[TamilNet, Monday, 09 April 2012, 23:48 GMT] Occupying Sri Lanka's Governor of North and war crimes accused former SL commander of Jaffna, Major General (retd.) G.A. Chandrasiri, has instructed the Jaffna Municipal Council administration to immediately remove the computer section at the Jaffna Public Library, used by the readers of the library for viewing electronic documents, to construct a modern toilet there for the benefit of the visitors from the South. CVK Sivagnanam of the Council of NGOs in Jaffna District has sent an urgent letter to SL President Mahinda Rajapaksa to intervene and stop the destructive move. Talking to media, Mr. Sivagnanam on Monday warned to wage a campaign if the move is not abandoned by timely intervention. The news has already upset the wider community of the Eezham Tamils in the district, the veteran civil and political activist further said.
The director of Hindu Affairs Ministry of Northern Province, Ms. Sridevi, had come to inspect the site following the instructions to close down the computer section at the second floor, officials at the Jaffna Library told media on condition of anonymity.
The officials were not able to respond on the question whether the computer section would be relocated.
Meanwhile, informed civil sources elsewhere in the civil administration said that the SL governor was aiming at the comfort of visitors to the auditorium situated in the second floor of the Jaffna Library. They also said the officials at the library have been threatened by sections of the ruling UPFA and the EPDP.
The auditorium is often deployed for the use of SL governor's Sinhala visitors from south and a modern toilet facility is needed for the use of colonial governor's southern visitors, who do not wish to share the toilet in the first floor of the library.
For this purpose, the computer section of the library, established with British and US aid, is to be discarded.
Jaffna Municipal Council administration is controlling the affairs of the public library and the SL governor has given the instruction to remove the compute centre through Jaffna Mayor, Ms. Yogeswari Patkunam, who is a representative of the ruling UPFA of Mahinda Rajapaksa and the EPDP paramilitary of SL minister Douglas Devananda.
The SL governor G.A. Chandrasiri was the former commander of the SLA in Jaffna. Thousands of persons ‘disappeared’ in Jaffna district during the term of Maj. Gen. Chandrasiri and the people of Jaffna regard him as a war criminal, civil sources in Jaffna said.
The Sri Lankan Police and Sinhala thugs burned down the Jaffna public library in 1981 on the eve of the district development council elections.
The library, considered as one of the finest in South Asia containing a cultural heritage that comprised around 97,000 priceless books and about 150 centuries' old irreplaceable Tamil manuscripts, lost its entire collection when the original two storied building was destroyed.
Widely regarded by the global Tamils as an act of cultural vandalism, the destruction of Jaffna library by the predominantly Sinhalese police has long been a point of resentment.
சென்னை, அக். 12: செம்மொழித் தமிழாய்வு நூலகத்துக்கு பாவேந்தர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு வெளியிட்ட செய்தி:சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், திமுக ஆட்சிக் காலத்தில் பத்து மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு ""நாமக்கல் கவிஞர் மாளிகை'' என்று பெயர் சூட்டப்பட்டது.இதைப்போன்றே, சட்டப் பேரவை இருந்த இடத்தில் ""செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்'' நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்துக்கு பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் எனப் பெயரிடப்படுகிறது.போட்டோ பிலிம் நிறுவனம்: ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தயாரிப்பு நிறுவனத்தின் சீரமைப்புக்காக மதிப்புக்கூட்டு வரிச் சலுகை, மின்சார வரிவிலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.திண்டுக்கல் மாவட்டம் கரிகாலி கிராமத்தில் செட்டிநாடு சிமென்ட் நிறுவனம், தனது விரிவாக்கத் திட்டத்தை அமைக்க இருக்கிறது. இதற்காக, மற்ற தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதைப் போலவே, மூலதன மானியம், மதிப்புக்கூட்டு வரிச் சலுகை, மின்சார வரிவிலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்படும்.
நல்ல முடிவு. பாராட்டலாம். நூலகம் அமைந்தகட்டடப் பகுதிக்கு அறிஞர் கால்டுவெல் பெயரைச் சூட்டலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தற்போது இயங்கி வரும் கட்டடத்திற்குப் பரிதிமாற்கலைஞர் பெயரைச் சூட்டலாம். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2010 3:25:00 AM
இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பெருமுயற்சியால், அன்றைய கல்வி அமைச்சர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியாரின் முழு உதவியால் சென்னை மாகாணப் பொது நூலகச் சட்டம் 1948-ல் நிறைவேற்றப்பட்டு, 1950 முதல் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1951-ல் கல்விக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார்.÷நூலக இயக்கத்தின் தேவையை உணர்ந்த கல்வியாளரான அவர் பதவியேற்றபோது தமிழ்நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். ÷சென்னையில் தற்போது அண்ணாசாலையில் அமைந்திருக்கும் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகக் கட்டட இடமும் அதற்குப் பின்னால் உள்ள இடமும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்குச் சொந்தமாக வாங்க, அன்றைய மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் வி.என்.சுப்பராயனுக்கு, தொழிலதிபர் சிம்சன் அனந்தராமகிருஷ்ணன் உதவியுடன், அரசு மூலம் எல்லா உதவிகளையும் பெற்றுத் தந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு.÷மேலும், தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் தன்னலமற்ற தகுதி வாய்ந்தவர்களை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர்களாக நியமித்து, நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டி, சிறப்பாகச் செயல்பட அடித்தளம் அமைத்தவர். அந்தக்காலம் தமிழ்நாடு நூலக இயக்கத்தின் பொற்காலமாகும்!÷நூலகம் என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் அமைப்பாகும். அதன் அடிப்படையில், ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக, அரசாணை எண்.1034 - கல்வி - 5.7.1972-ல் வெளியிடப்பட்டு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தன்னிச்சையாகச் செயல்பட "பொது நூலகத் துறை' உருவாக்கப்பட்டு, நூலகவியலில் முதுகலைப் பட்டமும், நூல் அனுபவமும் கொண்டு கன்னிமாரா பொது நூலக நூலகராகப் பணியாற்றிய வே.தில்லைநாயகத்துக்குப் பதவி உயர்வு தரப்பட்டு, முதலாவது பொது நூலகத்துறை இயக்குநராக 31.7.1972 முதல் நியமிக்கப்பட்டார். அதன்பின் அரசாணை எண்.223 - கல்வி - 9.2.1974-ல் வெளியிடப்பட்டு பொது நூலகத்துறை இயக்குநர் நியமனத்துக்கான விதிமுறைகளும், கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டன. அதன்படி பொது நூலகத்துறை இயக்குநர் நியமனம் பெற நூலகவியலில் முதுகலைப்பட்டமும், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் நூலகப்பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.÷1982-ல் வே.தில்லைநாயகம் ஓய்வுபெற்ற பின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றிலிருந்து அரசாணை எண். 223 கல்வியின் கல்வித்தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொது நூலகத்துறை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் சிலர் இயக்குநர் பதவி பெற்ற பின், பணியாற்றிக் கொண்டே நூலகவியலில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்றார்கள்.÷ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்தே பணி மாற்றத்தின் மூலம், அரசாணை எண்.223-கல்வியின் படி போதிய நூலக அனுபவம், நூலகவியலில் முதுகலைப்பட்டம் இல்லாவிட்டால் கூட பொது நூலகத்துறை இயக்குநர்களாக நியமனம் பெற்று வருகிறார்கள். அதன் மூலம் அரசாணை எண்.1043 (கல்வி) 5.7.1972-ன் செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்?÷பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பத்தோடு பதினொன்றாக இணை இயக்குநராக இருப்பவர்கள், பணி மாற்றம் பெற்று பொது நூலகத்துறை இயக்குநராக வந்தபின், இங்கு முதல் இடத்துக்கு வந்து விடுகிறார்கள். அதன் மூலம் "பல வசதிகளைப்' பெறுகிறார்கள்.÷சட்டவியலில் பட்டம் பெறாமல் வழக்குரைஞர்களாகவோ, நீதிபதியாகவோ ஆகமுடியுமா? மருத்துவப்பட்டம் பெறாதவர்கள் டாக்டர்களாகச் செயல்பட முடியுமா? பொறியியல் பட்டம் பெறாதவர்கள் பொறியாளர்களாகச் செயல்பட முடியுமா? ஆனால் நூலகவியலில் பட்டம் பெறாதவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றியபின் பணிமாற்றம் பெற்றால், பொதுநூலகத்துறை இயக்குநராகப் பணிபுரியலாம்!÷பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிபவர்கள் மட்டும் எல்லாத் திறமைகளும் பெற்றவர்களா? அரசாணை எண்.1034-கல்வி-5.7.1972-ன் படி பள்ளிக் கல்வித்துறையிலிருந்து பொது நூலகத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டும், கடந்த 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறை தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எட்டுத் துறைகளில் ஒன்றாகவே பொது நூலகத்துறையை வைத்துக் கொண்டு, இயக்குநர் நியமனத்தை மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் என்னென்ன?÷பொதுவாக, பொது நூலகத்துறை இயக்குநர் பணி என்பது, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பதிப்பாளர்களிடம் அச்சிட்ட நூல்களின் மாதிரிப்படிகளைப் பெற்று அதில் தேர்ந்தெடுத்து (எந்த வகையில்?) ஆறு மாதம் கழித்து, மாவட்ட நூலகங்களுக்கு நூல்களை வழங்க ஆணையிட்டு, அதன்பின் நான்கு மாதம் கழித்து அதற்குரிய தொகையை அனுப்ப ஏற்பாடு செய்வதுதான் தங்கள் தலையாய, வசதியான பணி என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். அந்தப் பணிகூட சென்ற இரண்டு, ஆண்டுகளாக நடைபெறவில்லை!÷இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் முழு உழைப்பின் பலனாக ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் நேரடியாக நூலகவரி வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக வசூல் ஆகிறது. ஆனால் அந்தத் தொகை நூலகங்கள் செம்மையாகச் செயல்பட செலவழிக்கப்படுகிறதா?÷நூலகத்துறை ஜனநாயக முறைப்படி இயங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டுமென, பொது நூலகச் சட்டம் கூறுகிறது. அதன்படி செயல்பட்டதால்தான் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில், மாவட்ட மைய நூலகங்கள் நகரின் மையப் பகுதிகளில் சொந்தக் கட்டடங்களில், செயல்பட்டு வருகின்றன.÷ஆனால், இன்று சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஜனநாயக முறைப்படி, சட்ட விதிகளின்படி மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவில்லை.சென்ற 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து வந்து செயல்பட்ட பொது நூலகத்துறை இயக்குநர்களின் நிர்வாகச் சாதனை, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, நூலக மேம்பாட்டுக்குச் செலவிடாமல் சேமித்து வைத்து வட்டிக்குவிட்டு சேர்த்து வைத்திருந்த தொகை ரூ.80 கோடிக்கும் மேலாகும். அந்தத் தொகை முழுவதும் தற்போது கோட்டூர்புரத்தில் உருவாகிவரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப் பயன்படுத்தப்படுகிறது. நல்லகாரியம்! இந்த வகையிலாவது நமது நூலக வரிப்பணம் பயன்படுகிறது என்பதுவரை மகிழ்ச்சி.÷இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வசூல் செய்த நூலகவரி ரூ.35 கோடிக்கு மேலாகும். ஆனால் நகரில் இயங்கும் 134 கிளை நூலகங்களில் 60-க்கும் மேற்பட்ட நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவில்லை. வாய்ப்புக் கிடைத்தால், தியாகராயநகர் கிளை நூலகம், குப்பை வண்டிகள் சூழ, அஸ்பெஸ்டாஸ் ஓட்டுக் கூரை, தகரக்கதவுடன் செயல்படுவதைக் கண்டு வாருங்கள்! நகரின் முக்கிய பகுதி கிளை நூலகத்தின் நிலை இது!÷பொது நூலகத்துறையின் கீழ் பணியாற்றும் 5000-க்கும் மேற்பட்ட பலநிலை நூலகர்களுக்குச் சென்ற 15 ஆண்டுகளாகப் பதவி உயர்வே தரப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் நூலகவியலில் பி.எல்.ஐ.எஸ், எம்.எல்.ஐ.எஸ், எம்.பில். மற்றும் சில பேர் முனைவர் பட்டம் கூட பெற்றிருக்கிறார்கள்.÷ஆண்டுதோறும் பொதுமக்கள் கோடிக்கணக்காக நூலக வரி செலுத்தினாலும், ஆயிரக்கணக்கான மூன்றாம் நிலை நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டவோ, தேவைப்படும் மேஜை, நாற்காலிகள் வாங்கிப் போடவோ ஏற்பாடு செய்யப்படவில்லை.÷தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் தவிர மற்ற 29 மாவட்டங்களில் நூலக ஆணைக்குழுவுக்குத் தலைவர்களோ, உறுப்பினர்களோ நியமனம் செய்யப்படவில்லை.÷ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட நூலக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 30 மாவட்டங்களுக்கும், ஆறு மாவட்ட நூலக அலுவலர்கள் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்ட நூலக நிர்வாகம் எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!÷பதிப்பாளர்கள் 2007-ல் அனுப்பிய நூல்களுக்கு இன்னும் முழுமையாகப் பணம் வந்து சேரவில்லை. 2008-ல் கொடுக்கப்பட்ட மாதிரி நூல்களுக்கு இன்னும் நூல்கள் வழங்க உத்தரவு வரவில்லை. 2009-ல் பதிப்பிக்கப்பட்ட நூல்களை மாதிரிக்குத்தர இன்னும் அனுமதிக்கப்படவில்லை.÷கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான நூலகம் கட்டினால் ஆயிற்றா? முதலில், நூலகத்துறை முறையாகச் செயல்படாமல், நூலகவியல் படித்தவர்கள் நூலகத்துறையை நிர்வாகம் செய்யாமல் உலகத்தரம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?(கட்டுரையாளர் : தமிழ்நாடு நூலகச் சங்கச் செயலர்).
அரசு உடனே கருத்து செலுத்த வேண்டிய செய்திகளை அருமையாகத் தொகுத்துத் தந்துள்ளார் கட்டுரையாளர். என்னதான் செய்கிறது நூலகத்துறை என்ற எண்ணம்தான் எலலாரிடமும் உள்ளது. அந்த நிலை மாற உடனே பல நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
சென்னை, ஏப்.16: "சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்படும். 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்களில் தேர்ச்சி பெறும் நூலகப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்."சிறைச்சாலைகளில் சிறகுகள்' என்ற திட்டத்தின் கீழ் புழல் மற்றும் மாவட்ட சிறைச்சாலைகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும். பொது நூலக இயக்கத்தின் கீழ் வாடகை கட்டடங்களில் செயல்படும் நூலகங்களுக்கு சொந்த நூலகக் கட்டடங்கள் கட்டித் தரப்படும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு, மதிப்பெண் அட்டவணைகளை சரிபார்க்கவும், அசல் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மையறியவும் ஏதுவாக ரூ.20 லட்சம் செலவில் ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படும் என்று அறிவித்தார்.
கருத்துக்கள்
நல்ல திட்டம். பாராட்டுகள். (சிறைச்சாலைகளில் இப்பொழுதும் பள்ளிகளும் அதனால் நூலகங்களும் உள்ளன அல்லவா? )
உடுமலை,டிச.24:ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டுமென சாதிக்கத் துடிக்கும் மாணவ, மாணவிகளின் அறிவுக் கருவூலமாக விளங்கி வரும் நூலகத்தின் அவல நிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். "பகுத்தறிவுக் கவிஞராயர்' என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் உடுமலை நாராயணகவியின் பெயரில் அமைந்துள்ள மணி மண்டபத்தை முதல்வர் மு.கருணாநிதி 23}2}2001ல் திறந்து வைத்தார். சுற்றிலும் பூங்காவுடன் அழகுற அமைக்கப்பட்ட இந்த மணி மண்டபத்தை ஆண்டு முழுவதும் தொடர்ந்து பராமரிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் 28}09}2004 முதல் உடுமலை முதல் நிலை நூலகப் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் செலவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான புத்தகங்கள், கேட், யுசிஜி, நெட், ஐஐடி, ஐஐஎம், ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும், கணிப் பொறியியல், அறிவியலில் வளர்ச்சிகள், உலக வரலாறுகள் உள்ளிட்ட புத்தகங்களும் இங்கு கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து புத்தகங்கள் வைக்க அலமாரிகளும், பிற தளவாடங்களும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டன. ஆனால், இதன் பிறகு கடந்த 5 ஆண்டுகளாக இந்த நூலகத்தை எந்த வித விரிவாக்கமும் செய்யாமலேயே விட்டுவிட்டனர். சாதிக்கத் துடிக்கும் மாணவ,மாணவிகளை இது சோர்ந்து போகச் செய்து விட்டது. எனவே, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை யொட்டி இந்த நூலகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கி விரிவாக்கம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவை நிர்வாகிகள் கூறியது:சாதித்த மாணவர்கள்: இந்த நூலகத்தில் அமர்ந்து படித்த உடுமலை பகுதி மாணவர்கள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் எஸ்.செந்தில்குமார் ஆகியோர் ஐஏஎஸ் முடித்தது சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், இந்த நூலகத்தில் 2001 ம் ஆண்டு வரையிலான புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கடந்த 7 வருடங்களாக புதிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெறவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் நடப்பாண்டு தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் புதிய புத்தகங்களை இங்கு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உடுமலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் நூலகத்திற்கு வரும் நிலையில் 25 நபர்களே உட்கார்ந்து படிக்க முடிகிறது. நிறையபேர் நின்று கொண்டே படித்து வருகின்றனர். எனவே, நூலகத்தில் குறைந்த பட்சம் நூறு பேர் உட்கார்ந்து படிக்கும் அளவிற்கு கட்டடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதே போல், ஜெராக்ஸ் எடுக்க ஒரு பிரதிக்கு 75 பைசா என்றிருப்பதை இங்கு வரும் ஏழை மாணவ,மாணவிகளின் வசதிக்காக 25 பைசாவாக குறைக்க வேண்டும். குறிப் பாக, இங்கு வரும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். இதற்காக உடுமலை நகராட்சி சார்பில் இலவசமாக ஒரு குடிநீர் இணைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும், முக்கியமாக இந்த நூலகத்தை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இந்த நூலகத்திற்கென ஒரு நிரந்தர பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்றனர். இந்த அறிவுக் கருவூலத்தில் இருந்து சிறந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், பொருளாதார அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள், தொழில் நுட்ப மேதைகள் உருவாக வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆர்வம். தமிழக முதல்வர் இதற்கு உதவ வேண்டும் எனபதே அனைவரது எதிர்பார்ப்பு.
கருத்துக்கள்
இச் செய்தியைப் படித்தவுடன் மாண்புமிகு முதல்வரும் நூலகத்துறையும் நடவடிக்கை எடுக்கும் என்னும் நம்பிக்கையில் முன்னதான பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 12/25/2009 4:20:00 PM