ஞாயிறு, 2 ஜனவரி, 2011

Free supply will continue: ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்: முதல்வர் கருணாநிதி

நலத்திட்டங்களுக்குப் பாராட்டுகள். எனினும், ஏழைகள்  இருக்கும் வரை இலவசம் தொடரும் என்பதை நிலையாக ஆக்காமல் இலவசம் பெற யாரும் இல்லை என்னும்படி எல்லார்க்கும் எல்லாம் கிடைப்பதான , இல்லாமை இல்லாமல் போகும்படியான, ஏழைகளற்ற மன்பதையை உருவாக்குவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஏழைகள் இருக்கும்வரை இலவசம் தொடரும்: முதல்வர் கருணாநிதி

சென்னை பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் இலவச பொங்கல் பொருள்களை பயனாளி ஒருவருக்கு வழங்குகிறார் முதல்வர் கருணாநிதி. உடன் பல்லாவரம் நகராட்சித்
தாம்பரம், ஜன. 1: ஏழைகள் இருக்கும்வரை இலவச உதவிகள் தொடரும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.சென்னை பல்லாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், இலவச பொங்கல் பொருள்கள் வழங்கும் திட்டம், இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்து அவர் பேசியது:உலகம் முழுவதும் ஜனவரி முதல் நாள் வருடப் பிறப்பு நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி பேசும் மக்களுக்கென தனித்தனி வருடப்பிறப்பு நாள்கள் உள்ளன.ஆனால், தமிழர்களுக்கு அட்சய ஆண்டு முதல் பிரபவ ஆண்டுவரை 60 ஆண்டுகள் நிறைவடைந்து, மீண்டும் அட்சய ஆண்டு தொடங்குவது குழப்பமாக உள்ளது. இது தமிழ் ஆண்டை திட்டவட்டமாகக் கூறக்கூடிய கணக்காக இல்லை.வீடுதோறும் விளக்கேற்றுங்கள்: எனவே, நம் மூதாதையர்கள், முன்னோர்கள், நம்மை ஆளாக்கியவர்கள், அடையாளம் காட்டியவர்கள் ஒன்றுகூடி முடிவு செய்த தை முதல் நாளை, தமிழர்களாகிய நாம், தமிழ் கலாசாரத்தைப் போற்றுகிறவர்களாகிய நாம், தமிழர் வருடப் பிறப்பு நாளாக, தமிழர் திருநாளாக, வீடுகளில் அகல் விளக்கேற்றி கொண்டாடி மகிழ வேண்டும்.தைத் திருநாளில் அனைவரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று அரசு சார்பில் பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இலவசம் என்பது சிலருக்கு இழிவான சொல்லாகக் கருதப்படுகிறது. எல்லாம் இலவசமாக வழங்கப்படுகிறதே, இது என்ன பொருளாதாரம் என்றுகூட சில பத்திரிகைகள் கேலி செய்கின்றன.ஆனால், பத்திரிகைகளும் இலவச இணைப்புகளை வெளியிடுகின்றன. இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும்வரை இது போன்ற இலவச உதவிகளை வழங்கிக்கொண்டே இருப்போம்.1990-ல் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு | 256 கோடி செலவில் 1 கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேஷ்டிகளும், 3 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் சேலைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.இந்தத் திட்டத்தின் மூலம் 221 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 11 ஆயிரம் நெசவாளர்களும், 121 விசைத்தறி நெசவாளர் சங்கங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் நெசவாளர்களும் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைந்துள்ளனர் என்றார் முதல்வர் மு.கருணாநிதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வருவாய்த் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலர் எஸ்.மாலதி, பல்லாவரம் நகர்மன்றத் தலைவர் இ.கருணாநிதி, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் ஸ்வரண்சிங், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் டி. யசோதா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக