medicine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
medicine லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 மார்ச், 2012

Medicinal plant cultivation in school :பள்ளியில் மூலிகைச் செடி வளர்ப்பு : ஆர்வமூட்டும் தலைமை ஆசிரியர்



ஈரோடு : ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பல்வேறு மூலிகைச் செடிகள் அமைத்து, அதன் பெயர், பலன்களையும் தெளிவுபடுத்தி, மாணவர்களிடையே ஆர்வத்தை வளர்க்கின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம் கூறியதாவது: பள்ளி வளாகத்தை தூய்மையாக, பசுமையாக வைத்திருக்கவும், மாணவர்களிடையே அறிவுத்திறனை வளர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளியின் நுழைவுப்பகுதியில் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழக முதல்வர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் போன்றோரின் படங்கள், பெயர் போன்றவை வைக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்க்கும் மாணவர்களுக்கு, தங்களுக்கு முன்னோடியாக ஒருவரை நினைத்து செயல்பட யோசனை ஏற்படும். பொது அறிவும் வளரும். அதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியின் நடுப்பகுதியில் பல்வேறு வகை மூலிகைச்செடிகள் வைக்கப்பட்டு, செடியின் சாதாரண பெயர், தாவரவியல் பெயர், அதன் பலனையும் எழுதி வைத்துள்ளோம். இங்கு தண்ணீர் விட்டு, குப்பை சேர்க்காமல், பசுமையாக பராமரிக்கிறோம்.
இங்கு நீரிழிவை குணப்படுத்தும் இன்சுலின் செடி, சிறுகுறிஞ்சி, வல்லாரை, சங்குப்பூ, காசரளி, கற்றாழை, கற்ப்பூரவல்லி போன்ற பல செடிகள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, இங்கு வந்து செல்பவர்கள், குறிப்பிட்ட செடிகள் தங்களுக்கு தேவை என்றால், எங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் அச்செடிகளை வீட்டில் வளர்க்கவும் வாங்கிக் கொடுக்கிறோம்.
இதனால், மூலிகை செடி மற்றும் செடிகள் வளர்ப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதுடன், அதுபோன்ற செடிகள் அழியாமல் காக்கப்படுகிறது. பல்வேறு பள்ளிகளில் பல்வேறு நல்ல பழக்கங்கள் ஊக்கப்படுத்துவதுபோல, இங்கு பொது அறிவு, செடிகள் வளர்ப்பு, மூலிகை செடிகளின் பலன்கள் போன்றவற்றை மாணவர்கள் அறியச் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

The Nobel Prize in Physiology or Medicine 2011 : மருத்துவம்: 3அறிவியலாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு


மருத்துவம்: 
3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

First Published : 04 Oct 2011 02:32:25 AM IST


ஸ்டாக்ஹோம், அக். 3: மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதில் ஒருவர் அண்மையில் இறந்துவிட்டார்.  இதற்கான அறிவிப்பை நோபல் பரிசு தேர்வுக் குழு திங்கள்கிழமை அறிவித்தது.  அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பியூட்லர், லக்சம்பர்கைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாஃப்மன் ஆகிய இருவருக்கு பாதியும், கனடாவைச் சேர்ந்த ரால்ஃப் ஸ்டெய்ன்மனுக்கு பாதியும் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.  மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை தூண்டிவிடும் முக்கியக் கொள்கைகளை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்து அது பற்றிய தெளிவான புரிதலுக்கு வழிவகுத்திருப்பதாக நோபல் பரிசுக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் (முடக்கு வாதம்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை பாராட்டியிருக்கிறது.  நோய்த் தொற்றுகள், புற்றுநோய், வீக்க நோய்கள் போன்றவற்றுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் உதவும்.  நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ம் ஆண்டில் பிறந்தார். வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார்.  டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். தனது கடைசி உயில் மூலம் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.  ÷அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் சுவீடனிலும் வழங்கப்படுகின்றன.  ÷இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா  ரூ. 7.25 கோடி.    எதிர்ப்பு சக்தி குறைவு, ருமாட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் (முடக்கு வாதம்), ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளது  புரூஸ் பியூட்லர்  அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1957-ம் ஆண்டு பிறந்த இவர்,1981-ம் ஆண்டில் மருத்துவத்துறையில் எம்.டி. பட்டம் பெற்றார். தற்போது கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஷா பரிசு, வில் ரோஜர்ஸ் பரிசு, பால்சன் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை இவர் ஏற்கெனவே பெற்றிருக்கிறார்.  ஜூல்ஸ் ஹாஃப்மன்  1941-ம் ஆண்டு லக்சம்பர்க் நாட்டில் பிறந்த இவர் பிரெஞ்சு நாட்டுக் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் அறிவியல் அகாதெமியின் தலைவராக உள்ளார். உயிரியலிலும் வேதியியலிலும் பட்டம் பெற்ற இவர் 1969-ம் ஆண்டு ஸ்டிராஸ்போர்க் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. படிப்பை முடித்தார். பிரான்ஸ் நாட்டின் பல்வேறு கல்விக்கழகங்களில் பதவி வகித்திருக்கிறார். ஐரோப்பிய மூலக்கூறு உயிரியியல் அமைப்பிலும் பணியாற்றியிருக்கிறார். பரிசு அறிவிப்புக்கு முன் விஞ்ஞானி மரணம் ரால்ஃப் ஸ்டெய்ன்மன்  1943-ம் ஆண்டு கனடாவில் பிறந்த ஸ்டெய்ன்மன், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மருத்துவத் துறையில் டென்டிரிடிக் செல்கள் என்கிற சொல்லை அறிமுகப்படுத்தியது இவர்தான். ஹார்வர்டு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர்.  நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெய்ன்மன் அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார். இவர் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இறந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  பொதுவாக மரணத்துக்குப் பின் யாருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஆனாலும் பரிசுக்குத் தேர்வு செய்யும்போது ஸ்டெய்ன்மன் இறந்த விவரம் நோபல் கமிட்டிக்குத் தெரியாது என்பதால் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Prize category:

The Nobel Prize in Physiology or Medicine 2011

Bruce A. Beutler, Jules A. Hoffmann, Ralph M. Steinman

Nobel Assembly logo
English
English (pdf)
Swedish
Swedish (pdf)

Press Release

2011-10-03
The Nobel Assembly at Karolinska Institutet has today decided that

The Nobel Prize in Physiology or Medicine 2011
shall be divided, with one half jointly to
Bruce A. Beutler and Jules A. Hoffmann
for their discoveries concerning the activation of innate immunity
and the other half to
Ralph M. Steinman
for his discovery of the dendritic cell and its role in adaptive immunity

 

Summary

This year's Nobel Laureates have revolutionized our understanding of the immune system by discovering key principles for its activation.
Scientists have long been searching for the gatekeepers of the immune response by which man and other animals defend themselves against attack by bacteria and other microorganisms. Bruce Beutler and Jules Hoffmann discovered receptor proteins that can recognize such microorganisms and activate innate immunity, the first step in the body's immune response. Ralph Steinman discovered the dendritic cells of the immune system and their unique capacity to activate and regulate adaptive immunity, the later stage of the immune response during which microorganisms are cleared from the body.
The discoveries of the three Nobel Laureates have revealed how the innate and adaptive phases of the immune response are activated and thereby provided novel insights into disease mechanisms. Their work has opened up new avenues for the development of prevention and therapy against infections, cancer, and inflammatory diseases.

Two lines of defense in the immune system

We live in a dangerous world. Pathogenic microorganisms (bacteria, virus, fungi, and parasites) threaten us continuously but we are equipped with powerful defense mechanisms (please see image below). The first line of defense, innate immunity, can destroy invading microorganisms and trigger inflammation that contributes to blocking their assault. If microorganisms break through this defense line, adaptive immunity is called into action. With its T and B cells, it produces antibodies and killer cells that destroy infected cells. After successfully combating the infectious assault, our adaptive immune system maintains an immunologic memory that allows a more rapid and powerful mobilization of defense forces next time the same microorganism attacks. These two defense lines of the immune system provide good protection against infections but they also pose a risk. If the activation threshold is too low, or if endogenous molecules can activate the system, inflammatory disease may follow.
The components of the immune system have been identified step by step during the 20th century. Thanks to a series of discoveries awarded the Nobel Prize, we know, for instance, how antibodies are constructed and how T cells recognize foreign substances. However, until the work of Beutler, Hoffmann and Steinman, the mechanisms triggering the activation of innate immunity and mediating the communication between innate and adaptive immunity remained enigmatic.

Discovering the sensors of innate immunity

Jules Hoffmann made his pioneering discovery in 1996, when he and his co-workers investigated how fruit flies combat infections. They had access to flies with mutations in several different genes including Toll, a gene previously found to be involved in embryonal development by Christiane Nüsslein-Volhard (Nobel Prize 1995). When Hoffmann infected his fruit flies with bacteria or fungi, he discovered that Toll mutants died because they could not mount an effective defense. He was also able to conclude that the product of the Toll gene was involved in sensing pathogenic microorganisms and Toll activation was needed for successful defense against them.
Bruce Beutler was searching for a receptor that could bind the bacterial product, lipopolysaccharide (LPS), which can cause septic shock, a life threatening condition that involves overstimulation of the immune system. In 1998, Beutler and his colleagues discovered that mice resistant to LPS had a mutation in a gene that was quite similar to the Toll gene of the fruit fly. This Toll-like receptor (TLR) turned out to be the elusive LPS receptor. When it binds LPS, signals are activated that cause inflammation and, when LPS doses are excessive, septic shock. These findings showed that mammals and fruit flies use similar molecules to activate innate immunity when encountering pathogenic microorganisms. The sensors of innate immunity had finally been discovered.
The discoveries of Hoffmann and Beutler triggered an explosion of research in innate immunity. Around a dozen different TLRs have now been identified in humans and mice. Each one of them recognizes certain types of molecules common in microorganisms. Individuals with certain mutations in these receptors carry an increased risk of infections while other genetic variants of TLR are associated with an increased risk for chronic inflammatory diseases.

A new cell type that controls adaptive immunity

Ralph Steinman discovered, in 1973, a new cell type that he called the dendritic cell. He speculated that it could be important in the immune system and went on to test whether dendritic cells could activate T cells, a cell type that has a key role in adaptive immunity and develops an immunologic memory against many different substances. In cell culture experiments, he showed that the presence of dendritic cells resulted in vivid responses of T cells to such substances. These findings were initially met with skepticism but subsequent work by Steinman demonstrated that dendritic cells have a unique capacity to activate T cells.
Further studies by Steinman and other scientists went on to address the question of how the adaptive immune system decides whether or not it should be activated when encountering various substances. Signals arising from the innate immune response and sensed by dendritic cells were shown to control T cell activation. This makes it possible for the immune system to react towards pathogenic microorganisms while avoiding an attack on the body's own endogenous molecules.

From fundamental research to medical use

The discoveries that are awarded the 2011 Nobel Prize have provided novel insights into the activation and regulation of our immune system. They have made possible the development of new methods for preventing and treating disease, for instance with improved vaccines against infections and in attempts to stimulate the immune system to attack tumors. These discoveries also help us understand why the immune system can attack our own tissues, thus providing clues for novel treatment of inflammatory diseases.

 

Bruce A. Beutler was born in 1957 in Chicago, USA. He received his MD from the University of Chicago in 1981 and has worked as a scientist at Rockefeller University in New York, at UT Southwestern Medical Center in Dallas, where he discovered the LPS receptor, and the Scripps Research Institute in La Jolla, CA. Very recently, he rejoined the University of Texas Southwestern Medical Center in Dallas as professor in its Center for the Genetics of Host Defense.
Jules A. Hoffmann was born in Echternach, Luxembourg in 1941. He studied at the University of Strasbourg in France, where he obtained his PhD in 1969. After postdoctoral training at the University of Marburg, Germany, he returned to Strasbourg, where he headed a research laboratory from 1974 to 2009. He has also served as director of the Institute for Molecular Cell Biology in Strasbourg and during 2007-2008 as President of the French National Academy of Sciences.
Ralph M. Steinman was born in 1943 in Montreal, Canada, where he studied biology and chemistry at McGill University. After studying medicine at Harvard Medical School in Boston, MA, USA, he received his MD in 1968. He was affiliated with Rockefeller University in New York since 1970, where he was professor of immunology from 1988. Sadly, Ralph Steinman passed away before the news of his Nobel Prize reached him.


Key publications:

Poltorak A, He X, Smirnova I, Liu MY, Van Huffel C, Du X, Birdwell D, Alejos E, Silva M, Galanos C, Freudenberg M, Ricciardi-Castagnoli P, Layton B, Beutler B. Defective LPS signaling in C3H/HeJ and C57BL/10ScCr mice: Mutations in Tlr4 gene. Science 1998;282:2085-2088.
Lemaitre B, Nicolas E, Michaut L, Reichhart JM, Hoffmann JA. The dorsoventral regulatory gene cassette spätzle/Toll/cactus controls the potent antifungal response in drosophila adults. Cell 1996;86:973-983.
Steinman RM, Cohn ZA. Identification of a novel cell type in peripheral lymphoid organs of mice. J Exp Med 1973;137:1142-1162.
Steinman RM, Witmer MD. Lymphoid dendritic cells are potent stimulators of the primary mixed leukocyte reaction in mice. Proc Natl Acad Sci USA 1978;75:5132-5136.
Schuler G, Steinman RM. Murine epidermal Langerhans cells mature into potent immunostimulatory dendritic cells in vitro. J Exp Med 1985;161:526-546.

illustration High resolution image (pdf 3,6 Mb) 

The Nobel Assembly, consisting of 50 professors at Karolinska Institutet, awards the Nobel Prize in Physiology or Medicine. Its Nobel Committee evaluates the nominations. Since 1901 the Nobel Prize has been awarded to scientists who have made the most important discoveries for the benefit of mankind.
Nobel Prize® is the registered trademark of the Nobel Foundation

செவ்வாய், 4 அக்டோபர், 2011

Nobel prize for medical : மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

First Published : 03 Oct 2011 08:17:06 PM IST


ஸ்டாக்ஹோம், அக்.3: இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு அமெரிக்கரான ப்ரூஸ் பட்லர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூல்ஸ் ஹாப்மேன், கனடா நாட்டின் ரால்ப் ஸ்டெயின்மென் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.மனித உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ஆய்வு முடிவுகளை அளித்ததற்காக இவர்கள் மூவருக்கும் இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
 
 


சனி, 8 ஜனவரி, 2011

not included the name of tamil maruthuvam: மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: தமிழக அரசு அறிவிப்பு


இந்தியா என்ற பெயரில் தமிழ் பல இடங்களில் அழிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவம் என்று சொல்லாமல் இந்திய மருத்துவம் என்று சொல்வது தவறு. பல்கலைக்கழகத்தின் பெயரில் தமிழ் மருத்துவம் என்பது இடம் பெற வேண்டும் அதுபோல் மத்திய அரசின் விளம்பரங்களில் மாற்று மருத்துவமாக ஓமியோபதி மட்டுமே குறிக்கப்படுகின்றது. தமிழ் மருத்துவத்தையும் குறிப்பிடச் செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
தமிழகம்
மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: தமிழக அரசு அறிவிப்பு


