையும்
இணைந்து நடத்தும் 3 நாள் இணைய வழிக் கருத்தரங்கம்
தலைப்பு: தற்கால இலக்கியச் சிந்தனைகள்
ஆடி 03-05, 2051 / 18.07.2020 முதல் 20.07.2020 வரை
நேரம்: நண்பகல் 11.00 – 12.30
நுழைவெண், கடவுச்சொல், கருத்தரங்க விவரம் அறிய அழைப்பிதழ் காண்க.