வெள்ளி, 7 ஜனவரி, 2011

saaral award to asokamithran: அசோகமித்திரனுக்குச் சாரல் விருது

அசோகமித்திரனுக்கு சாரல் விருது


சென்னை, ஜன: 6 இலக்கியத்துக்கான சாரல் விருது இந்த ஆண்டு எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு வழங்கப்படுகிறது. ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை நிறுவனம் இவ் விருதை வழங்குகிறது. கலைநயமிக்க சிற்பமும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.  ஒரு நாடக கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைப் பெயராகச் சூட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்தவர் அசோகமித்திரன் என்கிற தியாகராஜன். எளிய மனிதர்களின் வாழ்வில் நாம் கண்ட அல்லது காணத் தவறிய சில அரிய தருணங்களைத் தன் எழுத்தில் வடித்தவர்.  ஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்களை எழுதியவர். கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், பதினெட்டாவது அட்சக்கோடு உள்ளிட்ட நாவல்களும் காலமும் ஐந்து குழந்தைகளும், இன்னும் சில நாட்கள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதிய இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 2009-ம் ஆண்டில் எழுத்தாளர் திலிப்குமாருக்கும் 2010 ஆம் ஆண்டில் கவிஞர் ஞானக்கூத்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.  விருதுக்குழு நடுவர்களாக எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், ரவிசுப்ரமணியன் கலைவிமர்சகர் தேனுகா செயல்பட்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை (9.1.11) அன்று பிலிம்சேம்பரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எம்.பெருமாள், ச. தமிழ்ச்செல்வன், பாரதிமணி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.  விளம்பரப் படஉலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரி இருவரும் இந்த இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். விழாவில் ஜெர்ரி இயக்கிய கலம்காரி என்ற ஆவணப்படம் திரையிடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக