ஆந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 ஆகஸ்ட், 2013

ஆந்திரா: தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க - இராமதாசு

/

ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை த் தமிழகத்துடன் இணைக்க இராமதாசு கோரிக்கை

ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரா, கர்னாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.  தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் ஆகும். இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்களும், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.
மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திரத்தின் ஓர் அங்கமாகவே இருந்துவருகின்றன. தெலுங்கு பேசும் மக்களின் மாநிலமான ஆந்திரத்தில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால் இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இழந்த உரிமைகளும், அனுபவித்த துன்பங்களும்  எண்ணிலடங்காதவை. தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறி இவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள் என்ற போதிலும், இவர்களால் ஆந்திர சட்டப்பேரவைக்கோ, மக்களவைக்கோ தேர்ந்தெடுக்கப்பட முடியவில்லை. ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை இப்பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இயற்கைக்கு முரணாக ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டதால் இவர்கள் தங்களின் அரசியல் உரிமையையும் இழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட உள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் 200-க்கும் அதிகமான கிராமங்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. 75-க்கும் அதிகமான ஊராட்சிகள் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆந்திர அரசுக்கு அனுப்பியுள்ளன. ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் 700 கி.மீ தொலைவில் இருப்பதால், தங்களின் கோரிக்கைகள் குறித்து முறையிட அங்கு அடிக்கடி செல்ல முடியவில்லை- தமிழகத் தலைநகர் சென்னை 50 கி.மீ தொலைவில் இருப்பதால் தாங்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தால் தலைநகருக்கு எளிதில் சென்று கோரிக்கைகள் குறித்து முறையிட முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்ய இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, திருகாளஹஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர் உள்ளிட்ட 8 வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கோரிக்கையை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதன் முதல்கட்டமாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி , இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 6 மே, 2013

இலங்கை மீனவர்களுக்கு ஆந்திராவில் தரும அடி, உதை

இலங்கை மீனவர்களுக்கு ஆந்திராவில் தரும அடி, உதை
இலங்கை மீனவர்களுக்கு ஆந்திராவில் தர்ம அடி, உதை
ராஜமுந்திரி, மே 6-

ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி புகுந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக்காவல் படையால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் காக்கிநாடா மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் 11 பேரும், தும்முலாபேட்டையில் 2 காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். மின்சாரம் இல்லாத நேரத்தில், அவர்கள் அனைவரும் காற்று வாங்குவதற்காக வெளியே சென்று இருக்கிறார்கள்.

அப்போது, அவர்கள் அந்த ஊர் காரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த ஊர் காரர்கள் சேர்ந்து இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.

இதில் பலத்த காயமடைந்த இலங்கை மீனவர்களில் 3 பேர், மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக பிடிபட்ட மற்ற 14 இலங்கை மீனவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சனி, 17 நவம்பர், 2012

ஆந்திர, கேரள மீனவர்களால் தமிழக மீனவர்களுக்குச் சிக்கல் - முதல்வர்


சென்னை:"ஆந்திர மீனவர்கள், அவ்வப்போது, தமிழக மீனவர்களை சிறை பிடிக்கின்றனர். இப்படி, தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை, ஆந்திர மீனவர்கள் கைவிட வேண்டும்' என, தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெ., வலியுறுத்தி உள்ளதை, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் வாசித்தார்.’

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு, பெங்களூருவில், நேற்று நடந்தது.இதில், தமிழக முதல்வர் சார்பில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கேரள முதல்வர் சார்பில், அமைச்சர் மணி மற்றும், நான்கு மாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தென் மாநிலங்களின் மேம்பாடு, தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் பிரச்னை, சுற்றுலா வளர்ச்சி, சட்டம்-ஒழுங்கு, ஆள் கடத்தல் உள்ளிட்ட, பல்வேறு பல விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட்டன.கூட்டத்தில், தமிழக முதல்வரின் உரையை, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்தார். முதல்வர் கூறியிருப்பதை, பன்னீர் செல்வம் வாசித்ததாவது:

தமிழக மீனவர்கள், ஆந்திர ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்தால், ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்படுகின்றனர். பின், தமிழக மீனவர்களிடம், கணிசமான தொகையை பெற்று விடுவிக்கின்றனர்.கடந்த, 2007ல், அமைச்சர் அளவில் நடந்த கூட்டத்தில், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில், மீன் பிடிப்பதற்கு வசதியாக, மீன்பிடி உரிமம் வழங்க வேண்டும் என, விவாதிக்கப் பட்டது.ஆனால், இந்த விஷயத்தில், ஆந்திர அரசு எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளது. ஆந்திர மீனவர்கள், சட்டத்தை, தாங்களே கையில் எடுத்துக்கொள்ளும் போக்கை கைவிட வேண்டும்.

இதேபோல், கன்னியாகுமரி மீனவர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்தால், கேரள மீனவர்களால் தாக்குதல் நடத்தப்படுகிறது; படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. எனவே, மீனவர்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத அளவிற்கு, மீன்பிடி உரிமம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், மின் தேவை மற்றும் மின் உற்பத்திக்கு இடையே, பெரிய இடைவெளி உள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட கால இறுதியில் (2012-17), தமிழகத்தின் மின் தேவை, 18 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும். ஆனால், தற்போது, 8,500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதை கருத்தில்கொண்டு, மின்தேவையை பெருக்க, சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வரும், 2015க்குள், சூரிய ஒளி மின் உற்பத்தி வழியாக, 3,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் முதல் அணுமின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும், 1,000 மெகா வாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் உரையை பன்னீர்செல்வம் வாசித்தார்.

திங்கள், 30 நவம்பர், 2009

மீண்டும் வலுக்கிறது தெலங்கானா போராட்டம்: சந்திரசேகர் ராவ் கைது; இன்று பந்த்க்கு அழைப்பு



சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ. ஹரிஷ்ராவ் கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவரது ஆதரவாளர்களை
ஹைதராபாத்,நவ.29: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சித்திப்பேட்டில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக சந்திரசேகர் ராவ் அறிவித்திருந்தார். அதன்படி அவர், ஞாயிற்றுக்கிழமை காலை சித்திப்பேட்டுக்கு தனது கட்சியை சேர்ந்த மற்ற தலைவர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். கரீம்நகர் அருகில் அலக்கானூர் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது சந்திரசேகர் ராவின் காரை தடுத்து நிறுத்திய போலீஸôர், அவரையும், மற்ற தலைவர்களையும் கைது செய்து அழைத்து சென்றனர். சந்திரசேகர் ராவ் கைது செய்யப்பட்ட தகவல் ஆந்திரப் பிரதேசம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. இதையடுத்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் கொந்தளித்தனர். ÷ஆங்காங்கே அரசுப் பஸ்கள் மீதும், கடைகள் மீதும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.தெலங்கானா பகுதியில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களும் சந்திரசேகர் ராவ் கைதைக் கண்டித்து தீவிரப் போராட்டத்தில் குதித்தனர். ஹைதராபாதில் உள்ள ஓஸ்மேனியா பல்கலைக்கழக மாணவர்களும், வாரங்கலில் உள்ள ககதியா பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் இந்த இரு பல்கலைக்கழகத்திலும் போலீஸôர் குவிக்கப்பட்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது மாணவர்கள் சரமாரியாக கல்வீசித் தாக்குல் நடத்தினர். இதையடுத்து போலீஸôர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். சந்திரசேகர் ராவின் கைதை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். தெலங்கானா பகுதியில் திங்கள்கிழமை பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சந்திரசேகர் ராவ் கைது செய்யப்பட்டாலும், சித்திப்பேட்டையில் திட்டமிட்டதுபோல் சாகும் வரை உண்ணாவிரதத்தை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். சந்திரசேகர் ராவ் கைதுக்கு பின்னர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதால் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: தெலங்கானா பகுதி முழுவதும் நிலைமையை கட்டுக்குள் வைக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. போலீஸôர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் ராவ் கைது குறித்து தெலங்கானா ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவரும்,எம்எல்ஏவுமான ஹரீஷ் ராவ் கூறுகையில், நாட்டில் எத்தனையோ தலைவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் உள்பட பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியுள்ளனர். அதுபோலத்தான் எங்களது தலைவரும் போராட முயன்றார். அவரை ஏன் கைது செய்தார்கள் என்பது தெரியவில்லை. அவரை கைது செய்து எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இதை அரசு உடனே தெளிவுபடுத்த வேண்டும். எங்கள் தலைவரின் கைதை கண்டித்து தெலங்கானாமக்களை திங்கள்கிழமை பந்த் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

தமிழ் நாட்டில் சேர்த்திருக்க வேண்டிய திருப்பதி, சித்தூர் முதலான பல மாவட்டஙக்ளை ஆந்திரப்பகுதியில் சேர்த்ததால்தான் இச்சிக்கல். உடனே அப்பகுதிகளை மீண்டும் தமிழ் நாட்டில் சேர்த்து விட்டால் தெலுங்கானா அமைந்து விடும். தமிழ் நாட்டிற்கும் நீதி கிடைக்கும். எனவே, ஆந்திராவை இரு மாநிலங்களாகப் பிரிப்பதை விட தெலுங்கானா பகுதியை அளித்து விட்டு எஞ்சிய பகுதியைத் தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/30/2009 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
+++++++++++++++++++++++++++++++++++++++
இலக்குவனார் போன்றோர் தமிழ் என்ற போர்வையில் அலையும் மூட ஜென்மங்கள். அவர் எழுதுவதை பாருங்கள். எப்போது பார்த்தாலும் இந்திய தேசத்துக்கு எதிரான கருத்து தான். நமது தமிழ்நாட்டில் 40 சதம் பேர் தெலுங்கு பேசுகின்றனர். அவர்களை என்ன செய்வது? மொழிவாரி ராச்சியங்கள் என்பது இந்தியாவை துண்டாட வெள்ளையர்கள் போட்டு கொடுத்து போன ரூட் மேப். அதை சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் அதைத் தடுக்காததால் வந்த வினை இது. ஆரிய திராவிட வாதம் என்று வெள்ளையன் சொல்லி சென்றதை நண்பர் கார்த்தி எழுதியதை போல இந்தியாவை மண்டலங்களாக பிரிக்க வேண்டும். திரு கலாம் அவர்கள் கூட இந்தியாவை 4 பொருளாதார மண்டலங்களாக பிரிக்கலாம் என்று தான் கூறினார். எனவே, நாம் இந்தியர் என்ற உணர்வுடன் வாழ்ந்தால் அனைவருக்கும் நல்லது. அல்லது பிரிக்கப் பட்ட எருதுகளாக சீனாவுக்கும், பாக்குக்கும் பலியாக வேண்டியது தான்.
By ravikumar
11/30/2009 6:31:00 PM

திரு. பூபதி அவர்களே நீங்கள் கூறுவது போல இது ஆந்திரத்தின் உள் விவஹராம் என்று நமக்கு சிந்தனை வரகூடாது ....ஏனென்றால் இது நாளைய நமது பாரதத்திற்கு மிக மிக ஆபத்தானது !!!! ஒற்றுமையான இந்தியாவை விரும்புவோர் இப்படி சிந்திக்க கூடாது......... என் கருத்தில் எதுவும் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும் !!!!!!! கார்த்திக் குமார் கொச்சின் !!!

By KARTHIK KUMAR
11/30/2009 1:43:00 PM

நமது இந்தியா முன்னேர வேண்டுமானால் நமது அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது மேலைநாடுகளை போல குடியரசு தலைவர் அட்சி முறையை கொண்டு வரவேண்டும்.... சில நாட்களுக்கு முன் படித்த செய்தி அமெரிக்காவில் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கலாம் அதில் வரும் காலாங்களில் சீனா, பெரிய ராணுவபலம் கொண்ட நாடாகவும்,இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவும் வருமாம் ஆனால் இந்தியாவில் இன ரீதி, மாநிலங்கலக்கு இடையே பிரச்சினைகள் வருமாம் , அதனால் நம் நாட்டில் மாநிலங்களை குறைத்து மகாணங்கள் முறை கொண்டு வரவேண்டும் ....நாட்டில் மொத்தம் 3773 MLA , 543 MP, இத்தனை பேர்கள் இருந்து என்ன செய்தார்கள் ! இவர்களுக்கு நம் வரிப்பணம் எவ்வளவு விரயம் ...பல குறுநில மன்னர்களிடம் இருந்து நம்மை ஒரே இந்தியவாக்கி இப்போது பல மாநிலங்களாய் பிரித்தால் மேலும் நம்மால் ஒரு போதும் முன்னேறமுடியாது.....இன்று நம் மாநிலங்களிடையே உள்ள பிரச்சினைகள் போதும் இனியும் ஒரு மாநிலம் உருவாகி மேலும் பிரச்சினை வேண்டாம் !!!!! ஜெய் ஹிந்த்!!! வந்தேமாதரம் !!!!! கார்த்திக்குமார் கொச்சின்

By KARTHIK KUMAR
11/30/2009 1:35:00 PM

போதும் இலக்குவனாரே . தமிழக - ஆந்திர எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்ட ஒன்று.சித்தூர் & திருப்பதி ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவிற்கு தமிழர்கள் இருப்பது உண்மை என்றாலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது . அப்படி இருப்பின் திருப்பதியில் தமிழ் எம்.எல்.ஏ இருந்திருப்பார். மாறாக ஓசூர் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் தமிழ் , கன்னட எம்.எல்.ஏக்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். தெலுங்கானா என்பது ஆந்திரத்தின் உள்விவகாரம் . இதில் நாம் தலையிடுவது தேவையற்றது

By M.S.Boobathi
11/30/2009 1:01:00 PM

Very good Ilakkuvanar Thiruvalluvan. Dear congress man is it (INDIA) a democretic country. See the photo, They r police or Government Paid GUNDAS. Even British government not treated our people like this. Long Live Indian Democrasy .

By Subash
11/30/2009 11:31:00 AM