13-வது சட்டப் பேரவையின் 15-வது கூட்டத் தொடரை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து உரையாற்றும் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா.
சென்னை, ஜன. 7: கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  13-வது சட்டப்பேரவையின் 15-வது கூட்டத் தொடரை ஆளுநர் பர்னாலா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். முன்னதாக, அதிமுக, மதிமுக, இடதுசாரிக் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  "மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி' என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.  இதன்மூலம், தகுதியுடைய மருத்துவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.  இந்திய மருத்துவ,  ஹோமியோபதி பல்கலைக்கழகம்  சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான மருத்துவக் கல்லூரிகளை அரசே நடத்தி வருகிறது. பாரம்பரியம்மிக்க இந்திய மருத்துவத்தையும், ஹோமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க, இப்போதுள்ள 6 அரசு இந்திய மருத்துவ, ஹோமியோபதி கல்லூரிகளையும், 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி இந்திய மருத்துவ, ஹோமியோபதி பல்கலைக்கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும் என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.  புதிய கல்லூரிகள்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி, தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தருமபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 5 இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டத்தினர் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூரில் புதிதாக விவசாயக் கல்லூரி தொடங்கப்படும்.  தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்  வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும் தோட்டக்கலைக்காக தனியே, "தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்' கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.  80 ஆயிரம் மாணவர்கள்  முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான தொழிற்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 80,450 மாணவர்கள் இந்த ஆண்டு பயன்பெற்றுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிற முக்கியத் திட்டங்கள்  கிராமப்புறங்களில் மட்டுமல்லாது நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.  மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஓசூரில் 1100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ. 450 கோடியில் சிறப்புத் திட்டம் வகுக்கப்படும் என்று ஆளுநர் தனது உரையில் கூறினார்.  சென்னையில் அறிவியல் பெருநகரம் அமைக்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக மூலக்கடை-திருமங்கலம், மூலக்கடை-திருவான்மியூர், லஸ்-ஐய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.    ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள்:   *  கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.  *  நகர்ப்புற ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் திட்டம்.  அரசின் விருப்புரிமையில் வீடுகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ரத்து.   *  பஞ்சமி நில மீட்பு குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க முடிவு.   *  நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுத்திட சிறப்புத் திட்டம்.   *  பச்சிளம் குழந்தைகளுக்காக ரூ.10 கோடியில் தீவிர அவசர சிகிச்சைத் திட்டம்   *  கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம்.   *  சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, ஒசூரில் 1,100 ஏக்கரில் குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு குடியிருப்புகள், மனைகள் உருவாக்கத் திட்டம்.   *  சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நிலத்தடி நீரைச் செறிவூட்ட சிறப்புத் திட்டம்.   *  சத்துணவுத் திட்டத்தில் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த முடிவு.   *  சுற்றுலா மையங்களை அழகுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ.450 கோடியில் சிறப்புத் திட்டம்.   *  கள்ளக்குறிச்சி, நெம்மேலி, நாகலாபுரம், அரூர், திருச்சுழி ஆகிய இடங்களில் புதிதாக கலை, அறிவியல் கல்லூரிகள்.   *  நாகை மாவட்டம் கீழ்வேளூரில் விவசாயக் கல்லூரி.   *  சென்னையில், மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - ஐயப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை புதிய பாதைகளில் மெட்ரோ ரயில் விடுவது குறித்து திட்ட ஆய்வு.

புதன், 21 ஏப்ரல், 2010

காலாவதி மருந்து குறித்து கூறியது என்ன? முதல்வர் விளக்கம்



சென்னை, ஏப். 20: காலாவதி மருந்து குறித்து நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி பழி போடுவதாக முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் ஆகியோர், காலாவதி மருந்தால் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஆனால், காலாவதி மருந்தால் பாதிப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது டாக்டர்களின் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது என்றனர்.
அவர்களுக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியது:
காலாவதி மருந்துகளைவிட போலி மருந்துகள்தான் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி, ஏதோ முதல்வர் காலாவதி மருந்துகளால் யாருக்கும் ஆபத்தில்லை என்று தவறாக சொன்னதாக சில நண்பர்கள் இங்கு (சட்டப் பேரவை) மட்டுமல்ல, வெளியிலும் கட்சிப் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்விதமான நன்மையும், தீமையும் இல்லாமல் காலாவதி மருந்து பயன்படாமல் போகிறது. ஒரு நோயாளிக்கு அந்த மருந்தைக் கொடுத்தால், கொடுக்கப்படாத மருந்தைக் கொடுத்ததாக ஆகிவிடும் என்றுதான் இந்த அவையில் விளக்கம் அளித்துள்ளேன். வேண்டுமானால் நான் அளித்த விளக்கத்தை மீண்டும் படித்து பார்த்துக் கொள்ளலாம். காலாவதி மருந்தைவிட போலி மருந்துகள் ஆபத்தானவை என்பதற்காகத்தான் இதனை சொல்ல வந்தேன்.
காலாவதி மருந்துகள் விற்கப்படுவதால் சிலர் பிழைக்கிறார்கள். ஏமாற்றி வாழ்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டவுடன் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், அமைச்சர் ஆகியோரை அழைத்து, ஆராய்ந்து அன்றைக்கு நான் இட்ட உத்தரவினால்தான் இன்று பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவசரப்பட்டு வேண்டுமென்றே என் மீது அபவாதம் கூற வேண்டுமென்று எண்ணுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைவரும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேறு கட்சிக்காரர்கள் என்றால், நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன். எதையும் துல்லியமாக ஆராய்ந்து, அதைப் பற்றிச் சொல்லக் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியே இப்படிப்பட்ட மகத்தான தவறை, பழியை என் மீது போடுமேயானால், அதற்காக நான் மிக மிக வருந்துகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்): காலாவதி மருந்துகளும் உயிரைக் குடிக்கும் என்றுதான் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பேசினார். மற்றபடி எவ்வித அரசியல் நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றார். அத்துடன் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.


