சனி, 30 ஏப்ரல், 2011

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க.வினர் கைது

வாழ்க உங்கள் முயற்சி! பரவுக உங்கள் உணர்வு! வெல்க உங்கள் நோக்கம்! குற்றவாளிகள் அனைவரும தண்டிக்கப்படட்டும்!  ஆனால், காங்.ஆட்சி மாறினால்தான் இது கைகூடும் என்பதை எண்ணி ச் செயல்படுக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: பா.ஜ.க.வினர் கைது
First Published : 30 Apr 2011 02:51:27 AM IST

இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் எதிரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மா
சென்னை, ஏப். 29: போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சுமத்திய இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்த 60-க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.  இலங்கையில் நடைபெற்ற போரில் அங்கு இனப்படுகொலைகள் நடைபெற்றதாகவும், போர்க்குற்றங்கள் புரிந்ததாகவும் ஐ.நா. விசாரணைக் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதனால் இலங்கை அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக பாஜக இளைஞர் அணி அறிவித்திருந்தது.  இதன்படி, பாஜக இளைஞர் அணி பொதுச்செயலாளர் பாலகணபதி, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தமிழிசை சொளந்தர்ராஜன் உள்பட அக்கட்சியினர் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கை தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை கூடினர். இலங்கை அதிபர் ராஜபட்சவை கண்டித்து அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். சிலர் ராஜபட்ச உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீஸôர் தடுத்துவிட்டனர்.  பிறகு இலங்கை துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக அவர்கள் சென்றனர். தூதரகத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸôர் அவர்களை தடுத்தனர். இதனால் போலீஸôருக்கும், பாஜகவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸôரின் பாதுகாப்பையும் மீறி பாஜகவினர் சிலர் தூதரகத்தை நோக்கிச் சென்றனர். இதையடுத்து, போலீஸôர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்தனர். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  

1 கருத்து: