செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளின் பாதுகாப்பு: விளக்கம் அளிக்க ஆணை


சென்னை, ஆக. 30: தமிழகம் முழுவதும் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 18 பேர் தப்பிச் சென்ற செய்தி ஆக. 30-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியானது.  இந்தச் செய்தியை பொது நலன் மனுவாகக் கருதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், டி.எஸ். சிவஞானம் ஆகியோர் கூறியிருப்பது:சீர்திருத்தப் பள்ளியின் சுற்றுச் சுவர் ஓரத்தில் கட்டட இடிபாடுகள் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் தப்பிப்பதற்கு இது காரணமாக அமைந்துள்ளது என்று கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் கூறியுள்ளார். அப்படியிருக்கும்பட்சத்தில், அங்கு கட்டட இடிபாடுகளைக் கொட்ட எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்பதை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் இருந்து விளக்கம் பெற வேண்டும். தவிர, மாநிலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் தங்கியிருக்கும் மாணவர்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

சீர்திருத்தப்பள்ளிச் சுவரோரம் இடிபாடுகள் கொட்டாத பொழுதும் ஏரிபோல் சகதிகள் இருந்த பொழுதும் சிறார் தப்பிச் சென்றுள்ளனர். எனவே, உண்மையான காரணங்களை ஆராய்க. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூடத்திலேயே இரவு நேரங்களிலேயே மலசலம் கழிக்கச் செய்தல் போன்ற அவலங்களை நீக்குக.சிறார்களுக்கு அன்றாடம் செலவிடும் தொகையை உயர்த்துக. பணியாளர் எண்ணிக்கையைக் கூட்டுக.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2010 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக