முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஜனவரி, 2017

பேரா.மறைமலை இலக்குவனார்க்குத் திரு.வி.க. விருதினை முதல்வர் வழங்கினார்.

அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

 

பேரா.மறைமலை இலக்குவனார்க்குத்

திரு.வி.க. விருதினை முதல்வர்  வழங்கினார்.

தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள்  விழா  சென்னையில், தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 அன்று நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதுபோழ்து, தமிழ்த்தென்றல் திருவிக விருதினைப் பேரா.மறைமலை இலக்குவனார்க்கு முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
 
[படங்களை அழுத்தின் பெரிய அளவில் காணலாம்.]


வியாழன், 17 அக்டோபர், 2013

பொதுநல அமைப்பு : தலைமையருக்கு முதல்வர் மடல்

பொதுநல அமைப்பு :  தலைமையருக்கு முதல்வர் மடல்







இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
 இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும்.
தமிழகம் சார்பில் அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்புகளும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து விட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிம் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக உறுதியோடு அறிவிக்க வேண்டும்  என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

முதல்வர் கொலை: நல்வழிக் கல்விமுறை தேவை - இராமதாசு

பொறியியல் கல்லூரி முதல்வர் கொலை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறை தேவை-  இராமதாசு அறிக்கை
என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் கொலை: மாணவர்களை நல்வழிப்படுத்தும் கல்விமுறை தேவை- ராமதாஸ் அறிக்கை
சென்னை, அக். 11–
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே குழந்தை இயேசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுரேஷ் அதே கல்லூரியில் பயிலும் மாணவர்களால் கொடூரமான முறையில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியையும், வேதனையும், துயரத்தையும் அளிக்கிறது.
கல்லூரியில் ஒழுங்கீனமாகவும், மாணவிகளிடம் தகாத முறையிலும் நடந்து கொண்ட ஒரு மாணவர் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவர் தமது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இந்தக் கொடூர செயலை நிகழ்த்தியிருக்கிறார்.
முதல்வர் சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட விதம் பற்றி ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கும்போது, திரைப்படங்களில் வரும் வன்முறை மற்றும் கொலைக் காட்சிகள் இந்த மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களை தங்களின் கடவுளாக மாணவர்கள் மதித்து வந்த நிலை மாறி, ஆசிரியர்களையே படுகொலை செய்திருக்கும் நிலை உருவாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழகமும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும்.
நல்லொழுக்கத்தை கற்றுத் தரும் நோக்கம் கொண்டதாக இருந்த கல்வி முறை, அதிக மதிப்பெண்களை எடுத்தால் போதும் என்ற நோக்கம் கொண்ட எந்திரத் தனமானதாக மாறியது தான் இந்த சீரழிவுக்கு முதன்மைக் காரணமாகும்.
தற்போதுள்ள பெரும் பாலான கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்து வதில்லை. அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் ஏற்படுத்துதல், மாணவர்களின் பிரச்சினைகளை அறிந்து, அவர்களுக்கு ஆலோசனைகளையும், ஆறுதல்களையும் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கிய கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்துடன், மதுக்கடைகளை மூடவும், போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக, தங்களின் பெற்றோர் கனவையும், நாட்டின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய கடமை தங்களுக்கு இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட மாணவர் சமுதாயம் முன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.இராசலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர் உத்தரவு

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.இராசலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர்  உத்தரவு

தென்னிந்தியாவின் முதல் நடிகை மற்றும் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 19-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 1911-ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. தனது இளமைக்காலம் முதலே நாடக்குழுவில் நடித்து வந்த ராஜலட்சுமி, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "பவளக்கொடி', "கோவலன்' ஆகிய நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றார். தனது 18-ஆம் வயதில்  "கோவலன்' என்னும் திரைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதன் முதலாக கால் பதித்தார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜம் டாக்கீஸ் என்ற தனது சொந்த பட நிறுவனம் மூலம் "மிஸ் கமலா' என்ற திரைப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
தன்னுடன் திரைப்படங்களில் நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகாலம் திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கிய இவர் 1964- ஆம் ஆண்டு காலமானார். ஒரு நடிகையாக மட்டுமின்றி இயக்குநர், எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் டி.பி.ராஜலட்சுமிக்கு செப்டம்பர் 19-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

திருமண நிகழ்ச்சியில் முதல்வர் சொன்ன கதை

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் சொன்ன சுண்டெலி க் கதை








சென்னையில் இன்று அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.
அதிமுக சார்பில், இன்று தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு - பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான கே.பி. சிவசுப்ரமணியத்தின் மகள் சிவரஞ்சனிக்கும் நடைபெற்ற திருமணத்தையும் தமிழக முதல்வர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற திருமணங்களை நடத்தி வைத்து ஆற்றிய சிறப்புரையில், இங்கு நடைபெறுவது கழகக் குடும்பங்களின் விழா. பல்வேறு கடமைகளுக்கும், பணிச் சுமைகளுக்கும் நடுவே உங்களை எல்லாம் இப்படி ஒரே இடத்தில் காண்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு திருமணம் நடைபெற்ற இரண்டு ஜோடி மணமக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
அறநெறிப்படி வாழ்பவர் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம். சாதகம், பாதகம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்களே வரக் கூடாது என்று நினைப்பது கோழைத்தனம். துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வது தான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப் பலனை நாம் உணர முடியும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி.
ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை?” என்று வினவினார்.
“என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்” என்றது பூனை.
உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, அந்த நாய் வந்து ஞானியின் முன் நின்றது “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று நாயிடம் கேட்டார் ஞானி. “புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்”, என்றது நாய்.
ஞானி, நாயை புலியாக மாற்றினார்.
சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, “இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள்” என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.
சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் ஞானி. “எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடை மறித்த ஞானி, “சுண்டெலியே! உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு!” என்று கூறிவிட்டார் அந்த ஞானி.
ஆக, உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியவை உடலைக் கூனாக்கி, உள்ளத்தை மண்ணாக்கி விடும்.
ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார். இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானனிடம் சென்று, “ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.
இதற்குப் பதில் அளித்த விவசாயி, “பானையே நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா? அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, தீய சக்தியை திக்குமுக்காடச் செய்து இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர்  எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நான் சந்திக்காத சோதனைகளா? என்னை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த எத்தனை சதித் திட்டங்கள் தீய சக்தியால் தீட்டப்பட்டன? எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டன? எத்தனை மிரட்டல்கள்? எத்தனை உருட்டல்கள்? இவற்றையெல்லாம் துணிச்சலுடன் நான் எதிர்கொண்டதால் தான், மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறேன்.
முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்தால் எந்தப் பிரச்சனையையும், நீங்கள் சமாளித்து விடலாம். இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள், “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா”, என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டு; அனைத்து இன்ப துன்பங்களிலும் ஒருங்கிணைந்து; பெற்றோர், சுற்றத்தார் நல்லறம் காத்து; நாடும், வீடும் சிறக்கப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! என மனதார வாழ்த்துகிறேன்.
திசை மாறிப் போய்க் கொண்டிருக்கும் தேசத்தை நல்வழிப்படுத்த நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, அரசியல் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் எனது அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள் எல்லாம் களப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள், நாற்பதையும் நாமே வெல்வோம் என்று கூறி உரையை முடித்தார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(9)

அருமையான இதயம் கனிந்த பொருள் நிறைந்த பேச்சு. புரட்சி தலைவி அவர்கள் என்றும் வாழ்க வளமுடன். மேடை கிடைத்தால் இடம் பொருள் ஏவல் அறியாமல் பேசும் அறிவிலிகளுக்கு இதை கேட்ட பிறகாவது புத்தி வரவேண்டும். நாகரீகத்தை அம்மாவிடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்,
\\\\ நாகரீகத்தை அம்மாவிடம் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், //// எந்த நாகரிகத்தை? ஆடிடரைக் காலணியால் தாக்கிய நாகரிகத்தையா? சு.சுவாமியைத் தன் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்தார் என்ற காரணத்திற்காக "ஆளுநர் (சென்னா ரெட்டி) என்னிடம் தவறாக நடந்து கொண்டார்" என்று கதைத்த நாகரிகத்தையா? நம் வீட்டுப் பெண்களுக்கு இந்த நாகரிகம் வேணாம் சாமி .....
அன்பரே ரவிசங்கரா ! அவனவன் கரண்டு இல்லாம மீண்டும் செயற்கை மின்வெட்டு வந்துருச்சே அப்படினும் ! இந்த அம்மா 2 வருசமா ஒருதிட்டதையும் தொடங்காம ஏன் ஒரு 1000 மெகாவாட் சூரிய உற்பத்தி திட்டம் இன்னும் அறிவிப்பு நிலையிலேயே இருக்கு ஆனா அய்யாவையே குறை சொல்லி ஒட்டியாச்சு ! அப்படிங்குற கடுப்புல இருக்குறப்ப இப்படி கருத்து எழுதி வயித்து எரிச்சல கொட்டிக்காதீங்க !
super
Good, excellent and meaningful speach
பரவாயில்லை காணொளி மூலம் நடத்தி வைக்காமல் நேரில் சென்றாரே ! அது சரி மேடம் அந்த கதை எல்லாம் இருக்கட்டும் !அனைத்து நீர் நிலைகள் நிரம்பியுள்ள இந்த கால கட்டத்திலும் அனல் மின்நிலையங்கள் சிறப்பாக செயல்படும் நிலையில் இருந்தும் இந்த செயற்கை மின்தடை ஏன் ?/பெங்களூர் வழக்கில் முதல்வரின் பிடி தளர்வதால் வந்த விரக்தி யால் 1000 மெகா வாட் வெளிமாநில மின்சார கொள்முதல் நிறுத்த பட்டதால் மீண்டும் இந்த செயற்கை மின்வெட்டு என்று அனைவராலும் சொல்ல படுகின்றதே அந்த கதை உண்மையா !
அம்மான்னா அம்மாதான் ...கொழ கொழ பேச்சு,விஷயம் இல்லாமல் நறுக்கு தெரித்தார் போல் சிந்தனை முத்துக்கள் ..நன்றிகள் பல ...

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம் : முதல்வர்

இதைவிட  ஒப்பு நோக்கில், வாடகை ஊர்திகளின் கட்டணம் குறைவாகவே உள்ளது. அழைப்பூர்திகளை வாடகைக்கு அமர்த்தும் பொழுது 5 நிமையத்திற்கு உரூ.4 வீதம், மணிக்கு 48 உரூ. மட்டும் வாங்குகின்றனர்.

பொதுவாக இக்கட்டண விகிதத்தைப் பின்பற்றினாலே ஊர்திகள் வசதி வாய்ப்பின் அடிப்படையில் குறைவாக உள்ளமையால், கை வண்டி, குதிரை  வண்டிகளை ஒழித்ததுபோல்  மிதியூர்திகளை  ஒழித்து விட்டு ஊர்தி வசதிகளையே ஏற்படுத்தித் தரலாம்.  அல்லது ஒருவருக்கு ஒன்றுக்குமேல் மிதியூர்தி உரிமம் தருவதில்லை என அரசு கடைப்பிடித்தால், இப்பொழுது வரையறுத்துள்ளதைவிடக் குறைந்த கட்டணத்திலேயே வாடகை மிதியூர்திகள் கிடைக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



++++++++++

சென்னையில் மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம்  நடைமுறை: முதல்வர் உத்தரவு


சென்னையில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25 எனவும், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட கட்டண விகிதம் ஞாயிற்றுக்கிழமையே (ஆக.25) அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண விகிதத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் உள்ள 77 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் ஜி.பி.எஸ். வசதி, டிஜிட்டல் பிரிண்ட்டருடன் கூடிய மீட்டர்கள் ரூ.80 கோடியில் இலவசமாகப் பொருத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீத கட்டணத்தை இரவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். காத்திருப்புக் கட்டணம் 5 நிமிஷங்களுக்கு ரூ.3.50 என்ற வீதத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சென்னை நகரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோக்களுக்கான கட்டணம் 2007-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.
எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பல மடங்கு உயர்ந்துவிட்டதால் இந்தக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆட்டோக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணங்களையும் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 10-ல் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஆக.22-ம் தேதி நடைபற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதத்துக்குப் பிறகு பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை செப்டம்பர் 15-க்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது அந்த அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
பயணிகளுக்கு ரசீது: சென்னையில் இயங்கி வரும் ஆட்டோக்களில் இடத்தைக் காட்டும் கருவிகள், அதாவது, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் பிரிண்ட்டர்கள் பொருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர்கள் ரூ.80 கோடி செலவில் இலவசமாகப் பொருத்தப்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமில்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதிசெய்யப்படும். மேலும், ஆட்டோக்களின் இயக்ககங்களின் கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படும்.
ஆபத்துகால பட்டன்: ஆட்டோ மீட்டரில் புதிய பட்டனும் பொருத்தப்படும். ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால், ஆட்டோ மீட்டருடன் பட்டனை (டஹய்ண்ஸ்ரீ ஆன்ற்ற்ர்ய்) பயணிகள் அழுத்தலாம். இதன்மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்து, அதனடிப்படையில் காவல்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், வாகன அனுமதி ரத்து: ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் தீவிரமாகக் கண்காணிக்கும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இதுதவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமில்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.
பொதுவான புகார் எண்: ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
புதிய கட்டண விவரம்...
முதல் 1.8 கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.25 - ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் இரவுக் கட்டணமாக கூடுதலாக 50 சதவீதத்தைச் செலுத்த வேண்டும்.
காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ரூ.3.50-- ஒரு மணி நேரத்துக்கு ரூ.42
புதிய கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்.15 வரை அவகாசம்.
ஆட்டோ பயணிகளுக்கான பொதுவான புகார் தொலைபேசி எண் உருவாக்கப்படும்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஆதி த் திராவிடக் கிறித்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க முதல்வர் மடல்

கிறித்துவச் சமயத்திற்கு மாறிக் கொண்டு ஆனால், முறைப்படி தெரிவிக்காமல் இந்துக்களுக்குரிய சலுகைகளைப் பெறுபவர்கள்,  பட்டியல் சாதியில் சேர்க்கப்பட்டால், இனி, வெளிப்படையாகவே சமய மாற்றத்தை அறிவிப்பர். இதனால்  சமயமாற்றம் பெருகும். பண்பாடு  சீரழியும். நமக்குத் தேவை சமயச்சார்பற்ற நாடும், அனைத்துப் பிரிவினரும் சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து நன்மைகளையும் பெறுவதுமே! இறைநெறியாளர்களும் பகுத்தறிவுடன் திகழும் வகையில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும்.  சாதி, சமயமற்றோர் பிரிவை உண்டாக்கி அவர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.  எனவே, சமயமாற்றத்தாருக்கு எவ்வகை முன்னுரிமையும் அளிக்கக்கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

 

ஆதி த் திராவிட க் கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டோர்  பட்டியலில் சேர்க்கக் கோரி முதல்வர் கடிதம்

First Published : 09 August 2013 10:26 AM IST
ஆதி திராவிட கிறிஸ்தவர்களை எஸ்.சி./எஸ்.டி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆதி திராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கடந்த 1995ஆம் ஆண்டே நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதேக் கோரிக்கையை தான் தற்போதும் வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும்  ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது எஸ்சி பிரிவில் இந்து, சிக்கிம், புத்த சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, ஆதி திராவிட கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இது குறித்த மசோதா தற்போது நடந்து வரும் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஆதி திராவிட கிறிஸ்தவர்கள், எஸ்.சி. பிரிவினருக்கு தமிழக அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற முடியும்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

கருத்துகள்(6)

ஆதி திராவிடர்கள் தங்கள் ஜாதி வெளியே தெரிய கூடாது என்பதற்காக கிருஸ்துவ மதத்தில் சேர்கிறார்கள். பதவி, படிப்பு இவைகளில் இட ஒதிக்கீடு மற்றும் சலுகைகளை அனுபவிக்க மட்டும் தன் ஜாதியை பயன் படுத்துகிறார்கள். உண்மையான இந்து தலித் இட ஒதிக்கிட்டு பயன் கிடைக்காமல் போகும். மேலும் இது தலித்களை மதம் மாற்ற சில அந்நிய சக்திக்கு வசதியாக போகும். மதம் மாறிய அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களையும் OC பட்டியலில் சேர்க்கவேண்டும். SC/ST கோட்டாவை குறைத்து அதில் இருந்து எடுத்ததை OC கோட்டாவில் சேர்க்கவேண்டும்.
இந்து மதத்தை விட்டு மாறிய , மக்களுக்கு s/c பட்டியலில் சேர்பது தவறு ! தாத்தா கூட இந்த தவறை செய்யவில்லை , தன் ஆட்சியில் !
கிருத்துவ மதத்தில் தான் சாதி கிடையாதே! அவர்கள் இந்து மதத்திற்குத் திரும்பித் தங்கள் சாதிகளைச் சொல்லிச் சலுகைகள் பெறட்டுமே! இறைவழிபாடு மனம் தொடர்பானது தானே!
இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்கு ஜாதி கொடுமைகளும் , சலுகைகளும் மட்டும் காரணமில்லை.ஜாதி கொடுமைகள் மட்டும்தான் காரணம் என்றால் இன்று இந்துவில் எந்த தாழ்த்தப்பட்டவர்களும் இருக்கமாட்டார்கள். எப்படி ஒவ்வொரு மதமும் இந்தியாவில் பரவும் போது அந்த மக்களால் தழுவப்பட்டதோ அது மாதிரிதான் கிறிஸ்தவ மதமும் ஏற்கப்பட்டது. ஆனால் இந்துவிலிருந்து முஸ்லிம் மதமோ இல்லை மற்ற மற்ற மதத்திற்கு மாறும்போது இந்துவிலிருந்த ஜாதியும், அடையாளமும் அழிந்துவிடுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போது இந்த ஜாதியும் அடையாளமும் அழிவதில்லை. கிறிஸ்தவ மதம் உலகம் முழுவதும் தழுவப்பட்டாலும் அந்தந்த நாட்டின் காலாச்சரத்திற்கு உட்பட்டே தழுவப்படுகிறது. இன்று வரை கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ பள்ளர் என்றும் கிறிஸ்தவ பறையர் என்றும்தான் ஜாதி சான்றிதழ் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கிராமங்களில், இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் அதனால் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றல்லாம் யாரும் பார்ப்பதில்லை.
கூடவே கூடாது... ஆதிதிராவிடர்,தாழ்த்தப்பொர் பிரிவு இந்து மதத்தில் உள்ள பிரிவினரே. இந்து மதமே வேண்டாம் என தூக்கி எறிந்து ஓடியவர்கள் எப்படி இந்து மதத்தில் உள்ள ஒரு பிரிவாக தாழ்தப்பட்டோர் பிரிவில் மட்டும் சலுகைக்காக மட்டும் பயனபடுத்திக்கொள்ள அனுமதிப்பது தவறு. தாழ்த்தப்பட்டொர் என்பது இழிவு என்றுதான் மதம் மாறினார்கள். பிறகு சலுகை என்றால் மட்டும் அந்த இந்து மதம் தேவைபடுகிறதோ?

iyaa கருணாநிதி கூட செய்யகூடாத காரியத்தை அம்மா செய்து இந்து மதத்தை அவமதித்து கொண்டிருக்கிறார்