சென்னை, செப். 1: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்திய சமூக நீதி பாதுகாவலர் பட்டம் வழங்கும் விழா அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.÷அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், வன்னியர் கூட்டமைப்புத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி ஆகியோர் இது தொடர்பாக சென்னையில் புதன்கிழமை கூறியதாவது: ÷தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடரும் வகையில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. ÷இதையடுத்து, தமிழ்நாடு இடஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டி, அவருக்கு இந்திய சமூக நீதி பாதுகாவலர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.÷இதற்கான விழா சென்னையில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெற உள்ளது என்றனர்.
கருத்துக்கள்
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/2/2010 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/2/2010 4:54:00 AM