நீதிபதிகள் தேர்வுக் குழுவில் வன்னியர்களுக்கு இடம்: ராமதாஸ் கோரிக்கை
First Published : 04 Sep 2010 12:58:48 AM IST
நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நட
சென்னை, செப். 3: நீதிபதிகளை தேர்வு செய்வதற்காக அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவின் வழக்கறிஞர் அமைப்பான வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:தமிழகத்தில் 20 சதவீத வன்னியர்கள் உள்ளனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே ஒரு வன்னியர் மட்டுமே நீதிபதியாக இருக்கிறார். இதனை வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், அவமானமாகவும் கருதுகிறோம்.இது பற்றி பாமக, காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சியும் பேசுவதில்லை. திமுக, அதிமுகவில் உள்ளவர்கள் இது பற்றி பேசினால் அவர்களை கட்சியை விட்டே நீக்கி விடுவார்கள். ஆனால், மற்ற சமுதாயத்துக்கு அநீதி இழைக்கப்பட்டால் அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் பேசினால், இந்த காலத்தில் ஜாதி பேசுகிறீர்கள் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. எந்தத் தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர் என்பதை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் தெளிவாக்க வேண்டும்.50 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட முதல்வர் கருணாநிதியின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். போராடி அந்தப் பதவியை பெற்றுத் தந்ததாக அவரே என்னிடம் கூறினார். 50 ஆயிரம் மக்கள் தொகை சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. சுமார் 2 கோடி மக்கள் தொகை கொண்ட சமுதாயத்துக்கும் ஒரு நீதிபதி பதவி. இது என்ன நியாயம்?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என எத்தனை காலத்துக்குதான் கெஞ்சி கேட்பது. நீதிபதிகளைத் தேர்வு செய்ய அமைக்கப்படும் மூவர் குழுவில் வன்னியர்களையும் சேர்க்க வேண்டும். இதனைக் கேட்டால் தகுதி அடிப்படையில்தான் நியமனம் என்கிறார்கள். இப்போதுள்ள நீதிபதிகள் எல்லாம் தகுதி அடிப்படையில் வந்தவர்கள்தானா?நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை பாமகவும், வன்னியர் சங்கமும் தொடர்ந்து போராடும் என்றார் ராமதாஸ்.பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. மூர்த்தி, என்.டி. சண்முகம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. பலராமன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2010 8:18:00 PM
9/4/2010 8:18:00 PM
By இந்திய நேசன்
9/4/2010 5:18:00 PM
9/4/2010 5:18:00 PM
By vijayabhaskar
9/4/2010 1:12:00 PM
9/4/2010 1:12:00 PM
By அழகாபுரம்.இரா.தங்கதுரை.
9/4/2010 9:48:00 AM
9/4/2010 9:48:00 AM
By kozhi
9/4/2010 8:25:00 AM
9/4/2010 8:25:00 AM
By selvaraju
9/4/2010 8:04:00 AM
9/4/2010 8:04:00 AM
By gnan
9/4/2010 7:21:00 AM
9/4/2010 7:21:00 AM
By அந்நியன்
9/4/2010 6:34:00 AM
9/4/2010 6:34:00 AM
By KARUNANITHI
9/4/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/4/2010 2:50:00 AM