பயன்கெடு முடிந்த மருந்தை உட்கொள்ளுவதால் தீமை எதுவும் விளையாது என்று சொல்வதும் தவறே. மருந்தாகச் செயல்படாத ஒன்றை உட்கொள்ளுவதும் உடல் நலனுக்கு ஊறு விளைவிப்பதே. தீமை விளைவிக்கும ஒன்றைத் தீமை யல்லாதது எனச் சொல்வதன் மூலம் அதனை வழங்குவோர் குற்றமற்றவர் எனக் கூறுவதாகத்தானே பொருள். தான் தவறாகப் புரிந்து கொண்டுதெரிவித்ததாக முதல்வர் தெரிவிப்பின் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/21/2010 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 23 மார்ச், 2010

காலாவதி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை: முதல்வர்



காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் ​தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ​(வலமிருந்து)​ தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி,​​ காவல் துறை கூடுதல் இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன்,​​ டி.ஜி.பி.​ லத்திகா சரண்,​​ சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ்,​​ மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் எம்.பாஸ்கரன்,​​ சென்னை மாநகர போலீஸ் ஆணையர் டி.ராஜேந்திரன்,​​ காவல் துறைத் தலைவர் ​(நுண்ணறிவுப் பிரிவு)​ எம்.எஸ்.ஜாபர் சேட்.
சென்னை,​​ மார்ச் 22:​ காலாவதி மருந்துகளை ​ விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.​ ​ சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் தளத்தில் வீசப்பட்ட காலாவதியான மருந்துகளைச் சேகரித்து,​​ லேபிள் மாற்றி ஒட்டி மீண்டும் அவற்றை விற்கும் செயல் கண்டுபிடிக்கப்பட்டது.​ இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.​ இந்த நிலையில்,​​ போலி மருந்துகளைத் தயாரிப்பவர்கள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி,​​ சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ் மற்றும் டி.ஜி.பி.​ லத்திகா சரண் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.​ போலி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்பவர்கள்,​​ காலாவதியான மருந்துகளை விற்கும் நிறுவனங்கள்,​​ மருந்துக் கடைகள் மீது போலீஸ் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும்.​ இந்தப் பிரச்னையை ​அடியோடு களைய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.​ மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையை வலுவுள்ள துறையாகத் தரம் உயர்த்த வேண்டும் எனவும்,​​ பொது மக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,​​ அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.​ இதுபோன்ற குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபடுவர்கள் தவிர,​​ பின்னணியில் செயல்படுபவர்களையும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டார்.தண்டனை என்ன?​ காலாவதியான மருந்துகளை விற்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து சுகாதாரத் துறை செயலாளர் வி.கு.சுப்புராஜிடம் கேட்ட போது,​​ "போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.​ குற்றங்கள் ​கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் அவர்.​ ​ இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டம்-​ ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.​ ராதாகிருஷ்ணன்,​​ சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்,​​ மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்

முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி அசியல் அதிகாரச் செல்வாக்கிற்கு இரையாகாமல் ஊழலுக்குத் துணை போகாமல் முதலில் பிடிக்கப்பட்டவர்கள் மீது விரைந்து உசாவல் மேற்கொண்டு தண்டனை வழங்கச் செய்யுங்கள்.பிற மோசடிப் பேர்வழிகளையும் உடனே பிடித்துத் தண்டனை கிடைக்கச் செய்யுங்கள். உயிரோடு டவிளையாடும் இவர்கள் மீது பரிவு காட்டாதீர்கள். காலக்கெடு முடிந்த மருந்துகள் குப்பைத் தொட்டியில் கொட்டியிருக்க வாயப்பில்லை. தினமணி ஆசிரியவுரையில் குறிப்பிட்டாற்போன்று ஒரு கும்பலே மோசடியில் ஈடுபட்டிருக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுங்கள். உடன் அறிவுறுத்தியுள்ள முதல்வருக்குப பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 2:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 22 மார்ச், 2010

தலையங்கம்: ஏன் இந்தத் தயக்கம்?



காலாவதியான மருந்துகளை மீண்டும் புதிய தேதி அச்சிட்டு, மருந்துக் கடைகள் மூலம் விற்பனை செய்ததாக அண்மையில் சென்னையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் காவல்துறை அறிவிப்பும், தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் நடவடிக்கையும் சரியானதாக இருந்தாலும்கூட, இதில் வெளிப்படாத அல்லது மறைக்கப்படும் ரகசியங்கள் பல இருக்கவே செய்கின்றன.இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் வழக்க முறை பற்றிக் குறிப்பிடுகையில், கொடுங்கையூர் அருகே குப்பைமேட்டில் கொட்டப்படும் மருந்து மாத்திரைகளை எடுத்துவந்து அதன் மீது புதிதாகத் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகளை அச்சிட்டு, புத்தம் புதிதாக (அதாவது, மருந்துக் கடைக்காரர்களே ஏமாறுகிறவிதத்தில்) மருந்துக் கடைகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் மாநிலங்களைக் கடந்து செயல்படும் கும்பல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இதைப் போல மாத்திரைகள் தனியார் மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டிகளில்கூட கிடைப்பதில்லை என்கிறபோது, இந்த மோசடிப் பேர்வழிகளுக்காக மட்டும் தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது என்பது முதல் தகவல் அறிக்கைக்கு வேண்டுமானால் வலு சேர்க்குமே தவிர, வெறும் வாதத்திற்குக் கூட எடுபடாது. இத்தகைய மாத்திரை, மருந்து, டானிக்குகளை குறிப்பிட்ட கும்பல் ஒவ்வொரு மருந்துக்கடைக்கும் சென்று, சேகரித்து வந்து, குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வைத்து, இவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதிகளை மாற்றி அச்சிடுதல் அல்லது புதிய லேபிள் ஒட்டுதல் ஆகிய பணிகளைச் செய்து, மீண்டும் மறுசுழற்சிக்காக மருந்துக்கடைகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் என்பதும்கூட, செலவுமிக்க நடைமுறைதான். மோசடி செய்பவர்களுக்கு இதில் அதிக லாபம் கிடைக்காது.காலாவதியான மருந்துகளை மீண்டும் சந்தைக்கு அனுப்புவதை, மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்துக்கான மாநில அளவில் அல்லது தென்னிந்திய விற்பனை உரிமை பெற்றுள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமே செய்ய முடியும். அவர்களை அடையாளம் காண்பதும் அரசுக்கு எளிது. அத்தகைய நபர்கள் யார் என்று கண்டறிவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும்தான் இந்தப் பிரச்னைக்கு உடனடித் தீர்வாக அமையுமே தவிர, வெறுமனே எல்லா மருந்துக்கடைகள் மீதும் சந்தேகத்தின் பலனைத் திருப்பிவிடுவதால் பயனில்லை.தமிழ்நாட்டில் 42,000 மருந்துக் கடைகள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் குறிப்பிடுகிறார். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் நகர்ப்புறங்களில் இருப்பவை. நகர்ப்புறங்களில் இருக்கும் 90 விழுக்காடு கடைகள் கணினி மூலம் ரசீதுகள் வழங்குபவை. கணினி திரையில் மருந்துகளின் இருப்பு மட்டுமன்றி, அவற்றின் காலாவதி தேதிகளும் தெரியும் வகையில் மென்பொருள் உள்ளன. காலாவதியான மாத்திரைகளை மருந்துக்கடைக்காரர்கள் தனியே பிரித்து வைப்பதும், அவற்றை தமக்கு விநியோகம் செய்த மொத்தக் கொள்முதல் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து அதற்கான தொகையைப் பெறுவதும் நடைமுறையில் உள்ளது. மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக் கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும் மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்? நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன? பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது? எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின்பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப்படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத்துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்? 42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே? அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?
கருத்துக்கள்

ஒவ்வொரு மாத்திரையிலுமே கெடுநாள் பதிவாகும் வரையில் இல்லையே என்ற மக்கள் உணர்வை வெளிப்படுத்தியதுடன் மோசடியின் மூல வித்து என்னவாக இருக்கும் என்றும் புரிய வைத்துள்ளீர்கள். இது வாலாயமான ஒன்றாக இருந்து ஏதோ வர வேண்டியது வராததால் தர வேண்டியதைத் தர வலியுறுத்தும் வகையில் இம் மோசடி பிடிபட்டிருக்கலாம். காலக் கெடு ஆன மருந்து மாத்திரைகளை மறு பயன்பாட்டிற்கு வராத வகையில் உடனே அழிப்பதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். போலி மருந்துகள உலவினால் அதற்கு அரசு அதிகாரிகளே பொறுப்பு என அறிவிக்க வேண்டும். ஆசிரியவுரை எழுதியவருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 2:35:00 AM

politician/government officials/police they are basterds just for few dollars they are ready to give their mothers also.yes. Instead of honest loyalty to our nation they lending it to bribe it means they lending thier mothers.basterds

By ali
3/22/2010 12:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 18 பிப்ரவரி, 2010

புற்று நோய்க்கு மருந்தாகும் கண்வலிக் கிழங்கு



கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் சிறுபாக்கத்தில் பயிரிடப்பட்டு பூத்துக் குலுங்கும் கலப்பைக் கிழங்கு வயல்.
கடலூர், பிப்.17: தமிழ் இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்று உள்ளது செங்காந்தள் மலர்கள். இது தென் மாவட்டங்களில் வறண்டப் பகுதிகளில் வேலிகளில் படர்ந்து கிடக்கும். மலைப் பிரதேசங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. கலப்பைக் கிழங்கு, கண்வலிக் கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.சித்த மருந்துகளில் தோல் வியாதிகள் மற்றும் வயிற்று நோய்களுக்கான மருந்துகளிலும் கலப்பைக் கிழங்கு சேர்க்கப்படுவதாக அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கடலூர் ஆறுமுகம் தெரிவித்தார்.பணப் பயிராகப் பயிரிடப்பட்டு இதன் விதைகள் வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அதில் இருந்து பிரித்தெடுக்கப்படும் (0.7 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை) வேதியல் பொருள்களில் (கோல்ச்சிசின் மற்றும் சூப்பர்பின்) இருந்து புற்று நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுவதாகவும் டாக்டர் ஆறுமுகம் தெரிவித்தார்.மலைப்பாங்கான வறண்ட நிலங்களில் கலப்பைக் கிழங்கு நன்றாகச் செழித்து வளர்கிறது. காடுகளிலும் வேலிகளிலும் படர்ந்து கிடந்த கலப்பைக் கிழங்கை, 1980-ல் முதல் முதலாக ஈரோடு மாவட்டம் மூலனூரிலும், சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் பணப் பயிராக வயல்களில் பயிரிடத் தொடங்கினர் விவசாயிகள்.தற்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகளுக்கு நல்ல ஆதாரம் தரும் பயிராக கலப்பைக் கிழங்கு மாறியிருப்பதாக மங்களூர் வேளாண் உதவி இயக்குநர் முருகன் தெரிவிக்கிறார்.கலப்பைக் கிழங்கு விவசாயம் குறித்து முருகன் மேலும் கூறியது:திட்டக்குடி வட்டம் சிறுபாக்கம், இ.கீரனூர், ஐவனூர் உள்ளிட்ட கிராமங்களில் கலப்பைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. விதைப்புக்கு ஹெக்டேருக்கு 400 முதல் 500 கிலோ வரை கிழங்கு தேவைப்படும். கலப்பைக் கிழங்கு சாகுபடிச் செலவு ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 லட்சம் ஆகும். தேசிய மருத்துவப் பயிர்கள் திட்டத்தில் தமிழக அரசு 50 சதவீதம் மானியமாக ஹெக்டேருக்கு ரூ.67,500 அளிக்கிறது.மகசூலைப் பொருத்தவரை ஹெக்டேருக்கு 700 கிலோ வரை விதைகளும், 1,000 கிலோ வரை கிழங்கும் கிடைக்கும். பருவத்துக்கு ஏற்றார்போல் விதை கிலோ ரூ.1,250 முதல் ரூ. 2 ஆயிரம் வரை விலை போகும். கிழங்குக்கு கிலோ ரூ.400 வரை விலை கிடைக்கும்.அனைத்தையும் சேர்த்து கணக்கிட்டால் ஹெக்டேருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கும். ஒரு முறை கிழங்கு நட்டால், 5 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாகப் பலன் கிடைக்கும். சென்னையைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கலப்பைக் கிழங்கு மற்றும் விதைகளைக் கொள்முதல் செய்கின்றன. எனவே கலப்பைக் கிழங்கு சாகுபடி நல்ல லாபம் தரும் பணப் பயிராகும் என்றார் முருகன்.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2010


அல்லிப் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம்.

சூரிய காந்திப் பூவிலுள்ள விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

தாமரை பூ இதயத்திற்கு பலமளிக்கும். உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

வேப்பம் பூ சிறந்த கிருமி நாசி‌னி. வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும்.
வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப்பூ கைக்கண்ட மருந்து.

தூதுளம் பூ உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

புதன், 15 ஜூலை, 2009

பயிற்சி மருத்துவர்கள் - அரசு பேச்சு மீண்டும் தோல்வி



சென்னை, ஜூலை 14: பயிற்சி டாக்டர்களுடன் தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்வர் கருணாநிதி அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது எனக் கூறி பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கடந்த 14 தினங்களாகப் போராடி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உள்பட 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறைச் செயலர் வி. கு. சுப்புராஜ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். விநாயகம் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்வருடன் பேச விருப்பம்: மற்ற மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் அதிக உதவித் தொகை குறித்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்க வாய்ப்பு பெற்றுத் தருமாறு உயர் அதிகாரிகளிடம் பயிற்சி டாக்டர்கள் கோரினர். இந்தக் கோரிக்கையை அரசு உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால், உண்ணாவிரதத்தை உடனடியாக விலக்கிக் கொள்வதாக பேச்சின்போது அவர்கள் தெரிவித்தனர். ஆனால், பயிற்சி டாக்டர்களின் இந்தக் கோரிக்கையை உயர் அதிகாரிகள் நிராகரித்து, பணிக்குத் திரும்பினால் மீண்டும் பேச்சு நடத்தி உதவித் தொகை உயர்வைப் பரிசீலிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதைச் சுட்டிக் காண்பித்தனர். பயிற்சி டாக்டர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.மீண்டும் பணியில் 14 டாக்டர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு பயிற்சி டாக்டர்களும் ஏழு முதுநிலை மருத்துவ மாணவர்களும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் 2 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட 22 டாக்டர்களில், 2 பேர் மயக்க நிலையை அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

போராட்டத்தைக் கைவிட்டால்தான் பேச்சு என்னும் முதல்வரின் நிலைப்பாடு சரியல்ல. கேட்கும் பயிற்சித் தொகையை அளித்துவிட்டு, அவ்வாறு கூடுதல் பயிற்சித் தொகை பெறுபவர்கள், 3 ஆண்டுக் காலம் தமிழக அரசுப் பணியில் - சிற்றூர்களில் - பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். இவ்வாறு கலைஞரே பிடிவாதம் பிடித்தால் முந்தைய அரசின் அடக்கு முறையை ஒப்பிட்டுக் கலைஞர் கூறுவது பொருளற்றதாகி விடும். மேலும் கோரிக்கைளை ஒடுக்கியும் அடக்கியும் ஆட்சி புரிந்ததால் முந்தைய அரசிற்கு ஏற்பட்ட கதி இந்த அரசிற்கும் வேண்டுமா? தாய்மை உள்ளத்துடன் அணுகி உதவித் தொகைகளைப் பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்தி இப் போராட்டத்தை நிறுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/15/2009 3:46:00 AM

பயிற்சி மருத்துவர்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்



சென்னை, ஜூலை 14: போராடி வரும் பயிற்சி மருத்துவர்களை முதல்வர் கருணாநிதி அழைத்துப் பேச வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உதவித் தொகை உயர்வு வேண்டி போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேசாமல், பயிற்சி மருத்துவர்களின் உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக தி.மு.க. அரசு தன்னிச்சையாக உயர்த்தியது. எனினும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தன்னிச்சையான இந்த உதவித் தொகை அறிவிப்பு மிகவும் குறைவு என்றும், எனவே தங்களின் போராட்டம் தொடரும் என்றும் பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் தொடர்ந்தால், மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் மேற்படிப்புக்கு பாதகமான நிலை ஏற்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏழை எளிய, நடுத்தர மக்கள்தான். அரசு மருத்துவமனைகளில் அனைத்துப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்து 4 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களின் நலன்களை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். பயிற்சி மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களுக்கு இணையாக உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

முன்னாள் முதல்வரின் தொனியில் இப்பொழுதெல்லாம் மாற்றம் உள்ளது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில இல்லாமல் அரசிற்கு வேண்டுகோள் விடுக்கும் முறையைப் பின்பற்றுகிறார். பயிற்சி மருத்துவர் போராட்டம் குறிததுச் சரியான கருத்தையே தெரிவித்துள்ளார். பொது மக்கள் நலன் கருதியும் இளைய தலைமுறையினர் நலன் கருதியும் அரசு வீம்பு பண்ணாமல் பயிற்சி உதவித் தொகையை உரியவாறு உயர்த்தி இப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும். இதனால் அரசிற்கு அல்லது கலைஞருக்குத் தோல்வி எனத் தவறாகக் கருதாமல், பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/15/2009 3:56:00 AM
i too accepted illakkuvanar,s view. All are in govt's hand
By mangai
7/15/2009 5:18:00 PM


போராட்டத்தைக் கைவிடுங்கள்; ஏமாற்ற மாட்டோம்: பயிற்சி டாக்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்



சென்னை, ஜூலை 14: பயிற்சி டாக்டர்கள் தங்களது போராட்டதைத் கைவிட்டு வந்து பேசினால், அவர்களை ஏமாற்ற மாட்டோம் என்று பேரவையில் முதல்வர் கருணாநிதி கூறினார். டாக்டர்களின் போராட்டம் குறித்து பேரவையில் முதல்வர் கருணாநிதி அளித்த பதிலுக்குப் பின் எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, அதிமுக, பாமக, இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
. . . . . . . . .
கருத்துகள்
' தான் எதிர்க்கட்சியாக என்ன நிலைப்பாடு எடுத்திருப்போம்' எனக்கலைஞர் எண்ணி இப் போராட்டத்தைக் கோரிக்கைகளைத் தீர்ப்பதன் மூலம் முடிவிற்குக் கொணர வேண்டும்.
. . . . .
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/15/2009 4:23:00 AM

WHO IS JEYA. SHE WHO IS SUPPORTING STRIKING DRS - STILL SHE IS ACTING. SHE IS ENCOURAGING AND CREATING PROBLEM WITH GOVT, INDEED SHE HAVE NO LIKE TO PROVIDE MORE STIPEND TO DRS, BUT SHE IS ONLY AIM TO NUISSANCE TO GOVT, PEOPLE WILL KNOWS ABOUT HERS ACTIVITY & PEOPLE WILL NOT FORGET,SHE USED TESMA'LAW & PULLED OUT THOUSANDS OF WORKERS JEYA IS WORST POLITICIANS IN THE WORLD, WE WILL BE READY TO TAKE AWARENESS TO STOP SHE REENTRY IN ASSEMBLLY AGAIN.THIS ALL TAMIL PEOPLE'S DUTY
By H
7/15/2009 12:53:00 PM

STILL WE HOPE DR.KAZHAIZHAR DECISION IS CORRECT, AND YESTERDAY HE CLEARLY INDICATED THAT THE COMPARISON OF OTHER STATE GETTING STIPEND REGARDING THIS SUBJECT, AND NO MORE INCRESING SOMETHING NOT GOOD, THEY WILL CONDINUEING STIKE NO PROBLEM - GOVT WILL ARRANGE TEMPERORY DRS FOR THE HOSPITALS TO AVOID DELAYED TREATMENT DOCTORS ARE MONEY MINDED - NOT SERVICE MINDED

By HANEEFA
7/15/2009 12:35:00 PM

innum etthanai bayrai ematthapporai theriyalai

By swethan
7/15/2009 11:09:00 AM

Dr.Yogalakshmi,doctor mean only MBBS or all medical students(BSMS,BHMS)? Do you know some poor students studying veterinary science,their stipend is Rs.1650, we too knocked the doors of government but seems to be deaf and dumb.My question is what is the scale for measuring the stipend money ?

By Dr.Udhaya
7/15/2009 10:08:00 AM

mikka nanri mr.thiruvalluvan fr supporting us..fr the kind information of others,..naangal kadantha 2yrsku melaga palamurai health ministerai santhithulom.health secretaryaum santhithi manu kuduthulom..DMEiyum meet panni ivargal eloridamum pira statesi fees,stipend pathina comparitive data kuduthulom.avargal health budget-il ungaluku hike-ku fund othukiachu,ungaluku matra statesku nigarana stipend alipom-nu vaakuruthi kuduthargal.athai nambinom.bt they behaved as typical politicians.ipothu engal korikaiye ithanai naal avargaluku theriathu endru poi solgirargal.black badge aninthu,pinbu oru naal token strike nadathi..ithanaikum piragu than intha poratam.purinthu kollungal elorum pls..ethetho functionsku pora CMku drsa meet panna matum time kedaikathathu thurathrishtham

By Dr.P.Yogalakshmi
7/15/2009 8:06:00 AM

KALAIGAN SEIVATHU ADAKKU MURAIL ALLA. ACHIYARIDAM ENTHA KORIKKAIN VAIKAAMAL UNNA NONPU IRUPPATHU ENBATHU THEVAI ILLAI.

By STHAMIZHMANII
7/15/2009 7:30:00 AM