ஞாயிறு, 2 ஜனவரி, 2011

rocket attack by america in pakistan: பாகிசுதானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலூ

அதிகார வெறியால் எந்த அரசு கொலை புரிந்தாலும் குற்றம் குற்றமே! பழங்குடி மக்களே மண்ணின் மைந்தர்கள். அவ்வாறிருக்க அவர்களை ஏவுகணைத்தாக்கிக் கொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களின் உள்ளங்களைக்  கொள்ளையடிக்காமல் உயிர்களைக்  கொள்ளயைடித்து என்ன பயன்? அமெரிக்கா திருந்தினால்  ஏவல் நாடுகளும் திருந்தும். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் 14 பேர் பலி

பெஷாவர், ஜன.1: வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாகிஸ்தானின் பழங்குடிகள் நிறைந்த வடமேற்குப் பகுதிகளில் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பின் மேற்பார்வையில் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் இந்தத் தாக்குதல்களில் பயங்கரவாதிகள் மட்டுமன்றி அப்பாவிகள் பலரும் பலியாகின்றனர்.நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது எனக் கூறி இந்தத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசும் எதிர்க்கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆனாலும், ஏவுகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு ரகசியமாக அளிக்கும் ஆதரவே இந்தத் தாக்குதல்கள் தொடர்வதற்குக் காரணம் என்கிற சந்தேகமும் நிலவுகிறது.இன்று நடந்த முதல் ஏவுகணைத் தாக்குதல் ஒரு வாகனத்தைக் குறிவைத்து நடந்தது. இதில் அந்த வாகனம் நொறுங்கி 9 பேர் பலியானார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் கிடந்த சடலங்களை எடுப்பதற்காக சிலர் கூடியபோது மற்றொரு ஏவுகணை அவர்களைத் தாக்கியது. அதில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கொல்லப்பட்டவர்களின் விவரங்கள் பற்றி உடனடியாக எந்தத் தகவலும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக