வியாழன், 6 ஜனவரி, 2011

india in u.n.o.defence committee: 19 ஆண்டுகளுக்குப் பின் ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா

பன்னாட்டுஅவையின்பாதுகாப்புக் குழுவில் இந்தியா தற்போதைக்கு இடம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டியது சிங்களம்தானே தவிர நாம் அல்ல. பன்னாட்டு அவையில் தமிழ்ஈழம் இடம் பெறும் நாளே நாம் மகிழும் நாள். இந்தியக் கண்டத்து நாடுகள் கூட்டரசாக விளங்கி ஒவ்வோர் உறுப்பு நாடும் இடம் பெறும் நாளும் மகிழ்ந்து கொண்டாடப்பட வேண்டிய நாள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



19 ஆண்டுகளுக்குப் பின் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா

First Published : 04 Jan 2011 12:00:00 AM IST


நியூயார்க், ஜன. 3: ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பினராக இந்தியா திங்கள்கிழமை பொறுப்பேற்றது. 19 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இரண்டு ஆண்டுகாலம் இந்தியா இந்த பொறுப்பை வகிக்க முடியும். ஏற்கெனவே 7 முறை இதுபோன்று தாற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவுடன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, போர்ச்சுக்கல, ஆகிய நாடுகளும் தாற்காலிக உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டன. ஏற்கெனவே போஸ்னியா, பிரேசில், காபோன், லெபனான், நைஜிரீயா ஆகிய நாடுகள் தாற்காலிக உறுப்பு நாடுகளாக உள்ளன.  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதமும் அதிகாரமிக்க ஐ.நா. பாதுகாப்பு சபைத் தலைவராகும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா தனது பதவி காலத்தின்போது ஐ.நா. பாதுகாப்பு சபையின் 2 பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களில் ஒன்றுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  மேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்தி மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா தனது பதவி காலத்தின்போதே வலியுறுத்தும் என தெரிகிறது.  ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா ஆகிய நாடுகள் நிரந்திர உறுப்பு நாடுகளாக உள்ளன. இதுதவிர 10 நாடுகள் சுழற்சி அடிப்படையில் தாற்காலிக உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.  ஐ.நா. பாதுகாப்பு சபை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை வேறு. இப்போது இருக்கும் நிலைமை வேறு. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையைச் சீரமைத்து மாற்றியமைக்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளை (ஜெர்மனி, ஜப்பான், தென்னாப்பிரிக்கா) நிரந்திர உறுப்பினர்களாக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது.  இப்போது தாற்காலிக உறுப்பினராகி இருக்கும் நிலையில், நிரந்தர உறுப்பினராகுவதற்கான ஆதரவை இந்தியா திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று கோரும் 4 நாடுகளில் ஜப்பானைத் தவிர மற்ற இரு நாடுகளும் இந்தியாவைப் போல் தாற்காலிக உறுப்பினராகப் பொறுப்பேற்றுள்ளன. எனவே இந்த 3 நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தம் என தெரிகிறது.  ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினராகி உள்ள இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் என்று ஐ.நா.வுக்கான இந்தியப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.  அல் காய்தா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதிகார கொண்ட குழு மற்றொன்று பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அதற்கான நிதி உதவி குறித்து விவகாரங்களைக் கவனிக்கும் குழு. இந்த இரண்டு குழுக்களிலும் இந்தியா இடம் பெறும் என்று தெரிகிறது.  பயங்கரவாத எதிர்ப்பு, ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராகும் முயற்சி ஆகிய இரண்டிலும் இந்தியா தனது பதவி காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாற்காலிக புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் கூட்டம் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக